தமிழக வரலாற்றில்... அதிகம் பேசப்படாத ஒரு அரசாணை இருக்கிறது.
அதுதான் "ர்" தீர்மானம்.
கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக இந்தக் கோரிக்கையைத் தொடர்ந்து வலியுறுத்திய கலைஞர் அவர்கள், 1975-ஆம் ஆண்டு அதனை அரசாணையாக நிறைவேற்றினார்.
அது...கோடிக்கணக்கான மக்களின் மரியாதையை உயர்த்திய வரலாற்றுத் தீர்மானம்.
அதற்கு முன்பு...
பல சமூகங்களைச் சேர்ந்த மக்களின் பெயர்களுக்குப் பின்னால் "ன்", "ள்" போன்ற விகுதிகளே பயன்படுத்தப்பட்டன.
ஆனால்...
மரியாதை பிறப்பால் அல்ல; மனிதருக்கே உரியது என்ற திராவிடச் சிந்தனையுடன்,
அனைவரின் பெயருக்கும் "ர்" என்ற மரியாதை விகுதியை வழங்கியது அந்த அரசாணை.
சில அரசாணைகள் கோப்புகளில் முடிவதில்லை...
தலைமுறைகளின் மரியாதையில் வாழ்கின்றன...
நிதி அமைச்சரே நன்றி 🙏🏻இது நிதிநிலை அறிக்கை இல்லை❌பெயர் மாற்ற அறிக்கை ✅ நன்பா&நன்பீஸ் உங்க அண்ணன் யாருகிட்ட கேட்டு கடன் வாங்குகிறார்🤷♂️⁉️
#TVKFails#உருட்டுகள்#மாற்றம்#ஏமாற்றம்
இங்க திமுகக்கு ஆதரவா பேசுற ஐடிலாம் தினம் 200 வாங்கிட்டு டுவீட் பண்ணிட்டு இருக்குனு நினைச்சிட்டு இருக்கானுங்க போல... டேய் அவன் அவன் மாசம் லட்சதுல சம்பளம் வாங்கிட்டு இருக்கான்டா... திமுகல எந்த பொறுப்புலயும் இல்லாம... அவன் திமுகக்கு களமாடுறதுக்கு ஒரே காரணம்.. நன்றிக்கடன்...
கலைஞர்னால தான் நாங்க படிச்சோம், அவரால தான் நாங்க இன்னிக்கு இந்த நிலமைல இருக்கோம்... எண்ணிக்குமே எங்க விசுவாசம் திமுகக்கு மட்டும் தான்...
#KalaignarForever
தந்தை பெரியார் - பேரறிஞர் அண்ணாவின் தொலைநோக்குச் சிந்தனைகளை சட்டங்களாக்கி, சரித்திர சாதனைகளால் தமிழ்நாட்டை தலைநிமிர்த்திய தன்னிகரில்லா தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாளை ஒட்டி
சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் கழக சட்ட மன்ற உறுப்பினர்களுடன் சென்று மரியாதை செலுத்தினோம். அப்போது, பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்திலும் மரியாதை செலுத்தினோம்.
என்றென்றும் கலைஞர் நம்மிடையே வாழ்வார்!
#Kalaignar
‘என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே..’ என்ற காந்தக் குரலால், நம்மை நிறைத்த முத்தமிழறிஞர் கலைஞர் வழிநின்று, அவதூறுகளையும் அடக்குமுறைகளையும் துணிந்து எதிர்ப்போம், எளிய மக்களின் உயர்வுக்கு உடன் நிற்போம், ஆதிக்கத்தை உறுதியுடன் எதிர்த்து, கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில், தமிழ்நாட்டின் உரிமைகளை வென்றெடுப்போம்!
#KalaignarForever
பள்ளியில் இடம் பிடிப்பதில் தொடங்கி மறைவுக்கு பின்பு பேரறிஞர் அண்ணா அருகில் இடம் பெற்றது வரை அனைத்தையுமே போராடிப்பெற்ற போர்க்குணம் நிறைந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவு நாள் இன்று.
நவீன தமிழ்நாட்டை - தனித்துவமிக்க மாநிலமாக உருவாக்கித் தந்த கலைஞரின் நினைவு நாளில்,
கழகத் தலைவர் @mkstalin அவர்கள் தலைமையில் நடைபெற்ற நினைவு நாள் அமைதிப் பேரணியில் கழக முன்னணி நிர்வாகிகளுடன் கலந்து கொண்டோம்.
நம் உணர்வோடும் உயிரோடும் கலந்திருக்கும் கலைஞர் அவங்களின் புகழ் ஓங்கட்டும்!
#KalaignarForever
இன்று (06.08.2026) தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட #TNAgriBudget2026 குறித்து, கழக இளைஞர் அணிச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான @Udhaystalin அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியின் விவரம் வருமாறு:
பத்திரிகை நண்பர்களுக்கு வணக்கம்.
இன்றைக்கு த.வெ.க. அரசு வேளாண் நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார்கள். இதை பட்ஜெட் என்று சொல்வதை விட, முதலமைச்சருக்கு முழுக்க முழுக்க ஜால்ரா அடித்து, ஒரு மிகப்பெரிய புகழுரையை அமைச்சர் அவர்கள் சபை மரபுகளை மீறி, இந்தச் செயலைச் செய்துள்ளார்.
எந்தப் புது திட்டமும் இல்லை
வேளாண் பட்ஜெட்டில் ஏதாவது புதிதாக இருக்கிறதா என்றால், அதில் எதுவும் கிடையாது. இந்த ஆட்சியில் காவிரியில்தான் தண்ணீர் வரவில்லை என்று பார்த்தால், வேளாண் பட்ஜெட்டில் எந்தப் புது திட்டத்தையும் இந்த ஆட்சியாளர்கள் அறிவிக்கவில்லை.
எத்தனையே பிரச்சினைகள் இருக்கின்றன. விவசாயிகளுக்கு, கடந்த மூன்று மாதங்களாக, `மேகதாது அணை பிரச்சினை’, பயிர்க்கடன் தள்ளுபடியில் விவசாயிகள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். குறுவை சாகுபடி செய்ய முடியாத நிலை. இந்த ஆட்சி அமைந்த கடந்த மூன்று மாதங்களாக அதிக அளவில் பாதிக்கப்பட்டது விவசாயிகள்தான். எனவே, அவர்களுக்கு ஆதரவாக, அவர்களுடைய உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் விதமாக, இந்த அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாகத்தான் இன்றைக்கு எங்கள் தலைவரின் உத்தரவின் பேரில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கருப்புச் சட்டை அணிந்து, எங்கள் எதிர்ப்பை இந்த அரசுக்கு தெரிவித்திருக்கிறோம்.
இந்த பட்ஜெட்டைப் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், நேற்றைய தினம் போலத்தான் இன்றைக்கும், திராவிட முன்னேற்றக் கழக அரசின், திட்டங்களையெல்லாம் பெயரை மாற்றி, அதற்கு முன்பு ஒரு வார்த்தையை மட்டும் சேர்த்து, அவர்கள் கட்சியின் பெயருடைய வார்த்தையை மட்டும் சேர்த்து, புதுத் திட்டம் போல சில திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். எனவே, இந்த பட்ஜெட்டில் உருப்படியாக எதுவுமே கிடையாது.
வாக்குறுதி - மக்கள் ஏமாற்றம்!
குறிப்பாக, தேர்தல் வாக்குறுதியின் போது முதலமைச்சர் சொன்ன முக்கியமான ஒரு வாக்குறுதி, 5 ஏக்கர் வரைக்கும் நிலம் வைத்திருக்கக்கூடிய எல்லோருக்கும் முழு பயிர்க்கடன் தள்ளுபடி என்று எல்லா இடத்திலும், இந்த வாக்குறுதியைச் சொல்லித்தான் மக்களை ஏமாற்றினார். ஆனால், ஆட்சிக்கு வந்ததும் அதற்கு எதுவுமே செய்யவில்லை. முதலில் என்ன சொன்னார்? 50,000 ரூபாய் வரைக்கும் கடன் தள்ளுபடி என்றார். பிறகு எங்களுடைய கோரிக்கை, விவசாயிகளுடைய கோரிக்கைகளையெல்லாம் ஏற்று, அதை 75,000-ஆக மாற்றினார். ஆனால், இன்றைக்கு விவசாயிகள் நீங்கள் தேர்தல் வாக்குறுதியில் சொன்ன மாதிரி முழுக்கடன் தள்ளுபடி வேண்டும் என்று கேட்டுக்கொண்டு இருக்கிறார்கள். அதற்கு எந்தவிதமான பதிலையும் வழக்கம் போல இந்த முதலமைச்சர் வாயைத் திறந்து சொல்லவில்லை.
மேகதாது அணை விவகாரம் இன்றைக்கு ஒவ்வொரு நாளும் எவ்வளவு சீரியஸாகப் போய்க்கொண்டு இருக்கிறது என்று உங்களுக்குத் தெரியும். காவிரியில் நமக்கு கிடைக்கவேண்டிய நீரை, கர்நாடகா அரசு திறக்கவில்லை. `திறக்க முடியாது, கொடுக்க முடியாது’ என்று வெளிப்படையாகவே சொல்லிவிட்டார்கள்.
கர்நாடகாவுக்கு வராதீர்கள்
முதலமைச்சர் ``நான் போய் பேச்சுவார்த்தை நடத்தப் போகிறேன்’’ என்றார். ஆனால், ``தயவுசெய்து கர்நாடகாவுக்கு வராதீர்கள், நாங்கள் தண்ணீரெல்லாம் கொடுக்க முடியாது’’ என்று அங்கு இருக்கக்கூடிய முதலமைச்சரும் சொல்லிவிட்டார்.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று நாங்கள் தொடர்ந்து கேட்டுக்கொண்டே இருக்கிறோம்.. காவிரி விஷயத்தில், மேகதாது அணை விஷயத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய அனைத்துக் கட்சிகளும் ஒரே கருத்தில் இருக்கிறார்கள், ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுவோம் என்று தொடர்ந்து முதலமைச்சருக்கும், இந்த அரசுக்கும் நமது தி.மு.க சார்பாக கோரிக்கை வைத்துக்கொண்டே இருக்கிறோம். அதற்கும் வழக்கம் போல இந்த முதலமைச்சர் வாய் திறந்து பதில் சொல்ல மாட்டேன் என்கிறார்.
தி.மு.க. என்றும் துணை நிற்கும்
விவசாயிகளுக்கான பல்வேறு பிரச்சனைகளைப் பற்றிப் பேச வேண்டும் என்று நாளைக்கு, கேள்வி நேரம் முடிந்தவுடனே ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வர வேண்டும், காவிரிப் பிரச்சினை பற்றிப் பேச வேண்டும், விவசாயிகளின் பாதிப்பு குறித்து அவையில் விவாதிக்க வேண்டும் என்று சபாநாயகரிடம் எங்களுடைய கடிதத்தைக் கொடுத்திருக்கிறோம். அதற்கு வாய்ப்பு கொடுப்பார் என்று நாங்கள் நம்புகிறோம்.
அப்போது, இது தொடர்பாக இன்னும் விரிவாகப் பல்வேறு கேள்விகளை நிச்சயமாக நாங்கள் எழுப்புவோம். அதற்கு முதலமைச்சர் வாய் திறந்து பதில் சொல்வார் என்று தமிழ்நாட்டு மக்கள் போல, விவசாயப் பெருங்குடி மக்கள் போல நாங்களும் ஆவலோடு காத்திருக்கிறோம். திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்குமே விவசாயிகளுக்குத் துணையாக நிற்கும்.
கேள்வி: நீங்கள் என்ன நாடகம் நடத்தினீர்களோ, அதே நாடகத்தைத்தான் த.வெ.க-வும் போடுகிறது என்று அ.தி.மு.க பொதுச்செயலாளர் குற்றம் சாட்டியிருக்கிறாரே?
பதில்: நாடகமா? என்ன நாடகம்?
கேள்வி: நீங்களும் வேளாண் பட்ஜெட் என்று ஒரு நாடகத்தைப் போட்டீர்கள், அவர்களும் அதே நாடகத்தைப் போடுகிறார்கள் என்பது அவருடைய குற்றச்சாட்டாக இருக்கிறது.
பதில்: நாங்களா தேர்தல் வாக்குறுதி கொடுத்தோம்? பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப் போகிறோம் என்று நாங்கள் வாக்குறுதி கொடுத்தோமா? சொல்லுங்கள்.
நாளைக்கு, இவை அனைத்தையும் சட்டமன்றத்தில் பேச இருக்கிறோம். தைரியம் இருந்தால், முதலமைச்சர் எழுந்து இதற்கெல்லாம் பதில் சொல்லட்டும். நாங்கள் அவையில் பதில் சொல்கிறோம்.
நன்றி, வணக்கம்.
#TNAssembly
பாசிச ஒன்றிய பாஜக RSS ஆட்டம் தமிழ்நாட்டை நாசம் செய்யும் வேலை Reels ஆட்சியில் சோஃபா மாடல் ஆட்சியின் முலம் நடந்து கொண்டிருக்கிறது RSS IN கைக்கூலி @TVKVijayHQ TVKVijayFails