சென்னையில், மொத்தம் விற்பனையாகும் சுமார் 14.75 லட்சம் லிட்டர் ஆவின் பாலில், கிட்டத்தட்ட 50%, சுமார் 7.5 லட்சம் லிட்டர் பால் விற்பனை, பச்சை நிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் ஆகும்.
இந்த நிலையில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்பட்டு, குறைந்த அளவே தற்போது விற்பனைக்கு வழங்கப்படுகிறது என்ற செய்தி அறிந்து, ��து குறித்து விசாரித்ததில், ஏற்கனவே சுமார் 50% விற்பனை குறைக்கப்பட்டிருப்பதாகவும், படிப்படியாக, கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை நிறுத்தப்படவுள்ளதாகவும், ஆவின் விற்பனை மையங்களிலேயே கூறுகின்றனர்.
ஆனால், தவெக அரசு தற்போது வெளியிட்டிருக்கும் செய்தி வெளியீட்டில், கிரீன் மேஜிக் பால் விற்பனை குறைக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால், ஏன் ஆவின் மையங்களில் முன்பு போல அது கிடைப்பதில்லை? கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை கணிசமாகக் குறைந்துள்ளதை பொதுமக்களே அறிவார்கள். யாரை ஏமாற்ற இந்த பொய்யான விளக்கத்தை அளிக்கிறது தவெக அரசு?
கடந்த 2023 ஆம் ஆண்டு திமுக ஆட்சியிலும் இதே போல, 4.5% கொழுப்புச் சத்துள்ள பச்சை நிற பாக்கெட் பால் விற்பனையை நிறுத்தி விட்டு, 3.5% கொழுப்பு சத்துள்ள ஊதா நிற பாக்கெட் பால் விற்பனை செய்ய முடிவெடுத்த போது, எதிர்க்கட்சிகள் எதிர்ப்பால் அந்த முடிவை திமுக அரசு கைவிட்டது. ஆனால், தற்போதைய தவெக அரசும் அதே முடிவை மக்களிடம் திணிப்பது, வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.
கிரீன் மேஜிக் வகை பால் விற்பனை குறைப்புக்கு, நிதி இழப்பைக் காரணமாகக் கூறுகிறார்கள். நிதி இழப்பைச் சரி செய்ய, பால் உற்பத்தியையும், பால் மற்றும் பால் பொருள்கள் விற்பனையையும் அதிகரித்து, அதன் மூலம் நிதி இழப்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டுமே தவிர, ஏழை எளிய மக்கள் அதிகம் பயன்படுத்தும் பால் வகை விற்பனையை நிறுத்தக் கூடாது.
உடனடியாக, மீண்டும் போதுமான அளவு, பச்சை ��ிற கிரீன் மேஜிக் பாக்கெட் பால் விற்பனையைக் கொண்டு வர வேண்டும் என்றும், பால் உற்பத்தி, கொள்முதல் மற்றும் விற்பனை உள்ளிட்டவற்றை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்றும் தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
தமிழக அரசு கேபிள் ஒளிபரப்பிலிருந்து, @polimernews, @NewsTamilTV24x7 மற்றும் @TamilJanamNews ஆகியவை நீக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
அரசு கேபிள் நிறுவனம், செட்டாப் பாக்ஸ் நிறுவனத்துக்கு வைத்திருக்கும் நிலுவைத் தொகை காரணமாக, ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளதாகக் காரணம் கூறப்படுகிறது. கட்டணப் பிரச்சினை காரணம் என்றால், ஏன் மற்ற ஊடகங்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை?
குறிப���பாக, இந்த மூன்று ஊடகங்களும், மின்வெட்டாலும், தவெக அரசின் நிர்வாகத் திறனின்மையாலும், பொதுமக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள��க் குறித்த செய்திகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருவதால், தவெக அரசு இந்த ஊடகங்களைப் பழிவாங்கும் விதமாக நடந்து கொள்வதாகவே தெரிகிறது.
ஜனநாயகத்தில், செய்திகளைத் தடை செய்வது தீர்வல்ல. இது மிகவும் தவறான போக்கு. உடனடியாக, இந்தச் செய்தி ஊடகங்களை அரசு கேபிள் நிறுவனத்தில் வெளியிட வேண்டும் என்று, தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
The best place to increase green cover is on private farmlands. Farmer economy is most vulnerable to extreme climate. Tree-based farming will not only bring down the temperature but will also significantly contribute to farmer prosperity & is one of the simplest and most effective ecological & economic solutions to mitigate climate change impact. -Sg
தலைவர் ரஜினி அவர்கள் மீது சமீபத்தில் திட்டமிட்டு பரப்பப்படுதுவது அறிவேன்.. தொடர்ந்து பரப்பப்படும் அவதூறுகளுக்கு பதில் கொடுக்காமல் இருக்க விரும்பவில்லை எனவே ஒரே ஒரு விசயத்தை சொல்வது எளிதில் பலருக்கும் புரிய வைக்கும் என நம்புகிறேன்.
சமீபத்தில் தேர்தல் முடிவுக்கு பின் சில வாரங்களில் ரஜினி அவர்களை நான் சந்தி��்து பேசின நேரத்தில் அவர் ஒரு விசயத்தை கூறினார். (அவர் செய்தியாளர்களை சந்திப்பதற்கு முன் நடந்த சந்திப்பு. )
எந்த அனுபவமும் இல்லாத , நேற்று வரை நிர்வாகம் ஆட்சி பற்றி எதுவும் தெரியாத நபர்கள் எல்லாம் இன்று அமைச்சர்களாக இருப்பது தமிழக அரசு நிர்வாகம் செயலற்று மோசமடையவது உறுதி என நான் அவரிடம் கூறிய போது..
மாரிதாஸ் இதே தான் MGR ஆட்சிக்கு வந்த போதும் கூறினார்கள்.. இது ஒரு நடிகர் தன் விஷ்வாசிகளை வைத்து அமைக்கும் எந்த ஆட்சிக்கும், எந்த அரசியல் கட்சிக்கும் வருகிற குற்றாச்சாட்டு தான் இது. MGR அதை ஒருவிதமாக கட்டமைத்து நிர்வாக திறனை காட்டினார். என்பவே விஜய் ஆட்சி அதிகாரத்தை எந்த அளவுக்கு தீவிரமாக எடுத்து செய்கிறார் தன் சக அமைச்சர்களை கண்காணிக்கிறார் வேலையை தீவிரமாக செய்வதற்கு முற்படுகிறார் என்பது தான் கேள்வி... குற்றச்சாட்டுகள் எல்லாம் வர தான் செய்யும். ஆனால் அது ப��தியது அல்ல.
இப்படி கூறிவிட்டு அந்த உரையாடல் நீண்டது. ஒரு இடத்திலும் விஜய் வீழ்ச்சி அடைவார் அல்லது நிர்வாக திறன் இருக்காது அல்லது இந்த ஆட்சி மீது அவமரியாதையாக எதையும் அவர் தெரிவிக்கவில்லை.. அவர் நான் பழகிய இத்தணை ஆண்டுகாலத்தில் எப்படி இருக்கிறாரோ அப்படியே தான் அதாவது யாரிடத்திலும் ஒட்டவே மாட்டார் அப்படியே தான் தனிச்சு இருக்கிறார் இன்றும்.
தனிப்பட்ட உரையாடல்களை நான் பொதுவாக வெளியில் சொல்லும் நபர் கிடையாது - ஆனால் இது ���ூறினால் தான் அவர் என்னவாக இருக்கிறார் என்பது புரியும் பலருக்கும். நேரில் சந்தித்தவன் என்ற வகையில் எங்களுக்கு மட்டுமே அது உணர கூடியது. சும்மா யார் ஆட்சி இருக்கனும் இருக்ககூடாது என அதில் சென்று கருத்து கூறும் நபர் அல்ல அவர். அதில் ஆர்வமும் இல்லாதவர்.
அவர் அரசியல் இல்லை என்று முழுமையாக தள்ளி நிற்கிறார் - ஆனாலும் அரசியல் அவரை விட்டபாடாக இல்லை.
இறுதியாக அவர் பேசிக்கொண்டிருக்கும் போது ரஜினி அவர்கள் இப்படி கூறினார்
"ஒவ்வொரு தனிமனிதனுக்கும் அவனது செயல்களுக்கு ஏற்ப தலைவிதி இருப்பது போலவே, ஒரு நாட்டில் வாழும் மக்களின் ��ட்டுமொத்த கூட்டுச் செயல்களும் எண்ணங்களும் அந்த நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கின்றன.. காத்திருந்தால் தான் நல்லதா கெட்டதா என்பது புரியும்! " என்று அவரிடம் தயானந்த சரஸ்வதி சுவாமிகள் கூறியதாக கூறினார்.
அதாவது இப்படி நடக்கனும் இருந்தால் அது நடந்தே தீரும். ஆனால் குழப்பம் ஏற்படுவது, மொத்த சூழலும் மாறிவிட்டதோ என்ற ஒரு இருக்கமான இருட்டு உருவாவது, இனி அவ்வளவு தான் என நினைக்கும் அளவு���்கு தள்ளும் சில சூழலில் ஏற்படும் போது தான் நமக்கு எது நல்லது கெட்டது என்ற தெளிவே கொடுக்கும் - அது ஒரு பெரிய படிப்பினையையும், நல்ல தீர்வை தந்துவிட்டு செல்லும்".
விரைவில் மொத்த குழப்பத்தில் ஒரு தெளிவு கிடைக்கும்.
-மாரிதாஸ்