நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் தூங்கிக் கொண்டு இருதவர்களுக்கு அதிகாரத்தை தந்துவிட்டீர்கள். நாடு இப்படி போகிறதே என்று தூங்காமல் இருந்தவரை தோற்கடித்து விட்டீர்கள். இனி மக்களோடு இந்த துயரங்களை நாமும் அனுபவிப்போம். என்றும் மக்களுடன் நாம் தமிழர்.
எரிகாற்று உருளை விலை உயர்வை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப்பெற வேண்டும்!
வீடுகளில் பயன்படுத்தப்படும் எரிகாற்று உருளையின் விலையை இந்திய ஒன்றிய அரசு 29 ரூபாய் அளவிற்கு அதிகரித்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது. எவ்வித முன்னறிவிப்புமின்றி எரிகாற்று உருளையின் விலையை உயர்த்தியுள்ளது ஏழை எளிய மக்களை வாட்டி வதைக்கும் சிறிதும் மனச்சான்றற்ற கொடுங்கோன்மையாகும்.
ஏற்கனவே பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை கட்டுக்கடங்காது நாளுக்கு நாள் உயர்வதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. விண்ணை முட்டும் விலைவாசி உயர்வால் மக்கள் செய்வதறியாது தவித்து நிற்கையில், எரிகாற்று உருளை விலையையும் உயர்த்துவது, இந்த நாட்டில் வாழும் கோடிக்கணக்கான குடும்பங்களின் குருதியை உறிஞ்சும் கொடுஞ்செயலாகும்.
இந்திய ஒன்றிய அரசின் கையிலிருந்த வாகன எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை தனியார் எரிஎண்ணெய் நிறுவனங்களுக்குத் தாரைவார்க்கும் வகையில், கடந்த 2010ஆம் ஆண்டு சூன் மாதம் பெட்ரோல் விலை நிர்ணய உரிமையை காங்கிரசு அரசும், 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் டீசல் விலை நிர்ணய உரிமையை பாஜக அரசும் மொத்தமாகக் கையளித்ததன் விளைவே தற்போது மக்கள் சந்திக்கும் துயரங்களுக்கு அடிப்படை காரணமாகும்.
1200 ரூபாய் அளவிற்கு விற்ற சமையல் எரிகாற்று உருளையின் விலை கடந்த நாடாளுமன்றத்தேர்தலை முன்னிட்டுதான் 1000 ரூபாய்க்கு கீழாக குறைக்கப்பட்டது. தற்போது அதனை மீண்டும் 1000 ரூபாய் அளவிற்கு உயர்த்தும் முயற்சியில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது இந்த நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் மாதந்தோறும் பாதிக்கும் அறமற்றச் செயலாகும்.
ஆகவே, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு எரிகாற்று உருளை விலை உயர்வை உடனடியாக திரும்பப்பெற வேண்டுமெனவும், எரிபொருள் விலை நிர்ணய அதிகாரத்தை மீண்டும் இந்திய ஒன்றிய அரசே தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.
இத்தகைய நெருக்கடியானச் சூழலில் எரிகாற்று உருளை விலை உயர்வால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்படாமல் காக்க, தமிழ்நாட்டை ஆளும் தவெக அரசு, உடனடியாக தான் அளித்த தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், அனைத்து குடும்பங்களுக்கும் வருடத்திற்கு 6 எரிகாற்று உருளைக்கான செலவை முழுமையாக ஏற்க வேண்டுமெனவும் கேட்டுக்கொள்கிறேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
ஈழத்தாயகத்தில் இந்நூற்றாண்டின் மிகப்பெரிய இனப்படுகொலையை தமிழினம் எதிர்கொண்ட பெருந்துயரச்சூழலில், இனமான உணர்ச்சிகொண்ட ஒவ்வொரு தமிழனின் இதயத்திலும் பற்றி எரிந்த உணர்வுத்தீயின் உந்துதலால் என் கரம் பற்றி நடக்கத் தொடங்கிய என் ஆருயிர் இளவல்!
தமிழ் இனத்தின் மீதும், மொழியின் மீதும் கொண்ட அளப்பரிய பெரும்பற்றின் காரணமாக தமிழ்த்தேசியமே தம் வாழ்வென வரித்துக்கொண்ட அன்புத்தம்பி!
நாம் தமிழர் கட்சி தொடங்கப்பட்ட காலந்தொட்டு ஏற்றுக்கொண்ட கொள்கையிலிருந்து அணுவளவும் அகலாமல், என் தோளுக்குத் துணை நிற்கும் போர்ப்படை தளபதி!
தன்னுடைய ஆழமான வாசிப்புத்திறனாலும், அழுத்தமான தர்க்க ஆற்றலாலும், அறிவாயுதம் ஏந்திய தமிழ்த்தேசிய அரசியல் களத்தில் முதலில் பாயும் முன்கள வீரன்!
காட்சிக்கு எளியன், கடுஞ்சொல் இல்லான், இன்முகம் கொண்ட நன்மனத்தான், உள்ளும் புறமும் யாவர்க்கும் யாதொரு தீங்கும் எப்போதும் நினையாத பெருங்குணத்தான், என்னுடைய பேரன்பிற்கினிய உடன்பிறந்தான் இடும்பாவனம் கார்த்திக் அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்!
எல்லா வளமும், நலமும் பெற்று மகிழ்வுடன் பெருவாழ்வு வாழ அன்புநிறைந்த வாழ்த்துகள்..!
@idumbaikarthi
சீமான் அண்ணனின் குரலுக்கேற்ற காட்சி அமைப்பு, சிறப்பான உருவாக்கம்..
Whatsapp status, insta எடுத்து பகிருங்கள், பரப்புரைக்கு பயன்படும் 👍🏼
#NTK_RiseOfRevolution#NTK4Tamilnadu
இன்று காலை 11 மணி அளவில் திருவள்ளூர் நகரத்தில் அங்கயர்கண்ணி குடில் - நகர அலுவலகம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
நிகழ்வில் திருவள்ளூர் தொகுதி வேட்பாளர் வழக்கறிஞர் அண்ணன் கு.செந்தில் குமார்@advsenthilntk மற்றும் திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர்கள் பங்கு பெற்றனர்.
@_ITWingNTK