அர்ஜுன் சம்பத் அறிக்கை! கோரிக்கை! புகார் மனு!
இலங்கையைச்சேர்ந்த ஈழத் தமிழர் சிவராஜா அனோஜனுக்கு மரண தண்டனை தீர்ப்பு கொடுத்துள்ளது சவுதி அரேபியா உயர் நீதிமன்றம்.
சிவபெருமானையும் சிவலிங்கத்தையும் கேவலமாக பேசுகிறான் இலங்கையை சேர்ந்த ஒரு இஸ்லாமிய தமிழன். மானமுள்ள எந்த இந்து சைவத்தமிழ் இளைஞனாலும் இதை சகித்துக் கொள்ள இயலாது எனும் நிலையில்,
பொறியாளராக படித்த, பண்பட்ட, பல விருதுகளை படிப்பில் வாங்கிய அரபியாவில் பணியாற்றுகின்ற சிவராசா அனோஜன் எனும் இளைஞன், "என் சிவனை பழித்து விட்டானே" என மனம் வருந்தி இஸ்லாமிய மதத்தை தோற்றுவித்த முகம்மது நபி குறித்து அதே பாணியில் திருப்பி பதில் தருகிறார். எதிர்வினை ஆற்றுகிறார்
ஒரு சிலர் சௌதியில் இருந்துக் கொண்டு அவர் அவ்வாறு பேசியிருக்கலாமா? எனக் கேட்கிறார்கள். நியாயம் தான் அந்த நாட்டு சட்டப்படி இது தவறுதான் நம் தாய் தந்தையை ஒருவன் கேவலமாக பேசும் போது நாம் நம் சூழ்நிலைகள் குறித்து யோசிப்போமா? உடனடியாக எதிர்விணை ஆற்றி விடுவோம் அல்லவா?
ஆனால் சௌதியில் வசிக்கும் பணியாற்றும் இலங்கையை சேர்ந்த தமிழ் இஸ்லாமியர்கள், சக நாட்டவன் என்று கூட பார்க்காமல், அனோஜன் பதில் கொடுத்ததை மட்டும் எடுத்து, சவுதி அரசாங்கத்திற்கு அதை மொழிமாற்றம் செய்து புகார் கொடுக்கிறார்கள்.
சவுதி அரேபிய அரசோ, நடந்தது எதையும் பரிசீலிக்காமல், கீழ் நீதிமன்றத்தில் ஐந்தாண்டு கால சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து தீர்ப்பளிக்கிறது. இதனை எதிர்த்து விடுதலை வேண்டி மேல் நீதிமன்றம் செல்கிறார்கள் சவுதி அரேபியா மேல் நீதிமன்றம் அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கிறது. அனோஜனின் குடும்பம் கதறி துடிக்கின்றது.
ஆக, இந்தியா இலங்கை போன்ற இஸ்லாமியர் அல்லாதோர் பெரும்பான்மையாக வசிக்கும் நாடுகளில் இஸ்லாமியர்கள் சம உரிமையுடன் விவாதிக்கலாம். ஆனால் சவுதி அரேபியா பாகிஸ்தான் வங்கதேசம் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளில் சிறுபான்மையாக வசிக்கும் இந்துக்கள் எதிர்வினை ஆற்ற கூட உரிமை இல்லை
இந்த இலங்கை சிங்கள பௌத்த அரசு என்ன செய்துக் கொண்டிருக்கிறது? இதே ஒரு பௌத்தர் இவ்வாறு எதிர்விணையாற்றி அவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டிருந்தால் இலங்கையில் வாழும் முஸ்லீம்களின் கதி என்னவாகி இருக்கும்?
இலங்கை குடிமகன் ஈழத் தமிழ் இளைஞன் இந்து சைவ சமயத்தைச் சார்ந்தவனாக இருக்கின்ற காரணத்தால் சிங்கள பௌத்த அரசாங்கம் போதிய அக்கறை செலுத்தவில்லை.
அனேஜனின் பெற்றோர் இலங்கை அரசாங்கத்திடமும் எதிர்க்கட்சித் தலைவரிடத்திலும் அனேஜனின் உயிரை காப்பாற்றிட முயற்சிக்குமாறு வேண்டுகோள் வைத்துள்ளனர்.
நடந்துள்ள சம்பவம் இந்து சமயத்தை குறிப்பாக சிவலிங்கத்தை அவமதித்தது காரணமாக நடைபெற்றுள்ள எதிர்வினையாகும். உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் சிவ பக்தர்கள் அனேஜனின் குடும்பத்திற்கு ஆதரவாக இருக்க வேண்டும்.
இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் இந்திய திருநாடு அரபிய நாட்டுடன் நல்லுறவைக் கொண்டுள்ளது. அனேஜனின் உயிரை காப்பாற்றிட இந்திய அரசாங்கமும் முயற்சிக்க வேண்டும். உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் அனுஜனின் விடுதலைக்கு குரல் கொடுக்க வேண்டும். என்கிற வேண்டுகோளை இந்து மக்கள் கட்சி சார்பில் முன்வைக்கின்றோம்.
இலங்கையில் அனேஜனின் குடும்பத்தை சந்தித்து ஆறுதல் கூறுவதற்கு, உரிய சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, இலங்கை இந்து தமிழர்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
சர்வதேச சமூகம் மனித உரிமைகள் ஆணையம் ஐக்கிய நாடுகள் சபை ஆகியவை இது விஷயத்தில் தலையிட்டு அனேஜனின் உயிரை காப்பாற்றிட வேண்டும்.
சவுதி அரேபிய மன்னர் நினைத்தால் பொது மன்னிப்பு கொடுக்கும் அதிகாரம் அவருக்கு உண்டு.
உலகத்தில் உள்ள அத்தனை சிவ பக்தர்களும் இந்துக்களும் சவுதி அரேபிய மன்னருக்கு அனேஜனின் மரண தண்டனை ரத்து செய்யும் கோரிக்கையை முன் வைக்கும்படி வேண்டுகிறோம்.
தயவு செய்து இந்த செய்தியை நம் பிரதமர் மோடி அவர்களுக்கு கொண்டு செல்லுங்கள். அவர் ஒருவரால்தான் இதில் தலையிட்டு ஏதேனும் செய்ய இயலும். தயவு செய்து அனைவரும் இது குறித்து எழுதி அந்த இளைஞனை பாதுகாக்க நடவடிக்கை எடுங்கள். உங்கள் ஒவ்வொருவருக்கும் தெய்வ அருள் நிச்சயமாக கிடைக்கும். குறைந்தபட்சம் அனோஜனுக்காக பிரார்த்தனையாவது செய்யுங்கள்.
இந்து மக்கள் கட்சி தமிழகம்
சபாநாயகர் முதல் தவெக சட்டமன்ற உறுப்பினர் வரை, தாங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்பதைக் காட்டிக் கொள்ளும் இடமாக, சட்டமன்றம் மாறியிருக்கிறது.
தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை செயல்பாடுகள், மக்களைக் கோவிலுக்கு வரவிடாமல் தடுப்பதாகவே இருக்கின்றன. மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் அதற்கு ஒரு உதாரணம். நாம் ஆட்சிக்கு வரும்போது, தமிழகத்தில் இந்து அறநிலையத் துறை நீக்கப்படும்.
1000 வருடங்கள் பழமையான சோழர்களின் அணைக்கட்டு கற்கள். தோண்டி எடுத்து, குழி தோண்டி புதைக்கிறார்கள்... தமிழர்கள் தானே, கேள்வி கேட்க நாதி இருக்காது.
.@CollectorCbe எப்போதும் போல நீங்கள் வேடிக்கை மட்டும் பாருங்கள்.
உத்தரவிட்ட SDO உடனடியாக suspend செய்யப்பட வேண்டும்.
.@CMOTamilnadu
30 வருஷமா.. தடை பண்றாங்க..
விநாயகர் கொண்டு போகவும் விட மாட்றாங்க..
சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் மசூதி இருப்பதால்,
விநாயகர் செல்லத் தடை...
மாநில பொதுச்செயலாளர் மணலி மனோகர் கண்டனம்...
#hindumunnani#ganeshchathurthi#சனாதனவிநாயகர்#vinayagar
#மண்டாடி படத்தின்
கதை தொண்டி மண்ணின் மைந்தர்கள் சோழர் படைகளான வன்னிய குல சத்திரியர்களான..
படையாட்சிகள் மற்றும் கண்டியதேவர் ஆவர்கள்
பாரம்பரியமாக போர் தெய்வமான தொண்டியம்மன் பிடாரி அம்மன் கோயில் விழாவை முன்னிட்டு நடக்கும் போட்டி ஆகும்
சுற்றியுள்ள வன்னியர் ஊர்களிலும் நடக்கிறது .
"வந்தே மாதரத்திற்கான அர்த்தம் என்னவென்றால் நான் எனது அம்மாவை வணங்குகிறேன்... இதில் எங்காவது மதம் இருக்கிறதா ? மதமே இல்லாத ஒரு அர்த்தமுள்ள நாடு இந்தியா மட்டுமே" - நடிகர் ரஞ்சித் பேச்சு
#Thiruvarur | #ActorRanjith | #VandeMataram | #PolimerNews
ஒப்பந்தத் தொழிலாளர்களாக மக்களை நாடுகடத்தவும்,மதம் மாற்றவும் #பிரிட்டிஷ் கொள்ளையர்கள் செயற்கைப் பஞ்சத்தை உருவாக்கினார்கள்.
இப்படிப்பட்ட பிரிட்டிஷ் ஆட்சியை விரும்பியவனே #ஈவெரா மற்றும் அவரது தெலுங்கு திராவிட கோஷ்டிகள்.
RIP ஐயா #சாலமன்_பாப்பையா
நம் இனம் இருக்கும் வரை உங்கள் தியாகம் அழியாது...
இந்த போராளி பாட்டியின் உணவு விதைகளாக விதை பட்டுள்ளது போர் இனத்தில்
MBC 20% இந்த பெண்கள் போல லட்சம் பெண்களாலும் போராடி பெற்றது..
வீர வணக்கம்
நடிகர் பின்னால் நாடகம் போடும் பாட்டி இல்ல
போராளி பின்னால்
வெகுஜன மக்களுக்கு அங்கே கட்டைகளை கட்டி போட்டு , அவர்களை அங்கிருந்துஅப்புறப்படுதிவிட்டு ,
மார்ட்டின் குடும்பத்தை மதுரை மீனாட்சி அம்மனுக்கு முன் அமர வைக்கும் அதிகாரம் வந்துள்ளது உண்மையாகவே அதிர்ச்சி அளிக்கிறது,
மடாதிபதியா?😳
லாட்டரி அதிபதியா ?💥
விடை இதோ .
இது "அன்பு மொழி" புதிய ஏற்பாட்டின் ஆட்சி என்பதால் ஆதீனம் கூட பின்னால் அமர்ந்து இருக்கலாம் ,
எல்லோரும் மயான அமைதி Mode 🤦🙅🙇
#அர்ஜுன்சம்பத் கோரிக்கை மற்றும் கண்டனம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் பள்ளிவாசல் வாயிலில் காவல்துறையினர் முன்னிலையில் “பாரத் மாதா கி ஜே” என்று முழக்கமிட்டால் குண்டு வெடிக்கும் என்ற பொருளில் மிரட்டல் விடுக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் மிகவும் தீவிரமானது.
இந்தக் குற்றச்சாட்டு உண்மையா என்பதை CCTV, வீடியோ, ஆடியோ மற்றும் நேரில் இருந்த காவல்துறை அதிகாரிகளின் வாக்குமூலங்களின் அடிப்படையில் உடனடியாக விசாரித்து, குற்றம் உறுதி செய்யப்பட்டால் பொருந்தக்கூடிய BNS மற்றும் பிற சிறப்பு குற்றச்சட்டங்களின் கீழ் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், இத்தகைய அச்சுறுத்தல் குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், உலகப் புகழ்பெற்ற ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்பை தமிழக அரசு உடனடியாக அதிகரிக்க வேண்டும்.
ஆண்டாள் கோவிலுக்குள் வரும் பக்தர்கள், பணியாளர்கள், ஒப்பந்தப் பணியாளர்கள் மற்றும் பிற நபர்கள் என அனைவரையும் உரிய பாதுகாப்புச் சோதனைக்குப் பின்னரே அனுமதிக்க வேண்டும். நுழைவாயில்களில் மெட்டல் டிடெக்டர், கைப்பை/பொருள் பரிசோதனை, CCTV கண்காணிப்பு மற்றும் தேவையான வெடிகுண்டு தடுப்பு பாதுகாப்பு ஏற்பாடுகள் வலுப்படுத்தப்பட வேண்டும்.
விருதுநகர் மாவட்டத்தில் விநாயகர் ஊர்வலம் தொடர்பாக எழுந்துள்ள மோதல் மற்றும் கொலை மிரட்டல் குற்றச்சாட்டுகளையும் பாரபட்சமின்றி விசாரித்து, குற்றம் நிரூபிக்கப்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவல் உண்மை என்பது விசாரணையில் உறுதி செய்யப்பட வேண்டும்; இவர்களுக்கு இருப்பவர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொள்ள வேண்டும் .ஆனால் கோவில் பாதுகாப்பில் எந்த அலட்சியத்திற்கும் இடமளிக்கக் கூடாது. பக்தர்களின் பாதுகாப்பே அரசின் முதல் கடமை.
தமிழக அரசும் காவல்துறையும், தேசிய புலனாய்வு முகமையும் NIA-உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்
ஈ வெ ரா வின் பிறந்த நாளை சாக்காக வைத்து தேசவிரோத கருத்துக்களை விதைப்பது ... விநாயகர் பிறந்தநாளை முன்னிட்டு பீப் பிரியாணி தின்பது ....இதுதான் பெரியாரிசமா ? அடா அடா .
#evramasamynayakkar