@prasannasanthi
இன்று 37ஆவது மணநாள் காணும் வளரி கவிதை இதழின் துணையாசிரியர் பிரசன்னசாந்தி- சங்கர் இணையருக்கு வளரி ஆசிரியர் குழுவினரின் மனமார்ந்த மணநாள் வாழ்த்துகள்!!
தமிழர்களின் ஒப்பற்ற அடையாளம் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனாரின் ஒரே புதல்வர் மன்னர் மன்னர் என்கிற கோபதி இன்று பிற்பகல் புதுச்சேரியில் தனது 92 ஆவது அகவையில் இயற்கை எய்தினார்!!
வளரி பன்னாட்டுக் கவிஞர் பெருமன்றத்தின் ஆழ்ந்த இரங்கல்கள்!!
எரித்து எரித்துச்
சிதறிய
நெருப்புத் துகள்கள் சேர்த்து
அக்கினிப் பிழம்புகளாய்
நீங்கள் ஆர்த்தெழுவது எப்போது?
கணவன் எரிக்கிறான்
காதலன் எரிக்கிறான்
காமுகன் எரிக்கிறான்
பகைவனும் எரிக்கிறான்!
எரிப்பின்
எரிச்சலில்
எரிந்து போகட்டும்
உங்கள் அச்சம்!
@prasannasanthi சிறுகதை, புதினம் மட்டுமல்ல அறிவியல் கட்டுரைகளையும் எளிமையாக எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் எழுதுவதில் சுஜாதாவுக்கு நிகர் அவரே! பகிர்ந்தமைக்கு மகிழ்ச்சி பிரசன்ன சாந்தி