நாடு முழுவதும் அதிகரித்து வரும் ஸ்பேம் மற்றும் மோசடி தொலைபேசி அழைப்புகள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள் என்ன?
நாடாளுமன்ற மேலவையில் நான் எழுப்பிய இந்த கேள்விக்கு...
2025-ல் 31.09 லட்சம் UCC புகார்கள்; 2026 மே மாதம் வரை 17.22 லட்சம் புகார்கள் பதிவாகி உள்ளதாகவும்,
DLT & DND மூலம் தினமும் 7.7 கோடிக்கும் மேற்பட்ட ஸ்பேம் அழைப்புகள் மற்றும் SMS-கள் தடுக்கப்படுவதாகவும்,
2024 ஜனவரி முதல் 21.6 லட்சம் பதிவு செய்யப்படாத டெலிமார்க்கெட்டர் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளது எனவும்,
AI தொழில்நுட்பம் மூலம் தினமும் 26.4 கோடிக்கும் மேற்பட்ட அழைப்புகள் மற்றும் SMS-கள் சந்தேகத்திற்கிடமான ஸ்பேம் எனக் குறியிடப்பட்டு பொதுமக்களை ஸ்பேம் மற்றும் நிதி மோசடிகளிலிருந்து பாத���காக்க மத்திய அரசு தொடர் நடவடிக்கை எடுத்து வருவதாகவும்,
மத்திய தொலைத்தொடர்பு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் டாக்டர் பெம்மசானி சந்திர சேகர் எழுத்துப்பூர்வ பதில் அளித்துள்ளார்.
@AIADMKOfficial
#நாடாளுமன்றத்தில்_அதிமுக
நல்லா படிச்சி இன்ஜினியர் ஆகலாம், டாக்டர் ஆகலாம் என்று கனவோடு படிக்கும் பிள்ளைகள பார்த்து, கார்பெண்டர் அப்பாயிண்ட்மெண்ட் கிடைப்பதே கஷ்டமா இருக்கு என்று சொல்லும் ஆச்சரியக்குறி அமைச்சர் @CTR_Nirmalkumar !
படிக்கும் மாணவர்கள் ���ந்த வேலைக்கு செல்வது என்பதை அவர்கள் தீர்மானிக்கட்டும். உங்களுக்கு அவ்வளவு அக்கறை இருந்தால் உங்கள் அமைச்சர் பதவியை துறந்துவிட்டு நீங்கள் விரும்பும் பணிக்கு செல்லுங்கள்!
#ஆச்சரியக்குறி_பரிதாபங்கள்
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு, மற்ற மாநிலங்க��ின் அனுமதி பெறப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் பதில் அளித்ததற்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
மேகதாதுவில் அணை கட்ட கர்நாடகாவிற்கு, மற்ற மாநிலங்களின் அனுமதி பெறப்பட வேண்டும் என உச்சநீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என்று மத்திய நீர்வளத் துறை இணை அமைச்சர் பதில் அளித்ததற்கு கண்டனம்!
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புர���்சித் தமிழர் @EPSTamilNadu அவர்கள்
அரசு வழக்கறிஞர் பதவிக்கு லஞ்சம் வாங்கப்படுகிறது என்று தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அணி நிர்வாகி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில், அந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தவெக செயற்குழு உறுப்பினர் அணிஸ் என்பவர் பெண் வழக்கறிஞரிடம் 15 லட்சம் வரை அரசு வழக்கறிஞர் பதவிக்கு லஞ்சம் கேட்கும் ஆடியோ வெளியாகி தமிழக வெற்றிக்கழக அரசின் முகத்திரையை கிழித்துள்ளது.
ஒப்பந்ததாரர்கள் மற்றும் வியாபாரிகளை மிரட்டி கமிஷன், கோவில் நிலங்களில் முறைகேடு, அரசு வழக்கறிஞர் பதவிக்கு லஞ்சம் என ஆட்சிப் பொறுப்பேற்று மூன்று மாதங்கள் கூட முடியா�� நிலையில் ஊழலில் ஊறிப்போயுள்ளது தமிழக வெற்றிக் கழகம்.
இந்த, "விஜய் தப்பு பண்ண மாட்டான்; தப்பு பண்றவங்களையும் விடமாட்டான்" என்று பஞ்ச் டயலாக் பேசிய ரீல்ஸ் முதலமைச்சரும், அஞ்சு கட்சி அம்மாவாசையான சட்டத்துறை அமைச்சரும் இந்த ஆடியோவுக்கு என்ன பதில் சொல்லப் போகிறார்?
#பொய்க்கால்_குதிரை_அரசு
"என்னுடைய தொகுதிக்குள் வந்தால் கொன்று விடுவேன்" என்று சொந்தக் கட்சியைச் சேர்ந்த சாத்தூர் ஒன்றியச் செயலாளரை, அமைச்சர் ஜெகதீஸ்வரி ஆபாசமாகத் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக ஆடியோ வெளியாகிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆட்சிக்கு வந்து மூன்று மாதங்கள் கூட ஆகாத நிலையில், அதிகார திமிருடன் சொந்தக் கட்���ி நிர்வாகியையே ஆபாசமாகப் பேசும் இவர்களா தமிழகத்திற்கு மாற்றத்தைத் தரப் போகிறார்கள்?
ஒட்டுமொத்த அரசியல் கழிவுகளின் குவியலாக மாறியுள்ள 'தமிழக வெற்றிக் கழகம்' மாற்றமல்ல; அது சகிக்க முடியாத துர்நாற்றமே!
#பொய்க்கால்_குதிரை_அரசு
மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் ஆணைக்கிணங்க
மதுரவாயல் தொகுதி, நெற்குன்றம் பல்லவன் நகரில் விடியா திமுக அரசால் தொடங���கப்பட்டு செயல்பட்டு வரும் டாஸ்மாக் மதுபானக் கடையை, பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக மூட த.வெ.க. அரசை வலியுறுத்தி, திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழகத்தின் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.
நாடு போற்றும் அறிவும், மக்கள் போற்றும் அன்பும், பதவிகள் வந்த போதெல்லாம் பணிவும் நிறைந்த இந்தியாவின்
மேனாள் குடியரசுத் தலைவர்,
பாரத ரத்னா டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் நினைவு நாளில், அவர்தம் பெரும் புகழை வணங்குகிறேன்.
“கனவு காணுங்கள்; அந்தக் கனவுகளை நனவாக்க உழையுங்கள்�� என்ற
அவரது உயரிய சிந்தனை,
இன்றும் இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்காகத் திகழ்கிறது.
அவரது எளிமை, தேசப்பற்று, அறிவியல் பங்களிப்பு மற்றும் இளைஞர்கள் மீதான நம்பிக்கை என்றும் நம் மனங்களில் நிலைத்திருக்கும்.
@AIADMKOfficial
காவிரி பிரச்சினையில் தவெகவும் திமுகவும் இணைந்து நாடகமாடுகின்றன!
காவிரி இறுதித் தீர்ப்பு தெளிவாக இருக்கும்போது, @Udhaystalin வேண்டுகோளை @TVKVijayHQ ஏற்று புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டி சட்டமன்றத்தில் இடைச்செருகல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டிய காரணம் என்ன?
தீர்ப்பாயத்தின் இறுதி உத்தரவு அமலில் இருக்கும்போத���, காவிரி நீரைப் பெற கர்நாடக அரசுடன் @CMOTamilnadu பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியம் என்ன?
மக்கள் விரோத நடவடிக்கைகளில் திமுக ஆல்பா கொரோனா வைரஸ் என்றால், தவெக பீட்டா கொரோனா!
@AIADMKOfficial @EPSTamilNadu
#காவிரி
CM சார்….
வாயைத் திறந்து பேசுங்க சார்…
பதில் சொல்லுங்க சார்…
மக்கள் பாதுகாப்பாக இருக்கணும் சார்..!!
-கழக செய்தித் தொடர்பாளர், முன்னாள் அமைச்சர் திருமதி. S கோகுல இந்திரா அவர்கள்.
#AIADMK
தமிழ்நாட்டில் மக்களுக்கு எந்தவொரு பிரச்சனையாக இருந்தாலும்,
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்கள் படை,
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் படை,
புரட்சித்தமிழர் @epstamilnadu அவர்களின் படை முன்வந்து நிற்கும் என்பதை பறைசாற்றும் விதமாக இந்த போராட்டம் நடைபெறுகிறது.
-பழனியில் நடைபெறும் ஆர்பாட்டத்த���ல் திண்டுக்கல் மேற்கு மாவட்டக் கழக செயலாளர் @DrVpb அவர்கள்.
#AIADMK.
நாடாளுமன்ற உறுப்பினராகி இன்றுடன் ஓராண்டு நிறைவு!
பெருமைமிகு இந்நல்வாய்ப்பை எனக்கு வழங்கிய @Aiadmkofficial பொதுச் செயலாளர் @EPSTamilNadu அவர்களுக்கும், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் எனது தலைவணக்கம்!
One Year. Bold Voice. Countless Questions.
Speaking for Tamil Nadu... and the journey continues.
#OneYearInParliament #RajyaSabha
#TamilNadu #AIADMK #Inbadurai
தவெக ஆட்சியின் அவலத்தால் காவல்துறையினரின் லத்திகளுக்கு இரையாகி, தன் 24 வயது மகனை இழந்து கண்ணீருடன் ஒரு தாய் பரிதவித்துக் கொண்டிருக்கும் போது, அந்தத் தாயின் கண்ணீரைத் துடைக்க வேண்டிய ஆட்சியாளர்களோ சினிமா கொண்டாட்டங்களில் கூத்தடித்து ஆனந்தக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறார்கள்!
இங்கு திருந்த வேண்டியது அவர்கள��்ல; 'மாற்றம் பிறக்கும்' என்று நம்பி வாக்களித்து, இன்று ஏமாந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் தமிழக மக்கள்தான்!
#பொய்க்கால்_குதிரை_அரசு
ஸ்ரீவைகுண்டம் தவெக சட்டமன்ற உறுப்பினர் மீது சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகியே பாலியல் புகார் அளித்தும் அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில்
தற்போது தவெக இராணிப்பேட்டை மேற்கு மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் ��ன்பவர், மகளிர் அணியில் பதவி வாங்கித் தருவதாகக் கூறி சொந்தக் கட்சியைச் சேர்ந்த பெண் நிர்வாகியிடம் செல்போனில் ஆபாசமாகப் பேசியும், வீடியோ காலில் தவறாக நடந்து கொண்டும் உள்ளார். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் ஆதாரத்துடன் காவல்துறையில் புகார் அளித்து மூன்று நாட்களாகியும் இதுவரை அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இப்படி சொந்தக் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் எனப் பலர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியபோது அவர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கைகட்டி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும் நீங்களா தமிழக பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்கப் போகிறீர்கள்?
@CMOTamilNadu
பாலியல் குற்றவாளிகளின் சரணாலயமாகத் திகழும் தமிழக வெற்றி கழகம் ஆட்சியில் நீடிக்கும் ஒவ்வொரு நொடியும் தமிழகத்தில் ஒவ்வொரு மூலையிலும் ���வெக நிர்வாகிகளால் பெண்கள் பாதிக்கப்பட்டு கொண்டுதான் இருப்பார்கள். தமிழக வெற்றி கழகம் கருவின் குற்றம்!!
#பொய்க்கால்_குதிரை_அரசு
தேர்தல் நேரத்தில் ஓட்டு பிச்சைக்காக புரட்சித்தலைவரின் புகைப்படத்தை பயன்படுத்திக் கொண்ட தவெக கட்சியினர், இன்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்ததும் அதிகாரத் திமிரில் மூதா���்டியின் தோளில் இருந்த புரட்சித்தலைவரின் கட்சிக் துண்டைக் கழற்றி வீசுகிறார்கள்.
ஆட்சி அதிகாரம் கிடைத்த பின்பும் புரட்சித்தலைவரின் கட்சியின் துண்டைப் பார்த்து கூட அச்சப்படுகிறீர்கள் என்றால், அந்த அச்சம் இருக்கும் வரை புரட்சித்தலைவர் தான் இந்த நாட்டை ஆள்வார்!
திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டியின் கால் விரல்களை எலிகள் கடித்துக் குதறியுள்ள சம்பவம் தமிழக சுகாதாரத்துறையின் அவலத்தை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.
தமிழக மக்கள் அரசு மருத்துவமனைகளில் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில், சுகாதாரத்துறை அமைச்சரோ சினிமா கொண்டாட்டங்களில் மும்முரமாக இருப்பது தமிழகத்தின் ஆகப்பெரும் சாபக்கேடு!!
#பொய்க்கால்_குதிரை_அரசு
தேர்தல் காலம் வரை தன்னை நீட் எதிர்ப்புப் போராளியாக வேடமிட்ட @CMOTamilNadu, இன்று நீட் தேர்வுக்கு எதிராகக் குரல் கொடு��்கும் மாணவர்கள் மீது காவல்துறையைக் கொண்டு அடக்குமுறையை ஏவி ஜனநாயகத்தின் குரல் வளையை நசுக்குகிறார்!
இரண்டு மாதங்களாக எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கு மௌனம் காக்கும் முதல்வர், ஜனநாயக ரீதியாகப் போராடும் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுக்காவது வாயைத் திறந்து பதில் சொல்வாரா?
#பொய்க்கால்_குதிரை_அரசு