முதல்வரின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும் துறையே இந்த லட்சணத்தில் உள்ளது என்பது வேதனையாக உள்ளது. திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகே 5 பேர் தாக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டம் ஒழுங்கு என்ற வார்த்தையை கூட சொல்லக்கூடாத ஆட்சி தான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கிறது.
இந்த விடியா அரசை வீட்டுக்கு அனுப்புவதே மக்களின் தலையாயக் கடமை என்பதை மக்கள் புரிந்துகொண்டனர்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 12ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் என் அன்புத் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் வாழ்த்துகள்.
நாளைய வளமான சமுதாயத்தை உருவாக்க உள்ள நீங்கள் அனைவரும் இந்தத் தேர்வினைப் பதற்றமின்றி, அச்சமின்றி, துணிவுடன் எதிர்கொள்ளுங்கள். உயர்கல்வியில் சிறந்து விளங்கவும் அட்வான்ஸ் வாழ்த்துகள்!
நல்லதே நடக்கும்!
வெற்றி நிச்சயம்!
திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே பெரும்பத்து கிராமத்தில் நேற்றிரவு இருசக்கர
வாகனங்களில் சென்ற 9 பேர் கொண்ட கும்பல், சாலையில் சென்றவர்கள், டீக்கடை அருகே நின்றவர்கள் மீது ஆயுதங்களால் சரமாரியாகத் தாக்கியதில் இருவர் உயிரிழந்தனர். 5 பேர் வெட்டுக் காயம் அடைந்தனர் என்று வெளியான
செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. இந்தக் கொலைவெறித் தாக்குதல், கடும் கண்டனத்திற்கு உரியது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு, படுகாயம் அடைந்தவர்கள் விரைந்து குணமடைய விழைகிறேன்.
உலக நாடுகளுடன் போட்டி போடும் ஓர் ஆட்சியில் பொதுமக்களின் உயிருக்கு உத்தரவாதம் எங்கே?
இந்தியாவின் டாப் மாநிலத்தில்
காவல் துறைக்குச் சட்டம் ஒழுங்கு டிஜிபி எங்கே?
நம்பர்1 மாநிலம் என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் ஆட்சியின் சட்டம் ஒழுங்கு லட்சணம் இதுதானா?
போதைக் கும்பல் சுதந்திரமாக வன்முறை நிகழ்த்த இடம் தந்த பொறுப்புமிக்க ஆட்சி இதுதானா?
பொதுமக்கள் ஒவ்வொரு நாளும் புலம்பித் தவித்துக் கோபத்தில் கொந்தளித்துக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
ஆட்சியே முடியப் போகிறது. இப்போதாவது காவல் துறையைக் கையில் வைத்திருக்கும் முதலமைச்சர் தூக்கத்தில் இருந்து எழுவாரா?
மக்கள் நலன்களை, அவர்தம் பாதுகாப்பைத் துளியும் யோசிக்காத இந்தத் தி.மு.க. ஆட்சி, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தூக்கி எறியப்படுவது உறுதி உறுதி உறுதி.
Congratulations to the Jammu and Kashmir team for their first ever Ranji Trophy win! This historic triumph reflects remarkable grit, discipline and passion of the team. It is a proud moment for the people of Jammu and Kashmir and it highlights the growing sporting passion and talent there. May this feat inspire many young athletes to dream big and play more.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்கள் தனது 101வது வயதில் இயற்கை எய்திய செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது.
எளிமை, நேர்மை, மக்கள் நலப் பற்றுடன் அரசியல் வாழ்வை முழுமையாக அர்ப்பணித்த அவர், அரசியலில் ஒரு ஒழுக்கத்தின் அடையாளமாக திகழ்ந்தார். சமூக நீதி, விவசாயிகள் உரிமை, பொதுமக்கள் நலன் ஆகியவற்றிற்காக tireless-ஆக போராடிய அவரது சேவை என்றும் நினைவுகூரப்படும்.
அவரது மறைவு தமிழக அரசியல் மிக பெரிய இழப்பு.
அவரது குடும்பத்தினருக்கும், தோழர்களுக்கும்,
Communist Party of India
இயக்கத்தினருக்கும் தமிழக வெற்றிக் கழகம் சார்பாக ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.💐❤️🥺
#நல்லகண்ணு #Nallakannu #RIP #தமிழகவெற்றிக்கழகம் #TVKVijay #TVKForTN @TVKVijayHQ@BussyAnand@TVKHQITWingOffl
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே முதலூரில் பள்ளி மாணவன் ஒருவன், சக மாணவர்களால் சாதிவெறி காரணமாகக் கொலைவெறித் தாக்குதலுக்கு உள்ளாகியிருக்கும் செய்தி, நெஞ்சைப் பதற வைப்பதோடு ஆழமான அதிர்ச்சியையும் அளிக்கிறது.
சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் போதிக்க வேண்டிய வகுப்பறைகளில், பிஞ்சு உள்ளங்களுக்குள் சாதி விஷம் விதைக்கப்படுவது ஒட்டுமொத்த சமூகத்திற்கும் விடப்பட்ட பெரும் சவாலாகும். சமீப நாட்களாகப் பள்ளிகளில் இது போன்ற சம்பவங்கள் தலைதூக்குவது, தமிழக அரசின் மெத்தனப் போக்கையே அப்பட்டமாகத் தோல் உரித்துக் காட்டுகிறது.
இச்சம்பவத்தில் நேரடியாகத் தொடர்புடையவர்கள் மட்டுமன்றி, அவர்களுக்குப் பின்னணியில் இருந்து கொண்டு மாணவர்களின் பிஞ்சு மனங்களில் நஞ்சைப் பாய்ச்சி, அவர்களைத் தூண்டிவிடும் நபர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது தமிழக அரசு உடனடியாகவும் பாரபட்சமின்றியும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@TVKVijayHQ | @TVKPartyHQ | @TVKHQITWingOffl | @BussyAnand
#தமிழகவெற்றிக்கழகம் #TVK