இன்று நமது தகவல் தொழில்நுட்ப அணி சார்பாக தலைவர் எழுச்சித்தமிழர் அவர்களை நமது தலைமை அலுவலகமான அம்பேத்கர் திடலில் சந்தித்து வாழ்த்து பெற்றோம்.!
#vckitwing
திமுக கொத்தூஸ் நிலைமை.. 😂😂
கருணாநிதி அவர்களை இழிவாக பேசிய கார்த்திகா கைது செய்யப்பட்டதை கொண்டாடவும் முடியாம,
கார்த்திகா கைதுக்கு கண்டனம் தெரிவித்த முக.ஸ்டாலின் அவர்களுக்கு முட்டுக் கொடுக்கவும் முடியாம அவஸ்தை படுகின்றார்கள்.
"ரொம்ப அவஸ்தைப்படறேன் டா சார்ரி" 😂😂
#dmk#NTK4TN
/அவதூறுகளுக்கு அஞ்சமாட்டேன்!
உண்மையை நிரூபிக்கத் தயார்!
சமூக வலைதளங்களில் என் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பி, அரசியல் களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கும் நபர்களுக்கு எனது பதில் இதுதான்!
என் மீது 2018 முதல் போக்சோ வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும், பாலியல் குற்றச்சாட்டுகளில் தொடர்புடையவன் என்றும் பரப்பப்படும் தகவல்கள் முற்றிலும் பொய்யானவை. என் மீது இதுவரை எந்தக் காவல் நிலையத்திலும் போக்சோ வழக்கு பதிவு செய்யப்படவில்லை. இதுபோன்ற குற்றச்சாட்டுகளில் நான் குற்றவாளி என எந்த நீதிமன்றத்தாலும் தீர்ப்பளிக்கப்படவும் இல்லை. நான் இது நாள் வரை எந்த குற்ற வழக்கிலும் சிறை சென்றதில்லை,
சமீபத்தில் ஏற்பட்ட குடும்பப் பிரச்சினை தொடர்பாக, எனது பெற்றோர், உடன்பிறந்தோர் உள்ளிட்டோர் மீதும் என் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த வழக்கில் எங்கள் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எவ்விதமான ஆதாரம் இல்லை என்பதன் அடிப்படையில், புலனாய்வு அதிகாரியால் RCS No. 38/2026 எனக் குறிப்பிடப்பட்ட அறிக்கையின் கீழ் வழக்கு முடிக்கப்பட்டுள்ளது.
உண்மையை மறைத்து, பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லி ஒருவரின் அரசியல் நற்பெயரைக் குலைத்துவிடலாம் என்று யாரும் கனவு காண வேண்டாம்!
அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என் மீது சுமத்தப்படும் அவதூறுகளுக்கு அஞ்சிப் பின்வாங்குபவன் நான் அல்ல. தலைவர் எழுச்சித்தமிழர் அவர்கள் விதைத்த கொள்கை நெருப்பை நெஞ்சில் சுமந்து நிற்கும் இளம் களப்போராளி நான்!
என்னை அரசியலிலிருந்து அகற்றிவிடலாம் என்ற எண்ணத்தில் அவதூறு பரப்புபவர்களுக்கு ஒன்றை மட்டும் சொல்லிக்கொள்கிறேன்: என் அரசியல் பயணம் அவதூறுகளால் முடங்கிவிடாது; கொள்கைப் பாதையில் இன்னும் உறுதியோடு தொடரும்!
என் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிரூபித்தால், நான் அரசியலை விட்டே விலகத் தயாராக இருக்கிறேன்!
என்றும் எழுச்சித்தமிழர் வழியில்,
வழக்கறிஞர் ஈ. பாலமுருகன்
மாவட்டச் செயலாளர்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி/
அவதூறு பரப்பும் எச்ச கருணாநிதி உடன்பிறப்புகளே நிரூபித்து காட்டுங்கள்
#திருட்டு_திமுக
#எச்ச_திமுக
#கொத்தடிமை_உடன்பிறப்புக்கள்
#பண்ணையார்திமுக
சோதிடம், கிரகம், நட்சத்திரம், ராசி என அதில் நம்பிக்கை உள்ளவர்களிடம்
“சனி பெயர்ச்சி நன்மை தரும்னு நம்புகிறார்களே” என்றேன்
அதற்கு அவர் அப்படியில்லை அது
“அவரவர் ராசிக்கும், சனி எந்த வீட்டில் அமர்கிறார் என்பதைப் பொறுத்தது” என்றார்.
உங்களுக்கு என்னப்பா……..
“சனி பெயர்ந்தது நல்லதென நம்புறீங்க”
நம்புங்க நம்புங்க
திமுகவின் அலட்சியம் மற்றும் பண்ணையார் தனத்தால தான் தோல்வியை தழுவி உள்ளார்கள் இதனைப் புரிந்து கொள்ளாத இதனை சரி செய்ய முயலாத பண்ணையார்கள் விடுதலைச் சிறுத்தைகளை குறிவைத்து விமர்சனம் செய்கிறார்கள்
தலைவர் திருமா அவர்களிடம் கொளத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் நடந்த SIR மற்றும் வாக்காளர் பட்டியல் பிரச்சினைகளை எடுத்துரைத்தது நான்தான்.
ஓட்டுத் திருட்டு, SIR பிரச்சினைகளைக் திமுக கண்டுகொள்ளாமல், SIR-ஐ வென்றுவிட்டோம் என்ற போலியான Rosy Picture-ஐ மக்களிடம் காட்டிக்கொண்டிருந்தது உண்மை. ஆனால், இது திட்டமிட்ட செயலா அல்லது அறியாமையா என்பது தெரியவில்லை.
தலைவர் ராகுல் காந்தி ஓட்டுத் திருட்டை வெளிப்படுத்தியதும், தேசிய சக்தி அபியான் தலைமையிலிருந்து எங்கள் மாநிலங்களில் இதுகுறித்து ஆய்வு செய்ய அறிவுறுத்தப்பட்டது.
சுமார் 6 மாதங்களில் 65 லட்சம் வாக்காளர்களின் தகவல்களை ஆய்வு செய்ததில் பல அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்தன. சுமார் 40% பதிவுகளில் கதவு எண் குளறுபடிகளும், 10% டூப்ளிகேட் வாக்காளர்களும் இருந்தனர். வழக்கமாக வாக்களிக்கும் உண்மையான வாக்காளர்களில் 5–10% பேர் வாக்குரிமையை இழந்திருந்தனர். பலருக்குப் பூத் மாறியிருந்தது; சிலர் வேறு சட்டமன்றத் தொகுதிகளுக்கே மாற்றப்பட்டிருந்தனர். புகைப்படங்கள் தெளிவாக இல்லை. SIR-இல் கோரப்பட்ட புதிய கலர் புகைப்படங்கள் யாருக்கும் புதிய வாக்காளர் பட்டியலில் இடம்பெறவில்லை. ஒரே வாக்காளரின் தகவல் இரண்டு வெவ்வேறு வாக்காளர் அடையாள எண்களில் இருந்தது.
SIR மூலம் இறந்ததாகக் கூறி நீக்கப்பட்டவர்களில் 75% பேர் 65 வயதுக்குக் குறைவானவர்கள். ஆனால், உண்மையில் இறப்பவர்களில் மூன்றில் ஒரு பங்கினர்தான் அந்த வயதுக்குக் குறைவானவர்களாக நிஜத்தில் இருக்கிறார்கள். கம்யூனிஸ்ட் மற்றும் யோகேந்திர யாதவ் கூட பத்திரிகை சந்திப்பு இது குறித்து செய்தார்கள்.
27% வாக்குகளைப் பெற்று பாஜக–அதிமுக கூட்டணி 53 இடங்களைப் பெற்றதற்குப் பின்னால் SIR உள்ளிட்ட ஓட்டுத் திருட்டு பெரும் பங்கு வகித்திருக்கிறது என்பது தரவுகளின் அடிப்படையில் எங்கள் நம்பிக்கை.
ஓட்டுத் திருட்டு இல்லையென்றால் தவெகவும் திமுக கூட்டணியும் இன்னும் அதிக இடங்களைப் பெற்றிருப்பார்கள்; அதிமுக–பாஜக கூட்டணி மொத்தம் 15 இடங்களைக்கூடப் பெற்றிருக்காது. உண்மையான வாக்காளர்கள் தவெக மற்றும் திமுக கூட்டணிக்கே வாக்களித்தனர்; பாஜக கூட்டணியில் அதிமுகவுக்கு வாக்களித்தவர்கள் மிகக் குறைவு. அக்கூட்டணி பெற்ற 27% வாக்குகளில் 10–15% கூட உண்மையானவையா என்பதே சந்தேகம்.
10–15% உண்மையான வாக்காளர்கள் நீக்கப்பட்டு, அதற்கொத்த போலி/டூப்ளிகேட் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டதைப் புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரு பூத்தில் ஒவ்வொரு வாக்கையும் வீடு வீடாக ஆய்வு செய்து பத்திரிகையாளர் சந்திப்பில் வெளிப்படுத்தினோம். அப்போதைய தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களின் அனுமதியுடன் சக்தி அபியான் பெண்கள் காங்கிரஸ் சார்பில் Press Club-இலும் Press Meet நடத்தினோம். மதுரையில் திரு. கார்த்திக் சிதம்பரம் MP அவர்களுடனும் இணைந்து நடத்தினோம். சங்கி மீடியா மட்டுமல்ல, திமுக ஊடகங்களும் இதை இருட்டடிப்பு செய்தது ஆச்சரியமாக இருந்தது.
எங்கள் ஆய்வில் முக்கியமாகக் கண்டறிந்தது கதவு எண் கோளாறு. பிகாரைப் போலவே தமிழ்நாட்டிலும் ஒரே வீட்டில் 50, 80 பேர் இருப்பதுபோன்ற பதிவுகள் இருந்தன. ஒரு கதவு எண்ணில் ஒரே ஒரு வாக்காளர் மட்டுமே இருப்பதும் அதிகமாக இருந்தது. விண்ணப்ப ஆவணங்களில் இருந்த கதவு எண்கள் வாக்காளர் பட்டியலில் மாற்றப்பட்டிருந்தன! சுமார் 40% வாக்காளர்களின் பதிவுகளில் அவர்கள் வசிக்கும் உண்மையான கதவு எண்கள் இல்லை. பல ஆண்டுகளாகத் திட்டமிட்டு தமிழக வாக்காளர் பட்டியல் மாற்றப்பட்டுள்ளது.
இதனை அப்போதைய அமைச்சர் சேகர் பாபு அவர்களிடம் தலைவர் திருமாவளவன் மூலம் தெரிவித்தபோது, மீண்டும் கவனமாகப் பார்ப்பதாக மட்டுமே கூறினார். வாட்சப்பில் விவரங்களை அனுப்பிவிட்டு சந்திப்புக்காகக் காத்திருந்தேன். நேரில் சந்திக்க நேரம் கேட்டு பலமுறை அழைத்தும் அவரால் ஒதுக்க முடியவில்லை.
இன்றும் தமிழக வாக்காளர் பட்டியலில் தவறான கதவு எண்கள், காணாமல் போன உண்மையான வாக்காளர்கள், இல்லாத வாக்காளர்கள் இடம்பெற்றிருப்பது போன்ற பிரச்சினைகள் மிகப்பெரிய அளவில் உள்ளன. இவை இனிவரும் இடைத்தேர்தல்களையும் உள்ளாட்சித் தேர்தல்களையும் கடுமையாகப் பாதிக்கும்.
மாண்புமிகு தமிழக முதல்வர் உடனடியாக ஓர் ஆய்வுக் குழு அமைத்து, தெருக்களில் உள்ள வாக்காளர் தகவல்களும், வாக்காளர் பட்டியலும் 100% ஒத்துப்போகின்றனவா எனச் சரிபார்க்க வேண்டும். சரியான தெரு பெயர், கதவு எண், பெயர், உறவினர் பெயர், வயது, புகைப்படம் சரியாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
எங்களுக்கு தெரிந்ததை அரசுக்கு வழிகாட்ட/ உதவ நாங்கள் தயாராக இருக்கிறோம். உள்ளாட்சி நேர்மையாக நடக்க உண்மையான முழுமையான வாக்காளர் பட்டியல் ஒரு அடிப்படை தேவை. நன்றி 🙏
சுபத்ரா தேவி தனசிங்
National Office Bearer
Shakti Abhiyan
Indian National Congress