#நாம்தமிழர்கட்சியில்இருந்துவிலகல் !
இது தான் தற்போதைய ட்ரெண்டிங்! நாமலும் ஒரு லெட்டர எழுதுவோம் ! நான் அரசியல் செய்யவேண்டும் மேடையில் பேச வேண்டும் காணொளிகள் பேச வேண்டும் என்றெல்லாம் கட்சிக்குள் என்னை இணைக்கவில்லை !
கொள்கையை இறுக பிடித்து @Seeman4TN கரம்பிடித்து செல்லவேண்டும் என்ற நோக்கோடு களத்தில் இறங்கினேன் !
பாதையை தேடாதே! உருவாக்கு என்ற கூற்றுப்படி என்னுடைய பாதையை நானே இங்கு உருவாக்கினேன்.
அரசியல் என்பதை கற்றுக்கொண்டு களத்தில் வரவில்லை நாம் தமிழர் கட்சி தான் அரசியலை விதைத்தது!
அதனால் சிம்பிளாக எத்தனை தோல்விகள் வந்தாலும் வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் இறுதி வரை #நாம்தமிழர்கட்சியில் பெருமையோடு போராடினேன் என்றும் இலட்சிய கனவை சுமந்து நின்றேன் என்றும் இறுதி மூச்சுவரை இந்த பாதையில் தொடர்வேன்!
கட்சியில் என்னை மீண்டும் வலிமைபடுத்திக்கொள்கிறேன் ! @NaamTamilarOrg !
இவரின் @Seeman4TN கரம்பிடித்த நான் இம்மி அளவும் பிழை இல்லாமல் இறுதி வரை இவரோடு மட்டுமே! ❤️🩹❤️🩹❤️🩹❤️🩹
#பொய்வாக்குறுதியைதரமாட்டோம் - தவெக
@CMOTamilnadu@TVKVijayHQ Bro பொய்வாக்குறுதி தரமாட்டாரு தர வாக்குறுதியை நிறைவேற்றதான் மாட்டாரு! 😭
முழுகாணொளி பார்க்க : பாஜகவை பார்த்து பம்மும் விஜய் | டெல்லியில் போராடும் மாணவர்கள் | ராகுல்காந்திக்கு அடி |
காணொளி பார்க்க : https://t.co/QNcJxb6WE7…
முழு காணொளி : https://t.co/QNcJxb6WE7…
பேருந்தில் பயணிக்கும் ஆண்களுக்கு சொல்றேன் பாத்து உட்காருங்க 😭🫠!
கேடுகெட்ட சமூகமாக மாறிக்கொண்டு உள்ளது தமிழ்நாடு!
வர வர பெண்களை விட ஆண்களுக்கு பாதுகாப்பு குறைகிறது. 💔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
என் வாழ்க்கையில் இன்று நடந்தவை ஏற்றுக்கொள்ளமுடியாது ! 💔
இந்த தமிழ்நாடு எதை நோக்கி சென்றுகொண்டு உள்ளது ?
பெண்கள் பாதுகாப்பை பற்றி பேசும் நாம்
ஒரு ஆணுக்கு ஆண்களால் கூட பொதுவெளியில் பாதுகாப்பு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் !
பேருந்துல பாத்து செல்லுங்க காய்ஸ் ! ஒரே வானவில்லா இருக்காங்க💔😭
என் வாழ்க்கையில் இன்று நடந்தவை ஏற்றுக்கொள்ளமுடியாது ! 💔
இந்த தமிழ்நாடு எதை நோக்கி சென்றுகொண்டு உள்ளது ?
பெண்கள் பாதுகாப்பை பற்றி பேசும் நாம்
ஒரு ஆணுக்கு ஆண்களால் கூட பொதுவெளியில் பாதுகாப்பு இல்லை என்பதை ஏற்றுக்கொள்ளுங்கள் !
பேருந்துல பாத்து செல்லுங்க காய்ஸ் ! ஒரே வானவில்லா இருக்காங்க💔😭
டெல்லியில் நடக்கும் நீட் தேர்வுக்கு எதிரான பிரச்சினையை அவங்க பாத்துப்பாங்க தமிழ்நாட்டுல உள்ள பிரச்சினையை பாருங்க - போக்குவரத்து துறை அமைச்சர் !
ஆமா அப்படியே இல்லனா மட்டும் அருத்து தள்ளிடுவாரு ! 🤷🏼
கதறி கதறி அழும் அமைச்சர்கள் !
மக்கள் : ஏன் பா காவிரி தண்ணீர் வரலானா இல்ல நீட் எதிர்த்து போராடுவதுனாலையா ? இல்ல 100 விஜய் வந்தாலும் மேகதாது அணை கட்டுவோன் சொன்னாங்களே அதுக்காகவா ?
அமைச்சர் : அட இல்லப்பா Simple ! எங்க தலைவன் விஜயை ஸ்கீரீன் ல பார்த்துட்டோம் னு 😭
வெளங்கும் டா !
எனது நண்பனின் மனக்குமுறல் ! 🫠😂
இப்போது டிக்கெட் கவுண்டரிலே 700,800 ரூபாய்க்கு என விலையை ஏற்றி, முறைகேடாக விற்கிறார்கள் !
திருட்டுத்தனமாக டிக்கெட் விலையை ஏற்றி விற்றவர்கள், இப்போது வெளிப்படையாக அதனைச் செய்யத் தொடங்கியிருக்கிறார்கள் ! தங்களின் ஆட்சியென ஆட்டம் போடத் தொடங்கியிருக்கிறது கேடுகெட்ட தவெக அரசு !
நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை விசாரிப்பது மட்டுமல்ல; இம்முறைகேடான நீட் தேர்வு முறையையே முற்றாக நீக்க வேண்டும்.
நீட் எனப்படும் தேசியத் தகுதி மற்றும் நுழைவுத்தேர்வில் நடந்த முறைகேடுகளுக்கும், குளறுபடிகளுக்கும் எதிராக டெல்லியில் நடைபெற்ற இளைஞர் கூட்டத்தினுடைய மாபெரும் போராட்டத்தின் நீட்சியாக, வடமாநிலங்களில் போராட்டம் பற்றிப் படர்கையில், தமிழ்நாட்டிலும் மாணவர்களும், இளைஞர்களும் வீதியில் இறங்கிப் போராட முனையும்போது, அதனைக் காவல்துறையினர் மூலம் ஒடுக்கும் தவெக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியது. நீட் தேர்வை எதிர்ப்பதாகக் கூறிவிட்டு, அத்தேர்வுக்கு எதிராக இளைய தலைமுறையினரின் தன்னெழுச்சியான போராட்டத்தை அடக்கி ஒடுக்க முயலும் மாநில அரசின் போக்கு சனநாயகத்துரோகமாகும்.
திரையில், ‘ஜனநாயகன்’ எனப் பெயர் சூட்டிக் கொள்ளும் முதல்வர் விஜய், தரையில் மாணவர்கள், இளைஞர்கள் மீது காவல்துறையின் மூலம் அரச வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு, சனநாயகத்தைப் பச்சைப்படுகொலை செய்யலாமா? திரைப்படத்தில் மட்டும்தான் ஜனநாயகனா? வடநாட்டு இளைஞர்கள் டெல்லி வீதிகளில் கல்வியுரிமைக்காகக் களத்தில் நிற்கையில், தமிழ்நாட்டு இளைஞர்களைத் திரையரங்க வாசலில் நிறுத்தி இருப்பதெல்லாம் ஏற்கவே முடியாத பெருங்கொடுமை. ஒருபக்கம், டெல்லியில் நடைபெறும் இளைஞர்களின் போராட்டம் மீதான பாஜக அரசின் அடக்குமுறையைக் கண்டிப்பதாகக் கூறிக் கொண்டு, தமிழ்நாட்டில் நடைபெறும் நீட் தேர்வுக்கு எதிரான இளைஞர்களின் போராட்டங்களை தவெக அரசு ஒடுக்க நினைப்பது இரட்டை வேடமில்லையா? பாஜகவைக் கொள்கை எதிரியெனக் கூறிவிட்டு, பாஜகவுக்காக தவெக அரசு செய்யும் மறைமுகச் சேவகமில்லையா இது? கேலிக்கூத்து!
வடமாநிலங்களில் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைக் கண்டித்துப் போராடுகையில், தமிழ்நாட்டில் மட்டும்தான் நீட் தேர்வு முறையே ஒரு முறைகேடு என்பதை வலியுறுத்திப் போராட்டங்கள் நடக்கின்றன. ஏற்கனவே, இருந்த முறையைவிட நீட் தேர்வின் மூலம்தான் தரமான மருத்துவர்களை உருவாக்க முடியும் எனக் கூறிக் கொண்டு வரப்பட்ட முறையிலேயே இவ்வளவு முறைகேடுகள், குழப்பங்கள், குளறுபடிகள் என்றால், இந்தத் தேர்வு முறை எதற்கு? இதே நீட் தேர்வு முறையில் கடந்த காலங்களில் முறைகேடு ஏற்பட்டிருக்காது என்பதற்கு என்ன உறுதிப்பாடு இருக்கிறது? ஆகவே, நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேட்டை விசாரிப்பது மட்டுமல்ல; இம்முறைகேடான நீட் தேர்வு முறையையே முற்றாக நீக்குவது என்பதே இந்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பைத் தற்காப்பதற்கான பெருவாய்ப்பாகும். ஒரே மாதிரியான கற்றல் வாய்ப்புகளும், வசதிகளும் இல்லாத நாட்டில் ஒரே மாதிரியான நுழைவுத்தேர்வு என்பதே அசமத்துவமானது. ஆகவே, சமத்துவத்துக்கு எதிரான நீட் தேர்வு முறையை நாம் தமிழர் கட்சி வலிமையாக எதிர்க்கிறது.
நீட் தேர்வை எதிர்த்து அரசியல் கட்சிகளும், இயக்கங்களும் போராட்டங்களை முன்னெடுக்கிறபோது அவைகள் அடையாளப் போராட்டங்கள் என்றளவில்தான் கருதப்படும். அதேசமயம், மாணவர்களும், இளைஞர்களும், பொதுமக்களும் வீதிக்கு வந்து போராடுகிறபோது, அது சனநாயகப்புரட்சியாக வெடித்து, ஆளும் வர்க்கத்தை அடிபணியச்செய்து, கோரிக்கை முழக்கத்தை நிறைவேறச் செய்யும். அதனை நோக்கிய இளையோர் கூட்டத்தின் அறப்போராட்டத்தை முழுமையாக ஆதரித்து, வரவேற்கிறேன்.
தமிழ்நாட்டில் நடைபெறும்
இளையோர் கூட்டத்தின் அறப்போராட்டம் வெல்லட்டும்!
நீட் எனும் நுழைவுத்தேர்வு முறை முழுமையாக நீக்கப்படட்டும்!
அநீதிக்கு எதிராகப் போர்க்குணத்தோடு களத்தில் நின்றுப் போராடும் என்னுடைய தம்பி, தங்கைகள் அனைவருக்கும் என்னுடைய புரட்சிகரமான வாழ்த்துகளும், அன்பும்!
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
பாஜகவை பார்த்து பம்மும் விஜய் | டெல்லியில் போராடும் மாணவர்கள் | ராகுல்காந்திக்கு அடி |
காணொளி பார்க்க : https://t.co/oTSD6vSC3t
முழு காணொளி : https://t.co/DvwPRY1tbF