மதுராந்தகம், தாராபுரம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத் தேர்தல்-2026 அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்கள்
- மாண்புமிகு கழகப் பொதுச்செயலாளர் புரட்சித் தமிழர் @EPSTamilNadu அவர்களின் முக்கிய அறிவிப்பு
நம் இரும்பெரும் தலைவர்களின் நல்லாசியோடும், உங்களின் ஒத்துழைப்போடும் 'கழகப் பொதுச் செயலாளர்' பொறுப்பினை ஏற்று,
இரவு பகல் பாராமல் பணியாற்றி வரும் நான், பல்வேறு இன்னல்களையும், சோதனைகளையும், துரோகங்களையும், கழக நிர்வாகிகள் மற்றும் கோடானு கோடி கழகத் தொண்டர்களின் துணையோடு எதிர்கொண்டு தொடர்ந்து பயணித்து வருகிறேன் என்பதை நீங்கள் அனைவரும் நன்கு அறிவீர்கள்.
நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் கழகம் 47 இடங்களைப் பெற்ற நிலையில், கழகத்தில் பல்வேறு பதவி சுகங்களை அனுபவித்துவிட்டு இன்று கழகத்தை அழிப்பதற்கான செயல்களில் ஒருசிலர் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது. நமக்கு எப்பொழுதும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர்., புரட்சித் தலைவி அம்மா ஆகியோரது ஆன்மா உறுதுணையாக இருக்கும்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு தற்போது ஏற்பட்டுள்ள சோதனையைக் கண்டு கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தொண்டர்கள் அனைவரும் மனம் தளர வேண்டாம்; எவ்வித விபரீதமான செயல்களிலும் ஈடுபட வேண்டாம் என்று மீண்டும் மீண்டும் உங்கள் அனைவரையும் மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.
கழகம் தற்போதைய சூழ்நிலையில் இருந்து மீண்டெழுவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நான் மேற்கொண்டு வருகிறேன். இதற்கு கழக நிர்வாகிகளும், கோடானு கோடி கழகத் தொண்டர்களும் முழு ஒத்துழைப்பு நல்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
“எனக்குப் பின்னாலும், இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் வந்தாலும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மக்களுக்காகவே இயங்கும்” என்ற
இதய தெய்வம் அம்மா அவர்களின் எண்ணவோட்டத்தை, நாம் அனைவரும் ஒன்றிணைந்து மெய்ப்பித்துக் காட்டுவோம்.
கழகத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் தற்போதைய சூழ்நிலையை எண்ணி எவ்வித அச்சத்திற்கும், பதற்றத்திற்கும் ஆளாக வேண்டாம் என்று மீண்டும் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
களப் பணி ஆற்றுவோம்! கழகம் காப்போம்!
@AIADMKOfficial
சென்னை தண்டையார்பேட்டையில் கஞ்சா விற்பனையை தட்டிக் கேட்ட 23 வயது இளைஞர் விஷ்ணு என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
போதைப் பொருள் புழக்கத்தை தட்டிக் கேட்டால் கொலை தான் இந்த ஆட்சியில் பதிலா? இது தான் மாற்றமா?
இந்த லட்சணத்தில், நேற்று திருச்சியில் பேசிய இன்றைய முதல்வர், தன் மீது வீண் பழி போடுவதாக வேறு ஆதங்கப் படுகிறார்.
இவர் அதிகாரிகளை நியமித்துவிட்டாராம். நியமித்தால் போதுமா? இதே அதிகாரிகள் தானே எல்லா ஆட்சியிலும் பணி புரிகிறார்கள்? மாற்றம் என்பது ஆட்சியாளரிடம் வர வேண்டும்.
காவல்துறையை கையில் வைத்திருப்பவர், சட்டம் ஒழுங்கிற்கு பொறுப்பேற்காமல் நழுவ முயல்வது வெட்கக்கேடு! இதில், போதைப்பொருளை தன்னால் ஒழிக்க முடியாது என்று மறைமுகமாக ஒப்புதல் வாக்குமூலம் வேறு அளித்துள்ளார்.
மேலும், சிங்கப்பெண் அதிரடிப் படையை அடுத்த வாரம் துவக்கி வைப்பாராம்.. கடந்த வாரம் அனைத்து ஏற்பாடுகளும் தயாராக இருந்த நிலையில், எதற்கு நீங்கள் கடைசி நிமிடத்தில் ரத்து செய்தீர்கள்? உங்கள் உதவியாளர் வீட்டு விழாவை சிறப்பிக்க தமிழகப் பெண்களின் பாதுகாப்பை Compromise செய்தீர்களா? நீங்கள் அடுத்த வாரம் துவக்கும் வரை தமிழகப் பெண்கள் பாதுகாப்பு இன்றி இருக்க வேண்டுமா?
“ஆட்சி நடத்துவது எப்படி” என நீங்கள் ஆறு மாத Crash Course முடிப்பதற்குள் மக்கள் மடிந்துக் கொண்டே இருக்க வேண்டுமா? அதை யாரும் கேள்வி கேட்கக் கூடாதா?
ஒரு முறையான முதல்வராக இல்லாவிடினும், ஒரு கட்சித் தலைவராகவாவது முறையாக உள்ளாரா என்றால், அதுவும் இல்லை!
தூத்துக்குடி அருகே கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளுங்கட்சி தவெக நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வருகின்றன.
கடந்த 3 வாரங்களில் எத்தனை ஆளுங்கட்சி நிர்வாகிகள் கொடும் குற்றச் செயல்களுக்காக கைது செய்யப்பட்டு உள்ளார்கள்? ஒரு கட்சித் தலைவராக, தன் கட்சியினரை அடக்கி வைக்க வக்கில்லாதவர், எப்படி காவல்துறையை நிர்வகிப்பார்?
இப்படிப்பட்ட ஆட்சி எப்படி மக்களைக் காக்கும்? எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதி செய்யும்?
தான் வசிக்கும் பொறுப்பின் தன்மை உணராமல், இன்னும் பஞ்ச் டயலாக் பேசும் ரீல் ஹீரோவாகவே தன்னை பாவித்துக் கொள்ளும் பொய்க்கால் குதிரை அரசின் முதல்வர், அந்த மாய உலகில் இருந்து வெளியே வந்து, தான் வகிக்கும் பொறுப்பின் தலையாயப் பணியான சட்டம் ஒழுங்கைக் காக்கும் Responsibility எடுத்து, நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
@CMOTamilnadu@AIADMKOfficial
தலைவர் @EPSTamilNadu அவர்களின் வயது 72
நேற்று
தஞ்சையில் 3 திருமண நிகழ்ச்சி
விவசாயிகளுடன் சந்திப்பு
பத்திரிகையாளர் சந்திப்பு
திருச்சியில் பத்திரிகையாளர் சந்திப்பு
ஜல்லிக்கட்டு குழுவினருடன் சந்திப்பு
ஜெகன் இல்ல திருமணம்
#எடப்பாடியார் அவர்களுக்கு
வயது வெறும் எண்கள் மட்டுமே
174 தொகுதிகளைக் கடந்து,
களத்தில் ஆட்சி மாற்றத்திற்கான விதையை,
#மக்களைக்_காப்போம்#தமிழகத்தை மீட்போம்
என்ற எழுச்சி முழக்கம் வாயிலாக விதைத்து,
தமிழக மக்களின் பேரன்பிற்கிடையே,
அரசியல் பயணமாக மட்டும் அல்லாமல்,
நம்மில் ஒருவரை,
நமக்கான தலைவரைக்
கொண்டாடும் திருவிழாவாக நடைபெறும்
#புரட்சித்தமிழரின்_எழுச்சிப்பயணம்
நவம்பர் 30 (ஞாயிற்றுக்கிழமை) அன்று, 175-வது தொகுதியாக, கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்றத் தொகுதியில்!
#கோபியில்_எடப்பாடியார்!
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் முதலமைச்சரின் படம், பெயர் இடம் பெறுவதில் தடையில்லை; முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி, முதலமைச்சர் ஸ்டாலின் படங்களை பயன்படுத்த தடைகோரிய மனு தள்ளுபடி