ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்குரலாய் ஒலித்து, சமூக சமத்துவக் களத்தில் இன்னுயிர் ஈந்த வீரத்தியாகி இம்மானுவேல் சேகரனாரின் நினைவு நாளில், அவரது தன்னலமற்ற தியாகத்தையும் சமூகப் பங்களிப்பையும் போற்றி வணங்குவோம்!
#இம்மானுவேல்சேகரனார்
நம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில், ஒருங்கிணைந்த திருச்சி மாவட்ட செயற்குழு கூட்டம் எனது தலைமையில் இன்று நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் போது, தலைமை கழகத்தின் சார்பில் மாவட்ட பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளை வாழ்த்தி மகிழ்ந்தேன்.
காலத்திற்கேற்ப தம்மை தகவமைத்துக் கொள்வதே நம் கழகத்தின் சிறப்பியல்பு. அதனால், நம் கழகம் மேற்கொண்ட மறு சீரமைப்பு பணிகளால் வயது மூத்தவர்களுக்கு இனி பதவி கிடைக்காது என யாரும் வருத்தப்பட வேண்டாம் என்றும் அனைவருக்கும் பொறுப்புகள் வழங்க நம் தலைவர் அவர்கள் அறிவுறுத்தி உள்ளார் என்பதையும் நிர்வாகிகளுக்கு அப்போது தெளிவுபடுத்தினேன்.
நாம் தான் கழகம்; கழகம் தான் நாம் என்பதை மனதில் கொண்டு அனைவரும் ஒருங்கிணைந்து, ஒற்றுமையுடன் பணியாற்றுவோம்!
உறுதிமிக்க தொண்டர்களால் கட்டமைக்கப்பட்ட நம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றிக்கு அ��ராது உழைப்போம்!
#DMKForever
உலகையே உலுக்கியுள்ள நேபாள வெள்ளப்பெருக்கு குறித்த செய்திகள் மிகுந்த கவலை அளித்து வருகிறது.
இந்த சூழலில், அங்கு சிக்கியுள்ள நம் திருச்சி மாவட்டம் திருவரங்கம் பகுதியைச் சேர்ந்த திருமதி. விமலா ரவி என்பவர் மாயமானதாக வந்த தகவல் மிகவும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.
நம் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின்படி, இன்று திருமதி. விமலா ரவி அவர்க��ின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து பேசினேன். அப்போது நமது மக்களை பாதுகாப்பாக தாய்நாடு அழைத்து வர தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்து தர வேண்டும் என ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கு நம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக அழுத்தம் தருவோம் என்பதையும் தெரிவித்தேன்.
இந்த இக்கட்டான சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நம் தலைவர் அவர்களும், நம் திராவிட முன்னேற்ற கழகமும் என்றும் துணை நிற்கும் எனவும் நம்பிக்கை அளித்தேன்.
#NepalFlood #Rasuwa #DMK #Trichy #Srirangam
முதலமைச்சராக இருந்து வழிநடத்தி, இந்தத் துறையிலே எனக்குப் பணியாற்ற வாய்ப்பு தந்த எங்கள் தலைவருக்கு நன்றி!
‘திராவிட மாடல்’ ஆட்சியில் ரூ.1.25 லட்சம் கோடி செலவில் நகராட்சி நிர்வாகத் துறையில் மாபரும் பணிகளை மனநிறைவோடு செய்துள்ளேன்.
சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்துத் தன் தாய்மண்ணிற்காகக் களம் கண்ட ஒப்பற்ற வீரத்தளபதி!
தன் உதிரத்தையும் இன்னுயிரையும் ஈந்து மானத்தைக் காத்த அந்த மாவீரனின் புகழையும் தியாகத்தையும் நெஞ்சில் ஏந்திப் போற்றுவோம்!
#ஒண்டிவீரன்#Ondiveeran#வீரவணக்கம் #FreedomFighter #வரலாறு #Dmk
நம் இந்திய திருநாடு விடுதலை அடைந்து 80-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் நம் நாட்டு மக்கள் அனைவருக்கும் பெருமைமிகு நல்வாழ்த்துகள்.
இத்திருநாளை முன்னிட்டு திருச்சி தில்லைநகரில் அமைந்துள்ள நமது கழக அலுவலகத்தில் ���ூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினோம். அதைத் தொடர்ந்து கழக நிர்வாகிகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டேன்.
பன்முகத் தன்மை கொண்ட நம் இந்தியாவில் அன்பும் - சகோதரத்துவமும் - மத நல்லிணக்கமும் என்றும் செழித்தோங்கட்டும்..!
#IndependenceDay
Another day, another sticker, by Sticker Thilagam TVK!
DMK government under the Hon'ble @mkstalin has initiated preliminary works regarding the Chennai Water Metro project.
Proof 📎:
https://t.co/SibOQMBHJX
https://t.co/Ty7B7GZO0W
https://t.co/RaUdRYTuTZ
https://t.co/BhR8Z4lVwK
https://t.co/jGErsFRnWb
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி
கழக அயலக அணிச் செயலாளரும் நாடாளுமன்ற ம���நிலங்களவை முன்னாள் உறுப்பினருமான சகோதரர் புதுகை M.M. அப்துல்லா அவர்களின் அன்புத்தாயார் திருமதி நபீசா பீவி அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து வேதனையடைந்தேன்.
பாசத்துடன் வளர்த்து, தன்னைச் சான்றோனாக்கி மகிழ்ந்த அன்னையை இழந்து வாடும் தம்பி அப்துல்லா அவர்களைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவருக்கும் அவரது குடும்பத்தார்க்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்தேன்.
லால்குடி இரயில் நிலையத்தில் விரைவு ரயில்கள் நின்று செல்ல ஒன்றிய ரயில்வே அமைச்சகத்திடம் கோரிக்கை!
லால்குடி மற்றும் சுற்றுவட்டார மக்களின் நீண்டநாள் கோரிக்கையை கருத்தில் கொண்டு, ஒன்றிய இரயில்வே இணை அமைச்சர் திரு. வி. சோமண்ணா அவர்களை ஏற்க���வே சந்தித்து, லால்குடி ரயில் நிலையத்தில் குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட கூடுதல் விரைவு ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை மனு அளித்திருந்தேன்.
அதன் தொடர்ச்சியாக, தற்போது ரயில்வே துறையின் Principal Executive Director (Coaching) திரு. நவீன் குமார் பரசுராம்கா அவர்களையும் சந்தித்து, இதே கோரிக்கையை முன்வைத்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தினேன்.
தற்போது குறைந்த எண்ணிக்கையிலான இரயில்கள் மட்டும�� லால்குடியில் நின்று செல்வதால், மாணவர்கள், பணிக்குச் செல்வோர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த பயணிகளின் தேவைகளை கருத்தில் கொண்டு, கூடுதல் ரயில்களுக்கு லால்குடியில் நிறுத்தம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தேன்.
#railways #transport #lalgudi #trains #trichy #development #parliament #DMK #MKStalin #Udhayanidhi #Trichy #ArunNehru #Perambalur
எல்லா சப்ஜெக்ட்க்கும் எழுந்து நின்னு பேசுறாரே, முதலமைச்சரா ???
இல்ல, பள்ளி கல்வித்துறை அமைச்சர்...
எந்த கேள்விக்கும் பதில் சொல்லாம அமைதியா உட்கார்ந்து இருக்காரே ???
அவர்தான் முதலமைச்சர்....!!!
நாளை தமிழ்நாடு ச���்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கவுள்ள நிலையில், மாண்புமிகு எதிர்க் கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்களும் திமுகவும் கேட்கப்போகும் சட்டை உரிக்கும் கேள்விகளை எதிர்கொள்ளப் பயந்து, நடுநடுங்கிப்போய் இந்த முதலைக்கண்ணீர் 'Take Diversion' நாடகத்தைக் கையில் எடுத்துள்ளது தவெக விஜய் அரசும், அதற்கு விலைபோன சில ஊடகங்களும்!
நேற்று தஞ்சையில் மாண்புமிகு திரு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திமுகவின் பிரம்மாண்ட விவசாயிகள் ஆதரவுப் போராட்டத்தின் வெற்றி அலையைக் கண்டு தவெக அரசால் சற்றும் செரித்துக் கொள்ள முடியவில்லை! அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல், தங்களின் 'Virtual Abusers' மூலமாக அருவருப்பான பொய்ப் பிரச்சாரங்களை அவிழ்த்து விட்டு மக்களின் கவனத்தைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள்!
காவிரி நீ���் நமக்கு உபரி நீர் அல்ல, அது நமது வாழ்வாதார உரிமை நீர்! ஆடி 18 பெருக்கு அன்றும் கடைமடை வரை சொட்டு நீர் இல்லாமல் காவிரி காய்ந்து கிடக்கிறது! தண்ணி வர வேண்டிய இடத்திற்கு வரவில்லை!
விவசாயிகளின் கண்ணீரைப் பேசி திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்வைத்த இந்த நியாயமான உரையை, தவெகவின் அழுக்கு மூளையினாலும் அவர்களின் சைபர் கூலிப்படையினாலும் வேறு அர்த்தமாகத் திரித்துப் பிரச்சாரம் செய்கிறார்கள்.
தமிழ்நாடு விவசாயிகளுக்காக அவர்களுடன் ந���ன்று கர்நாடக காங்கிரஸ் அரசை எதிர்த்துப் போராட்டம் செய்யத் துணிச்சலில்லாமல், சொந்த முதல்வர் பதவியைக் காப்பாற்றிக் கொள்ள அஞ்சி நடுங்குகிறது இந்தத் 'டம்மி' அரசு.
முன்பு போலி நீர் திறப்பு வீடியோக்களைப் பரப்பிச் சாயம் வெளுத்த தவெக, இப்போது திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் போராட்ட உரையைத் திரித்துத் தப்பிக்கப் பார்க்கிறது. எத்தனை 'Virtual Abusers'-களை வைத்துப் பொய்களைப் பரப்பினாலும், காவ���்துறையை வைத்து மிரட்டினாலும், மக்கள் கேட்கும் கேள்விகளிலிருந்து உங்களால் தப்பிக்கவே முடியாது CM Sir!
தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்க தஞ்சை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
விவசாயிகளின் வாழ்வாதாரக் கோரிக்கை��ளைப் புறக்கணிக்கும் தமிழ்நாடு அரசைக் கண்டித்து, நமது கழகத் தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்களின் தலைமையில், தோழமை இயக்கங்கள் மற்றும் விவசாய சங்கங்களுடன் இணைந்து தஞ்சையில் இன்று நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோம்.
காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டிற்கு கிடைக்க வேண்டிய நீரை பெற்றுத் தருவதில் மெத்தனமாக செயல்பட்டு ���ரும் தமிழ்நாடு அரசை கண்டித்து முழக்கமிட்டோம்.
குறிப்பாக விவசாயக் கடன் ரத்து, மேகதாது அணை தடுப்பு, டெல்டா மாவட்டங்களை வறட்சிப் பகுதியாக அறிவித்தல் ஆகியவற்றை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்பதே நமது கோரிக்கை!
உடன் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட மற்றும் ஒன்றிய செயலாளர்கள், கழக உடன்பிறப்புகள், தோழமை இயக்க பிரதிநிதிகள் மற்றும் ��ிவசாய சங்க தோழர்கள் கலந்து கொண்டனர்.
#farmers #cauvery #tamilnadu #thanjavur #water #agriculture #delta #DMK #MKStalin #Udhayanidhi #Trichy #ArunNehru #Perambalur
பெரம்பலூர் மாவட்ட மக்களின் 70 ஆண்டுகால கனவான நேரடி ரயில் இணைப்பை நனவாக்கும் முயற்சிகள் தற்போது முக்கிய கட்டத்தை எட்டியுள்ளன.
நாடாளுமன்றத்தில் நமது பெரம்பலூர் மக்களின் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தியதன் பயனாக, பெரம்பலூர்–நாமக்கல்–அரியலூர் புதிய ர���ில்பாதைக்கான விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிக்கும் பணிகள் முன்னேற்றம் கண்டுள்ளன.
திட்டத்தின் அடுத்தடுத்த நிர்வாக நடவடிக்கைகள் விரைந்து நிறைவேறி, ரயில்பாதை அமைப்புப் பணிகளுக்கான இறுதி ஒப்புதல் விரைவில் கிடைத்து, திட்டம் நிறைவேறும் வரை, பெரம்பலூர் மாவட்டத்தின் மக்கள் பிரதிநிதியாக எனது தொடர் முயற்சிகள் என்றும் தொடரும்!
#perambalur #railways #parliament #development #transport #mp #indianrailways #DMK #MKStalin #Udhayanidhi #Trichy #ArunNehru #Perambalur
நடிகர் திலகம் "செவாலியே" சிவாஜி கணேசன் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு திருச்சி புத்தூர் தலைமை அரசு பொது மருத்துவமனை அருகில் உள்ள சிவாஜி கணேசன் அவர்களின் திருவுருவ சிலைக்கு கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினோம்.
#ChevalierSivajiGanesan#SivajiGanesan
கர்மவீரர் காமராஜர் அவர்களின் 124 வது பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள அவரது திருவுருவ சிலைக்கு கழகத்தினருடன் இணைந்து இன்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
பெருந்தலைவர் காமராஜரின் புகழ் ஓங்கட்டும்..!
#Kamarajar124
சிப்பாய்ப் புரட்சிக்கு நூறாண்டுகளுக்கு முன்பே விடுதலைக் கனலை நம் மண்ணில் மூட்டிய மாபெரும் வீரர் அழகு முத்துக்கோன்.
அடிமையாய் உயிர்வாழ்வதைக் காட்டிலும் அடக்குமுறைக்கு எதிராக வீரத்துடன் போராடி மடிவதே மேல் என விடுதலைப் போராட்டத்துக்கான வீர வித்தாய் மக்கள் மனங்களில் ஊன்றப்பட்ட அழகு முத்துக்கோன் அவர்களின் பிறந்தநாளில் அவருக்கு என் வீர வணக்கம்!