வேடதாரிகளின் நாடகம் அம்பலமாகும் நேரம்!
வெட்கமே இல்லாமல் தன்னைத் 'தூய சக்தி' எனப் பிதற்றிய இந்தத் 'துன்ப சக்தி', வாக்குப்பதிவு முடிந்தவுடன் தனது பதவிப் பசிக்காகத் 'தூது சக்தியாக' மண்டியிட்டது யாரிடம் தெரியுமா? மேடைகளில் எந்தக் கூட்டணியின் பெயரை உச்சரிக்கவே அச்சப்பட்டு, அவர்களைக் கொள்கை எதிரி என பம்மாத்து செய்ததோ... அதே கூட்டணியிடம்தான் இன்று கூழைக்கும்பிடு போட்டு ஆதரவு தேடியுள்ளது!
அதுமட்டுமில்லாமல் பாசிச பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளிடம் ஆதரவு கேட்கக்கூடாது என்று ஆதரவு அளித்த பிற கட்சிகளின் நிபந்தனைகளை மீறி குதிரை பேரத்தில் ஈடுபட்டு அவர்களிடமே கூட குலாவ பார்த்துள்ளது இந்த துன்ப சக்தி!
கடுமையான உழைப்பைப் போட்டு, தமிழ்நாட்டை மீட்டு, இன்று இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாட்டை கொண்டு வந்திருக்கிறோம்.
ஆனால், இந்த வளர்ச்சி போதுமா நமக்கு? போதாது! சொல்லுங்கள்... தமிழ்நாட்டுக்கு இந்த வளர்ச்சி போதுமா? நிச்சயம் போதாது! தமிழ்நாட்டை, உலக அளவில் தனி பிராண்டாக நாம் வளர்த்தெடுக்க வேண்டும்!
கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு. @mkstalin அவர்கள்
#VoteForDMK
On the language row, Tamil Nadu Chief Minister M. K. Stalin says, “We are very clear that we will not implement the three-language formula. We will never allow it."
@nimumurali | #MKStalin#DMK#TamilNadu#Elections
கோவையில் "DMK Aura 10/10" 🌄👌
🌄 கோவையில் என் வாகனம் ஊர்ந்து செல்லவில்லை, மக்கள் வெள்ளத்தில் நீந்திச் சென்றது!
🌄 அன்புக்கும் பண்புக்கும் மரியாதைக்கும் உழைப்புக்கும் புதுமைக்கும் புகழ்பெற்ற கோவையில் நமது கூட்டணியின் மாபெரும் வெற்றிக்கு இன்றைய பரப்புரைக் கூட்டம் அடித்தளம் இட்டிருக்கிறது.
🌄 மேம்பாலங்கள், செம்மொழிப் பூங்கா, உக்கடம் பேருந்து நிலையம், கிரிக்கெட் & ஹாக்கி மைதானங்கள், பெரியார் அறிவுலகம், ELCOT IT பூங்கா என எனது சொந்த ஊராகவே நினைத்துக் கோவைக்குப் பெரும் திட்டங்களைச் செய்துகொடுத்த நம்பிக்கையோடும் உரிமையோடும் சொல்கிறேன்... கோவையில் வெல்லப்போவது நாம்தான்!
#KovaiWithDMK #வெல்வோம்_ஒன்றாக #VoteForDMK
கோவையில் மாண்புமிகு முதலமைச்சர் திரு @mkstalin அவர்கள் பரப்புரை மேற்கொள்ள செல்லும் இடமெல்லாம் மக்கள் திரண்டு பிரமாண்ட வரவேற்பு கொடுத்தனர்! 🌄
#VoteForDMK
மக்களுக்காகவே உருவான திட்டங்கள்; மக்களின் நலன் காக்கும் அரசு! நெல்லை மண்ணின் முன்னேற்றமே திராவிட மாடல் ஆட்சியின் சாட்சியாகத் திகழ்கிறது.
தேர்தல் நாள்: ஏப்ரல் 23 - வாக்களிப்பீர் உதயசூரியன் 🌄
#VoteForDMK
சிறப்பு வாய்ந்த நம் #ChepaukTriplicane தொகுதி, திருவல்லிக்கேணி பகுதியில் 116 ஆவது வட்டத்திற்கு உட்பட்ட மாட்டாங்குப்பம்,கற்பக கன்னியம்மன் கோயில் தெரு,பழனி அம்மன் கோயில் தெரு,பழைய கட்டை தொட்டி தெரு,புதிய கட்டை தொட்டி தெரு,சுங்குவார் தெரு உள்ளிட்ட தெருக்களில் வசிக்கும் தொகுதி மக்களை நேரில் சந்தித்து வாக்கு சேகரித்தோம்.
ஐந்தாண்டு கால திராவிட மாடல் அரசின் சாதனைகளையும், திராவிட மாடல் 2.0 அமைந்த பின் செயல்படுத்தப்பட உள்ள திட்டங்களையும் தொகுதி மக்களிடம் எடுத்துரைத்தோம்.
கடந்த முறை போலவே இம்முறையும் நம்மை வெற்றி பெற செய்ய மக்கள் தயாராக உள்ளனர் என்பது அவர்களின் எழுச்சிமிகு வரவேற்பில் தெரிந்தது.
தலைவர் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்.
#DMK4TN #VoteForDMK