தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி மத்திய சென்னை தெற்கு மாவட்டம் அண்ணா நகர் பகுதி சார்பாக நடைபெறும் செயல்வீரர்கள் கூட்டம் அல்ஹத்துலில்லாஹ் மகளிர் அணி சார்பாக சகோதரி ஷிபானா பிர்தொஸ் அவர்கள் சிறப்புரையாற்றினர்கள்.
#tmmkitwing#தமுமுக32#tmmk32years
Every citizen should be familiar with constitution. I am willing to volunteer to take it to children/ students. any agency working on this? ping me 9994790008
இந்திய அரசியலமைப்பு சட்டம் மாணவர்களிடம் சென்று சேர்வது நல்லதோரு சமுதாயம் உருவாக வழிவகுக்கும்
#citizens#Constitution
கோவையின் தலைசிறந்த மூத்த குற்றவியல் வழக்கறிஞர் ஞானபாரதி அவர்கள் இன்று நம்மை விட்டுப் பிரிந்தார் என்ற துயரச் செய்தியை அறிந்து துயருற்றேன்.
கோவையில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்ட காலத்தில் துணிச்சலாக அவர்களுக்காக வாதாடி விடுதலைப் பெற்றுத் தந்தார்.
தீக்கதிர் நாளிதழின்
ஆரம்பக்கால ஆசிரியர்களில் ஒருவராகவும் சிறந்த சிறுகதை எழுத்தாளராகவும் அவர் விளங்கினார்.
இறுதி வரை ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடதுசாரி அரசியலின் பக்கம் நின்று வாதிட்டவருமான வழக்கறிஞர் தோழர் ஞானபாரதி அவர்கள் இறப்பு சமூகத்திற்கு மாபெரும் இழப்பாகும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்
ஏ ஜி நூரானி இன்று நம்மை விட்டுப் பிரிந்தார் என அறிந்து துயருற்றேன். அவருக்கு வயது 93.
அப்துல் கபூர் மஜித் நூரானி நமது காலத்தில் வாழ்ந்த தலைசிறந்த அரசமைப்புச் சட்ட வல்லுநர் ஆவார். எனது மாணவப் பருவம் முதல் அவரது எழுத்துகளை பிரண்ட்லைன் இதழில் படித்துப் பயனடைந்துள்ளேன்.
அவர் எழுதியுள்ள பல நூல்களில் The Kashmir Question (1964), Ministers’ Misconduct (1973), Constitutional Questions and Citizens’ Rights (2006), and The RSS: A Menace to India (2019) குறிப்பிடத்தக்கவையாகும்.
அவரது மறைவு ஈடு செய்ய இயலாத பேரிழப்பாகும்.
அவருக்காக என்னுடைய பிரார்த்தனைகள்
#AGNoorani
தமிழ்நாட்டில் உள்ள சுங்கச்சாவடிகள் கட்டணம் உயர்விற்கு கடும் கண்டனம்.
மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் பேராசிரியர் எம் எச் ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை
தமிழ்நாட்டில் 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 5% முதல் 7% வரை சுங்க கட்டண உயர்த்தப்பட இருப்பதாகத் தெரிய வருகிறது.
இந்தியாவிலேயே மிக அதிகமான சுங்கச்சாவடிகள் தமிழ்நாட்டில்தான் இருப்பதாகப் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சுங்கச்சாவடிகளில் எவ்வளவு கட்டணம் வசூல் செய்யப்பட்டிருக்கிறது அதன் வாயிலாகச் செலவழிக்கப்பட்ட தொகை எவ்வளவு என்கிற புள்ளி விவரங்கள் இதுவரை வெளிப்படைத் தன்மையோடு அறிவிக்கப்படவில்லை. இது குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி பலமுறை கோரிக்கை வைத்துள்ளது. ஃபாஸ்ட் டாக் என்ற பெயரில் வசூலிக்கப்படும் முன் தொகை வாயிலாகப் பெருமளவில் பொருளாதாரம் வாகன உரிமையாளர்களிடமிருந்து சுரண்டப்படுகிறது.
கடந்த ஜூன் மாதம் தமிழ்நாட்டில் 25 சுங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில் தற்போது 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட இருக்கிறது. இந்தக் கட்டண உயர்வின் வாயிலாகப் பேருந்து கட்டண உயர்வு மற்றும் வாடகை வாகனங்களின் கட்டணம் உயர்த்தப்படுவதோடு விலைவாசிகளின் உயர்வும் தவிர்க்க முடியாததாக ஆகிவிடும்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பரந்தூர் சுங்கச் சாவடியில் கூடுதலாக ரூபாய் 28 கோடி வசூல் செய்தது என இந்தியத் தலைமை கணக்காயர் அறிக்கை அளித்ததும் கவனிக்கத்தக்கது
ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் என்எச்ஏஐ எனும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் உடனடியாகச் சுங்க கட்டண உயர்வினைத் திரும்பப் பெற வேண்டும். இல்லையென்றால் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் சுங்கச்சாவடிகளை முற்றுகையிடும் போராட்டத்தை அறிவிக்க நேரிடும்..
இப்படிக்கு
எம்.எச். ஜவாஹிருல்லா
தலைவர்
மனிதநேய மக்கள் கட்சி
#NHAI #Toll
@sunnewstamil@PTTVOnlineNews@ThanthiTV@news7tamil@sathiyamnews@News18TamilNadu@TamilTheHindu@THChennai