ஆக.....
மொத்ததில் இந்த ஆள எவனோ நல்லா பவுடர் போட்டு பொட்டு வச்சு நம்மட்ட முதல்வர் என்று காட்டி அவனுக மாபியா சாம்ராஜியம் நடத்திட்டு இருக்கானுக..😂
#பொட்டுமாமா
திரு நடிகர் நடன இயக்குநர் லாரன்ஸ் அவர்களுக்கு, உங்களது அரசியல் வரவை பற்றிய விமர்சனம் எமக்கு அவசியமில்லை. ஓட்டுப்போடத் தகுதியுள்ள யார் வேண்டுமானாலும் வரலாம். டாட்.
ஏ. ஆர் முருகதாஸ் அவர்கள் தனது ரமணா படத்தில் தமிழ்நாட்டு மக்கள் அவ்வளவு சீக்கிரம் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். நம்பிக்கை வைத்தால் உயிரையே கொடுப்பார்கள். மக்களை ஏமாற்றிய தலைவர்கள் இருப்பார்களேயொழிய தலைவர்களை ஏமாற்றிய மக்கள் இல்லை. தமிழ் நாட்டு மக்கள் செண்டிமெண்டல் இடியட்ஸ் இல்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டியிருப்பார். இது இயக்குநர் அண்ணன் முருகதாஸின் பார்வை.
ஆனால் லாரன்ஸ் அவர்கள் நீங்கள் பிஸ்கெட்டும் பிரியாணியும் கொடுத்தால் போதும் என்றது மக்களை சொன்னீர்களா? ஆட்சியாளர்களை விமர்சித்தீர்களா? அல்லது விமர்சகர்களைச் சொன்னீர்களா? தெரியவில்லை. தெரு நா...ய்க்கு பிஸ்கட்டும் பிரியாணியும் கொடுத்தால் போதும் என்ற உங்கள் அறிவு முதிர்ச்சி கேவலமானது என்பது மட்டும் புரிகிறது.
இதுநாள் வரை தாங்கள் உதவி என்ற பெயரில் நாடகமாடியது கொடுத்தது பிஸ்கட்டும் பிரியாணியும்தானா?!
#wearenotsentimentalidiots
முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை அவமதிக்கும், வட இந்திய ஊடகங்களின் வன்மத்தைக் கண்டிக்கிறோம்!
தமிழினத்தின் மீதான வட இந்திய ஊடகத் தாக்குதல்களை முறியடிப்போம்!
2009 ஆம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற இனப்படுகொலையில் இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட துயரம் இன்று வரை உலகத் தமிழர்களின் இதயத்தில் ஆறாத காயமாகவே உள்ளது.
முள்ளிவாய்க்கால் என்பது ஒரு இடத்தின் பெயர் மட்டுமல்ல. அது தமிழர் இரத்தத்தால் எழுதப்பட்ட வரலாற்று வேதனை.
அந்தத் துயர நினைவுகளை மனதில் ஏந்தி தமிழ்நாடு முதலமைச்சர் திரு . விஜய் அவர்கள் வெளியிட்ட “முள்ளிவாய்க்கால் நினைவுகளை இதயத்தில் ஏந்துவோம். கடல் கடந்து வாழும் நம் தமிழ்ச் சொந்தங்களின் உரிமைகளுக்காக எப்போதும் துணை நிற்போம்” என்ற பதிவு மனிதாபிமானத்தின் அடிப்படையிலான உணர்வுப்பூர்வமான வெளிப்பாடே அன்றி, எந்தவிதத் தீவிரவாத ஆதரவும் அல்ல என்பதைத் தமிழக வாழ்வுரிமைக் கட்சி உறுதியாகப் பதிவு செய்கிறது.
ஆனால், சில வடஇந்திய ஊடகங்கள் திட்டமிட்ட வகையில் அந்தப் பதிவைத் திரித்து, தமிழர்களின் இன உணர்வையும் மனிதநேயக் குரலையும் தீவிரவாத அரசியல் என்பது போன்று விவாதிப்பது வன்மையானக் கண்டனத்திற்குரியது.
இது வெறும் அரசியல் விமர்சனம் அல்ல. தமிழர்களின் வரலாற்று வலியையே அவமதிக்கும் செயலாகும்.
ஈழத் தமிழர்களுக்கான ஆதரவு என்பது இன்று தோன்றிய ஒன்று அல்ல. பல தசாப்தங்களாகத் தமிழ்நாட்டின் அரசியல், மாணவர், சமூக, மனித உரிமை இயக்கங்கள் அனைத்தும் ஈழத் தமிழர்களின் உயிர் பாதுகாப்பு, அரசியல் உரிமை மற்றும் நீதி வேண்டி குரல் கொடுத்து வருகின்றன.
அது தமிழின உணர்வு.
அது தாய்மொழி சார்ந்த உறவு.
அது தொப்புள் கொடி இரத்த சொந்தம்.
முன்னாள் முதலமைச்சர் ஜெ.ஜெயலலிதா அவர்களின் ஆட்சி காலத்தில் கூட தமிழ்நாடு சட்டமன்றத்தில், இலங்கையில் நடைபெற்றது திட்டமிட்ட இனப்படுகொலை என்றும், சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், ஈழத் தமிழர்களின் அரசியல் தீர்வு மக்கள் வாக்கெடுப்பின் மூலம் தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பதை இங்கே நினைவூட்ட விரும்புகிறோம்.
இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், கனடா, ஐரோப்பா, ஆஸ்திரேலியா என எங்கிருந்தாலும், தமிழ் என்ற தேசிய பண்பாட்டு அடையாளத்தின் கீழ் இணைந்த மக்களாகவே எங்களை உணர்கிறோம்.
அந்த உணர்வை அவமதிப்பதோ, எங்களின் கண்ணீரை அரசியல் கேலியாக மாற்றுவதற்கோ, எந்த ஊடகத்திற்கும் உரிமையில்லை.
இன்று தமிழ்நாடு இந்தியாவின் பொருளாதார முதுகெலும்பாகத் திகழ்கிறது.
கோடிக்கணக்கான வடஇந்தியத் தொழிலாளர்களும் குடும்பங்களும் தமிழ்நாட்டில் பாதுகாப்பாக வேலை செய்து வாழ்கின்றனர்.
அவர்களுக்கு வாழ்வாதாரம் வழங்கும் மாநிலத்தின் மக்களைப் பிரிவினைவாதிகள் போலச் சித்தரிப்பது, பல்வேறு மொழி வழித் தேசிய இனங்களின் ஒற்றுமையைச் சிதைத்து, பகைமையை ஏற்படுத்திப் பிளவுபடுத்தும் செயலாகவே நாம் கவனிக்கிறோம்.
இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்களை இந்திய மீனவர்கள் என்று குறிப்பிடாமல் தமிழ்நாட்டு மீனவர்கள் என்று தனிமைப்படுத்திப் பேசும் வட இந்திய ஊடகங்கள், இன்று மீண்டும் தமிழர்களை இந்தியாவிற்கு எதிரானவர்களாகச் சித்தரிக்க முயல்கின்றன.
இது திட்டமிட்ட பாசிச கார்ப்பரேட் மனப்பான்மையின் வெளிப்பாடாகும்.
இதைவிட மக்களிடம் பெரிய கேள்வி ஒன்றை எழுப்ப வேண்டிய கட்டாயம் உள்ளது.
இன்று தொலைக்காட்சிகளையும் தேசிய ஊடகங்களையும் கவனித்துப் பாருங்கள்.
நாட்டு மக்களின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிகப்பெரியப் பொருளாதார, தொழில்நுட்ப, சமூக மாற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றங்கள் உலகம் முழுவதும் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கின்றன.
ஆனால் மக்களிடம் தொடர்ந்து திணிக்கப்படுவது என்ன?
முடிவில்லா அரசியல் குழப்பங்கள் மட்டுமே.
உலகளவில் அதிகரித்து வரும் போர்கள் இந்திய பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கப் போகின்றன?
எரிபொருள் மற்றும் எரிவாயு விலை உயர்வால் சாதாரணக் குடும்பங்களின் வாழ்க்கை இன்னும் எவ்வளவு சிரமப்படப் போகிறது?
செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி காரணமாக எதிர்காலத்தில் எத்தனை வேலைவாய்ப்புகள் மாறப்போகின்றன?
பட்டப்படிப்பு முடிக்கும் இளைஞர்களுக்கான வேலை வாய்ப்பு திட்டங்கள் என்ன?
காலநிலை மாற்றத்தால் நாட்டின் விவசாயமும் குடிநீர் பாதுகாப்பும் எந்த நிலைக்கு செல்லப் போகின்றன?
உலக வர்த்தக மாற்றங்கள் சிறு தொழில்கள் மற்றும் நடுத்தர மக்களின் வாழ்க்கையை எப்படிப் பாதிக்கும்?
உணவுப் பொருட்களின் விலை உயர்வைக் கட்டுப்படுத்த அரசுகள் என்ன செய்கின்றன?
மாநிலங்களின் பொருளாதார உரிமைகளில் ஒன்றிய அரசு மேற்கொள்ளும் தலையீடுகள் குறித்து ஏன் திறந்த விவாதங்கள் நடைபெறுவதில்லை?
இந்தியாவின் செல்வமும், வளங்களும் சில கார்ப்பரேட் நிறுவனங்களின் கைகளில் மட்டுமே குவிவதை ஏன் ஊடகங்கள் பேச மறுக்கின்றன?