தமிழ்நாடு சட்டப்பேரவையில் #SofaModel அரசு அளித்த அறிக்கையை Comma, Full Stop கூட மாறாமல் ஆளுநர் அப்படியே வாசித்திருப்பது பாஜக - த.வெ.க-��ின் மறைமுக கூட்டணியை அம்பலப்படுத்தி இருக்கிறது.
ஆளுங்கட்சியினர் Reels போடுவதற்கான Content Material-ஆக அமைந்துள்ள ஆளுநர் உரையில் வளர்ச்சிக்கான திட்டங்கள் ஏதும் இல்லை.
தொடர் மின்வெட்டு - பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட சட்டம் ஒழுங்கு சீர்கெடு - விவசாயிகள் பிரச்சினை போன்றவற்றிற்கு எந்த தீர்வும் ஆளுநர் உரையில் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
கழகத்தலைவர் @mkstalin அவர்கள் ஆட்சி காலத்தில் செய்யப்பட��ட சாதனைகளுக்கு Sticker ஒட்டியும், த.வெ.க அரசின் சறுக்கல்களுக்கு கழகத்தின் மீது பழிபோடும் வகையிலும் அமைந்துள்ள ஆளுநர் உரையை கண்டிக்கிறோம். #TNAssembly
ஓட்டு போட்ட மக்களுக்கு அவங்க எம்.எல்.ஏ யார்னு தெரியல. தவெக எம்.எல்.ஏ-க்களுக்கு எந்த தொகுதியில் ஜெயிச்சோம்னு தெரியல.. இந்த லட்சணத்தில் தான் sofa model ஆட்சி நடக்கிறது.
#TVKFails
நவீன தமிழ்நாட்டின் சிற்பி, சமூக நீதியின் காவலர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் இன்று!
ஐந்து முறை முதலமைச்சராகப் பொறுப்பேற்று, ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்காகவும், மாநில சுயாட்சிக்காகவும், தமிழ்மொழியின் உயர்வுக்காகவும் தன் வாழ்நாளையே அர்ப்பணித்தவர். தமிழ்நா���்டின் மூலைமுடுக்கெல்லாம் இன்று நாம் காணும் உள்கட்டமைப்பு மற்றும் சமூக நலத்திட்டங்கள் அனைத்தும் அந்தத் தொலைநோக்கு பார்வையின் விளைவே!
#KalaignarForever #Kalaignar103
ஏழை - எளியோரின் துயர் துடைக்க நீங்கள் சிந்திய இரத்தமும், செதுக்கிய சட்டங்களும் இன்ற���ம் தமிழகத்தை வழிநடத்தும் கலங்கரை விளக்கம்.
எங்களை ஒரு தாயின் உள்ளத்தோடு அரவணைத்து, தந்தையின் பாசத்தோடு வழிகாட்டிய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளில், நன்றியோடு அவரது புகழைப் போற்றுகிறேன்!
தமிழினத் தலைவா.. நீங்கள் வகுத்து தந்த வழியில்… அண்ணன் தளபதி (@mkstalin ) அவர்களின் பாதையில் என்றும் எங்கள் பயணம் தொடரும்…
#KalaignarForever
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்த நாளை முன்னிட்டு குன்றத்தூர் வடக்கு ஒன்றியம், பெரியபணிச்சேரி ஊராட்சியில் உள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி ��ரியாதை செய்து பொதுமக்களுக்கு காலை உணவை வழங்கினோம்..
#KalaignarForever
“என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே” என்ற ஒற்றைக்குரலில் கோடானு கோடி கழகத் தொண்டர்களை கட்டிப்போட்ட முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் 103 ஆவது பிறந்தநாள் இன்று!
சென்னை மெரினா கடற்கரை அருகேயுள்ள கலைஞர் அவர்களின் நினைவிடத்தில் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் மலர்தூவி மரியாதைச் செலுத்தினோம்.
கலைஞர் அவர்கள் காட்டிய வழியில் அயராது உழைப்போம். மீண்டு எழுவோம் - மீண்டும் வெற்றிக் கொடி ஏற்றுவோம்!
ஓங்குக கலைஞர் புகழ்!
காஞ்சி வடக்கு மாவட்ட திமுகழகத்தின் சார்பில், நம் உயிரினும் மேலான அன்பு தலைவர், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் பிறந்த நாள் விழா!!!
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின் புகழ் ஓங்குக!!!!
#KalaignarForever#கலைஞர்103
தந்தை பெரியாரின் வழியில் மானமிகு சுயமரியாதை போராளியாய், பேரறிஞர் அண்ணா வழியில் மொழியுரிமை, மாநில உரிமைகள் காத்த தமிழினத் தலைவராய் வாழ்ந்த முத்தமிழறிஞர் கலைஞர் புகழ் போற்றுவோம்!
முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளில் கழகத்தலைவர் @mkstalin அவர்கள் வழியில் மக்கள் பணி, கழகப் பணி தொடர உறுதியேற்போம்.
#Kalaignar103 #KalaignarForever
தலைவரின் பிறந்தநாள்!
தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!!
மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, ���னது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்!
என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே…
வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்கள��ச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது.
நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது.
உறுதியாய்ச் சொல்கிறோம்…
மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்!
#KalaignarForever
ஆட்சிக்கு வந்ததுல இருந்து ஒரே ஒரு பத்திரிகையாளர் சந்திப்பு நடத்த கூட துப்பு இல்லையா என மக்கள் கேட்க ஆரம்பிச்சுட்டாங்க CM Sir...
சூடு, சொரணை இருந்தால் வாயை திறந்து பேசுங்க விஜய்!
#TVKFails
பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றி இருக்கிறது த.வெ.க அரசு.
தேர்தல் பிரச்சாரத்தின் போது,
5 ஏக்கர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு முழுமையான பயிர்க்கடன் தள்ளுபடி என்று வாக்குறுதி தந்தார்கள்.
ஆனால், இப்போது ரூ.50,000 வரையிலான கடனுக்கு மட்டுமே முழு தள்ளுபடி என்று சொல்லி இருக்கிறார்கள்.
இது விவசாயிகளுக்கு இழைக்கப்படும் அநீதி. மாபெரும் நம்பிக்கை மோசடி.
ஏற்கனவே, 200 யூனிட் வரை கட்டணமில்லா மின்சாரம் என்று சொல்லிவிட்டு, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் அது கிடையாது என்று அதிர்ச்சி தந்தார்கள்.
இப்போது, பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில், SCAM செய்கிறார்கள்.
இப்படி, இன்னும் நிறைய ஏமாற்றங்களுக்கு மக்கள் மனசளவுல தயாரா இருக்கணுமா CM saar?