உலகத் தரத்தில் செயல்படும் நமது பெருமைமிகு அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் புதிய முன்னெடுப்பான "நூல் இரவல் சேவை"யை இன்று தொடங்கி வைத்து, அங்கு உறுப்பினர்களாக இருக்கும் மாணவச் செல்வங்களுக்கு நூல்களை வழங்கினோம். நூல்களை இரவல் பெற விரும்புவோர், அதற்குரிய விவரங்களை https://t.co/Q3gn3FFE6o இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மேலும், தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் மூலம் மாவட்ட நூலக அலுவலர் பணிக்கு தேர்வாகியுள்ளவர்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கி, அவர்களின் பணிசிறக்க வாழ்த்தினோம்.
@tnschoolsedu
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலோடு, பொது நூலகங்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் நூல்கள் கொள்முதல் செய்வதற்கான இணையதளத்தை இன்று
அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் தொடங்கி வைத்தோம்.
https://t.co/Dg7m82VlNT
தொடர்ந்து
நூலகங்களின் தேவைக்கு ஏற்ப நூல்களை தேர்வு செய்வது, அதற்குரிய குழு எவ்வாறு அமைக்கப்படுகிறது என்பது உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய "வெளிப்படைத் தன்மையான நூல் கொள்முதல் கொள்கை 2024” வழிகாட்டி நூலினை வெளியிட்டு, அவற்றை பதிப்பாளர்களிடம் வழங்கினோம்.
பொது நூலகத்துறை வரலாற்றில் சிறப்புமிக்க இத்திட்டம், எழுத்தாளர்-பதிப்பாளர்-வாசகர் உள்ளிட்ட அனைவருக்கும் நிச்சயம் புதிய கதவுகளை திறக்கும்!
@tnschoolsedu
https://t.co/ZMMFIka4Gt
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென ஒன்றிய கல்வி அமைச்சகத்தின் திட்ட ஒப்புதல் குழுவால் (Project Approval Board) 2023-24 ஆம் கல்வியாண்டிற்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிதியில் 3வது மற்றும் 4வது தவணைத் தொகையான ரூ.1,138 கோடி இன்னும் முறையாக வழங்கப்படாமல் உள்ளது.
எனவே அந்தத் தொகையை விரைவாக தமிழ்நாடு அரசுக்கு வழங்கிடுமாறு மாண்புமிகு ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் @dpradhanbjp அவர்களை இன்று டெல்லியில் சந்தித்து வேண்டுகோள் விடுத்தோம்.
அப்போது @tnschoolsedu அரசுச் செயலாளர் திரு.குமரகுருபரன் இ.ஆ.ப, ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்குநர் திருமிகு.ஆர்த்தி இ.ஆ.ப ஆகியோர் உடனிருந்தனர்.
மாமதுரையின் அறிவுசார் அடையாளமான கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இன்று நேரில் ஆய்வு செய்தோம். அங்கு மாணவர்கள், வாசகர்கள் மற்றும் போட்டித் தேர்வர்களின் வருகை நிலவரம் குறித்த கோப்புகளை பார்வையிட்டோம். மேலும் அனைத்து தளங்களுக்கும் சென்று ஒவ்வொரு பிரிவும் உரிய முறையில் இயங்குவதை உறுதி செய்தோம்.
அங்கு வந்திருந்த மாணவர்களிடம், அவர்களுக்காக நம்முடைய திராவிட மாடல் அரசின் நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் புதிதாக அறிவித்துள்ள திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறி, கலந்துரையாடினோம்.
எப்போது மதுரை சென்றாலும் தவறாமல் செல்லும் இடமாக மாறிப்போய் இருக்கிறது என் மனதிற்கு நெருக்கமான "கலைஞர் நூற்றாண்டு நூலகம்"!
மாமதுரையின் அறிவுசார் அடையாளமான கலைஞர் நூற்றாண்டு நூலகத்தில் இன்று நேரில் ஆய்வு செய்தோம். அங்கு மாணவர்கள், வாசகர்கள் மற்றும் போட்டித் தேர்வர்களின் வருகை நிலவரம் குறித்த கோப்புகளை பார்வையிட்டோம். மேலும் அனைத்து தளங்களுக்கும் சென்று ஒவ்வொரு பிரிவும் உரிய முறையில் இயங்குவதை உறுதி செய்தோம்.
அங்கு வந்திருந்த மாணவர்களிடம், அவர்களுக்காக நம்முடைய திராவிட மாடல் அரசின் நிதிநிலை அறிக்கையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் புதிதாக அறிவித்துள்ள திட்டங்கள் குறித்து எடுத்துக்கூறி, கலந்துரையாடினோம்.
எப்போது மதுரை சென்றாலும் தவறாமல் செல்லும் இடமாக மாறிப்போய் இருக்கிறது என் மனதிற்கு நெருக்கமான "கலைஞர் நூற்றாண்டு நூலகம்"!
"முதலில் நான் மனிதன்,
இரண்டாவது நான் அன்பழகன்,
மூன்றாவது நான் சுயமரியாதைக்காரன்,
நான்காவது அண்ணாவின் தம்பி,
ஐந்தாவது நான் கலைஞரின் தோழன்" என்ற இனமான பேராசிரியர் அவர்களே, நம் எல்லோருக்குமான கொள்கை பேராசிரியர்!
என்னுடைய அரசியல் ஆசான் கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அன்புக்குரிய வழிகாட்டி இனமான பேராசிரியர் அவர்களின் புகழ் என்றும் ஓங்குக...
மக்களின் தேவைகளை - கோரிக்கைகளை எண்ணிலடங்கா வரலாற்றுத் திட்டங்கள் மூலம் நிறைவேற்றிக் கொண்டிருக்கும் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், அந்த திட்டங்கள் எல்லாம் உரிய முறையில் ஒவ்வொரு பயனாளிக்கும் சென்று சேர்கிறதா என்பதை உறுதிசெய்திட இன்று தொடங்கி வைத்துள்ள திட்டமே ‘நீங்கள் நலமா’.
இந்நிலையில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலோடு, "நீங்கள் நலமா" திட்டத்தின் கீழ் அரசுப்பள்ளி மாணவர், அரசுப்பள்ளி ஆசிரியர் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர் ஆகியோருடன் அவர்கள் பயனடைந்துள்ள திட்டங்கள் குறித்து தொலைபேசி மூலம் கலந்துரையாடினோம்.
தங்களுடைய நேரடி அனுபவத்தில் இருந்து அவர்கள் பகிர்ந்து கொண்ட கருத்துகளும், அரசுப்பள்ளி மாணவர்களின் உயர்கல்விக்கு புத்துயிரூட்டும் வகையில் நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ள "தமிழ்ப்புதல்வன்" திட்டத்தை வரவேற்று, அவர்கள் வெளிப்படுத்திய மகிழ்ச்சியும் பெருமிதம் தந்தது.
அரசியல் அதிகாரத்தின் வழியே தமிழர் தம் உரிமைகளை - அடையாளங்களை மீட்டுக்கொடுத்த பேரறிஞர் அண்ணா அவர்கள், தி.மு.க'வை முதல்முறையாக ஆட்சிப்பொறுப்பில் ஏற்றி, தமிழ்நாட்டின் முதலமைச்சராக பொறுப்பேற்ற நன்நாள் இன்று.
பெருமைக்குரிய இந்நாளில், தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு தொகுதிக்குட்பட்ட கீழஉளூரில் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து வணங்கி, அங்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.23.57 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தை திறந்து வைத்தோம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலோடு, பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான அறிஞர் அண்ணா தலைமைத்துவ விருது மற்றும் பேராசிரியர் அன்பழகன் விருது வழங்கும் விழா திருச்சியில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
"தமிழ்நாட்டின் தலைமகன்" என முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களால் போற்றப்பட்ட பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்ற இந்த நாளில் அவரது பெயரிலான விருதினை எங்களின் தலைமை ஆசிரியர்கள் 100 பேருக்கு வழங்கியதில் பள்ளிக்கல்வித்துறை பெருமை கொள்கிறது.
கல்வி அமைச்சர் என்று சொன்னாலே நமது இனமான பேராசிரியர் அவர்கள் மட்டும்தான். ஒட்டுமொத்தமாக எல்லோருக்குமான பேராசிரியரான அவரது பெயரில் 76 பள்ளிகளுக்கு விருது வழங்கி கவுரவித்தோம்.
விருதுபெற்ற தலைமை ஆசிரியர்கள் - பள்ளி நிர்வாகத்தினர், தொடர்ந்து பலருக்கும் முன்மாதிரியாக திகழ வாழ்த்துகள்.
@tnschoolsedu
திருச்சி(தெ) மாவட்டம், திருவெறும்பூர்(தெ) ஒன்றியக் கழகம் ஒருங்கிணைத்த "எல்லோருக்கும் எல்லாம்" திராவிட நாயகரின் பிறந்தநாள் விழா மற்றும் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்
உணர்வெழுச்சியோடு இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு பெருமை சேர்க்கும் வகையில் கழக துணைப் பொதுச்செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் @IPeriyasamymla அவர்கள் பங்கேற்று, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பர் அய்யா அன்பில் தர்மலிங்கம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி, நம் திராவிட மாடல் அரசின் சாதனைகளையும்-கழகத் தலைவர் அவர்களின் உழைப்பையும் எடுத்துரைத்து சிறப்புரையாற்றினார்.
எங்களைப் போன்றோருக்கு முன்னோடியாக திகழ்ந்து வழிகாட்டும் மாண்புமிகு அமைச்சர் அவர்களுக்கும், மிகச்சிறப்பான இக்கூட்டத்தை ஒருங்கிணைத்த ஒன்றியக் கழகச் செயலாளர் திரு.கங்காதரன் மற்றும் கழக நிர்வாகிகளுக்கும் அன்பும் நன்றியும்.
#கலைஞர்100
#trichy_south_dmk
திருச்சி(தெ) மாவட்டக் கழகத்தின் அழைப்பை ஏற்று "எல்லோருக்கும் எல்லாம்" திராவிட நாயகரின் பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுவதற்காக வருகை புரிந்த கழகத் துணைப் பொதுச்செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் @IPeriyasamymla அவர்களுடன் இணைந்து, திருச்சி(தெ) மாவட்டக் கழகத்தின் சார்பில் திருச்சியில் நிறுவப்பட்டுள்ள கலைஞரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
#கலைஞர்100
#trichy_south_dmk
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் தமிழ்நாடு முழுவதும் 1 இலட்சம் பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கும் நிகழ்வைத் தொடங்கி வைத்தார்.
இதனை தொடர்ந்து #தஞ்சாவூர் மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை சார்பில் 1738 பயனாளிகளுக்கு ரூ.21 கோடியே 47 இலட்சத்து 45 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினோம்.
கிராமப்புற மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து, கிராம-நகர இடைவெளியை குறைக்கும் நோக்கில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்களின் தலைமையிலான #திராவிடமாடல் அரசுத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது.
அதனடிப்படையில் #தஞ்சாவூர் மாவட்டத்தில் திருவையாறு, தஞ்சாவூர், பாபநாசம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள கிராமங்களில் ரூ.670 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையம், நியாய விலைக்கடை, பள்ளி வகுப்பறை கட்டிடம், கால்நடை மருத்துவமனை, குழந்தைகள் நல மையம் போன்ற அரசுக் கட்டிடங்களை இன்று மக்களின் பயன்பாட்டிற்காக அர்பணித்தோம்.
நவீன தொழில்நுட்பத்தை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் கொண்டு சேர்க்கும் எண்ணத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள நமது அரசுப் பள்ளிகளில் திறன்மிகு வகுப்பறைகளை (Smart classroom) உருவாக்க @tnschoolsedu பணிகளைத் தொடங்கியுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்.
அதன் முதல்கட்டமாக பேரறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் குன்றத்தூர் ஒன்றியம்-புது வட்டாரம் கோவூர், மாந்தோப்பு நடுநிலைப்பள்ளி தேர்வு செய்யப்பட்டு, முன்மாதிரி திறன்மிகு வகுப்பறை உருவாக்கப்பட்டுள்ளது.
"அன்புக் குழந்தைகளை
அரசுப் பள்ளிகளில் சேருங்கள்!
அறிவுச் செல்வங்களாக உயர்த்துங்கள்!" என அன்போடு அழைக்கின்றேன்.
@tnschoolsesu
நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகிய இயக்கங்களில் பங்காற்றியதோடு தி.மு.கழகம் உருவானபோது முன்னணியில் நின்ற, முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் உற்ற நண்பர் அய்யா அன்பில் தர்மலிங்கம் அவர்களின் 31'ஆம் ஆண்டு நினைவு நாளில் திருச்சியில் உள்ள அவரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி நாடாளுமன்றத் தேர்தல் வெற்றிக்கு பிறகான வெற்றி மாலையையும் அணிவிப்போம் எனவும் உறுதியேற்றோம்.
#anbil_dharmalingam
தலைசிறந்த திட்டங்களால் மக்களின் மனங்குளிரச் செய்துள்ள
நம் கழக அரசின் நிதிநிலை அறிக்கையை விளக்கி, 'எல்லோருக்கும் எல்லாம்' எனும் திராவிட நாயகரின் பிறந்தநாள் விழாவை கொண்டாடும் வகையில் #சிவகங்கை சீமையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றினோம்.
"பாஜக'வினரின் பொய்களையும், போலி பிம்பத்தையும் உடைத்தெறிய உறுதிபூண்டுள்ள கழகத் தலைவர் @mkstalin அவர்களின் பாதையில் தடம் மாறாமல் பயணிப்போம்" என ஆங்கிலேயரை விரட்டியடித்த வீரமங்கை வேலு நாச்சியார் கோலோச்சிய மண்ணில் சூளுரைத்தோம்.
எழுச்சி பொங்க இந்தக் கூட்டத்தை ஒருங்கிணைத்த மாவட்டக் கழகச் செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் @OfficeOfKRP அவர்களுக்கு அன்பும், நன்றியும்.
@arivalayam
சட்டமன்ற உறுப்பினர் திரு.செந்தில்நாதன் அவர்களின் சிவகங்கை தொகுதியில் அமைந்துள்ள கவியோகி சுத்தானந்த பாரதி மாவட்ட மைய நூலகத்தில் 234/77 ஆய்வுப் பயணத்திட்டத்தின் 136'வது ஆய்வை மேற்கொண்டோம்.
நூலகத்தில் குடிமைத் தேர்வுகள் பயிற்சி மையம் செயல்படுகிறது.
இந்த மையத்தில் தேர்வுகளுக்குத் தயாராகும் இளைஞர்களிடம் புதிய புத்தகங்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்து, அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தோம்.
#நம்பள்ளி_நம்பெருமை234_77
@tnschoolsedu
234/77 திட்டத்தின் கீழ் 135'வது ஆய்வை சட்டமன்ற உறுப்பினர் திரு.மாங்குடி அவர்களின் #காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் உள்ள முத்துப்பட்டணம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மேற்கொண்டோம்.
மாணவிகளுக்கான அடிப்படைத் தேவைகள் குறித்தும் கற்றல் திறன் குறித்தும் ஆய்வு மேற்கொண்டு, பள்ளியில் அமைந்திருக்கும் மகாத்மா காந்தி நூலகத்தைப் பார்வையிட்டோம்.
#நம்பள்ளி_நம்பெருமை234_77
@tnschoolsedu
எந்த நிலையிலும் மக்களின் நலன் குறித்து மட்டுமே சிந்திக்கும் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin அவர்கள், ஒரத்தநாடு தேர்தல் பரப்புரையில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், #திருவோணம் வட்டத்தை புதிதாக உருவாக்கியுள்ளார்.
ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை ஆகிய வட்டங்களில் திருவோணத்தை ஒட்டியுள்ள 4 குறுவட்டங்கள், 45 வருவாய் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களின் 43 ஆண்டுகள் கோரிக்கையை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றியுள்ளார்.
இந்த கனிவான நடவடிக்கைக்காக தஞ்சை மாவட்டப் பொறுப்பு அமைச்சர் என்கிற முறையிலும், அப்பகுதி மக்களின் சார்பிலும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றிகளை உரித்தாக்குகிறோம்.