தமிழர் தேசியம் உயிர் மூச்சு. தமிழர்கள் அனைவரும் ஒர் நிலைதான், ஒன்றுபடு சொந்தமே. ஆயிரம் வேறுபாடுகள் இருந்தாலும் தமிழரென ஒன்றுபடு. சூழும் ஆபத்தையுணர். ஒன்றுபடு.
எதையும் சாதிக்கும் திறன் கொண்ட இளைய தலைமுறையினரே வணக்கம்!
கடந்த கால ஒப்பந்தங்கள் எதையும் மதிக்காமல் காவிரி மற்ற���ம் துணை ஆறுகளின் குறுக்கே 4 அணைகளை கட்டிய கர்நாடகம், இப்போது நடுவர் மன்றத் தீர்ப்பை மதிக்காமல் மேகதாது அணையைக் கட்டத் துடிக்கிறது.
மேகதாது அணை கட்டப்பட்டால் காவிரி டெல்டா வளமாக இருக்காது வறட்சியாக மாறும்.
வளமான டெல்டாவையும், 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரங்களையும் பாதுகாக்கவே ஜூலை 1 முதல் 4 வரை தமிழ்நாட்டில் காவிரி தொடங்கும் பிலிகுண்டுலு முதல் கடலில் கலக்கும் பூம்புகார் வரை விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறேன்.
மாற்றங்களை ஏற்படுத்தும் இளைஞர்களே....
இந்தப் பயணத்தில் என்னுடன் இணையுங்கள்,
தமிழ்நாட்டின் எதிர்காலத்தைக் காப்போம்!
#காவிரிகாப்போம்
#மேகதாதுஅணைதடுப்போம்
#CauveryKappom
#MekedatuAnaiThaduppom #CauveryRights #TamilNadu4
பவானி ஆறு போராளி மருத்துவர் சத்திய சுந்தரி அம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவர் சத்தியசுந்தரி அம்மாள் தமிழகத்தின் சூழலியல் இயக்கத்தின் முன்னோடிக���ில் ஒருவர். ஈரோடு மருத்துவர் ஜீவானந்தம் அவர்களுடன் இணைந்து பணியாற்றியவர். பவானி ஆற்றைப் பாதுகாக்க பலவிதமான போராட்டங்களை முன்னெடுத்தவர்.
தனது 92 ஆவது வயதில் ஜூன் 26 இல் இயற்கை எய்தினார். சுற்றுச்சூழல் போராளி சத்திய சுந்தரி அம்மாள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@TVKVijayHQ ஏன் தமிழர்களே கண்ணுக்கு தெரியாதா?! ஏது விட்டா மேகதாது அணைக்கு செங்கல் எடுத்து கொடுப்பபோல?! நட்டப்பட்ட தயாரிப்பாளருக்கு பணத்தை குடு தமிழரூக்குரிய பதவியை தூக்கி கொடுக்கணுமா? இததனை தலைவர்கள் சொல்வது காதுல விழல?!
மேகேதாட்டு அணை திட்டம்! த���்பிக்குமா தமிழ்நாடு?
பகுதி 1 - வரலாறு
நம் மக்களிடம் இதன் பாதிப்பை கொடுக்க சேர்க்க வேண்டியது நம் அனைவரின் பொறுப்பாகும்.
–
மருத்துவர்
இலரா #பாரதிசெல்வன்,
மாநில ஒருங்கிணைப்பாளர்,
#நாம்தமிழர்கட்சி,
#மன்னார்குடி சட்டமன்றத் தொகுதி.
#காவிரி
The voice of Tamil …. An original film maker . A legend . A person who never forgets to encourage any talent …..Really blessed to have worked with u in ur direction , and worked on floors with you … and discussed music a lot of times with u … the real aasaan of Tamil cinema . U will be missed deeply . Barathiraja sir 💔
"பாரதிராஜா" எனும் இந்த பெயரை உச்சரிக்காத தமிழர்கள் இருக்கமுடியாது.. "என் இனிய தமிழ் மக்களே" என்ற குரலை ரசிக்காத அடுத்த மொழிக்காரர்கள் இல்லை, கேட்காத காதுகள் இல்லை.. அவரின் படைப்புகளை பார்த்து பார்த்து வியக்காத கண்கள் இல்லை.. இவையனைத்தையும் உணர்ந்து உருவானவர்களே இங்குள்ள அனைத்து இயக்குனர்களும்.. எங்களை கைபிடித்து நல்ல சினிமாவை நோக்கி பயணிக்க வைத்த மாபெரும் கலைஞன். எங்களின் படைப்புகளுக்கு ஒரு பெருமை கிடைக்குமெனில் அதில் 50 சதவீதம் எங்கள் பிதாமகனுக்கு உரிமை உண்டு.. இது இன்றோடு முடிவடையும் வரலாறு அல்ல.. திரையில் தமிழ்சின���மாக்கள் கொண்டாடப்படும் காலங்கள் தாண்டி பண்பாடுகளின் ஆய்வுகளில், கலை இலக்கிய கொண்டாட்டங்களில், கீழடி போல திரைசினிமாக்கள் தோண்டி எடுக்கப்படும்போது எல்லாம் கிடைக்கப்போகும் பொக்கிஷங்கள்.. பாதுகாப்போம்.. நம் முன்னோடிகளின் பாதச்சுவடுகளை வணங்கி போற்றுவோம்..
தமிழர்களின் வாழ்வியலைத் திரைப்படமாக எடுத்து திரையுலகில் மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்தியவரும், தலைமுறைகள் கடந்து தனக்கென ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவருமான இயக்குநர் இமயம் பத்மஸ்ரீ திரு. பாரதிராஜா அவர்க��் உடல்நலக்குறைவால் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.
கிராமத்துப் பின்னணி கொண்ட கதைகளாலும், நடிகர், நடிகைகளின் கதாபாத்திர வடிவமைப்பாலும், இன்னபிற கலைஞர்களுக்கு முன்னோடியாகவும் சுமார் அரை நூற்றாண்டு காலம் தமிழ��� சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய அற்புதமான கலைஞர் திரு.பாரதிராஜா அவர்களின் மறைவு ஒட்டுமொத்த திரையுலகிற்கும் பேரிழப்பாகும்.
நடிகராக, இயக்குநராக, தயாரிப்பாளராக என பல்வேறு நிலைகளிலும் தமிழ் சினிமாவையே தன் உயிர்மூச்சாகக் கொண்டிருந்த இயக்குநர் இமயம் பாரதிராஜா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் சக திரையுலகினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன். @offBharathiraja
மாபெரும் திரைக்கலைஞன் பாரதிராஜா மறைவுக்கு இரங்கல்.
"இயக்குனர் இமயம்" என்று போற்றப்பட்ட பன்முகம் கொண்ட திரைக்கலைஞர் பாரதிராஜா முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தமிழ்த் திரையுலக வரலாற்றை பாரதிராஜா அவர்களை தவிர்த்து விட்டு எழுத முடியாது என்று கூறும் அளவுக்கு அவர் படைத்த புதுமைகளும், சாதனைகளும் ஏராளமானவை. தேனி அல்லிநகரத்திலிருந்து திரைத்துறை குறித்த ஏராளமான கனவுகளுடன் வந்த பாரதிராஜா அவை அனைத்தையும் நனவாக்கினார். நீரோட்டத்துடன் பயணித்தால் தான் வ��ற்றி எளிது என்ற இலக்கணத்தைத் தகர்த்த பாரதிராஜா, படப்பிடிப்பு தளங்களில் மட்டுமே அடங்கிக் கிடந்த திரைப்பட உருவாக்கத்திற்கு விடுதலை கொடுத்து, கிராமங்களுக்கு கொண்டு சென்றார்; நாயகனும், நாயகியும் அழகாக இருக்க வேண்டும் என்ற வழக்கத்தை உடைத்து மிகச் சாதாரணமானவர்களையும் நாயக, நாயகிகளாக்கி புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றவர் பாரதிராஜா.
தேசிய அளவிலும், மாநில அளவிலும் வழங்கப்பட்�� பெரும்பன்மையான விருதுகளை வாங்கிக் குவித்தவர் அவர். அவரது முதல் படைப்பின் பொன்விழா ஆண்டு கொண்டாடப்படவிருந்த நிலையில், அவர் நம்மை விட்டு பிரிந்திருப்பது திரையுலகுக்கு பெரும் இழப்பாகும். கடந்த 2&ஆம் தேதி மாலை பாரதிராஜா அவர்களை, இயக்குனர் தங்கர் பச்சானுடன் சென்று அவரது நீலாங்கரை இல்லத்தில் சந்தித்து உரையாடினேன். எனது நலம் விசாரித்த அவர், பொதுவான விஷயங்கள் குறித்து என்னுடன் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவரிடம் தென்பட்ட தன்னம்பிக்கை, ஆர்வம் ஆகியவற்றைப் பார்த்த நான் விரைவில் அவர் முழுமையாக நலம் பெறுவார்; இயல்பான பணிகளுக்கு திரும்புவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால், இன்று காலை கிடைத்த அவரது மறைவுச் செய்தியை என்னால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. திரையுலகில் தமக்கென தனி வம்சத்தை உருவாக்கி வைத்திருப்பவர் அவர். தமிழ்த் திரையுலகம் வாழும் வரை இந்த மாபெரும் திரைக்கலைஞர் போற்றப்படுவார்.
இயக்குனர் பாரதிராஜா அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், திரையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
#Bharathiraja #TamilCinema #Kollywood
கண்ணீர் வணக்கம்!
தமிழ் மண்ணின் மணத்தை,
திரைக் காட்சிகளில் உயிர்ப்பித்த,
கிராமிய மக்களின் வாழ்க்கையை
கண்களில் நீருடன் பேச வைத்த,
தமிழ் சினிமாவின்
மண்ணின் இயக்குநர் பாரதிராஜா அவர்கள் உடல்நலக் குறைவால்
இறந்து விட்டார் என்ற செய்தி,
எங்களை ஆழ்ந்த அதிர்ச்சிக்கும்
தாளாதத் துயரத்திற்கும் ஆளாக்கியுள்ளது.
கிராமம் என்பது
வெறும் பின்னணி அல்ல,
அது ஒரு உயிர்,
ஒரு உணர்வு,
ஒரு அரசியல்
என்பத��த் தமிழ் திரையுலகிற்கு
உணர்த்தியவர் பாரதிராஜா.
உழைக்கும் விவசாயியின் வியர்வை,
அடக்கப்பட்டக் காதலின் அழுகை,
சாதி எனும் கொடுமையின் கசப்பு,
பெண்ணின் மௌனக் குரல் ,
இவையனைத்தையும்
அழகிய காட்சிகளாய் மட்டுமல்ல,
அழுத்தமான சமூகச் சாட்சியாய்
திரையில் பதித்தவர்.
16 வயதினிலே முதல்,
கிழக்கு சீமையிலே வரை,
அவர் இயக்கிய ஒவ்வொரு படமும்,
தமிழ் சமூக வரலாற்றின்
ஒரு அத்தியாயம்.
கலைக்காக மட்ட���மல்ல,
மண்ணுக்காகவும்,
மக்களுக்காகவும்
கேமராவை ஏந்திய
அந்தக் கலைஞனின் இழப்பு,
தமிழ் பண்பாட்டிற்கே
ஈடு செய்ய முடியாத இழப்பாகும்.
அவரை இழந்து வாடும்
குடும்பத்தினருக்கும்,
திரையுலக நண்பர்களுக்கும்,
இலட்சக்கணக்கான இரசிகர்களுக்கும்,
எங்களின் ஆழ்ந்த ஆறுதலையும்
இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் சார்பிலும்,
தமிழ் உரிமைகளுக்காகப் போராடும்
���வ்வொரு உணர்வாளரின் சார்பிலும்,
இயக்குநர் பாரதிராஜா அவர்களுக்குக் கண்ணீர் வணக்கம்.
மண்ணின் குரல் மௌனமானாலும்,
அவர் படைத்த காட்சிகள் பேசிக்கொண்டே இருக்கும்.
தி.வேல்முருகன்,
நிறுவனர் - தலைவர்,
தமிழக வாழ்வுரிமைக் கட்சி.
#பாரதிராஜா
#bharathiraja
தமிழ்த் திரையுலகின் பாதையை மாற்றியமைத்து, புதுப்போக்கினை உருவாக்கிய ‘இயக்குநர் இமயம்’ திரு. பாரதிர��ஜா அவர்களின் மறைவு பெரும் வேதனையைத் தருகிறது. தமிழ்த்திரையுலகிற்குப் பேரிழப்பாகிவிட்ட அந்தப் பெருங்கலைஞனின் ��றைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரைமொழியில் தனிமொழி பேசித் தனிச் சகாப்தத்தையே உருவாக்கியவர் பாரதிராஜா. ஸ்டூடியோக்களுக்குள் அடைபட்டிருந்த கேமராக்கள் பாரதிராஜா அவர்களால் கிராமங்களுக்குள் நுழைந்தன. கிராமத்து மனிதர்களையும் அவர்களது வாழ்க்கையையும் திரைக்குக் கொண்டு வந்து, தமிழ்ச்சினிமாவை யதார்த்தத்திற்கு மிக அருகில் கொண்டு சென்றார்.
16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், சிகப்பு ரோஜாக்கள், அலைகள் ஓய்வதில்லை, டிக் டிக் டிக், முதல் மரியாதை, கடலோரக் கவிதைகள், வேதம் புதிது, கருத்தம்மா உள்ளிட்ட அவரது படைப்புகளைத் தமிழ்ச்சினிமாவின் வரலாற்றை எழுதும் எவர் ஒருவரும் தவிர்க்க முடியாது. தனது படைப்பாற்றலின் வழியாகப் பிற மொழிகளிலும் படங்களை இயக்கி, அங்கும் தன் முத்திரையைப் பதித்த அவரை இந்தியத் திரை வரலாறு என்றைக்கும் உச்சத்தில் வைத்து நி���ைவுகூரும்!
தலைவர் கலைஞர் மீது மிகுந்த பாசம் கொண்டிருந்தவர். தமிழ் மீதும் தமிழினத்தின் மீதும் பற்றுகொண்டு, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பான போராட்டங்களில் திரையுலகை ஈடு��டுத்தியதில் பாரதிராஜா அவர்களுக்கு மிகப்பெரிய பங்களிப்பு உண்டு.
‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா - ‘இசைஞானி’ இளையராஜா - ‘கவிப்பேரரசு’ வைரமுத்து ஆகியோரது கூட்டணியில் உருவான பாடல்கள் ஒவ்வொரு நிமிடமும் தமிழ்நாட்டின் ஏதோ ஒரு மூலையில் ஒலித்துக்கொண்டும், ஆயிரக்கணக்கான மக்களை மகிழ்வித்துக்கொண்டும்தான் இருக்கின்றன.
அவரது உடல்நலன் குறித்து விசாரிக்கவும், அவரது மகன் மனோஜ் பாரதிராஜ��வின் மறைவுக்கு நேரில் சென்று ஆறுதல் கூறவும் பாரதிராஜா அவர்களைச் சந்தித்து உரையாடிய தருணங்களைத் தற்போது நினைக்கையில் நெஞ்சம் மேலும் பாரமடைகிறது.
பாரதிராஜா அவர்களின் பிரிவால் வாடும் அவரது குடும்பத்தினருக்கும், திரையுலகைச் சேர்ந்த கலைஞர்களுக்கும், பாரதிராஜாவின் மாணவர்களுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அல்லிநகரத்தில் பிறந்து, அழ���யாத படைப்புகளைக் கொடுத்த ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா அவர்கள், சினிமா ரசிகர்களின் மனங்களில் - தமிழ் மக்களின் மனங்களில் என்றும் வாழ்வார்!
திரு. பாரதிராஜா அவர்களுக்கு நேரில் அஞ்சலி செலுத்தியபோது, அவரை அரசு மரியாதையுடன் வழியனுப்பி வைக்க வேண்டும் என்று அவர் உடனிருந்தோர் கோரினர். இயக்குனர் இமயம் பாரதிராஜா அவர்களின் சாதனைகளைப் போற்றும் வ��ையிலும், அவரைச் சார்ந்தோரின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையிலும் ஆவன செய்ய வேண்டுமெனத் தமிழ்நாடு அரசினைக் கேட்டுக்கொள்கிறேன்.
இயக்குனர் இமயம்
பத்மஶ்ரீ திரு. பாரதிராஜா அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.
தென் தமிழகத்தின் கிராமத்தில்
இருந்து புறப்பட்டு,
தமிழ் சினிமாவின் கேமராவை கிராமங்களை நோக��கி திருப்பியவர்;
திரைத் துறையை மண் வாசனையால் நிரப்பியவர்;
தமிழ் சினிமாவை தமிழ் மண்ணுக்குரிய விழுமியங்களோடு உலகம் திரும்பிப் பார்க்கச் செய்தவர் திரு. பாரதிராஜா அவர்கள்.
அவர்தம் மறைவு என்பது ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
“என் இனிய தமிழ் மக்களே” என்ற அவரது குரல் சினிமா உள்ளவரை நிலைத்து நிற்கும்.
அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தாருக்கும், திரைத் துறையினருக்கும், ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திரு. பாரதிராஜா அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@AIADMKOfficial
#RIPBharathiraja மலை அழுகிறது, மரம் அழுகிறது, தமிழ்நாட்டு கிராமங்களின் புழுதிக் காற்று புரண்டு, புரண்டழுகுது. திசை அத்தனையும் இந்திய கலைஞர்களின் உன் மீதான பற்றுதலை பேசுகிறது. ஒரு காட்டாற்று வெள்ளம் திரையில் இத்தனை தேசத்தாரையா இதமாக பற்றியிருக்கிறது?! எப்போதும் நீ ஒரு அதிசயமே... கலைஞர்களின் மூச்சுக்காற்றில் நீ இருக்கப்பா, உங்களுக்கேது மரணம்?!
தமிழ் சினிமாவின் ஏராகவும் வேராகவும் நிற்கும் பெருந்தச்சன். உனது ஏர் கிழித்து மணந்தது தமிழ்நிலம். உனது வேரில் கிளைத்த மரங்களில் விரிந்தது தமிழ்திரை. சாகாவரம் பெற்ற கலைஞன் உ��க்கு இறுதி மரியாதையெல்லாம் இல்லை… எப்போதும் முதல் மரியாதை! #Bharathiraja