மக்கள் களத்தில் போராடிய வரலாறு எங்களுடையது! இரண்டு வருடத்தில் கட்சி தொடங்கிவிட்டுப் பேசுபவர்களுக்கு, கவர்ச்சியைத் தவிர மக்களுக்குச் சொல்ல வேறு என்ன இருக்கிறது?
@Udhaystalin#TVKFails
Protocol என்றால் என்னவென்று தெரியாத தவெக MLA! பாடம் எடுத்த மேயர் @PriyarajanDMK !
திரு.வி.க. நகர் தொகுதியில் நடந்த பள்ளி திறப்பு விழாவில், Protocol தெரியாமல் சிறுபிள்ளைத்தனமாக நடந்துகொண்ட தவெக எம்.எல்.ஏவுக்கு, சென்னை மேயர் பிரியா அவர்கள் தனது விளக்கத்தின் மூலம் தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
முறையாக அழைப்பு விடுத்தது மட்டுமின்றி, அவருக்காகக் காத்திருந்தே விழாவைத் தொடங்கியுள்ளனர். குத்துவிளக்கு ஏற்றுவதில் ஒவ்வொருவருக்கும் ஒரு மெழுகுவர்த்தி கொடுக்கப்படும் என்பதுதான் Protocol. முதலில் மேயர், அடுத்ததாக ஐ.ஏ.எஸ் அதிகாரி, பின்னர் எம்.எல்.ஏ என்ற வரிசையில்தான் அது கொடுக்கப்பட்டுள்ளது. இதைக்கூடப் புரிந்துகொள்ளாமல், தனக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை என்று குறைகூறுவது ஒரு எம்.எல்.ஏவுக்கு அழகல்ல.
உங்கள் தலைவரைப் போல எல்லாவற்றிற்கும் மற்றவர்களைக் குறை கூறுவதையே அரசியலாக நினைக்காதீர்கள். மக்கள் பணி செய்ய வந்திருக்கிறீர்கள் என்பதை நினைவில் கொண்டு, முதலில் அரசியல் நாகரீகத்தையும், அரசு விழாக்களின் நடைமுறைகளையும் கற்றுக்கொள்ளுங்கள்.
மிகவும் முதிர்ச்சியான முறையில், எந்தவிதப் பதற்றமும் இன்றி பிரச்சனையைக் கையாண்ட மேயர் பிரியா அவர்களின் அணுகுமுறை பாராட்டத்தக்கது.
தொடர்ந்து உங்கள் பணியைச் சிறப்பாகச் செய்யுங்கள் மேயர் அவர்களே!
சாதி, மதம், பணம் என அனைத்தையும் உடைத்து பெற்ற வெற்றி இது என்று பொய் சொல்லித் திரியும் CM சார்..
நீங்க சாதியை எப்படி உடைச்சீங்கன்னு உங்களுடைய ஸ்ரீரங்கம், மயிலாப்பூர் தொகுதி வேட்பாளர்களைப் பார்த்தாலே தெரியும்.
தேர்தலில் வெற்றிபெற மக்களுக்கு தவெக பணம் கொடுத்தது என்று இப்போது உங்கள் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளரே ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கிறார்.
வாயைத் திறந்தாலே பொய், பித்தலாட்டம். இதுதான் தவெக.
வெட்கமாவே இருக்காதா ப்ரோ?
#TVKFails
Thanks to Dravidam. Dravidathaal Vaazhndhom! @mkstalin@arivalayam@DMKITwing#Kalaingar103#Kalaingarforever
Dr. Kalaingar made me Dr. Prasanth.
I was apolitical 10 years ago and hated Dravidian parties for no clear reason. Last week, I completed my PhD in Physics. (1/10)
தமிழ்நாடு அரசின் அலட்சியத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கு கிடைக்க வேண்டிய 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படும் நிலை உருவாகியுள்ளது.
அரசு வழக்கறிஞர் முறையாக வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் நமது அரசு மருத்துவர்களுக்கான வாய்ப்புகள் கைநழுவி போவது மட்டுமல்ல, நமது மாநில சுகாதாரக் கட்டமைப்புக்கே இது பின்னடைவை ஏற்படுத்தும்.
அலட்சியம் காட்டாமல் உடனடி நடவடிக்கை எடுத்து இதனை தடுத்திட தமிழ்நாடு அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும்.
#SuperSpeciality #MedicalCourses #StateRights
தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள 152 உயர்சிறப்பு மருத்துவப் படிப்பு இடங்கள் அகில இந்தியத் தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படுவதைத் தடுக்க வலியுறுத்தி மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:
மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு,
சூப்பர் ஸ்பெஷாலிட்டி என அழைக்கப்படும் “உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு”களுக்கான 152 இடங்களை “அகில இந்திய தொகுப்பிற்கு” மாற்ற வேண்டும் என மாண்பமை உச்சநீதிமன்றம் 29.05.2026 அன்று உத்தரவிட்டுள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
இந்நிலையில், தமிழ்வாணி என்பவர் தொடர்ந்த வழக்கில் தங்கள் தலைமையிலான புதிய அரசின் சார்பில் முறையான வாதங்கள் எடுத்து வைக்கப்படாத காரணத்தால் இச்சூழல் உருவாகியுள்ளது என்பது தமிழ்நாட்டின் பொது சுகாதாரக் கட்டமைப்புக்கு ஆபத்தாக அமைந்திருக்கிறது. 2025-ஆம் ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 430 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களுக்கு நடைபெறும் கலந்தாய்வில் உள்ள 215 இடங்கள், பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். மேற்கண்ட இடங்களில் 63 இடங்கள் மட்டுமே கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு, இரண்டாவது கட்ட கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் 152 இடங்கள் காலியாக இருந்தன.
கடந்த மே 27-ஆம் தேதி தமிழ்நாடு அரசின் “தேர்வு கமிட்டி” இரண்டாம் கட்ட கலந்தாய்வை நிறைவு செய்த சூழலில் தமிழ்வாணி என்பவர் உச்சநீதிமன்றத்தில் ஒரு வழக்கினை தாக்கல் செய்து, நிரப்பப்படாமல் இருக்கும் 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் மாதத்தில் 8, 10 மற்றும் 16 ஆகிய தேதிகளில் நடைபெற்ற போது தி.மு.க. அரசின் சார்பில் வெற்றிகரமாக வாதங்களை எடுத்து வைத்து, நிரப்பப்படாமல் உள்ள 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்கள் அகில இந்திய தொகுப்பிற்குச் செல்வதை தடுத்து வைத்திருந்தது.
இந்தச் சூழலில் தங்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு மே 25 மற்றும் 29 ஆகிய தேதிகளில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், “அந்த மாணவி மேற்கோள் காட்டிடும் N. Karthikeyan Vs State of Tamilnadu என்ற தீர்ப்பு இந்த வழக்கிற்குப் பொருந்தாது” என்பதையும், “அகில இந்திய இரண்டாவது கட்ட கலந்தாய்வு நடைபெறவில்லை”, என்பதையும் “மாநில இடங்களை ஒப்படைத்த பிறகு ஒன்றிய அரசு குறைந்தபட்ச சதவிகிதத்தைக் குறைக்கக் கூடாது” என்ற தகவலையும் முறைப்படி எடுத்து வைக்கவில்லை என்று தெரிய வருகிறது. அது மட்டுமின்றி, ஒன்றிய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் குறைந்தபட்ச சதவிகிதத்தைக் குறைப்பதை பற்றி முடிவு பின்னர் எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். தமிழ்நாட்டின் இடங்களை ஒப்படைத்த பின்பு சதவீதத்தை குறைத்து “All India merit list”மூலம் இடங்கள் நிரப்பப்பட்டால் , அது தமிழ்நாட்டின் அரசு மருத்துவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞரே “அந்த சூப்பர் ஸ்பெஷாலிட்டிக்குரிய 152 இடங்களை சரண்டர் செய்கிறோம்” என ஒப்புக்கொண்ட காரணத்தால், “நிரப்பப்படாமல் உள்ள 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை அகில இந்திய தொகுப்பிற்கு மாற்ற வேண்டும்” என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இது தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, இதயநோய், புற்றுநோய், நரம்பியல் தொடர்பான நோய்கள் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கு தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் அளிக்கப்படும் உயர்தர சிகிச்சைக்கும் பின்னடைவை ஏற்படுத்தும்.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த போது, கடந்த 2000-ஆம் ஆண்டிலிருந்து அரசுப் பணியில் உள்ள மருத்துவர்கள் உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு மேற்கொள்ளும் இட ஒதுக்கீடு, கழக அரசு எடுத்த நடவடிக்கைகளால் 2022-இல் மீண்டும் உறுதி செய்யப்பட்டு, தமிழ்நாட்டில் உள்ள உயர் சிறப்பு மருத்துவப் படிப்பு மேற்கொண்டு கிராமப்புற மக்களுக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு மிக முக்கியமான காரணியாக இருந்துள்ளது. அந்த இட ஒதுக்கீட்டு உரிமை தற்போது தங்கள் அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் உரிய வாதங்களை எடுத்து வைக்காத காரணத்தால் பறிபோகும் சூழல் எழுந்துள்ளது வேதனையாக இருக்கிறது.
ஆகவே மாண்புமிகு முதலமைச்சராகிய தாங்கள் உடனடியாக தலையிட்டு, தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் உள்ள 152 உயர் சிறப்பு மருத்துவ படிப்பு இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்கு சரண்டர் செய்யப்படுவதை தடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பணி மருத்துவர்கள் அந்த உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்குரிய இடங்களில் சேருவதற்கான சூழலை ஏற்படுத்தும்படி கேட்டுக் கொள்கிறேன்.
***
#DMK
Criminal Complaint given against the id @pragaoffl which morphed the image of our great leader Kalaignar.
Any abuse of our leaders will not be tolerated. Strong legal consequences will follow.
விஜய் அவருக்கு வர வேண்டிய ராஜ்யசபா எம் பி பதவியை காங்கிரஸூக்கு குடுத்து இருக்காரு. காரணம் அவரு கட்சி எம் பி ஆனா நாடாளுமன்றத்துல பி ஜே பி கொண்டு வர்ற மக்கள் விரோத மசோதாவை எல்லாம் “நேரடியா” கடுமையா எதிர்த்து பேசணும். காங்கிரஸ்கிட்ட தள்ளி விட்டா அவங்க பார்த்துக்குவாங்க. எதுக்கு நம்ம நேரடியா பகைச்சிகிட்டு!!
சினிமாலதான் சண்டையெல்லாம்!! ரியல் லைஃப்ல பார்ட்டிக்கு கொஞ்சம் “பேஸ்மெண்ட்” வீக்கு.
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளான இன்று,
நம் @dmk_youthwing-ன் தலைமையகமான அன்பகத்தில், கழகத் தலைவர் @mkstalin அவர்கள் 75 அடி உயர கம்பத்தில் கழகத்தின் இருவண்ணக் கொடியை ஏற்றி வைத்து, தந்தை பெரியார்-பேரறிஞர் அண்ணா-முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் மார்பளவுச் சிலைகளைத் திறந்துவைத்தார்.
மேலும், அன்பகத்தின் புதுப்பிக்கப்பட்ட அலுவலகத்தைத் திறந்துவைத்து, இளைஞர் அணி மேற்கொண்டுவரும் ஆக்கப் பணிகளைப் பார்வையிட்டார்.
முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று- கழகத் தலைவர் தலைமையில் திராவிட இயக்க இலட்சியங்களை வென்றெடுக்க,
கழக இளைஞர் அணி என்றும் துணை நிற்கும்!
#KalaignarForever #Kalaignar103
நான் வளர்ந்த - என்னை வளர்த்த அன்பகம் புதுப்பொலிவுடன்🖤♥️
@dmk_youthwing புதுவேகத்துடன் - புதிய இளைஞர்களைக் கொள்கையோடு வளர்த்து, வெற்றியை நமதாக்கட்டும்!
@Udhaystalin#KalaignarForever
நாளை நடப்பதை இன்றே கணித்து, நவீன தமிழ்நாட்டைச் செதுக்கிய சிற்பி!
எளியோரின் வாழ்வில் ஒளியேற்றி, இந்தியாவுக்கே முன்னோடித் திட்டங்களை வகுத்துத் தந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்.
#KalaignarForever#Kalaignar103
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே“ என்ற அந்தக் காந்தக் குரல் இன்றும் நம் காதுகளில் ஒலித்துக்கொண்டுதான் இருக்கிறது!
நம் நெஞ்சில் வாழும் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளில், அவர் தன் உதிரம் கொடுத்து வளர்த்தெடுத்த இந்தக் கழகத்தை உயிரைக் கொடுத்துக் காப்போம் எனச் சூளுரைப்போம்.
வாழ்க தலைவர் கலைஞர் புகழ்!
#KalaignarForever
"திருப்பரங்குன்றம் files" ஆவணப்படத்தை திரையிட காவல்துறை தடை விதித்ததை கண்டித்து திவிக தென்சென்னை பேஸ்புக் பக்கத்தில் வெளியான பதிவு இந்தியாவில் தடை செய்யப்பட்டுள்ளது
Facebook post link https://t.co/cANqoeVhCh
இதை சுட்டி காட்டியதற்காக எனது டுவீட்டும் பிளாக் செய்யப்படலாம்.
ஆட்சியே போனாலும் பரவாயில்லை என்று EWS சட்டத்தை அமல்படுத்த மறுத்தவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.
தமிழ்த்தாய் வாழ்த்து பாட ஒன்றிய அரசிடம் அனுமதி கேட்டு கெஞ்சிய தொடைநடுங்கி விஜய்.
THE DIFFERENCE!
#TVKFails
முதலமைச்சர் விஜய்யின் நாடகம்! மீண்டும் மீண்டுமா ப்ரோ?
வாக்களித்து வெற்றிபெறச் செய்த தமிழ்நாட்டு மக்களை நடுத்தெருவில் விட்டுவிட்டு, இப்போது இடைத்தேர்தல் வரப்போகிறது என்றதும், நன்றியை அறிவிக்க, சாரி சாரி ஒப்பாரி வைக்க, திருச்சி கிழக்கு தொகுதிக்கு ஓடோடி வந்திருக்கிறார் நம்ம CM சார்.
உங்கள் கட்சி ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே சட்டம் ஒழுங்கு சீரழிந்து, பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு பாதாளத்துக்கு சென்றுள்ள நிலையில், ஒரு பொறுப்புள்ள எதிர்க்கட்சி கேள்வி கேட்காமல் 6 மாதங்களுக்கு அமைதியாக வேடிக்கை பார்க்க வேண்டும் என்று எந்தச் சட்டம் சொல்கிறது?
"ஆறு நாள் கூட அமைதியாக இருக்க மாட்டீர்களா?" என்று மேடையில் ஏறி புலம்பும் முதலமைச்சர் அவர்களே, மக்களுக்கான பிரச்சனைகளை ஒரு எதிர்க்கட்சி சுட்டிக்காட்டினால் உங்களுக்கு ஏன் கோபம் வருகிறது?
பாஜகவினர் அனைத்துக்கும் நேரு தான் காரணம் என்று சொல்வது போல், நாட்டில் நடக்கும் அனைத்திற்கும் திமுக தான் காரணம் என்று அழுவதை நீங்கள் இன்னும் நிறுத்தவில்லை. நீங்கள் முதலமைச்சராகிவிட்டீர்கள் என்பதை உங்களுக்கு யாராவது நியாபகப்படுத்தினால் நன்றாக இருக்கும்.
இன்னும் ஒரு LKG மாணவன் complaint செய்வது போலவே இருக்கிறது உங்களுடைய அருவருக்கத்தக்க உடல்மொழி. அனைத்திற்கும் திமுக தான் காரணம் என்றால், உங்கள் கையில் எதற்கு ஆட்சி? ராஜினாமா செய்யுங்கள்.
"மக்கள் கவர்ச்சிய பாத்து ஓட்டு போட்டாங்கனு சொல்றீங்களே, நான் என்ன ………?" என்று ஒரு கேப் விட்டீர்களே... அதை நீங்களே fill பண்ணிடுங்க CM சார்.
உங்களுக்கு வாக்களித்தவர்களை "தற்குறிகள்" என்று விமர்சித்ததாக மேடையில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசுகிறீர்கள். ஆனால், ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே எந்த நிர்வாகத் திறனுமின்றித் தள்ளாடும் உங்களின் அரசையும், ஆய்வு என்கிற பெயரில் ரீல்ஸ் எடுத்துக்கொண்டு திரியும் உங்களுடைய அமைச்சர்களையும் பார்த்து தமிழ்நாட்டு மக்கள் இன்று அந்த வார்த்தையைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
உங்களுடைய இன்றைய பேச்சில் நீங்கள் கொடுத்த வாக்குறுதிகள் குறித்தோ, இனி என்ன செய்யப்போகிறேன் என்பது குறித்தோ எதுவும் இல்லை. உங்களுக்குத்தான் பிற கட்சிகளை உடைத்து குதிரை பேரம் செய்யவே நேரம் சரியாக இருக்கிறதே!
"எதற்காக வாக்களித்தோமோ?" என்று ஒரு மாதத்துக்குள் மக்களை feel பண்ண வைத்த ஆட்சி உலக வரலாற்றிலேயே உங்களுடைய ஆட்சி மட்டும்தான். இந்த லட்சணத்தில் பேச்சுக்கு ஒன்றும் குறைவில்லை. மக்களை manipulate செய்வது மட்டுமே உங்களுடைய அரசியல் என்பது மக்களுக்குப் புரிந்துவிட்டது.
வெற்று சினிமா வசனங்களை நிறுத்திவிட்டு, மக்களைக் காப்பாற்றும் வேலையைப் பாருங்கள் CM சார்!
#TVKFails
தூத்துக்குடியில் வேலை வாங்கித்தருவதாக ஆசைவார்த்தை கூறி, இளம்பெண்ணை ஏமாற்றி மயக்க மருந்து கொடுத்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த தவெக நிர்வாகிகள் கைது!
பெண்களுக்குப் பாதுகாப்பான ஆட்சியைத் தருவோம் என்று மேடைக்கு மேடை வீர வசனம் பேசிய CM சார், ஆளுங்கட்சி என்ற திமிரில் தவெகவினர் நடத்தும் இந்த அராஜகங்களுக்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் உங்களுக்கு பாடம் கற்பிக்கும் காலம் விரைவில் வரும்.
உங்கள் கட்சியினரின் மிருகத்தனமான செயல்களால், மக்கள் இவ்வளவு பாதுகாப்பற்ற சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கும்போது, நீங்கள் திருச்சியில் வழக்கம் போல் பன்ச் டயலாக் பேசிக்கொண்டிருக்கிறீர்கள்.
கொஞ்சமாவது வெட்கப்படுங்கள்!
#TVKFails