இன்னைக்கு உங்க ஆட்சியுடைய கொடுமையைத் தமிழ்நாட்டு மக்களால அரை நாள் கூட தாங்க முடியலையே! புதுசா திட்டம் கொண்டு வர்றதுக்கு, வாக்குறுதி நிறைவேத்துறதுக்கு ஆறு மாசம் டைம் ஓகே. ஆனா, டெய்லி பிரச்சனை இருக்கே, சட்டம் ஒழுங்கு பிரச்சனை இருக்கே, அதுல நீங்க சொதப்புனா நாங்க எல்லாம் வாயை மூடிக்கிட்டு சும்மா இருக்கணுமா? வேடிக்கை பாக்கணுமா? நிச்சயம் குரல் கொடுப்போம்! நிச்சயம் உங்க தவறுகளைச் சுட்டிக்காட்டுவோம்!
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்.
#TVKFails
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில்,
அண்ணா அறிவாலய வளாகத்திலும், முரசொலி அலுவலக வளாகத்திலும் கலைஞர் அவர்களின் சிலைக்கு அருகே வைக்கப்பட்டிருந்த, அவர்களின் திருவுருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம். #KalaignarForerver
நான் வளர்ந்த - என்னை வளர்த்த அன்பகம் புதுப்பொலிவுடன்🖤♥️
@dmk_youthwing புதுவேகத்துடன் - புதிய இளைஞர்களைக் கொள்கையோடு வளர்த்து, வெற்றியை நமதாக்கட்டும்!
@Udhaystalin#KalaignarForever
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறு��ி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ���சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடு���்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவ��� வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங���களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel
Tamil Nadu counts the betrayals of NDA.
தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே...
தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய 3,458 ��ோடி ரூபாய் #SamagraShiksha கல்வி நிதி எப்போது வரும்?
#Delimitation-இல் தமிழ்நாட்டின் தொகுதிகள் குறைக்கப்படாது என்ற உறுதிமொழி உங்கள் வாயில் இருந்து எப்போது வரும்?
பா.ஜ.க.வின் முகவர்போல் செயல்படும் ஆளுநரின் அராஜகம் எப்போது முடிவுக்கு வரும்?
தமிழ்ப்பாசத்தில் தமிழர்களை மிஞ்சியதாய்க் காட்டிக்கொள்ளும் உங்கள் அரசிடம் இருந்து தமிழுக்குரிய நிதி ஒதுக்கீடு எப்போது வரும்?
"#MGNREGA தொடரும், மாநிலங்கள் மீது நிதிச் சுமையை ஏற்றி ஊரக மக்களின் வாழ்வாதாரத்தை ஒழித்துக் கட்டும் #VBGRAMG கைவிடப்படும்" என வாக்குறுதி எப்போது வரும்?
பத்தாண்டுகளாக 'இன்ச் இன்ச்'சாக ஒன்றிய பா.ஜ.க. அரசு இழ���த்து வரும் மதுரை #AIIMS எனும் எட்டாவது உலக அதிசயம் எப்போது எங்கள் கண்முன் வரும்?
இயற்கைப் பேரிடர்களுக்காக நாங்கள் கேட்ட நிவாரணத் தொகை எப்போதுதான் வரும்?
ஓசூர் விமான நிலையம், கோவை & மதுரை மெட்ரோ திட்டங்களுக்கு எப்போது ஒப்புதல் வரும்?
கீழடி அறிக்கை எப்போது வெளியே வரும்?
ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் ஒருமனதான கோரிக்கையான #NEET விலக்கு எப்போது அமலுக்கு வரும்?
தொடர்ந்து துரோகங்களை மட்டுமே செய்யும் பா.ஜ.க. கூட்டணிக்குத் தமிழ்நாடு எப்போது��ே தோல்வியைத்தான் தரும்!
#NDABetraysTN
கழகத்தின் அமைப்பு முறையில் அவசியமான மாற்றங்களை முன்னெடுப்பது பற்றி இன்றைய மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசினேன்.
தோல்விக்கு யாரும் யாரையும் குறை சொல்ல வேண்டாம். கட்சித் தலைவர் என்கிற முறையில நானே இதுக்கு பொறுப்பேத்துக்குறேன்.
பின்னடைவை வென்று முன்னேறுவோம்! மீண்டு வருவோம், மீண்டும் வருவோம்!
#DMKDistrictSecretariesMeet
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே,
மே மாசத்துக்கான கலைஞர் மகளிர் உரிமைத் தொகையை 15-ஆம் தேதி வரவு வைக்கணும்.
ஏற்கனவே உள்ள திட்டத்தைத் தொடர இப்ப எத���க்கு அவகாசம்? என்ன மறுசீரமைப்பு பண்ண போறீங்க?
திராவிட மாடல் அரசின் மக்கள் நலத் திட்டங்கள் தொடரும்னு நேத்துதான சட்டப்பேரவையிலயே சொன்னீங்க?
மாசம் 2,500 ரூபாய்னு சொல்லிட்டு, ஆயிரம் ரூபாய கூட தராம இழுத்தடிக்கிறதுதான் உங்க மாற்றமா?
தமிழ்நாடு சட்டப்பேரவையில நான் பேசுனப்ப, ''மக்களைப் பிரிக்கும் சனாதனம் நிச்சயம் ஒழிக்கப்பட வேண்டும்''-னு குறிப்பிட்டேன். இதுக்காக என்னை சில பேர் criticize பண்றாங்க.
இதுக்கெல்லாம் பயப்படுற ஆள் நான் இல்ல. எதிர்ப்புலேயே வளர்ந்தது தான் த��ராவிட இயக்கம். அந்த வகையில, ஒரு சின்ன விளக்கத்தை மட்டும் கொடுக்க விரும்புறேன்.
சனாதனம் ஒழிக்கப்படணும்னு சொன்னா யாரும் கோயிலுக்கு போகக் கூடாதுனு அர்த்தம் இல்ல.
கோயில்ல மட்டும் இல்ல, society-லயும் எல்லாருக்கும் equal உரிமை இருக்கணும்னு அர்த்தம்.
மேல் சாதி - கீழ் சாதின்னு மக்களைப் பிரிக்கிறதை தான் நான் ஒழிக்கணும்னு சொன்னேன்.
பெரியார் - அம்பேத்கர் - அண்ணா - கலைஞர் பேசின கொள்கைய தான் நான���ம் பேசினேன்.
நாங்க யாருடைய கடவுள் நம்பிக்கைக்கும் எதிரானவங்க இல்லை. ஆனா, Inequality-ஐயும், oppression-ஐயும் கடுமையா எதிர்ப்போம் .
'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்'-னு வள்ளுவர் சொன்னது தான் எங்க வழி!
டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்றத் தொக��தியின் வெற்றி வேட்பாளர் சகோதரர் @JJEbenezer1 அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு காசிமேடு பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டோம்.
ஐந்தாண்டு கால திராவிட மாடல் அரசின் சாதனைகளால் தமிழ்நாடு அடைந்துள்ள வளர்ச்சியை மக்களிடம் எடுத்துக்கூறி , அமையப்போகும் #திராவிடமாடல் 2.0 அரசு நிறைவேற்றப் போகும் வாக்குறுதிகளைப் பட்டியலிட்டோம்.
தமிழ்நாட்டை அழிக்க முயற்சிக்கும் சங்கிகள் கூட்டத்தையும் அவர்களின் அடிமை கூட்டத்தையும் வீழ்த்துவோம்.
திராவிட மாடல் அரசு தொடரட்டும், தமிழ்நாடு செழிக்கட்டும்!
#DMK4TN #VoteForDMK #ஸ்டாலின்_தொடரட்டும்
This Is Not Reform, This Is Reengineering Power
The NDA government under Hon’ble Prime Minister Thiru. @NarendraModi is systematically eroding the very foundations of Parliament. What should be a vibrant forum for debate and accountability is being reduced to a hollow ritual, a stage where members may not even get fair time to speak or represent their people.
This proposal to increase seats is a direct contradiction of their own slogan of minimum government, maximum governance. It will only inflate expenditure, burden taxpayers, and dilute the quality of parliamentary functioning.
This also goes against the spirit of Article 1 of the Constitution, which defines India as a Union of States. Ignoring the voices of states and bypassing meaningful consultation is not democratic - it is unitary overreach that undermines India’s federal and plural character.
More alarmingly, this exercise will blatantly skew representation and tilt the balance of power in favour of northern states dominated by the Bharatiya Janata Party, while silencing the voice of South India. As forcefully pointed out by veteran leader Thiru. @Siddaramaiah, this is not a neutral exercise; it is a calculated political restructuring. Northern states stand to gain nearly double the seats, while the South’s share stagnates at around 24%. This is nothing short of penalising states like Tamil Nadu, Karnataka, Keralam and Telangana for their success in population control.
Chief Ministers across the South, including Thiru @Siddaramaiah, Thiru @PinarayiVijayan and Thiru @Revanth_Anumula , have rightly warned that this move will distort federalism and concentrate power in a few regions.
The timing raises serious suspicion. Why push such a far-reaching decision in the middle of state elections? This appears to be yet another political manoeuvre aimed at shaping electoral narratives, much like earlier attempts to influence women voters ahead of the 2024 Parliament elections.
Let me be unequivocal: we strongly support 33% reservation for women. Our support is absolute. But it must be implemented without increasing seats and without punishing states that acted responsibly. If the intent is genuine, nothing prevents immediate implementation within the existing framework.
The government’s claims of being a champion of OBCs and social justice are deeply hollow. It has denied OBCs their rightful share, kept the Rs. 8 lakh creamy layer ceiling frozen for decades even while preaching a “Developed India”, and offers no meaningful guarantee for OBC women’s representation. The haste to proceed without even considering the outcome of the first comprehensive caste census expected in 2027 further exposes the lack of sincerity. This is not empowerment, it is exclusion dressed up as reform.
There is complete opacity on the basis for delimitation, will it rely on 1971 figures from a pre–population control era or the 2021 Census? Conflicting signals and vague assurances only deepen suspicion.
This move will also impose a massive financial burden on states, forcing them to expand or rebuild Legislative Assemblies, all without proper consultation. This is a direct assault on cooperative federalism.
This is not reform, it is a unilateral, politically driven exercise designed to concentrate power, weaken Parliament, marginalise the South, and undermine social justice.
The nation deserves answers: why this undue haste, why shift the goalposts, and who truly stands to benefit?
#FairDelimitation
திருவண்ணாமலையின் விடியலில் பெற்றவை:
குழந்தையின் முத்தம், குவளை தேநீர், தொழிலாளத் தோழர்களின் வாஞ்சை, ஆன்மீக அன்பர்களின் பாராட்டு, மாணவர்களின் உற்சாகம், பெண்களின் பேராதரவு!
இவர்களை மீறி நம்மை வெல்பவர் யார்!
#TiruvannamalaiWithDMK#வெல்வ��ம்_ஒன்றாக #VoteForDMK
☀️ DMK: The Driving Force of Chennai’s Development
🚆 மக்களின் அன்பில் நனைந்தபடியும், மெட்ரோ இரயில் திட்டம் உருவாகப் பாடுபட்ட நாட்களின் நினைவுகளைச் சுமந்தபடியும் ஒரு பயணம்…
துணை முதலமைச்சராக இருந்தபோது, ஜப்பான் நாட்டிற்குச் சென்று JICA-வின் நிதியுதவியைப் பெற்று வந்து, நான் முன்னின்று செய்த திட்டம்!
வி��்கோ நகர் முதல் விமான நிலையம் வரையிலும், செண்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயங்கிவரும் முதற்கட்டத் திட்டத்தில் இதுவரையில் கோடிக்கணக்கான பயணங்களை மக்கள் மேற்கொண்டுள்ளனர்.
அதிவேகமாக நடைபெற்றுவரும் மாதவரம் - சிறுசேரி, கலங்கரை விளக்கம் - பூந்தமல்லி, மாதவரம் - சோழிங்கநல்லூர் இடையேயான இரண்டாம்கட்டத் திட்டப் பணிகளையும் விரைவில் மக்களின் பயன்பாட்டுக்கு ஒப்படைப்போம்.
விமான நி���ையம் - கிளாம்பாக்கம், கோயம்பேடு - பட்டாபிராம், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம், தாம்பரம் - கி��்டி, கலங்கரை விளக்கம் - உயர்நீதிமன்றம், சிறுசேரி - கலைஞர் பன்னாட்டு அரங்கம் என மெட்ரோ விரிவாக்கப் பணிகளெல்லாம் நிறைவுறும்போது, இந்தியாவிலேயே மெட்ரோ வழியாக அதிக தூரத்தை இணைக்கும் நகரங்களுள் ஒன்றாகச் சென்னை விளங்கும்!
சென்னையை வளர்த்தெடுக்கும் நமது கனவு வெல்லட்டும்! #வெல்வோம்_ஒன்றாக!
#ChennaiMetro #MetroRail #CMRL @CMRLOfficial
#VoteForDMK