தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளில் "தமிழ்த்தாய் வாழ்த்து" பாடி தொடங்கும் மரபு தமிழ் நாட்டில் நீடிக்கிறது. "தமிழ்த்தாய் வாழ்த்து" தான் தமிழ்நாடு அரசின் பாடல் என்று திராவிட மாடல் ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின் அரசு ஆணையும் பிறப்பித்திருக்கிறார். அதேபோல் சட்டமன்ற நிகழ்வு தொடங்குவதற்கு முன்பும் "தமிழ்த் தாய் வாழ்த்து" தான் பாடப்பட்டு வந்தது இதில் "ஜன கன மன" தேசிய கீதத்தை ஏன் இணைக்க வேண்டும் ? "வந்தே மாதரம்" பாடலைப் போல் தமிழ் வாழ்த்துப் பாடலும் ஒரு விருப்ப தேர்வுதானே தவிர சட்டபூர்வ தமிழ்நாட்டுக்கான பாடல் அல்ல ; தேசிய கீதமே சட்டபூர்வமான பாடல் என்ற கருத்தியலை உறுதிப்படுத்துதே இதன் நோக்கம்.
மாநில உரிமையை அடகு வைத்து விட்ட இந்த செயலை மறைப்பதற்கு ஒரு ஆதாரத்தை தேடித் தேடி கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதாவது சட்டமன்றத்தில் கலைஞர் படத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்றபோது முதலில் தேசிய கீதமும் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப் பெற்றது என்று முதலமைச்சர் விஜய் கூறுகிறார். இந்த ஓட்டைவாதம் மக்களிடம் எடுபடாது என்பதை தெரிந்து கொண்ட அவரே இதற்கான பதிலையும் கூறிவிட்டார் குடியரசுத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சி என்பதால் தேசிய கீதம் பாடி இருக்கலாம் என்று அவரரே அதற்கு விளக்கமும் கூறியிருக்கிறார். பிறகு இதில் குற்றம் சாட்டுவதற்கு என்ன இருக்கிறது?
சொல்லப்போனால் இந்திய அரசியல் சட்டத்தின் படி இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் மட்டுமே பாடப்பட வேண்டும் என்று இருந்த மரபை தமிழ்நாடு அப்படியே ஏற்காது ; தேசிய கீதத்தோடு தமிழ்த்தாய் வாழ்த்தையும் இணைத்து இங்கே பாட வேண்டும் என்று அதிலும் மாநில உரிமையை நிலைநாட்டி இருக்கிறார் தமிழின தலைவர் கலைஞர் .
இதற்கு நேர் மாறாக தமிழ்நாடு சட்டமன்ற மரபுகளை மாற்றி தமிழ்த்தாய் வாழ்த்து பாடலோடு தேசிய கீதத்தையும் கொண்டு வந்து இணைத்து தமிழ்நாட்டின் தனித்துவமான அடையாளத்தை சிதைத்து இருக்கிறார் முதல்வர் விஜய்.
@mkstalin@sunnewstamil@arivalayam@DMKITwing
இது Misinterpretation மற்றும் Manipulated Dataக்களின் காலம். தங்களுக்கு ஏற்றது போல செய்திகளை திரிப்பதற்கே எல்லோரும் விரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இப்படியான சூழலில், பேராசிரியர் காதர் மைதீன் பேசியது தவறான வரலாற்றுத் திரிபுகளுக்கு வழி வகுக்கும்.
60 ஆண்டுகால திமுக கூட்டணியை முறிக்கிறோம் என்று பேசி விட்டார். உடனே 2026-60 என்றால் 1966 அதனால் 1967லிருந்து நீடித்த கூட்டணியை முஸ்லிம் லீக் முறிக்கிறது என அவரவர்கள் ஒரு வரலாற்றை எழுதத் தொடங்கி விட்டார்கள்.
1967ல் அல்ல 1962 தேர்தலிலேயே திமுக- முஸ்லிம் லீக் கூட்டணி உருவாகி விட்டது. 1977, 1989, 1996, 2001 தேர்தல்களில் திமுக கூட்டணியில் லீக் இடம்பெறவில்லை. 1996 தேர்தலில் பெரியகுளத்தில் இரட்டை இலைச் சின்னத்திலும், 2001 தேர்தலில் திருச்சி 1 தொகுதியிலும் அதிமுக கூட்டணியில் போட்டியிட்டது பேராசிரியர் காதர் மைதீன் தான்.
பின்னர் 60 ஆண்டுகள் கூட்டணி என ஏன் அவர் சொன்னார் என்பதுதான் கேள்வியாக இருக்க வேண்டும். செய்தியை ரிப்போர்ட் செய்யுங்கள், அதை விடுத்து இது தான் வாய்ப்பு என நீங்கள் படிக்காத வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு தவறாக திணிக்காதீர்கள்.
அரசுப்பள்ளி மாணவர்கள் 2-ம் தரக் குடிமக்களா?
மத்திய அரசின் அலட்சியத்தால், 22 லட்சம் மாணவர்கள் எழுதிய நீட் ரத்து செய்யப்பட்ட நிலையில், நேற்று ஒரே நாளில் சேலத்தை சார்ந்த கோபிகா, லக்னோ-வை சார்ந்த சுகானி ஆகிய 2 பேர் த*கொ-லை செய்துள்ளனர். இரண்டு பிள்ளைகளின் கனவுகள், அவர்களது பெற்றோரின் நம்பிக்கை அனைத்தும் ஒரு NEET-ஆல் சுக்குநூறாகியிருக்கிறது. பிள்ளைகளை இழந்த பெற்றோரின் வலி உண்மையிலேயே மிகக் கொடூரமானது. இதற்கு ஒரு அரசே காரணமாக இருக்கிறது எவ்வளவு வக்கிரமானது. மாணவர்களை மருத்துவர்களாக்க அரசு நிர்வாகம் இயங்குகிறதா? அல்லது, மாணவர்களின் வாழ்க்கையை முடித்து கட்ட அரசு நிர்வாகம் இயங்குகிறதா? என்ற சந்தேகம் உருவாகிறது.
இந்த ஜூன் மாதத்தில் மட்டும், நாடு முழுவதும் 11 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளனர். 2021-ல் தர்மேந்திர பிரதான் அமைச்சரான பின்பு நீட் தேர்வால் 93 மாணவர்கள் தற*கொ-லை செய்துள்ளனர். ஒட்டுமொத்தமாக 2021-லிருந்து 4 ஆண்டுகளில் இந்தியாவில் 54,513 பள்ளி, கல்லூரி மாணவர்கள் த*கொ-லை செய்துள்ளனர்.
கல்வி அமைச்சரின் பிள்ளைகள் வெளிநாட்டில் பயில்வதால் இந்திய பெற்றோரின் பிள்ளைகள் குறித்த கவலை அவருக்கு இல்லை என்பது போல தெரிகிறது.
நேற்று உயிரிழந்த சேலம் #கோபிகா ஒரு ஏழை சவர தொழிலாளியின் மகள். மட்டுமல்லாமல் அவர் அரசுப்பள்ளியில் பயின்ற மாணவி. சிபிஎஸ்இ மாணவர்கள் மட்டுமே நீட் தேர்வு எழுதி மருத்துவ கல்வி பெற முடியும் என்பது அப்பட்டமான சட்டவிரோத செயல். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 14 கூறும் சமத்துவம், பிரிவு 15 கூறும் பாகுபாடு ஆகிய கூறுகளுக்கு முரணாக, ஒன்றிய அரசு, அரசுப்பள்ளி மாணவர்களை 2-ம் தர குடிமக்களாகக் கருதுகிறது.
#JusticeForGopika
#ResignPradhan
#DharmendraPradanMustResign
#NEET
தமிழ்நாட்டுக்கு உரிமையான உயர் சிறப்பு மருத்துவ மேல்படிப்புக்கான(super speciality) 152 இடங்களை ஒன்றிய ஆட்சியிடம் சரணடைய செய்திருக்கிறது தவெக ஆட்சி; எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இந்த அதிர்ச்சியான தகவலை அம்பலப்படுத்தி இருக்கிறார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கு கடிதம் ஒன்றை எழுதி இருக்கிறார். உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் இந்த வழக்கில் திமுக ஆட்சி சரியான வாதங்களை எடுத்து வைத்தது. இந்த இடங்கள் அகில இந்திய கோட்டாவுக்கு சென்று விடாமல் தடுத்து நிறுத்தியது.
இதை அகில இந்திய கோட்டாவுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று ஒரு தனி நபர் தொடர்ந்த வழக்கில் நடந்த விவாதத்தில்
த.வெ.க ஆட்சி சார்பில் வாதிட்ட வழக்கறிஞர் சரண்டர் செய்வதற்கு ஒப்புதல் அளித்துள்ளார்; சரியான உறுதியான வாதங்களை எடுத்து வைக்கவில்லை.
குறிப்பாக வழக்கு போட்டவர் சுட்டிக்காட்டிய என். எஸ் கார்த்திகேயன் எதிர் தமிழ்நாடு அரசு வழக்கு இந்த வழக்கோடு தொடர்பு இல்லாதது
நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞர் இதை வலிமையாக மறுத்திருக்க வேண்டும் ஏன் மறுக்கவில்லை?
அரசின் சார்பில் நியமிக்கப்படும் வழக்கறிஞர்கள் கொள்கைகளுக்கு எதிரானவர்களாக இருந்துவிடக் கூடாது; இது மிகவும் ஆபத்தானது!
மருத்துவமனையிலேயே பணியாற்றும் மருத்துவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் இவை. இந்தியாவிலேயே சிறப்புமிக்க உயர் மருத்துவர்கள் கொண்ட மாநிலம் தமிழ்நாடு!
இதற்காகவே பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் தமிழ்நாட்டை நோக்கி சிகிச்சைக்கு வருகிறார்கள்.
இதேபோல்தான் மோடி ஆட்சி மருத்துவ மேல் பட்டப்படிப்பில் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை மறுத்தபோது;தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த மு.க.ஸ்டாலின் சட்டப் போராட்டம் நடத்தி தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல; அனைத்து மாநில பிற்படுத்தப்பட்ட மாணவர்ளுக்கும் அந்த இட ஒதுக்கீட்டு உரிமையை மீட்டு தந்தார் என்பது வரலாறு!
புதிய ஆட்சி இப்படி ஒரு சமூக அநீதிக்கு துணை போய் இருப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது. மீண்டும் பறிகொடுத்த இடங்களை மீட்டு தருவதற்கான முயற்சிகளில் தமிழ்நாடு அரசு இறங்க வேண்டும்.
தமிழ்நாட்டின் தலைசிறந்த மருத்துவ கட்டமைப்பை ஒருபோதும் சீர்குலைத்து விடக்கூடாது!
@CMOTamilnadu@mkstalin@arivalayam@sunnewstamil@Kalaignarnews@MPaasarai
ஏற்கனவே வெளியான ஆவணப்படம் திரையிடவும் தடை!
அதைக் கேள்வி கேட்டால் அறிக்கைக்கு முகநூலில் தடை!
கடந்த மே 31, 2026 அன்று புதுக்கோட்டையில் திருப்பரங்குன்றம் ஆவணப்படத் திரையிடல் தடுக்கப்பட்டது குறித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச்செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் வெளியிட்ட கண்டன அறிக்கையை இந்தியாவில் தடை செய்துள்ளது பேஸ்புக் நிர்வாகம்.
"This is because we complied with a legal request to restrict this content & Local Legal Requirement" - “இதற்குக் காரணம், இந்தப் பதிவைத் தடுக்கச் சொல்லி வந்த ஒரு சட்டப்பூர்வக் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக்கொண்டு” என்றும் உள்நாட்டுச் சட்டவிதிகளுக்கு உட்பட்டு என்றும் கூறி திவிக பதிவினை இந்தியாவில் முடக்கியதாக பேஸ்புக் தெரிவிக்கிறது.
எந்தச் சட்டத்தின் காரணமாக, யாருடைய தூண்டுதலின் பெயரில் காவல்துறையினர் திருப்பரங்குன்றம் Files ஆவணப்படத் திரையிடலைத் தடுத்தார்கள்? யாருடைய உத்தரவு? யார் அந்த மேலிடம்? என்ற கேள்விகளுக்கு இன்று வரை எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் இக்கேள்விகளை எழுப்பிய திராவிடர் விடுதலைக் கழக அறிக்கை எந்தச் சட்டத்தினால் முகநூலில் முடக்கப்பட்டுள்ளது? அப்படி முடக்க சட்டப்பூர்வ கோரிக்கை வைத்தது யார்? மாநிலத்தை ஆளும் தவெகவா? ஒன்றியத்தை ஆளும் பிஜேபியா? அல்லது இருவருமா? அல்லது வேறு தரப்பா?
ஆவணப்படத்தைத் திரையிட மேலிடம் சொல்லித் தடை, அதைக் கண்டித்து அறிக்கை வெளியிட உள்நாட்டு சட்டவிதிகளின்படி வந்த கோரிக்கை அடிப்படையில் என்றும் காரணம் சொல்லி முகநூலில் தடை! இது ஜனநாயக நாடு தானா? கருத்துச் சொல்லும் உரிமையை அளித்துள்ள அம்பேத்கர் இயற்றிய அரசமைப்புச் சட்டத்தின்படி நடக்கும் நாடு தானா?
தமிழ்நாடு தவெக அரசே, இந்திய பிஜேபி அரசே இது கருத்துரிமை குறித்த கேள்வி. இது ஊடகச் சுதந்திரம் குறித்த கேள்வி. இது ஜனநாயக உரிமைகள் குறித்த கேள்வி!! அரசமைப்புச் சட்டம் வழங்கிய கருத்துரிமையும் மதச்சார்பின்மையும் தானே உள்நாட்டுச் சட்டம்? வேறு எந்தச் சட்டத்தினால் திருப்பரங்குன்றம் ஆவணப்படத் திரையிடல் தடுக்கப்பட்டது? எந்தச் சட்டத்தினால், யாருடைய கோரிக்கையால் கருத்துரிமைக்கு ஆதரவாக வெளியிடப்பட்ட திவிக அறிக்கை முகநூலில் முடக்கப்படுகிறது?
ஜனநாயகத்தில் கேள்விகளுக்கு பதில் சொல்லப்பட வேண்டும். அதிகாரத்தின் பெயரில் கேள்விகள் மூடப்படக் கூடாது.
ஜனநாயகவாதிகளே உரிமைக்கு எதிரான இந்த முடக்கத்தை உடைக்க ஒன்றிணைந்து குரல் கொடுப்போம்! அரசமைப்புச் சட்டத்தின் ஆன்மாவைக் காப்போம்.
- தமிழ்நாடு டிஜிட்டல் ஊடலவியலாளர்கள் சங்கம்.
tndjumail@gmail
#tndju
*சமத்துவபுரம்னு ஒன்ன யாரு கொண்டு வந்தா? விஜயா?
*ஜாதி மறுப்பு திருமணங்களுக்கு உதவித்தொகை, வாரிசுகளுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை.
இன்னும் நிறைய இருக்கு.. இது திமுக செய்தது..
மேட்டூர் கொளத்தூரில் உள்ள காவலாண்டியூரில் பட்டியல் சமூகமும் வன்னியர் சமூகமும் காதல் திருமணம் செய்துகொண்டு மாமன் மச்சானாக எந்த எதிர்ப்பும் இல்லாமல் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள்.. அந்த ஊரே வன்னியரும் பட்டியல் சமூகம் ஒன்றாக சேர்ந்தே வாழ்கின்றனர்.. காரணம் அண்ணன் கொளத்தூர் மணி மற்றும் காவலாண்டியூர் ஈஸ்வரன் அவர்கள்.. அங்கு பாமக அடர்த்தியாக இருக்கக்கூடிய கட்சி என்பது குறிப்பிடத்தக்கது. எண்ணற்ற ஜாதி மறுப்பு திருமணங்களை பெரியாரிய அமைப்புகள் செய்து வைத்திருக்கிறது.. இதெல்லாம் ஊரும் காலனியும் ஒன்னு சேர வேண்டும் என்கிற நோக்கமில்லாமல் வேறெண்ண?
இப்ப நான் உங்கள ஒன்னு கேக்குறேன்.. சந்தையூர் தீண்டாமை சுவர்ல உங்க நிலைப்பாடு என்ன???
தேசிய அரசியலின் சூழல் கருதி
திமுகவுடன் கூட்டணி வைத்தோம்.
வென்றோம்... அங்கீகாரம் பெற்றோம்...
எத்தனையோ வன்கொடுமைகள்
நீகழ்ந்த போதும் கொள்கை காக்க
சமரசம் செய்தோம்...
ஆதவ் கட்சியில் இருந்து கூட்டணியை
பிளவு படுத்த முயன்ற போது...
இந்த கூட்டணியை எவராலும் பிரிக்க முடியாது என்றார் தலைவர்...
ஆதவை இடைநீக்கம் செய்தார்...
திக, திமுக, விசிக மூன்று குழல்
துப்பாக்கி என்றார்...
8 தொகுதி கொடுத்தார்கள்...
தொண்டர்களுக்கு பிடிக்கவில்லை...
தலைவர் ஒப்புக்கொண்டார்...
பிரச்சாரங்களில் விஜயை RSS பிள்ளை என்றார்...RSS-ன் ஒட்டு புழு விஜய் என்றார் நம் இன்றைய அமைச்சர்...
ம. சா. மு. கூ தோற்றுப் போனது...
தவெக வென்றது...
மசாலா வெற்றி என்றார் நம் அமைச்சர்..
பெரும்பான்மை சிக்கல் நேர்ந்த போது.. குடியரசுத் தலைவர் ஆட்சி நிகழ்ந்து விடக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக வெளியிலிருந்து ஆதரவு தருகிறோம் என்றார்...
திமுக கூட்டணியில் தொடர்கிறோம் என்றார்...
ஆதவ் சொன்னதும் சினிமா மோகத்தை மட்டுமே வைத்து வெற்றிபெற்ற விஜய் கையை பிடித்து உயர்த்தினார். விசிக அலுவலகம் முன்பு Tvk.. Tvk...என முழங்கினார்கள்...
மீண்டும் ஆதவிடம் இருந்து அமைச்சராக அழைப்பு வந்தது...
தலைவர் ஒப்புக்கொண்டார்...
அன்றைக்கு உங்க கட்சில வெறும்
20 பேர்தான் இருக்காங்கனு சொன்ன ஆதவ்... இன்று ஒட்டு மொத்த கட்சியையும் தன் வசப்படுத்தியுள்ளார்.
அவர் சானக்கியர்தான்..
தொண்டர்கள் அதிகாரம் கிடைத்து விட்டதாக குத்திக்கிறார்கள்...
திமுகவை விமர்சிக்கிறார்கள்.நாங்கள் கேட்ட தொகுதியை கொடுக்கவில்லை. குறைவான தொகுதிகள் என கொந்தளித்து எழுதுகிறார்கள்.ஆனால் நல்ல perform செய்த எனக்கு சீட் கொடுக்கவில்லை... அதற்கு அவர் ஆதங்கப்பட உரிமை இல்லை... திமுகவிற்கு போய்விடுங்கள் என்று விரட்டுகிறார்கள்...
என்னென்னமோ நடந்தாகிவிட்டது...
இப்போது என்னை கட்சிக்கு எதிரானவன்...
திமுக முட்டு.. என எழுதுவார்கள்...
தோழர்களே..
அதிகாரம் கிடைக்க வேண்டும் என்பதுதான் விசிகவின் இலக்கு என்றால்,அந்த இலக்கை எப்படி அடைந்தோம் என்பது தான் நாளைய வரலாறு...
கொள்கையால் உடன்பட்டு
கூட்டணி வைத்தோம்...
மக்களின் நம்பிக்கையை பெற்றோம்... தனித்து நின்றோம்...
அதிகாரம் பெற்றோம்
என்பதாக இருந்தால் மட்டுமே
நாளைய தலைமுறை கொண்டாடும்...
இன்று அடைந்திருக்கும் அதிகாரம் கொள்கையை மறந்து... அரசியல் சூழலில் ஏற்பட்ட ஆசாதாரன சூழலை பயன்படுத்தி பெற்றது... இது வராலாற்றுப் பிழை
என்றே நாளை பதிவு செய்யப்படும்..
#ஆளுர்ஷாநவாஸ்
"இந்து அறநிலையத்துறையின் பார்ப்பன அமைச்சரையும், இயக்குனரான பார்ப்பன அதிகாரியையும் திரும்பப் பெற வேண்டும் !"
- திராவிடர் விடுதலைக் கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி @kolathur_mani அவர்களின் அறிக்கை !
"தமிழ்நாட்டின் புதிய அமைச்சரவையில் ஏழு பேர் பட்டியல் இனப் பிரிவினரும்,
4 பெண்களும் இடம் பெற்று இருப்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
அதே நேரத்தில் அறநிலையத்துறை அமைச்சராக இந்த பட்டியல் இனப் பிரிவினரில் ஒருவரை ஏன் நியமிக்க கூடாது என்ற எண்ணம் எழத்தான் செய்கிறது.
இந்தத் துறைக்கு அமைச்சராகவும் துறையின் இயக்குனராகவும் பார்ப்பனர்களையே தேர்ந்தெடுத்து நியமித்திருப்பதின் நோக்கம் என்ன என்ற கேள்வியும் எழுகிறது.
நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் பனகல் அரசர் முதன் முதலாக கொண்டு வந்த அறநிலையத்துறை சட்டம் (Hindu Devastaan Act) பார்ப்பனர்கள் கொள்ளையிலிருந்து கோயில்களை காப்பாற்றுவதற்காகத் தான்! அப்போதிலிருந்தே பார்ப்பனர்கள் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். பிறகு ஓமந்தூரார் முதலமைச்சராக இருந்த காலத்தில் இதற்கான முழு சட்ட வடிவம் ( Hindu Religious Endowments Act) கொண்டுவரப்பட்டது. அப்போதும் பார்ப்பனர்களின் கடுமையான எதிர்ப்பு இருந்தது.
பல்வேறு நம்பிக்கை பிரிவுகளைக் கொண்ட இந்து மதம் இப்போது ஒற்றை மதமாக்கப்பட்டு பார்ப்பனர்களின் ஆதிக்கத்தின்கீழ் கொண்டு வரப்பட்டு விட்டது.
அனைத்து இந்துக்களும் அர்ச்சகர்கள் ஆகும் உரிமை கிடையாது.அது பார்ப்பனர்களுக்கு மட்டுமே என்று நீதிமன்றங்கள் வழியாக பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்டி வருகிறார்கள்.
இப்போதும் கோயில் திருவிழாக்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனத்துக்காக தரையில் காத்துக் கிடக்க, பல்லக்கிலும் தேரிலும் இரண்டு அல்லது மூன்று பார்ப்பனர்கள் சட்டை இல்லாமல் பூணூல் அடையாளத்தை காட்டிக் கொண்டு நிற்பது எதைக் காட்டுகிறது? இந்து மதமும் இந்துக்களும் பார்ப்பனர்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதைத் தானே?
இந்து மதத்தை மட்டுமல்ல,அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து அறநிலையத்துறையையும் கட்டுப்படுத்தக் கூடியவர்கள் பார்ப்பனர்கள் தான் என்பதை உணர்த்துவதாகத் தான் இந்த நியமனங்கள் அமைந்திருக்கின்றன.
இந்த பார்ப்பன அமைச்சர் ஏற்கனவே ஒரு பதிவில் பாஜகவின் குரலை எதிரொலித்திருக்கிறார்.அதாவது கோயிலில் தமிழ் வழிபாட்டு உரிமை கேட்பவர்கள் ஏன் முஸ்லிம் கிறிஸ்தவ மதங்களை நோக்கி அந்த கேள்விகளைக் கேட்பதில்லை என்று அவர் கேட்டிருக்கிறார்.
இப்படி பாஜக மனநிலை கொண்ட ஒருவரை அறநிலையத்துறையின் அமைச்சராக நியமித்திருப்பது ஏற்கத் தக்கது அல்ல. இந்த முடிவு தமிழ்மக்களின் உளவியலுக்கு எதிரானது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
முதலமைச்சர் @CMOTamilnadu மாண்புமிகு ச.ஜோசப் விஜய் @actorvijay இந்து அறநிலையத்துறையின் பார்ப்பன அமைச்சரையும், இயக்குனரான பார்ப்பன அதிகாரியையும் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.
- "கொளத்தூர் மணி,"
தலைவர்,
திராவிடர் விடுதலைக் கழகம்.
22.05.26
ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர் இந்துத் துறையை வழிநடத்தினால் அது “அரசியல்” மாற்றம் கருதலாம்
ஆனால் அதே துறை மீண்டும் ஆதிக்கக் கைகளுக்கு சென்றால் அதுதான் “மாற்றமா”?
#TVKVijayHQ#TVKVijayFails
தோழர் சேகுவேராவின் சோசியல் மீடியா மற்றும் youtube channel ஐ hack செய்யும் முயற்சி தொடர்ந்து நடந்துகொண்டிருக்கிறது... ரூட் மாஃபியா அராஜகம் நாளுக்கு நாள் ஜனநாயகத்தின் கழுத்தை நெறித்துக்கொண்டிருக்கிறது.. எதிர்த்து பேசுபவர்கள், விமர்சனம் வைப்பவர்கள் இருக்கவே கூடாது என்று நினைக்கிறார்கள்... இதுதான் ஒரிஜினல் பாசிசம்.. மோடி, பாஜக செய்கிற அதே வேலையை விஜய் தவெக செய்கிறது..
TVK=BJP
மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையில் செயல்பட்ட "திராவிட மாடல்" ஆட்சி பல்வேறு சாதனைகளுக்காக கொள்கை எதிரியான ஒன்றிய பாஜக அரசிடம் இருந்தே விருதுகளைப் பெற்று வந்தது.
ஆனாலும் ஆட்சியின் சாதனைகளை தொடர்ந்து முன்னெடுக்க இயலாத நிலையை தேர்தல் களம் உருவாக்கி விட்டது.
இப்போதும் அந்த சாதனை விருதுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.
கடலோரங்களில் இருக்கும் பல்வேறு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்துகளுக்கான கொள்கைகள்; திட்டங்களை உருவாக்குதல்; அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்துதல் உள்ளிட்டவைகளில் "திராவிட மாடல்" ஆட்சியே முதலிடத்தை பெறுகிறது என்ற 2025ம் ஆண்டுக்கான விருதை ஒன்றிய அரசின் வர்த்தகம் மற்றும்
தொழில்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது.
வேடிக்கை என்னவென்றால் இந்த பாராட்டு விருதுக்கான சான்றிதழை புதிய முதல்வர் ஜோசப் விஜயிடம் டிட்கோ அதிகாரிகள் நேரில் வழங்கி வாழ்த்து பெற்று உள்ளனர்.
வாழ்த்து பெறும் படத்தை இன்று தினமலர் நாளிதழ் வெளியிட்டு இருக்கிறது.
நடந்தது தீய சக்தியின் ஆட்சி அல்ல; வளர்ச்சி சக்தியின் வரலாற்று சிறப்புமிக்க ஆட்சி என்பதை புதிய முதல்வர் இப்போதாவது உணரட்டும்!
விடுதலை இராசேந்திரன்
பொதுச் செயலாளர்
திராவிடர் விடுதலைக் கழகம்
16-05-2026.
@arivalayam@DMKITwing@mkstalin@Udhaystalin@CMOTamilnadu
மு க ஸ்டாலின் அவர்களின் தலைமையில் செயல்பட்ட திராவிட மாடல் ஆட்சி பல்வேறு சாதனைகளுக்காக கொள்கை எதிரியான ஒன்றிய பாஜக அரசிடம் இருந்தே விருதுகளைப் பெற்று வந்தது
ஆனாலும் ஆட்சியின் சாதனைகளை தொடர்ந்து முன்னெடுக்க இயலாத நிலையை தேர்தல் களம் உருவாக்கி விட்டது
இப்போதும் அந்த சாதனை விருதுகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன
கடலோரங்களில் இருக்கும் பல்வேறு மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து களுக்கான கொள்கைகள்; திட்டங்களை உருவாக்குதல்; அவற்றை வெற்றிகரமாக செயல்படுத்துதல் உள்ளிட்டவைகளில் திராவிட மாடல் ஆட்சியே முதலிடத்தை பெறுகிறது என்ற 2025ம் ஆண்டுக்கானவிருதை ஒன்றிய அரசின் வர்த்த கம் மற்றும்
தொழில்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது
வேடிக்கை என்னவென்றால் இந்த பாராட்டு விருதுக்கான சான்றிதழை புதிய முதல்வர் ஜோசப் விஜய் யிடம் டிட்கோஅதிகாரிகள் நேரில் வழங்கி வாழ்த்து பெற்று உள்ளனர்
வாழ்த்து பெறும் படத்தை இன்று தினமலர் நாளிதழ் வெளியிட்டு இருக்கிறது.
நடந்தது தீய சக்தியின் ஆட்சி அல்ல; வளர்ச்சி சக்தியின் வரலாற்று சிறப்புமிக்க ஆட்சி என்பதை புதிய முதல்வர் இப்போதாவது உணரட்டும்
மே-15, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்களை அவருடைய இல்லத்தில், மரியாதை நிமித்தமாக திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் சந்தித்தனர்.
@arivalayam@sunnewstamil@MPaasarai@DMKITwing@mkstalin
திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அவர்கள் உருவாக்கிய மதச்சார்பற்ற கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு விஜய் கட்சி ஆட்சி அமைக்க தேவையான118 இடங்களை பெற்றிருக்கிறது.
தேர்தல் களத்தை டெல்லிக்கும் தமிழ்நாட்டுக்குமான போராட்டமாக கட்டமைத்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தேர்தலில் வெற்றி வாய்ப்பை இழந்தாலும் டெல்லியின் ஊடுருவலை தோல்வியடைய செய்திருக்கிறார்.
விஜய் கட்சியை பயன்படுத்தி தமிழ்நாட்டில் கால் பதிக்கலாம்; அதற்கு ஆளுநரை பயன்படுத்தலாம் என்ற என்ற சதி திட்டத்தை தமிழ்நாடு முறியடித்திருக்கிறது.
முதலமைச்சர் பதவியை ஏற்க இருக்கும் விஜய் முழுமையாக பாஜக எதிர்ப்பு அணிகளின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருக்கிறார். காங்கிரஸ் கட்சி மட்டும் தான் துரோக சக்தியாக மாறி உள்ளது.
மற்றபடி இடதுசாரிகளும், விடுதலை சிறுத்தை கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கும் திமுக கூட்டணியின் நட்பு சக்தியாக இருந்து கொண்டு பாஜக ஊடுருவலை தடுப்பதற்கு வெளியில் இருந்து ஆதரவு தரும் மிகச் சிறப்பான முடிவை எடுத்திருக்கின்றன. இதைத் தான் ஏற்கனவே நாமும் வலியுறுத்தி பதிவிட்டோம்.
முதன்மையான எதிரி இந்துத்துவாவை தனிமைப்படுத்தும் நோக்கத்தோடு திமுக தலைவர் மேற்கொண்ட அணுகுமுறை வரலாற்றுச் சிறப்புமிக்கது.
புதிய ஆட்சியை ஆளுநர் அனுமதிக்க வேண்டும்; இதுகாலத்தின் கட்டாயம் என்றும்; ஆளுநர் காலம் தாழ்த்தக்கூடாது என்றும் வலியுறுத்தினார் மு. க.ஸ்டாலின்
திமுக தலைவர் மட்டுமல்ல; தமிழ்நாட்டு மக்களின் தலைவர் என்ற நிலைக்கு அவரை இந்த கருத்து உயர்த்தி விட்டது.
பாசிச கருத்தை மிகவும் மலினப்படுத்தி அரசியல் புரிதல் இல்லாமல் பாயாசமாக கேலி செய்த விஜய்; பாசிசத்தின் அடக்குமுறைகளை இப்போதாவது உணர்வாரா? என்பது தெரியவில்லை!
கொள்கைப் பார்வையில் முதன்மை முரண்பாடுகளை முன்னிறுத்தி அரசியலை அணுகும் தெளிவை வேறு எந்த மாநிலத்திலும் எதிர்பார்க்க முடியாது!
09.05.2026.