Before you chase success today, remember this:
Hug your parents.
Hold your siblings' hands a little longer.
Kiss your spouse.
Embrace your children.
Then go out and conquer the world.
Trust me Happiness will chase you !
Chennai's Chetta has arrived and how. Many congratulations brother @IamSanjuSamson for your first of many centuries in Yellove. From first over to last over you were scintillating. Maza aaya.#sanjusamson
சமாளிக்க முடியாத மக்களை கோபப்படாமல் சமாளிக்க 10 வழிகள்!
1. ஆபத்தில்லாத மனிதர்களா இருந்தா உங்க பிரச்சினைகள், உணர்வுகளை பேசி தீர்த்துக்கலாம். உங்களை தூண்டிவிடுபவர்கள் கிட்ட வேண்டாம்.
2. பிரச்சினை வரப்போகுதுன்னு முன்கூட்டியே தெரிஞ்சா அவற்றை சமாளிக்க மனதளவில் தயாரா இருங்க.
3. சிலருடனான உரையாடல் டாக்சிக்கா மாறினா டாபிக் மாத்துங்க இல்லன்னா அங்கிருந்து வெளியேறி விடுங்கள். அதுதான் சுயமரியாதை!
4. சில நேரங்களில் சிலரை எதிர்கொள்வதை விட அமைதியாக இருந்து விடுவதே உங்களுடைய வலிமையான ஆயுதமாக இருக்கும்.
5. அவங்க பிரச்சினை என்னன்னு கண்டுபிடிச்சி அவங்களை சரி பண்றது உங்க வேலை இல்ல.
6. அப்போதைய பிரச்சினை என்னவோ அதுல கவனம் செலுத்துங்க. பழைய குப்பையை கிளராதீங்க.
7. ஒருத்தர் கோவமா, ஆக்ரோஷமா இருக்கும்போது நீங்க அமைதியா இருந்தா பவர் உங்ககிட்ட வந்துடும்.
8. உங்க எல்லைகள் (boundaries) என்னன்னு தெளிவா இருந்துட்டா பின்னாடி வருத்தப்பட தேவையில்லை.
9. மத்தவங்க கோவம், எரிச்சல் மாதிரியான உணர்ச்சிகளுக்கு அவங்கதான் பொறுப்பு. அதை சமாளிக்க வேண்டிய அவசியம் உங்களுக்கு இல்லை.
10. உங்களை நோக்கி வரும் எல்லா விமர்சனத்துக்கும் நீங்க பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #பத்துவழிகள்
பட்டா முதல் வில்லங்க சான்று வரை நிலம் வாங்கும் முன் ஒருமுறை இதை பார்க்கவும்.!
ஒரு நிலத்தின் உரிமை சார்ந்த விஷயங்களில் மிகவும் முக்கியமானது பட்டா. ஒரு குறிப்பிட்ட நிலத்திற்கு பத்திரம் எவ்வளவு முக்கியமோ, அதேபோல் நிலத்தின் பல்வேறு தகவல்களைக் கொண்ட பட்டா (Patta) மற்றும் சிட்டாவும் (Chitta) முக்கியம்.
ஒரு நிலத்திற்கு, அது இருக்கும் இடத்தைப் பொறுத்து வருவாய் துறையால் பல்வேறு சானறிதழ்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் நிலம் சார்ந்த ஆவணங்களுக்கான (Land Documents) விளக்கத்தை நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
பட்டா என்பது
ஒரு நிலம் யாருடைய பெயரில் இருக்கிறது என்பதற்கு வருவாய் துறையால் வழங்கப்படும் முக்கிய ஆவணம் தான் பட்டா. ஒரு நிலத்தை விற்கும் போதும், வாங்கும் போதும் பட்டா அவசியம் தேவை.
சிட்டா என்பது
ஒரு குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு, எல்லைகள், பயன்பாடு மற்றும் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கிறது போன்ற தகவல்களை வழங்கும் வருவாய் துறை சான்றிதழ்.
பத்திரம் என்பது
நிலம், வீடு அல்லது வாகனம் போன்ற அசையும் மற்றும் அசையா சொத்துக்களின் உரிமையை ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு சட்டப்பூர்வமாக மாற்றுவதைக் குறிக்கும் மிக முக்கிய ஆவணம் பத்திரம். இதனை சட்டப்படி பதிவு செய்து கொள்வது அவசியம். பதிவு செய்யப்படாத பத்திரங்கள் நீதிமன்றங்களில் செல்லுபடியாகாது.
வில்லங்க சான்று என்பது
ஒரே நிலத்தை ஒன்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். அதாவது ஒரு நிலத்தை ஒருவருக்கு விற்ற பிறகும் கூட, அதனை மறைத்து வேறொருவருக்கு விற்பனை செய்யும் மோசடிகளை தெரிந்து கொள்ள பதிவுத் துறையால் வழங்கப்படும் சான்று தான் வில்லங்க சான்றிதழ். நிலத்தின் மீது கடன், வழக்கு மற்றும் அடமானம் போன்ற சுமைகள் உள்ளனவா இல்லையா என்பதையும் அறிந்து கொள்ளலாம். ஆகையால் நிலத்தை வாங்குபவர்கள் வில்லங்க சான்றிதழை சரிபார்த்துக் கொள்வது நல்லது.
அடங்கல் என்பது
ஒரு கிராமத்தில் உள்ள விவசாய நிலங்களில் என்னென்ன பயிர் வகைகள் சாகுபடி செய்யப்படுகின்றன உள்ளிட்ட தகவல்களை தெரிந்து கொள்ள அடங்கல் சான்று உதவுகிறது. சமீபத்தில் அடங்கல் சான்றை விவசாயிகள் எளிதாக வாங்குவதற்கு ஆன்லைன் வழிமுறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கிரயம் என்பது
நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணப்படுத்துவதை கிரயம் என்று அழைப்போம்.
நன்செய் நிலம் என்றால் என்ன?
விவசாய சாகுபடிக்கு கிணறு மற்றும் போர் உள்ளிட்ட அதிக நீர்ப்பாசன வசதிகளை கொண்டுள்ள நிலம்.
புன்செய் நிலம் என்றால் என்ன?
சாகுபடிக்கு நீர்ப்பாசனம் செய்ய முழுக்க முழுக்க மழையை மட்டுமே நம்பியுள்ள நிலம்.
கிராம நத்தம் என்றால் என்ன?
ஒவ்வொரு கிராமத்திலும் பொதுமக்கள் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்ட நிலம், கிராம நத்தம் என்று வகைப்படுத்தப்படும்.
கிராம தானம் என்பது என்ன?
கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிலத்தை கிராம தானம் என்று அழைப்பர்.
தேவதானம் என்பது என்ன?
கோயில் பயன்பாட்டிற்காக ஒரு குறிப்பிட்ட நிலத்தை தானமாக வழங்குவதை தேவதானம் என்று அழைப்போம்.
புல எண் என்பது?
நில அளவை எண் அல்லது சர்வே எண்.
மேற்குறிப்பிட்டுள்ள நில ஆவணங்கள் பற்றிய தகவல்களை நிலம் வாங்குவதற்கு முன்பு, தெரிந்து கொள்வது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
நில ஆவணங்கள் பற்றிய உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் உங்கள் அருகில் உள்ள சிறந்த வழக்கறிஞ்சரை அணுகவும்.
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #அறிவோம்சட்டம் #நிலம்
கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவது எப்படி.
நில உரிமையாளர்கள் அனைவரும் பத்திரம் மற்றும் பட்டா குறித்த விஷயங்களில் அதிக கவனமுடன் இருத்தல் அவசியம்.
ஏனெனில் ஒரு குறிப்பிட்ட நிலம் உங்களுக்குத் தான் சொந்தம் என்பதை பட்டாவும், பத்திரமும் தான் உறுதிப்படுத்துகின்றன.
தமிழ்நாடு வருவாய் துறை மூலம் வழங்கப்படும் பட்டாவில் நிலத்தின் வகை, நில உரிமையாளரின் பெயர் மற்றும் சர்வே எண் உள்ளிட்ட முக்கியமான தகவல்கள் அடங்கியிருக்கும்.
பொதுவாக ஒரு குறிப்பிட்ட நிலத்திற்கு ஒன்றுக்கும் மேற்பட்ட உரிமையாளர்கள் இருக்கும்போது, அந்த நிலத்திற்கு கூட்டு பட்டா வழங்கப்படுவது வழக்கம்.
கூட்டு பட்டா உள்ள ஒரு நிலத்தை விற்கவோ அல்லது குத்தகைக்கு விடவோ உரிமையாளர்கள் அனைவரும் ஒப்புதல் அளிக்க வேண்டும்.
இந்நிலையில் கூட்டு பட்டாவில் இருந்து பிரிந்து தனி பட்டா வேண்டுமென்றால், அதற்கு முறையாக விண்ணப்பிக்க வேண்டியது அவசியம். இதற்கு முதலில் நிலத்தை உட்பிரிவு செய்ய வேண்டும்.
ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இருவழிகளிலும் தனி பட்டா பெற விண்ணப்பிக்கலாம்.
ஆன்லைன் வழிமுறை
https://t.co/cZmgnlMkoR./ என்ற இணையதள முகவரிக்கு சென்று பட்டா மாறுதல் (Patta Transfer) என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.
கூட்டு பட்டாவில் இருந்து தனி பட்டா பெற விரும்பினால், பின்வரும் ஆவணங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
🫴கூட்டு பட்டா
🫴நில வரைபடம்
🫴 விற்பனை சான்றிதழ்
🫴சொத்து வரி ரசீது
🫴ஆதார் அட்டை
குறிப்பாக கூட்டு பட்டாவிலிருந்து தனி பட்டா பெற விண்ணப்பிக்கும் போது, நிலத்தின் மற்ற உரிமையாளர்களின் ஒப்புதல் கடிதம் அவசியம் இணைக்கப்பட வேண்டும்.
தனி பட்டா பெற விண்ணப்பித்த சில நாட்களில் சம்பந்தப்பட்ட விஏஓ மற்றும் வருவாய் ஆய்வாளர், நிலத்தை நேரில் ஆய்வு செய்வர்.
பிறகு எவ்வித சட்ட சிக்கலும் இல்லையெனில், 30 முதல் 60 நாட்களுக்குள் தனி பட்டா கிடைத்து விடும்
தனி பட்டா விண்ணப்ப நிலையை ஆன்லைனில் தொடர்ந்து கண்காணிக்க முடியும் என்பதால், அதுகுறித்த தகவல்களை நம்மால் உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்
உங்க கிட்ட தோராய பட்டா இருக்கா.?
45 நாட்களுக்குள் இதை செய்தே ஆக வேண்டும்.!
Joint Patta to Individual Patta
ஆஃப்லைன் வழிமுறை
📃கூட்டுப் பட்டாவில் இருந்து தனி பட்டா பெறுவதற்கு, வட்டாட்சியர் அலுவலகத்தில் பட்டா பிரிப்பு விண்ணப்பத்தை நிரப்பி, உட்பிரிவு கட்டணத்துடன் மனு அளிக்க வேண்டும்.
📃 இந்த மனுவுடன் கூட்டு பட்டா, நில வரைபடம், ஆதார் அட்டை மற்றும் சொத்து வரி ரசீது உள்ளிட்ட ஆவணங்களை இணைக்க வேண்டும்.
📃 அதன்பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நிலத்தை அளவீடு செய்து, தனி சர்வே எண்ணை வழங்குவார்கள்.
📃தனி பட்டா பெறுவதற்கு நிலத்தின் மற்ற உரிமையாளர்கள் ஒப்புதல் அளிக்காவிட்டால், நீதிமன்றத்திற்கு தான் செல்ல வேண்டும்.
📃பட்டா பிரிவினை செய்யும் போது, எல்லை மற்றும் அளவீட்டு சிக்கல்கள் வர வாய்ப்புள்ளது. ஆகையால் தனி பட்டா பெற விண்ணப்பிப்பதற்கு முன்பு, நில உரிமை சிக்கல்களை தீர்த்து விடுவது நல்லது.
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #அறிவோம்சட்டம் #கூட்டுப்பட்டா #தனிப்பட்டா
வயதாக வயதாக நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 56 தங்கமான விஷயங்கள்!
1. அமைதி, ஒரு வாதத்தை நிரூபிப்பதைக் காட்டிலும் சிறந்தது.
2. ஆரோக்கியமே உண்மையான செல்வம்.
3. பணத்தை விட நேரம் அதிக மதிப்புடையது.
4. எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை.
5. உண்மையான நண்பர்கள் சிலரே — அவர்களை நெருக்கமாக வைத்திருங்கள்.
6. மௌனம் பல நேரங்களில் வார்த்தைகளை விட அதிகம் பேசுகிறது.
7. மகிழ்ச்சி பொருள்களில் இல்லை — அது உள்ளிருந்து வருகிறது.
8. "இது போகட்டும்" என்று சில விஷயங்களை விட்டுவிடுவது ஒரு சூப்பர் பவர்.
9. உங்களுடைய "உள் குரல்" தான் உங்கள் வாழ்க்கை கதையாக மாறுகிறது.
10. குறைவாக பயன்படுத்துவது அதிக தெளிவை தரும்.
11. உங்கள் வளர்ச்சியை எல்லோருக்கும் விளக்க வேண்டிய அவசியமில்லை.
12. உங்கள் உள்ளுணர்வை நம்புங்கள் — அது முன்பே அறிவது.
13. தோல்வி என்பது கற்றலின் ஒரு பகுதி.
14. உண்மையான சந்தோஷம் எளிய விஷயங்களில் உள்ளது.
15. மெதுவாக செல்லுங்கள் — வலிமையாக முன்னேற முடியும்.
16. நீங்கள் திருமணம் செய்யும் நபர் உங்கள் வாழ்க்கையின் அனைத்தையும் பாதிக்கிறார்.
17. கவலைப்படுவது முடிவுகளை மாற்றாது.
18. பொருட்களை விட அனுபவங்கள் முக்கியம்.
19. ஒழுக்கம் தான் நீங்கள் விரும்பும் வாழ்க்கையை கட்டுகிறது.
20. தயவு ஒருபோதும் வீணாகாது.
21. உங்கள் பழக்கங்கள் உங்கள் எதிர்காலத்தை வடிவமைக்கின்றன.
22. எல்லா வாதங்களிலும் கலந்துகொள்ள வேண்டியதில்லை.
23. “இல்லை” என்று சொல்வது சுய பராமரிப்பு.
24. தனியாக இருப்பதை அனுபவிக்க கற்றுக்கொள்ளுங்கள்.
25. உடைந்த மனநிலையை பணம் சரி செய்ய முடியாது.
26. பெரிய இலக்குகளை விட தினசரி பழக்கங்கள் முக்கியம்.
27. தேர்வு செய்யாததும் ஒரு தேர்வே.
28. உங்கள் அமைதியை பொன்னாக காப்பாற்றுங்கள்.
29. மிகுந்த நம்பிக்கை உள்ளவர்கள் பணிவுடன் இருப்பார்கள்.
30. நீங்கள் எதை உட்கொள்கிறீர்களோ அதுவாகவே ஆகிறீர்கள்.
31. குணமடைதல் நேரான பாதை அல்ல — பொறுமையாக இருங்கள்.
32. உங்கள் ஒளியை மங்கச் செய்யும்வற்றிலிருந்து விலகுங்கள்.
33. வெற்றிக்கு வேகம் அல்ல — பொறுமை தேவை.
34. பெரும்பாலான பயங்கள் நிஜமாகவே நடக்காது.
35. சரியானவர்கள் உங்களை நம்ப வைக்க வேண்டியதில்லை.
36. உங்கள் மனநிலை தான் உங்கள் மிகப்பெரிய சொத்து.
37. முதுமை ஒரு சாபம் அல்ல — அது ஒரு வரம்.
38. மன்னிப்பு அவர்களை அல்ல — உங்களை விடுவிக்கிறது.
39. கைதட்டலுக்கு பதிலாக நோக்கத்தைத் தேர்ந்தெடுக்குங்கள்.
40. நீங்கள் ஏற்றுக்கொள்வது, மற்றவர்கள் உங்களை எப்படி நடத்த வேண்டும் என்பதை கற்பிக்கிறது.
41. குறைவாக பேசுங்கள் — அதிகமாக கேளுங்கள்; தெளிவு கிடைக்கும்.
42. சுய மரியாதை, பிறரை மகிழ்விப்பதை விட உயர்ந்தது.
43. ஓய்வு என்பது முன்னேற்றத்தின் ஒரு பகுதி.
44. அனைத்திலும் அளவை விட தரம் முக்கியம்.
45. சிலரை நீங்கள் மீறி வளர்வீர்கள் — அது சரி.
46. உணர்ச்சிகள் உண்மையானவை — ஆனால் அவை எப்போதும் உண்மை அல்ல.
47. வார்த்தைகளை விட செயல்களை நம்புங்கள்.
48. ஒப்பிடுவதை நிறுத்தும்போது வாழ்க்கை மேம்படும்.
49. தூக்கம் சுய மரியாதையின் ஒரு வடிவம்.
50. உங்கள் ஆற்றல் தான் உங்கள் நாணயம் — அதை புத்திசாலித்தனமாக செலவிடுங்கள்.
51. எளிமை எப்போதும் சிக்கலை விட மேலானது.
52. ஊக்கத்தை விட தொடர்ந்து செயல் வலிமையானது.
53. எல்லோருக்கும் உங்களை அணுகும் உரிமை இல்லை.
54. எல்லைகள் உங்கள் அமைதியை காக்கின்றன.
55. நன்றியுணர்வு அனைத்தையும் மாற்றும்.
56. முன்கூட்டியே சேமிப்பது பல ஆண்டுகளை காப்பாற்றும்.
நீங்கள் இப்போது வாழ்க்கையின் எந்த stage-ல இருந்தாலும் — இந்த உண்மைகள் உங்களுக்கு தேவை.
#இன்றையதகவல் #தெரிந்துகொள்வோம் #பயனுள்ளதகவல்
💈விஜய் 🗽 திரிஷா கதை💈
🏩நடிகர் விஜய்யும் திரிஷாவும் ஒரு படத்தின் ஷூட்டிங்கிற்காக பெங்களூரில் தங்கி இருந்தார்கள்.🧑🤝🧑
🏩இருவருக்கும் ஒரே வீடு போதும் என விஜய் சொன்னதால், தயாரிப்பாளரும் பணம் மிச்சம் என சந்தோஷமானாராம்.🧑🤝🧑
🏩அந்த வீட்டிற்கு எதிரே ஒரு வீடு இருந்ததாம். அந்த வீட்டில் இருந்த பெண்மணி தினமும் துணி துவைத்து கொடிக்கயிற்றில் காயப் போட்டாராம். 👬
🏩இதை கண்ணாடி ஜன்னல் வழியே விஜய் பார்த்துக் கொண்டிருக்க, “படவா ராஸ்கல்… என்ன அந்த பொண்ணை சைட் அடிக்கிறியா?” எனக் கேட்டாராம் திரிஷா.👯
🏩இல்லை, அந்த பொண்ணு துணி துவைச்சு காயப் போட்டிருக்கும் லட்சணத்த பார். அழுக்கே போகலை” என கண்ணாடி வழியே காட்டினாராம் விஜய். “ம்… இவ்வளவுதானா?” என திரிஷா உள்ளே போய் விட்டாராம். 👭
🏩அடுத்த நாளும் இதே மாதிரி எதிர் வீட்டுப் பெண் துணி காயப் போட, விஜய் அதைக் கண்ணாடி வழியே பார்த்து அழுக்கு என திரிஷாவிடம் சுட்டிக் காட்டினாராம்.👭
🏩அடுத்தடுத்த நாளில் மறுபடியும் அந்த எதிர் வீட்டுப் பெண் துணியை சரியாக துவைக்காமல் அழுக்காகவே காயப் போட விஜய்க்கு செம கோபம் வந்து விட்டதாம்.👬
🏩எதிர் வீட்டுக்குச் செல்ல தயாராகி விட்டாராம். அந்த பெண்ணை பார்த்து “உனக்கு துணி துவைக்க தெரியாதா? இல்லை நல்ல சோப் வாங்க தெரியாதா?” எனக் கேட்கக் கிளம்பினாராம்.👫
🏩அப்போது அவரை வழி மறித்த திரிஷா, “இப்போ போய் கண்ணாடி வழியே அந்தப் பெண் உலரப் போட்டிருக்கும் துணிகளை போய் பார்” என்றாராம்.🧑🤝🧑
🏩விஜய் கண்ணாடி வழியே எட்டிப் பார்க்க, அத்தனை துணிகளும் சுத்தமாகக் காய்ந்து கொண்டு இருந்தனவாம். “எனக்கு முன்னரே முந்திக் கொண்டு போய் நீ அந்தப் பெண்ணிடம் சொல்லிட்டியா?” என்றாராம் விஜய்.👭
🏩“நீ எந்தக் கண்ணாடி வழியாக அந்தத் துணிகளைப் பார்த்தாயோ, அந்தக் கண்ணாடியை நான் துடைத்து சுத்தமாக்கினேன். அவ்வளவுதான்”
என்றாராம் திரிஷா.🧑🤝🧑
நீதி : துணியை சரியாக வெளுக்கவில்லை எனச் சொன்னதை போலத்தான் விஜய் இப்போது நாடு சரியில்லை, நிர்வாகம் சரியில்லை, லஞ்சம் பெருகிவிட்டது, ஊழல் அதிகமாகி விட்டது எனக் கூச்சல் போடுகிறார். “நீ முதல்ல சரியாகுய்யா” என எடுத்துச் சொல்ல திரிஷா தான் அங்கு இல்லை!
பதிவு உரிமையாளருக்கு நன்றிகள்.🙏
#TVKVijay #TVKFails #tamilcinema #TamilPolitics #tamil #tvk #TamilNews
Remembering Jayalalithaa Ji on her birth anniversary. She has made a place in the hearts and minds of countless people as a charismatic leader and outstanding administrator. Her life journey was one of immense grit and determination. As the Chief Minister of Tamil Nadu, she championed welfare-driven governance with a strong focus on women empowerment, social justice and inclusive development. She was both compassionate and decisive. I recall with great joy my interactions with her.
Here is what I had said about her in this month’s #MannKiBaat programme.
ஜெயலலிதா அவர்களை அவரது பிறந்த நாளில் நினைவுகூர்கிறேன். மனம் கவர்ந்த தலைவர் மற்றும் தலைசிறந்த நிர்வாகியாக எண்ணற்ற மக்களின் இதயங்களிலும், மனங்களிலும் அவர் இடம் பிடித்துள்ளார். அவரது வாழ்க்கைப் பயணம் மன உறுதி மற்றும் தீர்மானத்துடன் இருந்தது. தமிழ்நாட்டின் முதலமைச்சர் என்ற முறையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல் குறித்து வலுவான நோக்கத்துடனும், சமூக நீதி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய நலத்திட்டங்களாலும் இயக்கப்பட்ட நிர்வாகத்தில் சிறந்த ஆட்சியாளராக திகழ்ந்தார். கருணை, உறுதி என்ற இரண்டு பண்புகளையும் அவர் கொண்டிருந்தார். அவருடனான எனது கலந்துரையாடல்களை மிகுந்த மகிழ்ச்சியோடு நான் நினைவுகூர்கிறேன்.
அவரைப் பற்றி இந்த மாத #MannKiBaat நிகழ்ச்சியில் நான் என்ன கூறினேன் என்பது இங்கு இடம் பெற்றுள்ளது.