விஜய்யால் வாக்கு சரியும் குறையும் மறையும் மண்ணு மட்டை என ஊடகத்தில் உட்கார்ந்துகொண்டு பேசிய அனைத்து அரசியல் வாய் வித்தை வியாபாரிகளுக்கும் பணிவுடன் கூறுகிறோம்—
எழுதி வைத்துக்கொள்ளுங்கள் மே நாலு.. நாம் தமிழர் நாளு…
விஜய்
=======
திரையரங்க இருளில்
நடிக்கும் தீரனுக்கு
பகல் என்றால்
ஒவ்வாமையாம்
படுத்துறங்கும்
பனையூருக்கு
கள நிலவரத்தோடு
கட்சி நிர்வாகிகள் போனாலும்
எழுப்ப முடியாதென
அனுப்பி விடுகிறார்களாம்
வெற்றி பெற்றாலும்
சட்டமன்றத்தை இரவில் தான்
கூட்ட முடியுமென
கறாராக சொல்லி விட்டாராம் புஸ்ஸி
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த
பொறுப்பாளர்கள்...
பொம்மையுடன் கிளம்பிவிட்டார்களாம்
பரப்புரைக்கு!
ஓல்டு காஸ்க் அடித்தால்
உடனே.. பகலுக்குப் பழகிவிடலாம் என
ஆதவ் சொல்ல...
உணவுக்கு முன்
உணவுக்குப் பின்
ஓய்வுநேரம் என
ஒரு நாளைக்கு ஒன்பது முறை
அடித்துப் பார்த்துவிட்டாராம்
முன்னேற்றமில்லை
நாடி பிடித்துப் பார்த்த மருத்துவரும்
நல்லதைத் தவிர... இவருக்கு
எல்லாமும் ஒத்துக்கொள்கிறது என
கைவிரித்து விட்டாராம்
மிதமிஞ்சிய பணமிருந்தால்
ஒழுக்க விதிகள் எதற்கும்
உடன்பட வேண்டியதில்லை என
இளையோர் கூட்டத்தின் பெரும்பகுதி
இவருக்காக வாதிட...
உச்சபச்ச ஒழுங்கீனத்தை
ஒரு கூட்டம்
தலையில் வைத்து கொண்டாடுவதைப் பார்த்தால்
நமக்குதான்
தலை சுற்றுகிறது
அதற்காக கோபத்தில்
நாற்பது நாற்பதாகக் கொன்று
இந்த
நாட்டைக் காப்பாற்றுங்கள் என
விஜயிடமே
விட்டுவிட முடியாது
நாம் தான் இறங்கி
நல்வழிப்படுத்த வேண்டும்
சிந்திப்பீர்
தற்குறிகளை வைத்துக் கொண்டு
தமிழ்நாடு தான்
என்ன செய்ய முடியும்
எதிர்காலத்தில்!
===============
முழுநிலவன்
ஆமாம்! உண்மைதான்
======================
ஊழலும் லஞ்சமும்
உச்சம் தொட்டுவிட்டது
ஆமாம்! உண்மைதான்
சகித்துக் கொள்ள முடியாதபடி
சாராயமும் கஞ்சாவும் பெருகிவிட்டது
ஆமாம்! உண்மைதான்
கல்வியும் மருத்துவமும்
காசிருந்தால் தான்
விரும்பியபடி கிடைக்கும்
ஆமாம்! உண்மைதான்
பச்சிளம் குழந்தைக்கும்
பாலியல் வன்முறை
பாடையில் ஏறப்போகும் பாட்டிக்கும்
பாலியல் வன்முறை
ஆமாம்! உண்மைதான்
...என எல்லாவற்றுக்கும்
ஆமாம் போட்டுவிட்டு...
பரம்பரையாக
நாங்கள் திமுக
பரம்பரையாக
நாங்கள் அதிமுக
எனச் சொல்லும்
பண்ணை அடிமைகளை
என்ன செய்வது?
உதய சூரியனோ
இரட்டை இலையோ
அடிமையாய் தொடர்வது
அவரவர் விருப்பம்
அதில்
விடுதலையை விரும்புவோர்
விவசாயிக்கு வாக்களிப்பீர்
=====================
முழுநிலவன்
விசிக விருதுகள் 2026
====================
வாசலிலேயே நிறுத்திய
கடவூர் செல்வராஜ்
வண்டியிலிருந்து இறக்கிவிட்ட
துரைமுருகன் என
கடைசிச் சுற்று வரை
கடுமையான போட்டி நிலவினாலும்...
அதிக புள்ளிளைப் பெற்று
அம்பேத்கர் சுடர் விருதுக்கு
அப்பாவு தேர்வானார்
நாம்
தமிழ்ப் பேரினம் எனும்
பெரும்பான்மையின் பிரதிநிதிகள் என்றாலும்
சிறுபான்மை என வெட்டிக்கொண்டால்தான்
சிறப்பு வெளிச்சம் கிடைக்கும் என
அடித்துப் பேசக்கூடிய
ஆளூர் ஷா நவாசை
காயிதேமில்லத் பிறை விருதுக்கு
கையொலி எழுப்பி
தேர்வு செய்தார்கள்
கொளத்தூர் மணியும்
கோவை ராமகிருஷ்ணனும்
குரல் கொடுக்கவில்லை
என்றாலும்
நாம் விட்டுவிட முடியாது
பெரியார் திடலுக்குப் போய்
தமிழ்த் தேசியம் பேசியதால்
பேரிழப்பை சந்தித்த
பண்ருட்டி வேல்முருகனை
போட்டியின்றி தேர்வு செய்து
பெரியார் ஒளி விருதை
பெருமையுடன் வழங்குவோம் என்றார் திருமாவளவன்
ஒட்டுமொத்த சிறுத்தைகளும்
உற்சாகமாய் கைத்தட்டினார்கள்
அதற்குள்
மூக்கு வேர்த்துவிட்டதோ என்னவோ...
மு.க.ஸ்டாலினிடமிருந்து
அழைப்பு வந்தது
முதல் இரண்டு விருதுகளுக்கும்
மனப்பூர்வமான சம்மதம்
மூன்றாவது விருதாளரை
மாற்றாவிட்டால்
கூட்டணிக்குள் வந்துவிடும்
குந்தகம் என்றார்
எ.வ.வேலு,சேகர்பாபு
இருவரில் ஒருவரை
நீங்கள் தேர்ந்தெடுக்கலாம் என்றார்
பெரியார் விருது
பெயருக்காக இல்லாமல்
செயலுக்காக இருக்க வேண்டும்
தெலுங்கில் மாட்லாடி
தேமுதிக வை
கூட்டணிக்குள் கொண்டு வந்தது
அவர்கள்தான்
அதனால்
திராவிடத்தின் கொள்கையை
திறம்பட கையாண்டதும்
அவர்கள்தான் என்றார்
எதிர்முனையிலிருந்த திருமா
எதுவும் பேசாமலிருக்க
ஸ்டாலின் சொன்னார்
உட்கட்சி நெருக்கடி
உங்களுக்கு மட்டும் தான் இருக்கிறதா?
எனக்கும்தான் இருக்கிறது
தகைசால் தமிழர் விருதை நான்
அறிவித்த போது
தகைசால் தெலுங்கர் விருதை
ஏன் அறிவிக்கவில்லை என
KKSSR.ராமச்சந்திரனும்
K.N.நேருவும்
என்னை பிச்சி பிராண்டினார்கள்
சமாளிக்கதான் செய்தேன்
தோழமை சுட்டல் போல
சமாளிப்பதில் நீங்களும்
சாதுர்யமானவர்தான்
பார்த்துக்கொள்ளுங்கள்
மற்றதை நான் ரவிக்குமாரிடம்
பேசிக்கொள்கிறேன் என
தொடர்பை
துண்டித்துவிட்டார்
உத்தேச விருதுப்பட்டியல்தான் இவை
இறுதிப் பட்டியலை
அறுதியிட்டுக் கூற முடியாது
காட்டுமன்னார் கோயில்
வேட்பாளர் போல
கடைசி நேரத்தில் மாறலாம்
எது
எப்படியானலும்
அறிவாலயத்தின் ஒப்புதல் பெற்று
அம்பேத்கர் திடலில் நாளை வெளியிட்டே தீருவோம்
நன்றி! நன்றி!!
==============
முழுநிலவன்
வரலாற்றுத் திருப்பம்! வட அமெரிக்காவில் தமிழ்த்தேசிய மாநாடு!
==============================
ஐயா பெ. மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
==============================
கடந்த திருவள்ளுவர் ஆண்டு 22.03.2057, (05.04.2026) அன்று வட அமெரிக்கத் தலைநகர் வாசிங்டன் - மெட்ரோ பகுதியில் வட அமெரிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் (NORTH AMERICAN THAMIZH NATIONAL ASSOCIATION) முதல் மாநாடு சிறப்பாக நடைபெற்றுள்ளது.
இம் மாநாட்டின் தனிச் சிறப்புகள் பல இருக்கின்றன. இதன் முதல் தனிச்சிறப்பு 'தமிழ்' என்பதை ஆங்கிலேயக் கிழக்கிந்திய வணிகக் கம்பெனி போல் 'TAMIL' - டமில் என்று எழுதாமல் 'THAMIZH' - 'தமிழ்' என்று எழுதியதாகும்.
தமிழ்நாட்டு மாநில ஆட்சியை 1967 இல் கைப்பற்றிய தி.மு.க. "தமிழ்நாடு" என்று பெயர் மாற்றம் செய்தபோது, அவர்களின் ஆங்கிலேய எசமானர்கள் வைத்தபடி "TAMILNAD" என்று ஆங்கிலத்தில் மாற்றிச் சொன்னார்கள். அப்போது ம.பொ.சி. அவர்கள் 'THAMIZH NADU' என்று மாற்றச் சொல்லியும், வட மாநிலத்தவர் - வெளி நாட்டினர் உச்சரித்திட - எளிதாக இருப்பது 'TAMILNADU' தான் என்று கூறிவிட்டார் அண்ணா! NAD என்பதை NADU என்று மட்டும் மாற்றினார்.
இனம், மொழி, தாயகம், மெய்யியல் (தத்துவம்), அரசியல் எதிலும் தற்சார்பில்லாதவர்கள், அயலாரைப் பின்பற்றுவோர் திராவிட அரசியலார்! அவர்களைப் பின்பற்றும் நடிகர் விஜய், தம் கட்சிக்கு TAMILAKA VETRI KAZHAKAM என்று ஆங்கிலத்திலும் - தமிழக வெற்றிக் கழகம் என்று தமிழிலும் பெயர் வைத்து இரட்டை வேடம் போட்டுள்ளார். ஆனால் அதே பெயரில் உள்ள கழகம் என்பது மட்டும் 'KALAKAM' என்று எழுதப்படாமல் 'KAZHAKAM' என்று எழுதப் படுகிறது. தி.மு.க. வினரும் தங்கள் கட்சியில் உள்ள கழகத்திற்கு 'ZH' போடுகிறார்கள். ஆனால் திராவிட என்பதை 'DRAVIDA' என்று எழுதுவார்கள்.
வட அமெரிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரிலுள்ள மற்றொரு சிறப்பு "தமிழ்த்தேசியம்" என்பதாகும். தமிழ்நாட்டில் செயல்படும் நமது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பெயரில் ஏற்கெனவே "தமிழ்த்தேசியம்" இடம் பெற்றுள்ளது.
தமிழ்த்தேசிய எழுச்சிக் காலம்
தமிழ்த்தேசியத்தின் எழுச்சிக் காலம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, தமிழர்கள் வாழும் நாடுகளில் எல்லாம் வளர்ந்து கொண்டுள்ளதைப் பார்த்து வருகிறோம். அந்த எழுச்சியின் தொடர்ச்சிதான் வட அமெரிக்காவில் (U.S.A.) தமிழர்களால் 'வட அமெரிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு' அமைக்கப்பட்டு, அதன் முதல் மாநாடு நடந்துள்ளதாகும்.
இம் மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து வட அமெரிக்கா சென்று பணியாற்றிவரும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் முதன்மை ஆற்றல்களாகவும், வட அமெரிக்காவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழீழத் தமிழர்கள் - கனடாவில் இருந்து வந்த தமிழர்கள் - மலேசியத் தமிழர்கள் முதலானோரும் கலந்து கொண்டிருக்கிறார்கள்.
இதில் மிக மிகச் சிறப்பு "தமிழ்த்தாய் வாழ்த்து"டன் மாநாடு தொடங்கியது. இங்கு பாடியது தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது திணித்த 'திராவிடத் தாய் வாழ்த்து' அல்ல! பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் எழுதிய அசல் "தமிழ்த் தாய் வாழ்த்து!" "வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே, என் தமிழ்த் தாயே" என்று இளம் தமிழ்ப் பிள்ளைகள் பாடியதைக் கேட்டபோது மெய் சிலிர்த்தது! அடுத்து வட அமெரிக்க நாட்டுப் பண் பாடினார்கள்.
வட அமெரிக்கத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் செயலாளரும் இம் மாநாட்டின் ஒருங்கிணைப்பாளருமான தோழர் இரவி. சுப்பிரமணியம் அவர்கள் நம்பிக்கை ஒளி வீசும் வரவேற்புரை வழங்கினார். மாநாட்டிற்கு வருகை தந்திருப்போரை - "குடும்பத்தினரே" என்று விழித்து - தமிழ்க் குடும்பப் பாசத்துடன் சுருக்கமாகப் பேசினார். வட அமெரிக்கக் கூட்டமைப்பின் தலைவரும் மாநாட்டு வரவேற்புக் குழுவின் தலைவருமான முனைவர் தணி குமார் சேரன் அவர்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தொடங்க வேண்டிய தேவை எப்படி எழுந்தது? ஏற்கெனவே 'தமிழ்க் கூட்டமைப்பு' என்ற பெயரில் தமிழுக்கு எதிரான வேலைகள் எப்படி அரங்கேறுகின்றன என்பவற்றைப் பேசி, அச் சிக்கல்களுக்கான தீர்வாகத்தான், நமது அசல் இனமான தமிழ் இனத்தின் பெயரில் நேரடியாகப் புதிய அமைப்பு தேவைப்பட்டது என்பது உள்ளிட்ட விளக்கங்கள் பல கொடுத்தார்.
வெளி நாடுகளிலும் தமிழ்நாட்டிலும் தமிழர்கள் கடைபிடிக்க வேண்டிய சில பழக்க வழக்கங்கள் பற்றிய புதிய விளக்கங்கள் கொடுத்தார். வெளி நாட்டில் இருந்தாலும் தமிழ்நாட்டில் இருந்தாலும் தமிழர்கள் தங்களுக்குள்ளே பேசிக்கொள்ளும் போது தமிழிலேயே பேசிக்கொள்ள வேண்டும்! குடும்ப உறுப்பினர்களுக்குள்ளும் தமிழிலேயே பேசிக்கொள்ள வேண்டும்! அதுபோல் நமது பிள்ளைகளுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்றார்.
தமிழ்நாட்டைச் சுருக்கமாக "தமிழகம்" என்று அழைக்கவே கூடாது; "தமிழ்நாடு" என்று மட்டுமே சொல்ல வேண்டும் என்றார்.
தமிழ்த்தேசியம் என்ற தேசியம் தமிழர்கள் அனைவருக்கும் உரியது. இந்த இயற்கையான மரபு வழிவந்த - 'தமிழர்' என்பதை மறைத்து 'திராவிடர்' என்றும் 'இந்தியர்' என்றும் கூறும்படி தமிழின மறுப்பாளர்கள் சொல்லித் திரிகிறார்கள். 'திராவிடர்' என்ற பெயரில் மரபு இனமும் இல்லை - தேசிய இனமும் இல்லை. இந்தியா என்பது பல இனங்களை - பல தாய்மொழிகளைக் கொண்ட ஒரு நாட்டின் பெயர். அதுவும் ஆங்கிலேயக் காலனி ஆதிக்க வாதிகள் சூட்டிய பெயர். 'இந்தியர்' என்ற பெயரில் ஓர் இனம் இருப்பதாக இந்திய அரசமைப்புச் சட்டம் கூறவில்லை.
எனவே தமிழர்கள் இந்தியாவில் - தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும், வெளி நாடுகளில் வாழ்ந்தாலும், தங்களைத் "தமிழர்கள்' என்றே கருத வேண்டும் - கூறிக்கொள்ள வேண்டும்! இவ்வாறான கருத்துகளை மையமாக வைத்துப் பேசினார் ஐயா தணி குமார் சேரன் அவர்கள்.
பின்னர் வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் ஒருங்கிணைப்பாளர்கள் திரு. சசிகுமார் ரெங்கநாதன், திரு. செந்தில் வாசன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். வரும் 2026 சூலை மாதம் நடைபெறவுள்ள பேரவை விழாவிற்கு தமிழர்கள் திரண்டு வருமாறும் அழைப்பு விடுத்தனர். அதுபோல் பல தமிழ் அமைப்புகளின் பொறுப்பாளர்களும் உரையாற்றினர்.
சிறப்புரைகள்
தமிழ்நாட்டிலிருந்து சிறப்புரையாளர்களாக தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், நாம் தமிழர் கட்சியின் தமிழ் ஆய்வுப் பிரிவுப் பொறுப்பாளர்களில் ஒருவரான பேராசிரியர் - முனைவர் தா. மணி, டிஎன் டிவி (TN TV) தமிழ் ஊடக நிறுவனர் திரு. விசுவா என்கிற மெய்யறிவான், தமிழ்ப் பேரரசுக் கட்சியின் நிறுவனத் தலைவர் திரு. இயக்குநர் வ. கௌதமன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள். 'தமிழ்த் தேசியம்' தமிழ்நாட்டில் வளர்ந்து வரும் எழுச்சி பற்றியும், அது எட்ட வேண்டிய இலக்குகள் குறித்தும் சிறப்பாகப் பேசினர்.
"வெல்லட்டும் தமிழ்த் தேசியம்" என்ற தலைப்பில் திரு. சங்கர் தங்கவேல் நெறியாள்கையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் முனைவர் சுந்தர் குப்புசாமி, திரு. பாலமுருகன் சம்பந்தம், திரு. அகத்தாய்வன் தங்கவேலு, திரு. இளம்பரிதி கருப்பன், திரு. அரங்கன் கன்னியப்பன், திரு. வேல் ஆகியோர் பேசினர்.
"திராவிட அறிவுறை" (அறிவுரை அல்ல) என்ற தலைப்பில் இளம்பரிதி வழங்கிய கவிதை மண்டபத்தில் எழுச்சி ஊட்டியது.
'நாடு கடந்த தமிழீழ அரசின்' தலைமை அமைச்சர் மாண்புமிகு. உருத்திர குமாரன் அவர்கள் பன்னாட்டு அரசியல் சூழலைப் பயன்படுத்தி, நாம் - நம் தமிழீழ உரிமைகளை மீட்பதற்குரிய நகர்வுகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.
பல்வேறு கலை நிகழ்ச்சிகள், பாடல்கள், நடனங்கள் என முழு நிறைவாக வட அமெரிக்காவில் தமிழ்த்தேசிய எழுச்சி மாநாடு நடந்துள்ளது.
நாம் தமிழர் கட்சி தேர்தல் வெற்றிக்கு...
இம் மாநாட்டில் பத்து (10) தீர்மானங்கள் திரு. இராசா இளங்கோவன் அவர்களால் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்டன. இவற்றில் சிகரம் வைத்த தீர்மானம், "தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழர்கள் அனைவரும் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களித்து ஆட்சியில் அமர்த்த வேண்டும்" என்பதாகும்.
தமிழ்நாட்டுத் தமிழர்களே!
தமிழ்நாடு, தமிழர்களுக்கான மூலத் தாயக நாடு. ஆனால் பல நாடுகள் தமிழர்களின் நிகழ்கால தாயகங்களாக விளங்கி வருகின்றன. அங்கெல்லாம் எவ்வளவு வாய்ப்பு வசதிகள் இருந்தாலும் தமிழர்களின் மூலத் தாயகமான தமிழ்நாட்டின் வளர்ச்சி - இன எழுச்சி - தமிழர்களின் இன்னொரு மூலத் தாயகமான தமிழீழத்தில் நடந்த தமிழினப் பேரழிவுகள், படுகொலைகள், இவற்றுக்கான தீர்வுகள், தமிழீழம் அமைதல் ஆகியவற்றின் மீது தான் பல்வேறு நாடுகளில் வாழும் தமிழர்கள் கவலைப் படுகிறார்கள் - கவனமாக இருக்கிறார்கள்.
தமிழ்நாட்டுத் தமிழர்களே, தமிழ்நாட்டில் மட்டும் எட்டு கோடி பேர் வாழ்கிறோம்; வெளி நாடுகளில் வாழும் தமிழர்களின் வாழ்வியல் நலன்கள், அவர்களோடு பண்பாட்டு உறவு கொள்ளுதல், அவர்களின் கோரிக்கைகள் முதலியவற்றில் நாமும் அக்கறை செலுத்துவோம். தமிழ்நாட்டில் வாழும் எட்டு கோடி தமிழர்களும், இந்தியாவில் இதர மாநிலங்களில் வாழும் 2 கோடி தமிழர்களும்,வெளி நாடுகளில் வாழும் தமிழர்களுக்குப் பாதுகாப்பாக இருப்போம். அவர்கள் நலனில் அக்கறையோடு செயல்படுவோம். அவர்கள் எல்லாம் எதிர்பார்க்கும் உலகத் தமிழர்களின் நலம் காக்கும் தாயகமாக தமிழ்நாட்டை வளர்ப்போம்! "தமிழ்த் தேசியம் என்பது தமிழ்நாட்டு முழக்கம் மட்டுமல்ல, அது உலகத் தமிழர்களின் முழக்கம்" என்ற நிலைப்பாட்டிற்கு துணை நிற்போம். அவர்களின் காப்பாளர்களாக தமிழ்நாடு விளங்கட்டும்!
"நாம் தமிழர் கட்சிக்கு வாக்களியுங்கள்" என்று வட அமெரிக்கத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மாநாடு நிறைவேற்றிய தீர்மானத்தையும் நெஞ்சில் நிறுத்திப் பணியாற்றுவோம்!
================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
================================
பேச: 9840848594, புலனம் : 9841949462
முகநூல் : https://t.co/Rm3OTXafKD
ஊடகம் : https://t.co/kYqtmUASQD
இணையம் : https://t.co/IZDxchd0Lf
சுட்டுரை : https://t.co/9LNpr25XDb
காணொலிகள் : https://t.co/XVc9CRqVmh
================================
காரைக்குடி தொகுதி புதுவயல் ஒரு சிறிய பேரூராட்சி 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 2,691 வீடுகளும், 11,284 மக்கள்தொகையும் கொண்ட தான்..
அங்கேயே இப்படி ஒரு கூட்டமென்றால்…
#சீமானின்_காரைக்குடி
நானும் மணியரசனும் ஏன் விலகினோம்?
கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு வெளியேறியது ஏன்?
உயிரைக் கொடுத்து போராடிய விவசாயிகள்!
மறைக்கப்பட்ட பல வரலாற்று உண்மைகள்!
ராவணா வலையொளியில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்!
பகுதி - 8
https://t.co/fgQr8RLj10
பகுதி - 1
https://t.co/ZUtMKrM7K8
பகுதி - 2
https://t.co/kqIAurgaDO
பகுதி - 3
https://t.co/XEMag0y7E3
பகுதி - 4
https://t.co/UfvEXTqPlf
பகுதி - 5
https://t.co/3XYtZDcAXW...
பகுதி - 6
https://t.co/GRd3X0ZrxK
பகுதி - 7
https://t.co/qRgoFyKWhH...
நாம் தமிழர் கட்சிக்கு, நாம் ஏன் வாக்களிக்க வேண்டும்?
==============================
ஐயா பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
============
கவிஞர் வைரமுத்து 1995 இல் எழுதிய ஒரு கவிதை நினைவுக்கு வருகிறது. அதன் தலைப்பு: இனம்!
தமிழா!
காற்றின் ஈரம் பருகி வாழும்
பாலைவனத் தாவரம் போல்
முன்னாள் பெருமை என்னும்
முது மக்கள் தாழியில் மூச்சு விடும் தமிழா!
என்று தொடங்கும் கவிதை அது!
அக் கவிதையின் இடையில் வரும் வரிகள், என் நெஞ்சில் பதிந்தவை!
அன்று
பாராட்சி செய்த இனம்
இன்று
பரத கண்டத்தின்
‘ஊராட்சி ஒன்றியம்!’
பிற்காலச் சுந்தர பாண்டியன்
மாலிக் காபூருக்கு மலர் மகுடம் வைத்தான்!
இனத்தின் பிணத்திற்கு
மலர் வளையம் வைத்தான்!
அந்த நாள் மூன்றாம் கடற்கோள்
மூண்டு முடிந்த நாள்! - தமிழன்
முகம் தொலைத்த முட்டாள் திருநாள்!
பிற்காலப் பாண்டியர் ஆட்சியில் கடைசி மன்னன் சுந்தர பாண்டியன். அவன் தம்பி வீரபாண்டியன் முடி சூட்டிக் கொள்ள முரண்டு பிடித்தான். தம்பியை வெல்ல அண்ணன் சுந்தர பாண்டியன் முதல் முதலாக தில்லிச் சுல்தான் அலாவுதீன் கில்ஜியிடம் கூலிப்படை கேட்டான்.
அயல் இனப் படைத் தலைவன் மாலிகாபூர், கி.பி. 1311ஆம் ஆண்டு பெரும்படையுடன் வந்து மதுரையையும் - தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளையும் சூறையாடினான். அதன் பிறகு தமிழ்நாட்டை அயல் இனத்தாரான தில்லிச் சுல்தான்கள் ஆண்டார்கள்.
அப்போது தமிழ்நாட்டின் அரசுரிமையை இழந்த தமிழர்கள், இன்றுவரை அதை மீட்க முடியவில்லை என்பதைத்தான் வைரமுத்துவின் வரலாற்றுத் துயர வரிகள் கூறுகின்றன.
ஆம், மதுரையைப் பிடித்து தமிழ்நாட்டை ஆண்ட தில்லிச் சுல்தான்களை விரட்டிவிட்டு 14 ஆம் நூற்றாண்டில் விஜய நகரத் தெலுங்கர்கள் தமிழ்நாட்டைப் பிடித்தனர். அந்த விஜய நகர மன்னன் பெயர் கம்பணா!
மதுரை, தஞ்சாவூர், செஞ்சி என மூன்று மையங்களை வைத்து ஆண்டனர். ஒவ்வொரு மண்டலத்திற்கும் ‘நாயக்கர்’ என்ற பெயரில் அக் கால ஆளுநரை அமர்த்தினர்!
பின்னர் வெள்ளையர்! 1947 க்குப் பின் தில்லியர்! அடிமை இனங்களைக் கண்காணிக்க ஆளுநர் பதவியை உருவாக்கினர்.
அண்ணன் - தம்பி சண்டையில் அன்று அயலான் மாலிக்காபூரிடம் அரசைப் பறிகொடுத்த தமிழினம், இன்று வரை அதை மீட்கவில்லை. வைரமுத்துவே இந்த உண்மையை 1995 இல் சொல்லுகிறார்!
நம்முடைய இனப்பெயர் ‘தமிழர்’ என்பதைக் கூடச் சொல்ல விடாமல், அலாவுதீன் கில்ஜியின் - மாலிக் காபூரின் புதிய இந்துத்துவா வாரிசுகள் ‘பாரத்தீயன்’ என்கிறார்கள்!
விஜய நகர மன்னர்களின் வாரிசுகளோ நம்மைத் ‘திராவிடர்கள்’ என்கிறார்கள்!
இந்தியாவில் இந்த அளவு மண்ணின் மக்களின் இயற்கையான இனத்தை மறைக்கும் கொடுமை வேறு எந்த மாநிலத்திலாவது உண்டா? இல்லையே!!
தமிழ்த்தேசியப் பேரியக்கம் ‘இறையாண்மை உள்ள தேசிய இனங்களின் கூட்டரசாக இந்தியாவை மாற்றி அமை! அப்படி உருவாகும் இந்தியக் கூட்டரசுக்கு பாதுகாப்புத் துறை, வெளிநாட்டு உறவு, நாணய அச்சடிப்பு போன்ற சில அதிகாரங்கள் மட்டுமே இருக்க வேண்டும். மற்ற அதிகாரங்கள் அந்தந்த தேசிய இன அரசுகளுக்கு இருக்க வேண்டும் என்கிறது.
விஜய நகர ஆட்சியில் உருவாக்கப்பட்ட ‘நாயக்கர்’ பதவிதான் ஆங்கிலேயக் காலனியின் ‘ஆளுநர்’ பதவி! அந்த ‘ஆளுநர் பதவி’ ஒழிக்கப்பட வேண்டும் என்கிறோம்.
இதோ, உங்கள் முன் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் - 2026 வருகிறது. வரும் ஏப்ரல் 23 அன்று வாக்குப் பதிவு நடைபெறும்!
அலாவுதீன் கில்ஜியின் இந்துத்துவா வாரிசுகள் பா.ச.க. - காங்கிரசு என்ற பெயர்களில் போட்டியிடுகின்றன. விஜய நகர வாரிசுகள் ‘திராவிட மாடல்’ என்ற தலைப்பில் போட்டியிடுகின்றன. நம்முடைய சுந்தர பாண்டியனின் இன்றைய வாரிசுகளாக உள்ள தமிழர்கள் புது தில்லி அணியிலும், விஜய நகர அணியிலும் பிரிந்து போட்டி இடுகின்றனர்.
கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய, உலகின் மூத்த குடியாக விளங்கும் தமிழர்களின் - தமிழ்த்தேசியத்தை ஏந்தி செந்தமிழன் சீமான் தலைமையில் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது.
பாரத்தீய, திராவிடத்தீய அயலார் ஆதிக்கம் சுமக்கும் அடிமை அரசியலில், நாம் தமிழர் கட்சி மூழ்கவில்லை!
தமிழர்களின் இனம், மொழி, தாயகம் மூன்றின் உரிமை மீட்புக்காகத் தன்னை ஒப்படைத்துக் கொண்டு பதவி, பணம், விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாமல் போராடிவரும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் உங்களை உறவுரிமையுடன் கேட்டுக் கொள்கிறது. நாம் தமிழர் கட்சியின் “விவசாயி’’ சின்னத்தில் வாக்களியுங்கள்! அக்கட்சியை ஆட்சியில் அமர்த்துங்கள்!
=============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9840848594, புலனம் : 9841949462
முகநூல் : https://t.co/Rm3OTXafKD
ஊடகம் : https://t.co/kYqtmUASQD
இணையம் : https://t.co/IZDxchd0Lf
சுட்டுரை : https://t.co/9LNpr25XDb
காணொலிகள் : https://t.co/XVc9CRqVmh
*ஈரோடு தமிழன்பன் - பாரதி - பாவேந்தர் படைப்புகளில் நமக்கான பாடம்!*
==============================================
_திருச்சியில் 27.12.2025 அன்று தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் நடைபெற்ற ஈரோடு தமிழன்பன் நினைவேந்தல் மற்றும் கவிதை நூல் திறனாய்வு நிகழ்வில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா *பெ. மணியரசன்* உரை!_
தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://t.co/IVlxjWml5T
தமிழர் கண்ணோட்டம் / THAMIZHAR KANNOTTAM
சேனலை WhatsAppஇல் பின்தொடருங்கள் :
https://t.co/cNmSap30iT
தமிழர் கண்ணோட்டம்
நிதி பங்களிப்பு செய்ய உதவோர்
Google pay number - +91 76670 77075
தமிழர் கண்ணோட்டம் - THAMIZHAR KANNOTTAM WEB VISION)
=====================================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
=====================================
பன்மைவெளி நூல்கள்
======================
வாங்க கீழே உள்ள இணைப்பை தொடுங்கள்
தமிழ், தமிழர், தமிழ்த்தேசியம் நூல் பட்டியல் 👇👇👇....
======================
பகிரி (WATSHAPP)
https://t.co/GVu01jKxmP
=====================
நேரில் பெற.... அலுவலகம் வரைபடம்
https://t.co/NDG0xUhVcf
=====================
இணையத்தில்...
https://t.co/JXFUxmkbnp
========================
தொடர்புக்கு : 98408 48594 / 94439 18095
இந்தியத் தேர்தல் ஆணையமே!
வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை
வழங்காதே! சிறப்புத் தீவிர
சீராய்வை (SIR) உடனே நிறுத்து!
================================
திருச்சியில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்!
===============================
https://t.co/sevFWrhNJF
“இந்தியத் தேர்தல் ஆணையமே! வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே! சிறப்புத் தீவிர சீராய்வை உடனே நிறுத்து! தமிழர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்காதே!” என்ற முழக்கத்தோடு, இன்று (16.12.2025) தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், திருச்சியில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இந்திக்காரர்களை திணிக்கும் நோக்குடன் இந்தியத் தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டத்தை (எஸ்.ஐ.ஆர்.), வெளி மாநிலத்தவர்க்கு தமிழ்நாட்டில் வாக்காளர் அட்டை வழங்கக் கூடாது, தமிழ்நாடு அரசு வெளிமாநிலத்தவர்க்கு குடும்ப அட்டை – ஆதார் அட்டை வழங்கக் கூடாது, மொழிவழி மாநிலம் உருவான 1956க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும், நாகாலாந்து – மிசோரம் – அருணாச்சலப்பிரதேசம் - மணிப்பூரில் உள்ளதைப் போல் தமிழ்நாட்டிற்குள் வெளிமாநிலத்தவர் உள்நுழைந்திட, உள்நுழைவு அனுமதிச் சீட்டு (Inner Line Permit – ILP) முறையைக் கொண்டு வர வேண்டும், தமிழர்களுக்கே தமிழ்நாட்டு வேலைகளை உறுதி செய்திட உடனே சட்டமியற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, இவ்வார்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.
திருச்சியில், தொடர்வண்டி சந்திப்பு - காதி கிராப்ட் அருகில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இருநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன் முன்னிலை வகித்தார்.
பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர்கள் மதுரை கதிர்நிலவவன், குறும்பூர் மு. தமிழ்மணி, பூதலூர் பி. தென்னவன், தஞ்சை பழ. இராசேந்திரன், திருச்சி மூ.த. கவித்துவன், பொதுக்குழு உறுப்பினர் பாவலர் நா. இராசாரகுநாதன், மகளிர் ஆயம் தலைவர் தோழர் அருணா, தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் சிம்மம் சத்தியபாமா அம்மையார், கம்பூர் செல்வராஜ் (டங்ஸ்டன் எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு), ஜீவா (தமிழர் மக்கள் இயக்கம்), திரு. ஆரூர் கலைச்செல்வம் (தமிழர் தேசியக் களம்), திருக்குறள் முருகானந்தம் உள்ளிட்டோர் கருத்துரை ஆற்றினர். தமிழக விவசாயிகள் சங்கம் திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.பா. சின்னத்துரை, வெள்ளாம்பெரம்பூர் துரை. இரமேசு (காவிரி உரிமை மீட்புக் குழு), பேரியக்கத் தலைமைச் செயற்குழு தோழர்கள் குடந்தை க. விடுதலைச்சுடர், ஈரோடு வெ. இளங்கோவன், மகளிர் ஆயம் துணைத் தலைவர் க. செம்மலர், புளியங்குடி துரைச்சி, மதுரை இளமதி, பே. மேரி அம்மா, கோவை பாலகுமாரன், திருப்பூர் ஸ்டீபன் பாபு, குமாரபாளையம் நா. ஆறுமுகம், சேலம் இராசவேலு, உடுமலைப்பேட்டை இராசேசு, திருச்சி வே. பூ. இராமராசு, திருவறும்பூர் அழகர்சாமி, போடி சுப்பிரமணியம், சாமிமலை தீந்தமிழன், திருநெல்வேலி சிவனிச்செல்வன், தோழர் பொன்மணிகண்டன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் திரளான தோழர்களோடு பங்கேற்றனர். நிறைவாக திருச்சி மாநகரச் செயலாளர் வே.க. இலக்குவன் நன்றி கூறினார். இதேபோல், சென்னையிலும் பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
“இந்தியத் தேர்தல் ஆணையமே! எஸ்.ஐ.ஆர். திட்டத்தை உடனே நிறுத்து!”, “வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே!”, “தமிழர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்காதே!”, “தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்க்கு ஆதார் அட்டை – குடும்ப அட்டை வழங்காதே!”, “வெளியாரை வெளியேற்று!” என்பன உள்ளிட்ட முழக்கங்களை, இவ்வார்ப்பாட்டங்களில் பேரியக்கத் தோழர்கள் விண்ணதிர எழுப்பி முழங்கினர்.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : https://t.co/Rm3OTXafKD
ஊடகம் : https://t.co/kYqtmUASQD
இணையம் : https://t.co/IZDxchd0Lf
சுட்டுரை : https://t.co/9LNpr25XDb
காணொலிகள் : https://t.co/XVc9CRqVmh
==============================
இந்தியத் தேர்தல் ஆணையமே!
வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை
வழங்காதே! சிறப்புத் தீவிர
சீராய்வை (SIR) உடனே நிறுத்து!
================================
சென்னையில் கொட்டும் மழையில்
எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்!
==============================
https://t.co/t4F5rMeWXs
“இந்தியத் தேர்தல் ஆணையமே! வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே! சிறப்புத் தீவிர சீராய்வை உடனே நிறுத்து! தமிழர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்காதே!” என்ற முழக்கத்தோடு, இன்று (16.12.2025) தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், சென்னையில் கொட்டும் மழையில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் இந்திக்காரர்களை திணிக்கும் நோக்குடன் இந்தியத் தேர்தல் ஆணையம் கொண்டு வந்துள்ள சிறப்புத் தீவிர வாக்காளர் சீராய்வுத் திட்டத்தை (எஸ்.ஐ.ஆர்.), வெளி மாநிலத்தவர்க்கு தமிழ்நாட்டில் வாக்காளர் அட்டை வழங்கக் கூடாது, தமிழ்நாடு அரசு வெளிமாநிலத்தவர்க்கு குடும்ப அட்டை – ஆதார் அட்டை வழங்கக் கூடாது, மொழிவழி மாநிலம் உருவான 1956க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய வெளி மாநிலத்தவரை வெளியேற்ற வேண்டும், நாகாலாந்து – மிசோரம் – அருணாச்சலப்பிரதேசம் - மணிப்பூரில் உள்ளதைப் போல் தமிழ்நாட்டிற்குள் வெளிமாநிலத்தவர் உள்நுழைந்திட, உள்நுழைவு அனுமதிச் சீட்டு (Inner Line Permit – ILP) முறையைக் கொண்டு வர வேண்டும், தமிழர்களுக்கே தமிழ்நாட்டு வேலைகளை உறுதி செய்திட உடனே சட்டமியற்ற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, இவ்வார்ப்பாட்டம் ஒருங்கிணைக்கப்பட்டது.
சென்னை, ஜார்ஜ் டவுன் - மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இன்று (திசம்பர் 16) செவ்வாய் காலை - தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இருநூறுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
பேரியக்கத் துணைத் தலைவர் திரு. க. முருகன், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு தோழர்கள் வழக்கறிஞர் ஓசூர் கோ. மாரிமுத்து, வெற்றித்தமிழன், மா. மணிமாறன், சிதம்பரம் த.தே.பே. செயலாளர் தோழர் வேந்தன் சுரேசு, மகளிர் ஆயம் பொதுச்செயலாளர் வழக்கறிஞர் மு. செந்தமிழ்ச்செல்வி, புதுச்சேரி அன்புநிலவன், பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் மு. வடிவேலன், அம்பத்தூர் செயலாளர் தோழர் அன்புகிட்டு, ஆதம்பாக்கம் செயலாளர் தோழர் அமுதன், தெய்வத் தமிழ்ப் பேரவை செயற்குழு உறுப்பினர் ஐயா சிவ. வடிவேலன், புதுச்சேரி ஒருங்கிணைப்பாளர் ஐயா சிவ.மு. இராசாராம் உள்ளிட்ட திரளான பொறுப்பாளர்களும் தோழர்களும் இதில் பங்கேற்றனர்.
இதேபோல், திருச்சியிலும் பேரியக்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.
“இந்தியத் தேர்தல் ஆணையமே! எஸ்.ஐ.ஆர். திட்டத்தை உடனே நிறுத்து!”, “வெளி மாநிலத்தவர்க்கு வாக்காளர் அட்டை வழங்காதே!”, “தமிழர்களை வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்காதே!”, “தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்க்கு ஆதார் அட்டை – குடும்ப அட்டை வழங்காதே!”, “வெளியாரை வெளியேற்று!” என்பன உள்ளிட்ட முழக்கங்களை, இவ்வார்ப்பாட்டங்களில் பேரியக்கத் தோழர்கள் விண்ணதிர எழுப்பி முழங்கினர்.
===============================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=================================
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : https://t.co/Rm3OTXafKD
ஊடகம் : https://t.co/kYqtmUASQD
இணையம் : https://t.co/IZDxchd0Lf
சுட்டுரை : https://t.co/9LNpr25XDb
காணொலிகள் : https://t.co/XVc9CRqVmh
==============================
12 ஆம் ஆண்டாக “திருவள்ளுவர்”
நாள்குறிப்பேடு தி.பி 2057 ( 2026 )
பன்மைவெளி வெளியீட்டகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக வெளியிடப்படும் “ திருவள்ளுவர் ” நாள்குறிப்பேட்டின் தி.பி 2057 ( 2026 ) இன் தனிச்சிறப்புகள்..!!!
https://t.co/FW9qpcr0lV
https://t.co/MHcBiFDOwS
12 ஆம் ஆண்டாக “திருவள்ளுவர்”
நாள்குறிப்பேடு தி.பி 2057 ( 2026 )
பன்மைவெளி வெளியீட்டகம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக வெளியிடப்படும் “ திருவள்ளுவர் ” நாள்குறிப்பேட்டின் தி.பி 2057 ( 2026 ) இன் தனிச்சிறப்புகள்..!!!
https://t.co/CDy2adoH85
https://t.co/PleHvsdz7r
தமிழர் தாயகம் அழிக்க மோடியின் புதிய திட்டம்!
==============================
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
ஐயா கி. வெங்கட்ராமன்
தமிழர் கண்ணோட்டம் வலையொளியில்.....
பார்க்க
https://t.co/oj7h3NpBAO
==============================
தமிழர் கண்ணோட்டம் - வலையொளி
தொடர்புக்கு - 9841949462, 9840848594
==============================
பன்மைவெளி நூல்கள்
======================
வாங்க கீழே உள்ள இணைப்பை தொடுங்கள்
தமிழ், தமிழர், தமிழ்த்தேசியம் நூல் பட்டியல் 👇👇👇....
======================
பகிரி (WATSHAPP)
https://t.co/GVu01jKxmP
=====================
நேரில் பெற.... அலுவலகம் வரைபடம்
https://t.co/NDG0xUhVcf
=====================
இணையத்தில்...
https://t.co/JXFUxmkbnp
========================
தொடர்புக்கு : 98408 48594 / 94439 18095