எடப்பாடி பாட்டாளி கார்த்தி மறைவுக்கு இரங்கல்.
சேலம் மாவட்டம், தாதாபுரம் கிராமத்தைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் எடப்பாடி கிழக்கு ஒன்றிய முன்னாள் செயலாளர் பாட்டாளி கார்த்தி உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
இளைஞரான பாட்டாளி கார்த்தி ஒன்றிய செயலாளர் பணியில் சிறப்புடன் செயல்பட்டவர். அரசியலில் மேலும் உயரங்களைத் தொட்டிருக்க வேண்டிய அவர், இளம் வயதில் நம்மை விட்டு பிரிந்தது துயரமளிக்கிறது.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், நண்பர்கள், பாட்டாளி மக்கள் கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
Congratulations to TN’s Champion Sailor Shreya Krishna for finishing first overall in the Optimist (Main) class in the 16th YAI Monsoon Regatta 2025 held at Hussain Sagar Lake, Hyderabad. I wish her success in all her future endeavours as she is representing India in the 2025 Optimist World Championship in Portorož, Slovenia to be held between June 26th and July 6th, 2025.
பத்மபூஷன் விருது பெற்ற நடிகர்
அஜித்குமாருக்கு வாழ்த்துகள்!
இந்திய அரசின் சார்பில் குடிமக்களுக்கு வழங்கப்படும் மூன்றாவது உயரிய விருதான பத்மபூஷன் விருதை கலைத்துறையில் சிறந்த சேவையாற்றியதற்காக, குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்ற நடிகர் அஜித்குமார் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் கலை மற்றும் விளையாட்டுத்துறைகளில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்.
#PadmabhushanAjithKumar
பத்மஸ்ரீ விருது பெற்ற கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு வாழ்த்துகள்!
விளையாட்டுத் துறையில் படைத்த சாதனைகளுக்காக பத்மஸ்ரீ விருதை, குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்ற கிரிக்கெட் வீரர் அஷ்வின் அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவர் விளையாட்டுத்துறையில் மேலும் பல சாதனைகளைப் படைக்க வாழ்த்துகிறேன்.
#PadmaShriAshwin
@ashwinravi99
Congratulations to #AjithKumar Sir on being conferred with the prestigious Padma Bhushan.
A deserving honour for a deserving gentleman.
#PadmabhushanAjithKumar
பா.ம.க. மாவட்ட செயலாளர் ஜெயராஜ் கைது கண்டிக்கத்தக்கது: விடுதலை செய்க!
திண்டிவனத்தில் அறவழியில் போராட்டம் நடத்திய விழுப்புரம் கிழக்கு மாவட்ட பா.ம.க. செயலாளர் ஜெயராஜ், தலைவர் பாவாடைராயன் உள்ளிட்ட நால்வரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்களை ஆண் காவலர்கள் தாக்கியதில் 3 பெண்கள் காயமடைந்துள்ளனர். காவல்துறையினர் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்க வேண்டும்.
அரசியல் கட்சிகளின் ஜனநாயக உரிமைகளை காவல்துறை மதிக்க வேண்டும். அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடக்கூடாது. கைது செய்யப்பட்ட பா.ம.க. நிர்வாகிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்.
@tnpoliceoffl
மருத்துவர் அய்யா அவர்களுக்கு
புகழ் சேர்க்கும் வகையில் பாமகவை தொடர்ந்து வழி நடத்திச் செல்வேன்!
பாட்டாளி சொந்தங்களுக்கு பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை
(தலைமை நிலைய பதிவு)