இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அன்னையரைப் புண்படுத்தவது, அடுத்தவருக்குத் தரவேண்டியதைத் தர மறுப்பது, அடுத்தவருக்கு உரியதைத் தருமாறு கேட்பது, பெண் சிசுக்களை உயிருடன் புதைப்பது ஆகியவற்றை அல்லாஹ், தடை செய்துள்ளான்.
என முஃகீரா இப்னு ஷுஅபா (ரலி) அறிவித்தார்கள்.
#Ramadan2025
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை (வேறெதுவும்) உங்களுக்கு வழங்கப்படவில்லை.
[ஸஹீஹ் அல் புகாரி-6470]
#Ramadan2025
கோடையில் மழை வரும் வசந்த காலம் மாறலாம்.
எழுதிச் செல்லும் விதியின் கைகள் மாறுமோ.. காலதேவன் சொல்லும் பூர்வ ஜென்ம பந்தம்..
நீ யாரோ நான் யாரோ யார் சேர்த்ததோ..💕
எப்ப கேட்டாலும்..💖
ஒருவர் நோன்பு நோற்றிருக்கும் போது மறதியாகச் சாப்பிட்டாலோ, பருகினாலோ அவர் தனது நோன்பை முழுமையாக்கட்டும். ஏனெனில் அவருக்கு அல்லாஹ்வே உண்ணவும், பருகவும் அளித்துள்ளான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
[நூல்: புகாரி 1933, 6669]
#Ramadan2025
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
"ஒருவன் நோயின்றியும் பயணமின்றியும் நோன்பை விட்டுவிட்டால், அவன் ஒருபோதும் அதை ஈடு செய்ய முடியாது."
அல்-அதாபுல் மூஃப்ரத்: 198, அபூதாவூத்: 2396
#Ramadan2025