மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்
திரு.ச.ஜோசப் விஜய் அவர்களை இன்று
(6.8.2026) தலைமைச் செயலகத்தில்,
மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை
அமைச்சர் திரு. ர. வினோத் அவர்கள் சந்தித்து,
தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம்
ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை
அறிக்கையை தமிழ்நாடு சட்டமன்றப்
பேரவையில் தாக்கல் செய்வதற்கு முன்பாக
வாழ்த்துப் பெற்றார்.
Hon'ble Chief Minister of Tamil Nadu, Thiru. C. Joseph
Vijay, was called on by the Hon'ble Minister for
Agriculture and Farmers' Welfare, Thiru. R. Vinoth, at
the Secretariat today (06.08.2026) to seek his best
wishes prior to presenting the Agriculture Budget of
the Government of Tamil Nadu for the year 2026–2027
in the Tamil Nadu Legislative Assembly.
#CMJosephVijay
மாண்புமிகு வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்கள் இன்று (6.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 2026-2027ஆம் ஆண்டிற்கான வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.
Hon'ble Minister for Agriculture and Farmers Welfare, Thiru. R. Vinoth, presented the Agriculture Budget of the Government of Tamil Nadu for the year 2026–2027 in the Tamil Nadu Legislative Assembly today (06.08.2026).
#CMJosephVijay
தமிழ்நாட்டின் வளர்ச்சியை இலக்காகவும், மக்கள் நலனை மையமாகவும் கொண்டு, ஆட்சிப் பொறுப்பேற்ற மூன்றே மாதங்களில் அனைவரும் பாராட்டும் வகையில் 2026 - 27ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் திரு. நெ.மரிய வில்சன் அவர்களுக்கும், வேளாண்மை நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ள மாண்புமிகு வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் திரு. ர. வினோத் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
தொலைநோக்குப் பார்வையுடன்கூடிய திருத்திய நிதிநிலை அறிக்கையானது மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், திருநர்கள், தொழிலாளர்கள், மீனவர்கள், நெசவாளர்கள், தொழில்முனைவோர், அரசுப் பணியாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களின் முன்னேற்றத்திற்கும் புதிய நம்பிக்கையை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
வேளாண்மை நிதிநிலை அறிக்கையானது, தமிழ்நாட்டின் வேளாண் வளர்ச்சியோடு, அதன் தொழில்சார்ந்த கால்நடை மற்றும் மீன் வளர்ப்பு, பால்வளம், உணவுப் பொருட்களைப் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதல் போன்ற தொழில்களையும் மேம்படுத்துவதோடு, அனைத்துத் தரப்பு விவசாயிகளின் நலனையும் வாழ்வாதாரத்தையும் மேலும் வலுப்படுத்தும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
வளமான தமிழ்நாட்டை நோக்கிய நமது வெற்றிப் பயணம் தொடரட்டும்!
#CMJosephVijay
"Kill them with your success and bury them with your smile"
is a powerful mindset that means letting your hard work, growth and positive attitude silence your doubters. Instead of fighting negativity, you focus on your own path & let your achievements do the talking 🧿
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (5.8.2026) தலைமைச் செயலகத்தில், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள்-2026ல், ஆண்களுக்கான பளுதூக்கும் போட்டியில் 65 கிலோ எடைப்பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்ற திரு. ராஜா முத்துப்பாண்டி அவர்களுக்கு 30 இலட்சம் ரூபாய் உயரிய ஊக்கத்தொகைக்கான காசோலையை வழங்கினார்.
#CMJosephVijay
மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை அமைச்சர் திரு.நெ.மரிய வில்சன் அவர்கள் இன்று (5.8.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தமிழ்நாடு அரசின் 2026-2027ஆம் ஆண்டிற்கான திருத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (4.8.2026) தலைமைச் செயலகத்தில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின்கீழ், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் 525.75 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 4,260 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் சார்பில் பெரம்பூரில் 1.43 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள டாக்டர் அம்பேத்கர் கல்லூரி குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் ஆகியவற்றைக் காணொலிக் காட்சி வாயிலாகத் திறந்து வைத்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (3.8.2026) காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள செயின்ட்-கோபைன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்திற்கும், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ரெனால்ட் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கும் நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார். மேலும், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா திட்ட அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (3.8.2026) காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர், சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள செயின்ட்-கோபைன் கண்ணாடி தயாரிப்பு நிறுவனத்திற்கும், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா வளாகத்தில் அமைந்துள்ள ரெனால்ட் கார் உற்பத்தித் தொழிற்சாலைக்கும் நேரில் சென்று அதன் செயல்பாடுகளை பார்வையிட்டார். மேலும், ஒரகடம் சிப்காட் தொழிற்பூங்கா திட்ட அலுவலகத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு செய்தார்.
#CMJosephVijay