கூட்டத்தில் மாலையை அவருக்கு போட்டே ஆக வேண்டும் என போராடிய தொண்டர்.. "நீ தூக்கி போடு நா பிடிச்சிக்கிறேன்" என சொல்லி தொண்டரின் ஆசையை நிறைவேற்றி Thumbs Up👍 காட்டிய முதலமைச்சர் விஜய்
#Chengalpattu | #Maduranthakam | #TVK | #CMVijay | #ByElection | #PolimerNews
அன்னபூரணி சூப்பர் சிக்ஸ் திட்டத்தில் ஆண்டிற்கு மூன்று விலையில்லா எரிவாயு சிலிண்டர்கள்
மாண்புமிகு தமிழ���நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சட்டமன்றப் பேரவையில் விதி 110-இன் கீழ் அறிவிப்பு
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் சுதந்திரத் திருநாளை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.
#CMJosephVijay#IndependenceDay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (7.8.2026) சென்னை, கலைவாணர் அரங்கில், 12-வது தேசிய கைத்தறி நாள் விழாவில், HANDTEX 2026 கைத்தறிக் கண்காட்சி, கோ-ஆப்டெக்ஸ் நிறுவனத்தின் "வெற்றித் தறி" விற்பனையகம் மற்றும் மின்-வணிகத்தளத்தைத் தொடங்கி வைத்தார். மேலும், 2025–2026ஆம் ஆண்டிற்கான சிறந்த நெசவாளர் மற்றும் வடிவமைப்பாளர் விருதுகளுக்குத் தெரிவுசெய்யப்பட்ட 11 விருதாளர்களுக்கு 22.25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கிச் சிறப்பித்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்ந��டு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
#CMJosephVijay
போதை இல்லாத தமிழகத்தை உருவாக்கும் இலக்கை நோக்கி நாளை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் 'ஸ்டார்ட் Run, ஸ்டாப் Drugs' விழ���ப்புணர்வு ஓட்டம் நடைபெறுகிறது. மாணவர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என அனைவரும் கலந்துகொள்ளும் இந்த ஓட்டம் குறித்த விழிப்புணர்வு பாடல் இன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @CMOTamilnadu அவர்களால் வெளியிடப்பட்டது. போதை இல்லாத மாநிலத்தை உருவாக்க விழையும் முதல்வர் அவர்களின் தொலைநோக்கு பார்வையை நிறைவேற்றும் பொருட்டு சீரிய முன்னெடுப்புகளை இந்த அரசு தொடர்ந்து மேற்கொள்ளும்.
உன் தலை நிமிர...
உன் நிலை உயர...
முடிவெடுத்திடு
Say NO to Drugs.
#ஸ்டார்ட்Runஸ்டாப்Drugs
#AntiDrugRun2026
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (24.6.2026) சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில், எரிசக்தித் துறை சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தெரிவு செய்யப்பட்ட 383 உதவிப் பொறியாளர்கள் (மின்னியல்) மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்கள் என மொத்தம் 401 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகளை வழங்கி, அவர்களுடன்
குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
#CMJosephVijay