Big Turning Point
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தமிழக வெற்றி கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பவே இல்லை என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி டி ஆர் நிர்மல் குமார் உள்ளிட்ட கூறிவந்தனர்
இன்னொரு பக்கம் கூட்டணி கட்சியின் தலைவரான காங்கிரஸ் கட்சியின் மாணிக்கம் தாகூர் அருள் விக்னேஷ் பாவம் என கூறியிருந்தார்
ஆனால் இந்த விவகாரத்தில் தற்பொழுது மிகப் பெரிய திருப���புமுனை ஏற்பட்டுள்ளது
மதுரையில் மாணவர்களுக்கான பாலியல் துன்புறுத்தல் தடுப்பு சட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற போது அதில் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி கலந்து கொண்டு மாணவிகளிடம் பேசினார்
அப்போது அவர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஒரு எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பி உள்ளார் அது பணியிடத்தில் துன்புறுத்தல் கொடுப்பதாக இல்லையா ? மாவட்ட ஆட்சியரின் கணவர் புகார் கொடுத்துள்ளார் இன்று வரை மாநில அரசின் காவல்துறை நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறது. இது பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் செய்வதாகாதா? என வெளிப்படையாக பேசியுள்ளார்
இந்த நிகழ்ச்சியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் பெண் நீதிபதிகள் ஐந்துக்கும் அதிகமான கலந்து கொண்டனர்
நிச்சயமாக நீதிபதிகளுக்கு இது தொடர்பான விஷயம் தெரியாமல் இப்படி பேச மாட்டார்கள். அப்படி என்றால் தமிழக வெற்றிக் கழக எம்எல்ஏ மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியது உண்மைதான்
பிறகு ஏன் இன்னமும் அவர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறார்��ள் இதுவே எதிர்க்கட்சியை சேர்ந்தவர்களோ அல்லது சாமானிய பொதுமக்களோ செய்தால் முதல் விஜய் தலைமையிலான தமிழ்நாடு காவல்துறை இப்படித்தான் மௌனம் காப்பார்களா?
அப்படி என்றால் ஆளும் க��்சிக்கு ஒரு நியாயம் மற்றவர்களுக்கு ஒரு நியாயமா?
இப்படி பொதுமக்கள் கேட்டால் அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
பெண் பாதுகாப்பு தான் எங்களது அடிப்படை என பிரச்சார மேடைகளில் தொடர்ந்து பேசும் முதல்வர் விஜய் அதை நடைமுறையில் பின்பற்றாமல் இருப்பது ஏன் என மக்கள் கேட்பார்களே அதற்கு என்ன பதில் சொல்வார்கள்?
இப்படி நடவடிக்கை எடுக்காமலே இருந்தால் அது மிகப் பெரிய தவறான முன்னுதாரணமாக மாற�� கட்சிக்காரர்களுக்கு ஒரு தைரியத்தை கொடுத்து அவர்கள் மற்ற பெண்களிடம் அத்து மீறினார்கள் என்றால் அது எவ்வளவு பெரிய குழப்பத்தை ஏற்படுத்தும் பிரச்சினைகளை ஏற்படுத்தும் இதை தடுக்க என்ன செய்யப் போகிறார்கள் என மக்கள் கேட்பார்களே அதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?
@AttomLegend Nanba ethuna podanum nu podatha.front camera la video edutha video mirror image la varum.sari atha vidu.mathavanga ellarum yen wrong side la drive panranga?