கன்னியாகும��ி அணுக்கனிமக் கொள்ளை: கதிரியக்கத் திட்டத்திற்குத் துணைபோகும் அனுமதி நீட்டிப்பு ஆணையைத் த.வெ.க அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.
@CMOTamilnadu @drtkprabhu_TVK @CTR_Nirmalkumar @DAEIndia @moefcc @byadavbjp
கன்னியாகுமரி மாவட்டம், கிள்ளிய���ர் வட்டத்திற்கு உட்பட்ட 1144 ஹெக்டேர் பரப்பளவில் கதிரியக்கத் தாக்கம் ஏற்படுத்தும் கனிமங்களைப் பிரித்தெடுக்கும் இந்திய அருமணல் நிறுவனத்தின் (IREL) அழிவுத் திட்டத்திற்கு, மேலும் ஓராண்டு கால நீட்டிப்பு வழங்கி அரசாணை (G.O. Ms No. 12) வெளியிட்டிருக்கும் தமிழக வெற்றிக் கழக அரசின் செயல் கடும் கண்டனத்திற்குரியதாகும். அதிகாரத்திற்கு வருவதற்கு முன்பு, கடந்த 03.11.2024 அன்று நடந்த த.வெ.க-வின் செயற்குழுக��� கூட்டத்தில், "தென் தமிழகத்தைப் பாழ்படுத்தும் அபாயம் விளைவிக்கும் நாசகார, நச்சுத் திட்டம்" என இந்த அணுக்கனிம அகழ்வுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றினார்கள். ஆனால், இன்று அதே திட்டம் 10.06.2026 அன்றுடன் முழுமையாகக் காலாவதியாக இருந்த நிலையில், சரியாக இறுதி நாளில் அத்திட்டத்தை மீண்டும் உயிர்ப்பித்து, ஒட்டுமொத்தத் தென் தமிழக மக்களையும் கதிரியக்கப் பாதிப்பிற்குள்ளாக்கும் செயலுக்கு துணைபோயிருக்கிறது த.வெ.க அரசு.
கீழ்மிடாலம், மிடாலம், இனயம்புத்தன்துறை, ஏழுதேசம், கொல்லங்கோடு ஆகிய கிராமங்களில் தாது மணலில் இருந்து மோனசைட் (Monazite), சிர்கான் (Zircon) உள்ளிட்ட கதிரியக்கக் கனிமங்களைப் பிரித்தெடுப்பது ஈடுசெய்ய முடியாத சூழலியல் பேரழிவை ஏற்படுத்தும். இந்த அகழ்வினால் ஏற்படக்கூட��ய கதிரியக்கம் சுற்றுப்புறக் கிராமங்களில் பரவிப் பொதுமக்களைப் புற்றுநோய்க்கு ஆளாக்கும் ஆபத்து உள்ளது. கடலோர மணலில் இருந்து தாதுப் பொருட்களைப் பிரித்து எடுத்த பிறகு கழிவு நீரையும் மணலையும் கொட்டுவதால் கடல் நீரின் தன்மை மாறுவதோடு, மீன் மற்றும் கடல்வாழ் உயிரினங்கள் அழிந்து மீனவர்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாகச் சீரழிக்கப்படும்.
சென்ற மாதம் தான் தமிழ்நாட்டின் குவாரிகளுக்கு புகைப்படக் கலைஞர் குழு புடை��ூழ பார்வையிட்டு ‘இயற்கை வளப் பாதுகாவலர்’ என்று சமூக ஊடகங்களில் தன் ரசிகர் பட்டாளத்தை வைத்துப் பாராட்டுப் பத்திரம் வாசித்துக் கொண்டிருந்தார் மாண்புமிகு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே. பிரபு அவர்கள். ஆனால், அந்த விளம்பரங்களின் சாயம் வெளுக்க ஒரு மாதம் கூட ஆகவில்லை. அதே அமைச்சகத்தின் கீழ் இருக்கும் இயற்கை வளங்கள் துறைதான், கன்னியாகுமரியின் 1144 ஹெக்டேர் பரப்பளவை அணுக்கனிமக் ��ொள்ளைக்குத் தாரைவார்க்கும் அரசாணையில் கையெழுத்திட்டுள்ளது. குவாரிகளை சீரமைப்பது போல் பாவனை செய்துவிட்டு, ஒட்டுமொத்தக் கடலோரத்தையே கதிரியக்கப் பாதிப்பிற்குள்ளாக்கும் ஒன்றிய அரசின் IREL நிறுவனத்திற்கு சிகப்பு மின்கம்பளம் விரிப்பதுதான் அமைச்சர் பிரபு அவர்களின் ‘அதிரடி’ நிர்வாகமா? விளம்பரத்திற்கு ஒரு முகம், ஒன்றிய அரசுக்கு ஒரு முகம் காட்டும் இந்த இரட்டை வேடத்தைத்தான் மக்க���் கடந்த மாதம் கொண்டாடித் தீர்த்தார்களா?
மக்களின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சிய ஒன்றிய பாஜக அரசு, 08.09.2025 அன்று அறிவித்திருந்த மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டத்தையே நடத்தாமல் திரும்பபெற்று, எப்படியாவது இத்திட்டத்தை செயல்படுத்திவிட முடியாதா என்று முயற்சிக்கும் நேரத்தில் மாநில அரசோ, IREL நிறுவனத்திற்குத் தேவையான கடலோர ஒழுங்குமுறை மண்டல (CRZ) அனுமதியைப் பெற வசதியாகக் கால நீட்டிப்பை வழங்கியுள்ளது. ஒன்றிய அரசின் கனிமவளக் கொள்ளைக்குத் தலையாட்டி பொம்மையாகச் செயல்படுவதைத் தவெக அரசு கைவிட வேண்டு���்.
தமிழ்நாடு அரசு உடனடியாகத் தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தி, IREL நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட கால நீட்டிப்பு அரசாணையை திரும்பப்பெற வேண்டும். கன்னியாகுமரி மண்ணையும் மக்களையும் பாதுகாக்கும் இந்த சட்டப்போராட்டத்திலும், களப்போராட்டத்திலும், இத்திட்டத்தை முழுமையாகக் கைவிடும் வரை மக்களுடன் இணைந்து மாபெரும் எதிர்ப்பினை நாம் தமிழர் கட்சி முன்னெடுக்கும் என எச்சரிக்கின்றேன்.
- செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி
இன்று மாலை 5 மணிக்கு கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி ஆரல்வாய்மொழியில் மாபெரும் பொதுக்கூட்டம் !
கனிவளக்கொள்ளையே நடக்கவேயில்லை அப்படித்தான��� அமைச்சரே ?@Manothangaraj
எங்களின் உயிரோடும், உணர்வோடும் கலந்து வாழுகின்ற அன்பு உறவுகள் அனைவருக்கும் வணக்கம்!
இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பொதுக்கூட்டம்.
நாள்: தை 15 | 29-01-2026 வியாழக்கிழமை மாலை சரியாக 05 மணிக்கு
இடம்: சி.என்.கிருஷ்ணசாமி தெரு (சி. என்.கே.) சென்னை - திருவல்லிக்கேணி
மானத்தமிழரெல்லாம் மறக்காமல் கூடுவோம்! கோரிக்கைப் போராட்டத்தை வென்��ு வாக�� சூடுவோம்!
விதிகளை மீறியும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும் அமைக்கப்பட்டிருக்கும் மருங்கூர் அரசு மதுபானக்கடையை அகற்ற வேண்டி நாம் தமிழர் கட்சி முன்னெடுத்த போராட்டத்தின்போது, மக்கள் விரோத திமுக அரசிற்கும் , மக்கள் பிரதிநிதாயாக இருந்துகொண்டு கண்துடைப்பு நாடகங்களை நடத்திக் கொண்டிருக்கும் அதிமுக சட்டமன்ற உறுப்பினருக்கும் கண்டணங்களை பதிவு செய்தோம்.
@NaamTamilarOrg
#மக்களோடு_மரியஜெனிபர் #MariaJennifer #Manidhi #NaamTamilar #Kanyakumari
துரோகத்தால் வீழ்த்தப்பட்ட தமிழினத்தை தலை நிமிர பிரசவித்ததே நாம் தமிழர் கட்சி அதை தன் முதன்மை கடமையாக கொண்டவரே எங்கள் அண்ணன் செந்தமிழன் சீமான்..!
@Seeman4TN
நீங்கள் நீடு��ி வாழ வாழ்த்துகள்...!!!🙏🏾🙏🏾🥰
#மாற்றத்திற்கான_மக்கள்_தலைவன்
2026 சட்டமன்ற தேர்தலுக்கான வீதி பரப்புரை பயணத்தை நேற்று பெரியகாடு பகுதியில் வெற்றிகரமாக துவங்கினோம்.
வெறும் வாக்குறுதிகளை மட்டும் கொடுக்காமல், வாக்குகளை மட்டும் கேட்காமல், மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கான அரசியல் எது, அவர்களுக்கான தேவை எது என்பவற்றை அவர்களிடமிருந்தே கற்றறிந்துகொள்வதும், நாம் தமிழர் கட்சியின் கொள்கைகளைய வீடுகள்தோறும் கொண்டு சேர்ப்பதுமே இப்பயணத்தின் நோக்கம்.
நாம் தமிழர் உறவுகள் படைசூழ, சந்தித்த மக்கள் அனைவருக்கும் மரக்கன்றுகளை பரிசளித்து மகிழ்ந்தோம்.
தொடர்ந்து கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியின் அனைத்து வீதிகளிலும் கனவு கன்னியாகுமரிக்கான நமது பயணம் தொடரும்.
@NaamTamilarOrg
#மக்களோடு_மரியஜெனிபர்
#MariaJennifer #Manidhi #NaamTamilar #Kanyakumari