🚨Any one noticed 🚨
95 % electricals கடைகள் மார்வாரி தான் நடத்துறாங்க , நீங்க போய் அங்க ஒரு 8000 ரூபாய்க்கு பொருள் வாங்குங்க கண்டிப்பா உங்களுக்கு handmade bill தான் தருவாங��க , கண்டிப்பா COMPUTERIZED BILL போட்டு தரமாட்டங்க, ஏன் தெரியுமா
💸 செலவு அதிகமாகி கடனில் சிக்கிக்கிட்டீங்களா? இதிலிருந்து வெளியே வர 7 வழிகள்
Salary அதேதான். ஆனா, மளிகை செலவுகள், கல்விக் கட்டணம், வீட்டு வாடகை, EB Bill, போக்குவரத்துச் செலவு - இதெல்லாம் அதிகமாயிடுச்சு. அதுக்கு மேல எதிர்பாராத ஒரு Medical Expense. இப்படி ஒவ்வொரு செலவும் கொஞ்சம் கொஞ்சமா அதிகரிக்க ஆரம்பிச்சா, மாத கடைசில கையில் பணம் இல்லாம போயிடும்.
அப்போ என்ன பண்ணுவோம்?
Credit Card இருக்கு இல்லையா! 😄 அதுல செலவு பண்ணுவோம். அடுத்த மாதம் Bill வந்ததும், இந்த மாதம் கொஞ்சம் குறைவா pay பண்ணிக்கலாம்ன்னு Minimum Due மட்டும் கட்டுவோம். அடுத்த மாதம் இன்னொரு செலவு. மீண்டும் Credit Card. இப்படியே கொஞ்சம் கொஞ்சமா, கடன் வாங்குறது நம்ம மாதாந்திர Budget (அப்படி ஒன்னு போடுறீங்களா என்ன?) ல ஒரு routine ஆ மாறிடும்.
இதுதான் problem.
செலவு அதிகமாகுற நேரத்துல இன்னும் கொஞ்சம் கடன் வாங்கி manage பண்ணுறது solution கிடையாது. முதல்ல நம்ம Monthly Financial Life ல கொஞ்சம் breathing space உருவாக்கணும். அதுக்கு 7 விஷயங்களை செய்யலாம்.
1️⃣ முதல்ல… நம்ம மேல எவ்வளவு கடன் இருக்கு என்று தெரிஞ்சுக்கோங்க
இதுதான் First Step.
ஒரு paper எடுத்துக்கோங்க. உங்க எல்லா கடனையும் எழுதுங்க.
👉 Home Loan
👉 Personal Loan
👉 Car / Vehicle Loan
👉 Consumer Loan
👉 Credit Card Outstanding
👉 Friends / Relatives கிட்ட வாங்கிய கடன்
எந்தவொரு சின்ன கடனையும் விடாதீங்க.
ஒவ்வொரு கடனுக்கும்…
Outstanding எவ்வளவு?
Interest Rate எவ்வளவு?
EMI எவ்வளவு?
எத்தனை மாதம் balance இருக்குன்னு எழுதுங்க.
பல பேருக்கு பிரச்சனை கடன் அதிகமா இருக்கிறது மட்டும் கிடையாது. எவ்வளவு கடன் இருக்கு என்பதே தெரியாம இருப்பதுதான். "The first step in solving any problem is to identify and accept that there is one" ன்னு ஒரு saying இருக்கு. நம்ம Financial Problem எவ்வளவுன்னு தெரியாம இருந்தா, Solution எப்படி கண்டுபிடிக்கிறது?
2️⃣ புதிய கடன் சேர்ப்பதை முதல்ல நிறுத்துங்க
இது ரொம்ப முக்கியம். ஏற்கனவே EMI கட்ட முடியாம struggle பண்ணிக்கிட்டு இருக்கோம். அதே நேரத்துல Regular Expensesக்கு Credit Card use பண்ணிக்கிட்டே இருந்தா Problem இன்னும் பெருசாகும்.
இந்த மாதம் மட்டும் Cardல போடலாம்ன்னு ஆரம்பிச்சது அடுத்த மாதமும் தொடரும். அதுக்கப்புறம் அடுத்த மாதமும். கடைசில Credit Card Bill ஏ ஒரு தனி EMI மாதிரி ஆகிடும். 😄
அதனால முடிந்தவரைக்கும் நம்ம Income க்குள்ளேயே நம்ம Expenses ஐ கொண்டு வரப்பாருங்க. ஒரு கடனை அடைக்க இன்னொரு கடன். ஒரு Credit Card Bill ஐ இன்னொரு Card க்கு transfer பண்ணுறது - இப்படி தொடர்ந்து கடன கூட்டிக்கிட்டே இருந்தா இந்த கடன் சூழல்ல இருந்து வெளியே வர முடியாது.
3️⃣ செலவுகள எங்கெங்க Control பண்ண முடியும் என்று பாருங்க
இதுக்காக வாழ்க்கையில சந்தோஷமே இருக்கக்கூடாதுன்னு ��ொல்லல. அதெல்லாம் வேணும். அதுதான் நாம வாழுறதுக்கான ஒரு motivation. அது கூட இல்லன்னா எப்படி? 😄
முதல்ல பெரிய difference கொடுக்கக்கூடிய செலவுகள் என்னென்ன இருக்குன்னு பாருங்க.
Unused Subscriptions.
Frequent Food Delivery.
Online Shopping.
Unnecessary Memberships.
Weekend ல அடிக்கடி வெளியே சாப்பிடுறது.
இது மாதிரி Expenses ஐ சில மாதங்களுக்கு reduce பண்ணலாம். அதே மாதிரி Fixed Expenses ஐயும் பாருங்க.
Mobile Plan.
Internet Plan.
Insurance renewal.
House Rent.
இவையெல்லாம் கூட review பண்ணலாம்.
சில நேரம் ₹500, ₹1,000 மாதிரி சின்ன சின்ன செலவுகளை cut பண்ணுறதைக் காட்டிலும், ஒரு பெரிய Monthly Expense ஐ reduce பண்ணினா பெரிய difference வரும்.
4️⃣ Credit Cardல Minimum Due மட்டும் கட்டாதீங்க
இது ரொம்ப முக்கியம். Credit Card Bill ₹80,000 வந்துச்சுன்னு வச்சிப்போம். Minimum Due ₹4,000. ₹4,000 கட்டிட்டேன்ல, problem இல்லன்னு நினைக்காதீங்க ("முழுசா கட்டுற அளவுக்கு காசு இருந்தா நான் ஏண்டா கடன் வாங்கப் போறேன்"னு உங்க மைண்ட் வாய்ஸ் எனக்கு கேட்டுடுச்சு 🤣) .
Problem அங்கேதான் ஆரம்பிக்கிது. Minimum Due கட்டினா அந்த ₹80,000 கடன் disappear ஆகவே ஆகாது. Outstanding Balance க்கு மேல Interest தொடர்ந்து வந்துக்கிட்டே இருக்கும்.
அதனால Credit Card Debt இருந்தா, முடிந்தவரைக்கும் fresh spending ஐ stop பண்ணி, Outstanding ஐ மொத்தமா clear பண்றதுக்குண்டான வழிய பாருங்க.
நான்தான் Minimum Due கட்டுறேனே, அதனால நான் safe ன்னு நினைக்காதீங்க. Minimum Due என்பது Debt Repayment Plan கிடையாது. அது payment delay ஆகாம இருக்க உதவும் minimum payment.
அது, வங்கிகள்/ கிரெடிட் கார்ட் நிறுவன��்கள் அட்டை பூச்சி மாதிரி உங்க பணத்தை உரியறத்துக்கான ஒரு method. உங்கள உயிரோடவும் வாசிக்கணும், அட்டை பூச்சிக்கு ரத்தமும் வேணும். அதேதான் இது. ரத்ததுக்கு பதிலா பணம். அவ்ளோதான்.
5️⃣ எந்த கடனை முதல்ல அடைக்கணும்னு ஒரு order வச்சுக்கோங்க
எல்லா கடனையும் ஒரே நேரத்துல முடிக்கணும்னு நினைக்காதீங்க. ஒரு order வச்சுக்கோங்க. பொதுவா:
High Interest Debt → First Priority.
உதாரணத்துக்கு Credit Card Debt அதிக Interest ல இருக்கு (47% வரைக்கும் போகும்). Personal Loan அதுக்கு அடுத்தது. Home Loan comparatively குறைவான Interest ல இருக்கும். அதுக்கு ஒன்னும் பெரிசா மெனக்கெட வேண்டாம்.
இப்படிப்பட்ட சமயங்கள்ல Credit Card / High Interest Debt ஐ முதல்ல target பண்ணனும். இந்த approach அ Debt Avalanche method ன்னு சொல்லுவாங்க.
ஆனா இன்னொரு approach இருக்கு. சின்ன கடனை முதல்ல முடிச்சுட்டு அந்த EMI amount ஐ அடுத்த கடனுக்கு redirect பண்ணலாம். இதுக்கு Debt Snowball method ன்னு சொல்வாங்க.
எது உங்களுக்கு practical ஆ work ஆகுமோ அதை follow பண்ணலாம்.
முக்கியமான ஒரு விஷயம் என்னன்னா, Random ஆ extra payment பண்ணாதீங்க. ஒரு plan வச்சு payment பண்ணுங்க.
6️⃣ கடனை அடைக்கிறேன்னு சொல்லி Savings முழுவதையும் காலி பண்ணாதீங்க
இது கொஞ்சம் counter-intuitiveஆ இருக்கும். கடன் இருக்கு. Bankல ₹2 லட்சம் இருக்கு. அதை முழுசா Loanக்கு போட்டு முடிச்சிடலாம்ன்னு தோணும். சில நேரம் அது சரியான முடிவாக இருக்கலாம்.
ஆனா, Bank Balance முழுசையும் காலி பண்ணிட்டீங்கன்னா? திடீர்ன்னு ஒரு Medical Emergency வரலாம் இல்லைன்னா Car Repair / Home Repair, இல்லைன்னா வேற எதாவது எதிர்பாராத செலவு வந்துச்சுன்னு வச்சிப்போம். அ���்போ?
மீண்டும் Credit Card. மீண்டும் Loan. சுழல்ல மறுபடியும் போய் கால விடுறோம். அதனால Debt Repayment பண்ணும்போதும், ஒரு Basic Emergency Fund வைத்திருக்க முயற்சி பண்ணுங்க. Debt ஐ குறைக்கணும். அதே நேரத்துல மீண்டும் கடன் வாங்க வேண்டிய நிலை வராமலும் பார்த்துக்கணும்.
7️⃣ Problem பெருசாகுறதுக்கு முன்னாடியே Help கேளுங்க
EMI கட்ட முடியாம போகும் வரை Wait பண்ணாதீங்க. Credit Card payment miss ஆகும் வரை Wait பண்ணாதீங்க. Already problem இருக்கு என்று தெரிஞ்சவுடனே Lender கிட்ட பேசுங்க. உங்க situationக்கு ஏதாவது legitimate repayment option அல்லது restructuring option இருக்கா என்று தெரிஞ்சுக்கோங்க.
ஆனா ஒரு Loan ஐ manage பண்ண இன்னொரு expensive Loan எடுக்குறது solution கிடையாது. அதே மாதிரி உங்க Debt முழுசையும் ஒரே வாரத்துல clear பண்ணித் தர்றோம், முதல்ல ₹50,000 Fee கொடுங்கன்னு யாராவது சொன்னா ரொம்ப carefulஆ இருங்க. அவங்க உங்கள ஏமாத்த பாக்குறாங்க.
Debt problemக்கு instant magic solutionன்னு எதுவுமே கிடையாது.
🧮 ஒரு சின்ன Family Example
ஒரு குடும்பத்துக்கு மாத Income ₹1.5 லட்சம். Monthly Expenses + EMI சேர்த்து ₹1.6 லட்சம் ஆகுது. அதாவது, ஒவ்வொரு மாதமும் ₹10,000 deficit. இப்போ அந்த ₹10,000ஐ எப்படி manage பண்ணுவாங்க?
Credit Card தான் middle class க்கு ஒரே வழி. அடுத்த மாதம் ₹10,000. மீண்டும் Credit Card. இப்படியே ஒரு வருடம் போச்சுன்னா, அந்த ₹10,000 monthly gap மட்டும் problem இல்ல. அதுக்கு மேல Interest, அதுக்கு மேல பழைய Outstanding, அதுக்கு மேல புதிய செலவுகள் ன்னு கடன் ரேட் கூடிக்கிட்டே போகும்.
அதனால முதல்ல அந்த ₹10,000 gap ஐ close பண்ணணும்.
உதாரணத்துக்கு, Expensesல ₹7,000 cut பண்ண முடிஞ்சது. Side Incomeல ₹3,000 கிடைக்குது.
இப்போ, ₹1.5L Income, ₹1.5L Expenses, Gap = Zero.
இதுக்கப்புறம் தான் Debt ஐ aggressively reduce பண்ண ஆரம்பிக்க முடியும். இதுதான் முக்கியம்.
Debt ஐ மட்டும் பார்க்காதீங்க. Monthly Cash Flow ��யும் சரி பண்ணுங்க.
🔄 ஒரு EMI முடிஞ்சதும் என்ன பண்ணணும்?
Suppose உங்க Car Loan EMI ₹15,000. ஒரு நாள் அந்த Loan முடிஞ்சுடுச்சு. அடுத்த மாதம் ₹15,000 உங்க Account ல மிச்சம். அப்பாடா… இனிமேல் இந்த ₹15,000 நமக்குத்தான் 😍 அப்படின்னு நினைச்சு Lifestyle upgrade பண்ணிடாதீங்க. 😂
அந்த ₹15,000 ஐ…
👉 அடுத்த High Interest Debtக்கு
அல்லது
👉 Emergency Fundக்கு
அல்லது
👉 Investment / Financial Goalக்கு
Redirect பண்ணுங்க. ஒரு EMI முடிஞ்சதும் ஒரு புதிய செலவை உருவாக்காதீங்க. ஒரு Financial Goal ஐ உருவ���க்குங்க.
❤️ கடைசியாக…
Debt இல்லாத வாழ்க்கைன்னா… ஒரே நாள்ல எல்லா Loanஐயும் முடிச்சிடுறது கிடையாது.
முதல்ல… புதிய கடன் சேர்வதை நிறுத்தணும். அதுக்கப்புறம் Monthly Cash Flowஐ சரி பண்ணணும். அதுக்கப்புறம் High Interest Debt ஐ target பண்ணணும்.
அதே நேரத்துல, ஒரு Basic Emergency Fund build பண்ணணும். ஒரு EMI முடிஞ்சதும், அந்த EMI amount ஐ அடுத்த Financial Goalக்கு redirect பண்ணணும்.
முக்கியமா, Debt-free ஆகுறதுதான் ஒரே Goal இல்லை. Debt-free ஆன பிறகு மீண்டும் Debt ல விழாம இருக��குறதுதான் உண்மையான Goal. நம்ம Income எவ்வளவு என்பது மட்டும் முக்கியம் இல்லை. நம்ம Incomeல எவ்வளவு நம்ம கையில மிச்சம் இருக்கு என்பதுதான் முக்கியம்.
செலவு அதிகமாகும்போது, இன்னும் கொஞ்சம் கடன் வாங்கிக்கலாம் ன்னு நினைக்குறதுக்கு முன்னாடி…
"எங்கே நம்ம செலவை ��ுறைக்க முடியும்?” ன்னு கேக்க ஆரம்பிங்க.
அதுதான் Financial Control. அதுதான் Debtல இருந்து வெளியே வர்ற முதல் Step. THE FIRST STEP IS ALWAYS THE HARDEST.
புரிஞ்சுதா மக்களே!!! 🙏🙏🙏
கல்லூரி மேஜையின் அடியில் உட்க��ர்ந்து சிரித்த சிரிப்பும்...
ஒளிந்து சாப்பிட்ட சாப்பாடும்..
மறைத்து எழுதிய கவிதையும்..
மறுபடியும் வராது என்று அன்று தெரியாது தானே
வாழ்ந்த என் நாட்கள்......