நல்லா கேளுங்க;
யெனக்கென்று
யெதுவும் வேண்டாம்;
யெனக்குள் தொலைந்து போன
யென் பழைய நான்; மீண்டும்,
யெனக்கே கிடைத்தால் போதும்;
யிவன் வலிகளோடு வாழ தெரியாத
மீப்பெரும் கோழை; ஆம் கோழை;
ந்த நடுநிசி யிரவில்
விடாது அடர் மழையில்
சிவந்த குடை பற்றி
பாதத்தில் பாதரட்சை யின்றி
பள்ளி முடிந்து வீடு திரும்பும்
குழந்தை போல்
நடை பழகிட பேராசை யேனோ
ந்த நடுநிசியில்; 😕
கேளுங்கள்;
உறங்கவே ல்லை
அந்த பருவம் வந்த குழந்தை;
காரணம் கணவனுக்கு
தேக பசி போக்க
காத்துக்கொண்டிருந்தாள்;
தனது வயிற்றில் துளிர்த்த
பச்சிளம் குழந்தை உறங்கும் வரை;
யிரவு மணி 12;37 கேளுங்கள்;
காதல் செய்திடுங்கள்
நீங்கள் செய்த தவறிற்க்கு;
நரகத்தில் யேதும் தண்டனை ல்லை;
மாறாக காதல் யெனும் மாறுவேடத்தில்
தங்களுடனே பயணிக்கிறான்
யெமகாதகன்;
யாரிடமோ யெவரிடமோ
தயவுசெய்து தங்கள் காதலை பற்றி
சொல்லி விடுங்கள்;
சேர்த்து வைக்க முடியாட்டியும் கூட
தெரிந்தாவது வைத்திருக்கட்டுமே;
நாம் அடிமைபட்டு கிடந்த
அந்த அழகிய காதலை; 😔