2025 ல் நாம் தமிழர் கட்சி,
மரங்களின் மாநாடு போட்டபோது
மடையர்கள் பலர் அண்ணன்
சீமானை கேலி பேசி அல்ப
சந்தோசம் அடைந்தார்கள்.!!!
அந்த மாநாட்டில் அவர் பேசியது,
இன்று 2025, தொடர்ந்து பூமி வெப்பமயமாதலில், 2030துக்குள்
இமயமலையில் உள்ள 80 சதவீத
பனி பாறைகள் உருகி..
நானூறு,ஐநூறு கிலோமீட்டர் தூரத்திற்கு..எல்லாவற்றையும்
வாரி சுருட்டிக் கொண்டு போகும்
உலகம் பேரழிவை சந்திக்கும்
என்றார்..!!!!
இன்று நேபாளத்தில் நடந்ததை
நாம் அறிவோம்.சீமான் வளர்ச்சிக்கு
எதிரானவர்.மக்களை பின்னோக்கி
இழுக்கிறார் என்று குற்றம் சாட்டுகிறவர்களே..கவனியுங்கள்.
வளர்ச்சி வேறு,வீக்கம் வேறு
சீமான் இதை அறியாதவரல்ல,
அவரது பார்வை இயற்கையின் பால்,பேரன்பு கொண்டு தொலைநோக்கம் கொண்டவை.
நீங்கள் அவரை கேலி பேசி
தற்காலிக சுகம் காணுங்கள்.
ஏனெனில் உங்களுக்கு
தெரிந்ததெல்லாம் அவ்வளவு தான்.
ஆனால் எங்களுக்கோ..
இப்படி ஒருவன்..இம்மண்ணை
நேசித்து. கற்றுத்தரவும்..
எதர்கால ஆபத்தை எடுத்துரைத்து
எச்சரிக்கவும் இருக்கிறாரே
என்று..நாங்கள் அவரை தூக்கிச்
சுமந்து மகிழ்ந்து கொள்கிறோம்.
உலகில் சின்ன சின்ன இனங்கள் எல்லாம் விடுதலை பெற்று தனி நாடடைந்து வாழும்போது.. உலகில் ஒரு மூத்த இனம் வரலாற்று சிறப்புமிக்க ஒரு இனம் நமக்கென்று ஒரு நாடு உருவாகப் போகிறது என்று இருந்தோம் ஆனால்..
- Truly Ram podcastல் சீமான்
தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவராக இருக்கும் அண்ணன் பெலிக்ஸ் ஜெரால்டு தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்கக் கூடாது என திமுகவின் சட்டமன்ற உறுப்பினர் ஆஸ்டின் சட்டமன்றத்தில் பேசினார். இன்னும் சிலரும் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள்.
இதே சிறுபான்மையினர் ஆணையத்தின் தலைவர் பொறுப்பில் இருந்த பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் கடந்தாட்சியில் ஊடக விவாதங்களில் பங்கேற்றார். எனவே, பெலிக்ஸ் ஜெரால்டு ஊடக விவாதங்களில் பங்கேற்கத் தடைகோரக் கூடாது.
அப்புறம், அண்ணன் பெலிக்ஸ் அவர்களோடு விவாதங்களில் பங்கேற்க நானும் 'பெரும் ஆர்வமாகவும், விருப்பமாகவும்' இருக்கிறேன்.
வார்த்தை ஈட்டிகள் வீசும் தற்குறிகள்
வழியில் எறியும் கல்லாவார்;
பார்த்துச் சிரித்து நின்றே கடப்போம்,
பயணம் நமக்கு மிகப்பெரிது!
அவச்சொல் உரைக்கும் நாவுகளுக்குப்
பதிலடி கொடுக்கத் தேவையில்லை;
உயர்ந்து காய்த்த மரங்கள் மட்டுமே
கல்லடி படும் வரலாறாம்!
எள்ளி நகையாடும் கூட்டத்தின் முன்னே,
எழுந்து நிமிரும் தன்னம்பிக்கை;
துள்ளித் திரியும் வதந்திகள் அழியும்,
துணிந்தவன் புகழே நிலைத்து நிற்கும்!
சொற்களால் வீழ்த்த நினைக்காதே,
செயல்களால் பதில் நாம் பேசுவோம்;
இழித்தவர் தலைகுனிந்து நிற்கும் வகையில்
சிகரம் தொட்டே காட்டுவோம்!
#seeman #sattaiduraimurugan #Ntk #gymmotivation