"இந்த அளவுக்கு ஒரு சமூக நீதி கேபினட் இதுவரைக்கும் பார்த்திருக்கீங்களா ப்ரோ?"
"இல்ல ப்ரோ..அந்த ஆளு உங்களுக்காக லெஃப்ட்ல இண்டிகேட்டர் போட்டுட்டு, ரைட்ல வண்டியை திருப்பி, ரெண்டு பிராமணர்களுக்கும் மந்திரி பதவி கொடுத்து, அதுல ஒருத்தர் கையில அறநிலையத்துறையையும் கொடுத்து டெல்லிக்கு சிக்னல் காட்டி இருக்காரு ப்ரோ"
தமிழ்நாட்டுக்கு பெரும் தலைகுனிவு வந்துவிட்டது.
Sofa model ஆட்சி நடத்தும் திரு @TVKVijayHQ தலைமையிலான அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள நிதியமைச்சர் மரிய வில்சனின் இலட்சணத்தை பாருங்கள். வீடு புகுந்து ரவுடிசம் செய்தவரை அமைச்சராக்கி அழகு பார்ர்கிறார் முதல்வர் விஜய்.
இதுதான் நீங்கள் சொன்ன மாற்றமா சார்?
#TVKFails
திருநங்கை, திருநம்பியர்னு அழகு பெயர் வைத்தாலும் சரி, அவர்களுக்கும் விடியல் பயணம் உண்டுன்னு தந்தாலும் சரி, அவர்களுக்கு நல்ல படிப்பு தந்தாலும், அவர்களுக்கும் சமூகத்திலே சம உரிமை உண்டு என சட்டம் பேசினாலும், அவர்கள் மேலும் புதிய மாற்றத்தைதான் தேடுவார்கள் போல!
#மாற்றம்
The real winner? Lottery Martin. He avenged AIADMK, defeated DMK, and now owns TN through his proxy, Aadhav Arjuna, the new open power center for billionaires. CM Vijay’s dangerous public silence proves he’s just a figurehead. The entire state is hijacked. We're doomed. ♟️
தேர்தல்ல வெற்றி தோல்வி அப்டின்றது இந்த @TVKVijayHQ ரசிகர்கள் போன்ற தற்குறிகளை பொறுத்தவரை ஈகோ சார்ந்த விஷயம்..
ஆனா நாம வருந்தறது இத்தனை முன்னேற்றத்திற்கான திட்டங்கள் எல்லாம் இனி யாரு யோசிப்பாங்கனு தான்..
பொது சமூகத்துக்கு இது எதுவுமே தெரியலையேன்றது தான்..
@Anbil_Mahesh 🫂🥹💙🙏
மாமா பையனுக்கு +2 டிசி வாங்க போனோம், ஸ்கூல்ல காலேஜ்ல அப்ளை பண்ண அப்ளிகேசன் ஜெராக்ஸ் or பீஸ் கட்டுன பில் கேக்குறாங்க., என்னன்னு விசாரிச்சா, போன ஆட்சில அன்பில் மகேஷ் இந்த டேட்டா கேட்ருந்தாராம், யாரெல்லாம் குடுக்கலயோ அவங்கள காண்டாக்ட் பண்ணி என்ன பிரச்சனைனு கேட்டு காலேஜ்ல சேர்க்க உதவ. 😑😑
நீங்க ஏன் பதட்டப்படுறீங்க?
என்னிடம் எல்லோரும் கேட்கக் கூடிய கேள்வி...
38 மாதிரி பள்ளிகள்
தமிழ்நாடு முழுவதும் 38 மாவட்ட தலைநகரங்களில் மாதிரி பள்ளிகள். அவர்களுக்கு NEET, JEE நுழைவுத் தேர்வு மற்றும் உயர் கல்விக்கு சேர்வதற்கான தீவிரப் பயிற்சி.
236 வெற்றி பள்ளிகள்
மிகப்பெரிய அளவிலான கட்டமைப்பு வசதி. அந்தப் பள்ளி மாணவர்களுக்கு மட்டுமல்ல சுற்றியுள்ள பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில் பயிற்சி.
இது போன்ற முன்னெடுப்புகளால்...
2025ல் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் JEE தேர்வில் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை 448.
நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை 500க்கும் மேல்.
நான் முதல்வன் திட்டத்தில் பயின்று UPSC தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 56
28 மாநிலங்கள் இருக்கக்கூடிய இந்தியாவில், முதல் 10 இடங்களுக்குள் தரம் பெற்ற தமிழ்நாட்டு மாணவர்கள் 2 பேர் (இரண்டாம் இடமும், ஏழாம் இடமும்)
பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு பிள்ளைகளை எந்தக் கல்லூரியில் சேர்ப்பது என்பது மிகப்பெரிய குழப்பம் ஏற்படும் சூழலில், எந்த பின்புலமும் இல்லாத அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மிகப்பெரிய வழிகாட்டல் நான் முதல்வன் திட்டம்.
அதன் மூலம் CUTE, CLAT போன்ற தேர்வுகளுக்கான மிகப்பெரிய விழிப்புணர்வு ஏற்படுத்தி பல்வேறு மத்திய பல்கலைக்கழகங்களில் அவர்கள் சேருவதற்கான மிகச் சிறந்த வழிகாட்டலை கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசு செய்தது. எண்ணற்ற மாணவர்கள் பயன் பெற்றிருக்கிறார்கள்.
உயர்கல்வியில் சேராத மாணவர்களின் தகவல்களை திரட்டி, ஆசிரியர்களை அவர்களின் வீடுகளுக்கு விரட்டி, பள்ளிகளில் எல்லாம் முகாம் போட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் அந்த மாணவர்களை வரவழைத்து அவர்களின் இடர்பாடுகளை கேட்டறிந்து, கல்லூரியில் இருந்து வந்திருந்த ஸ்டால்களில் அங்கேயே அட்மிஷன்கள் போடப்பட்டன.
இதெல்லாம் பெற்றோர்களே பிள்ளைகளுக்கு செய்வதற்கு அலுப்புப் படக்கூடிய சூழலில் கல்வித்துறை உன்னதமாக முன்னெடுத்து செயல்படுத்தியது.
மீண்டும் மீண்டும் அழுத்திச் சொல்வேன். தமிழக வரலாற்றில் கல்வித் துறை மிகச்சிறந்திருந்தது என்றால் அது கடந்த ஐந்து வருடங்கள்தான்.
#DMK4TN
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளாக அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!