இன்று சேப்பாக்கம் ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் அலுவலக கூட்ட அரங்கத்தில், மாண்புமிகு சமூக நீதித்துறை அமைச்சர் திரு. வன்னி அரசு அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாநில அளவிலான ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பங்களிப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்றோம்..
குரலற்றவர்களின் குரலாக
அரண் அமைப்பும், திருப்பெரும்பூதூர் இருளர் பழங்குடியினர் மக்கள் நலச்சங்கமும்..
- பாலா
@aranvolunteers@KanchiCollector
இருளர் பழங்குடியினர் கல்வியில் சிறக்க..
நேற்று காட்ரம்பாக்கம் கிராமத்தில் உள்ள தென்றல் நகர் இருளர் பழங்குடியினர் குடியிருப்பில், 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களையும் அவர்களின் பெற்றோர்களையும் சந்தித்தோம்..
அவர்கள் கல்விப் பயணத்தில் எதிர்கொள்ளும் சவால்களைப் புரிந்துகொண்டு, அதற்கான தீர்வுகள், சவால்களை நேர்மறையாக அணுகும் வழிமுறைகள், கல்வியில் சிறந்து விளங்க பின்பற்ற வேண்டிய ஒழுக்கம் மற்றும் பழக்கவழக்கங்கள் குறித்து கலந்துரையாடினோம். மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், நம்பிக்கையையும், ஊக்கத்தையும், உற்சாகத்தையும் வழங்கிய பயனுள்ள சந்திப்பாக இது அமைந்தது..
நெடும் பயணம் தொடர்கிறது..
அடுத்த கட்டமாக, இன்று இரவு மொளச்சூர் இருளர் குடியிருப்பில் மாணவர்களையும் பெற்றோர்களையும் சந்திக்க உள்ளோம்..
ஒருங்கிணைப்பு: நம்ம @KThandhoni
- பாலா, @aranvolunteers
Why are the minister offices' e-mail ID removed from the Tamil Nadu Government website¿
Only the secretary offices' e-mail IDs are being displayed now. Earlier each minister's office had an individual e-mail ID.
Check and resolve ASAP.
@CMOTamilnadu@TVKVijayHQ@BussyAnand@AadhavArjuna@arunraajkg
உலக இரத்தக் கொடையாளர் தினக் கொண்டாட்டம் 2026
காஞ்சிபுரம் மாவட்ட அரசுத் தலைமை மருத்துவமனையின் குருதி மையம் சார்பில் இன்று (30-ஜூன்-2026) ஒருங்கிணைக்கப்பட்ட உலக இரத்தக் கொடையாளர் தினக் கொண்டாட்டத்தில் நாம் பங்கேற்றோம்.
உலகெங்கும் உள்ள தன்னார்வ இரத்தக் கொடையாளர்களை ஊக்குவிக்கவும் தன்னார்வ இரத்ததானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் உலக இரத்தக் கொடையாளர் தினமானது ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 14 அன்று கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டின் கருப்பொருள், 'மனிதநேயத்தின் ஒரு துளி: உதிரம் பகிருங்கள், உயிரைக் காப்பாற்றுங்கள்' என்பதாகும்.
திருப்பெரும்பூதூரில் தன்னார்வ இரத்த தான முகாம்களையும் அவசர இரத்தத் தேவைகளையும் நாம் தொடர்ந்து ஒருங்கிணைத்து வருகிறோம். உயிர்கள் காக்கும் இந்தப் பெரும் பணியை நாம் தொடர்ந்து முன்னெடுத்து வருவதால் இன்றைய கொண்டாட்டத்திற்கு நம்மை அழைத்திருந்தனர்.
இந்தக் கொண்டாட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தின் மாவட்ட வருவாய் அலுவலர் திருமிகு. திவ்யஸ்ரீ அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று இரத்தக் கொடையாளர்களைப் பாராட்டினார். இந்நிகழ்வில் சுகாதாரத் துறையைச் சேர்ந்த அலுவலர்களும் பங்கேற்றனர்.
திருமிகு. திவ்யஸ்ரீ அவர்கள் திருப்பெரும்பூதூர் வருவாய்க் கோட்டத்தின் முதல் கோட்டாட்சியராகப் பணிபுரிந்தார். 2020ஆம் ஆண்டு நம்முடைய எழில்வனம் குறுங்காட்டில் நடைபெற்ற உலக இரத்தக் கொடையாளர் தினக் கொண்டாட்ட நிகழ்வில் அவர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று மரக்கன்று நடவு நிகழ்வைத் தொடங்கி வைத்த தருணத்தைத் தற்போது நினைவுகூர்கிறோம்.
இன்றைய கொண்டாட்டத்தில் நம்முடைய தொடர் மகளிர் இரத்தக் கொடையாளர்கள் திருமிகு. கிருஷ்ணகுமாரி, திருமிகு. மோகனப்பிரியா, திருமிகு. சத்தியசுந்தரி மற்றும் திருமிகு. திவ்யா ஆகியோருக்குப் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டன. நம்முடைய தொடர் இரத்தக் கொடையாளர் திரு. சூர்யமோகன் அவர்களுக்கும் பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் சரியான நேரத்தில் கலந்துகொள்ள காலை 6:30 மணிக்குத் திருப்பெரும்பூதூரில் இருந்து புறப்பட்டு 7:30 மணிக்குக் காஞ்சிபுரம் சென்றுள்ளனர் நம் தன்னார்வலர்கள். 9:30 மணிக்கு நிகழ்வு நிறைவடைந்தது.
பாராட்டுச் சான்று பெற்ற இரத்தக் கொடையாளர்களுக்குப் பாராட்டுகள். இந்தப் பாராட்டுகளை நம் இரத்தக் கொடையாளர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கின்றோம்.
தன்னார்வ இரத்தக் கொடையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு இந்நிகழ்வை ஒருங்கிணைத்த குருதி மையத்திற்கும் நிகழ்வில் பங்கேற்றவர்களுக்கு சிறப்பான விருந்தோம்பல் வழங்கிய பணியாளர்களுக்கும் நமது பாராட்டுகள்!
உயிர்கள் காக்கும் பணியைப் பொறுப்புணர்வுடன் தொடர்ந்து மேற்கொள்வோம். தன்னார்வ இரத்தக் கொடையாளராக இணைந்து உதிரம் பகிர்ந்து உயிர்கள் காத்திடக் கீழுள்ள இணைப்பில் பதிவு செய்திடுங்கள்.
https://t.co/KeBOAX0kG1
#அரண் #திருப்பெரும்பூதூர் #தன்னார்வம் #உதிரம்பகிர் #உதிரம் #ARAN #Blood #BloodDonation #DonateBloodSaveLives #BeAHeroDonateBlood #GiveBlood #BloodDonors #SaveLives #LifesavingAct #EveryDropCounts #Volunteerism #Sriperumbudur #WBDD #WHO
🌱 விதைகள் – அரண் அமைப்பின் மாதாந்திர நிதிப்பங்களிப்புத் திட்டம்:
-----------------------------------------
விதைகள் எனும் அரண் அமைப்பின் மாதாந்திர நிதிப்பங்களிப்புத் திட்டத்தில் நீங்களும் இணைந்து, சமூக மாற்றப் பயணத்தின் ஒரு பகுதியாகுங்கள்.. உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களையும் இந்த முயற்சியில் இணைத்திடுங்கள்..
விதைகள் திட்டத்தில் இணைவோருக்காக:
📞 புதியதாக பதிவு செய்பவர்களை எங்கள் நிர்வாகக் குழு தொடர்புகொண்டு நன்றி தெரிவிக்கும்..
💌 புதிய சந்தாதாரர்களுக்கு நன்றிக் கடிதம் அனுப்பப்படும்.
📅 ஒவ்வொரு மாதமும் 5-ஆம் தேதி பங்களிப்பு நினைவூட்டல் அனுப்பப்படும்..
🧾 நிதிப்பங்களிப்பு பெற்ற 48 மணி நேரத்திற்குள் ரசீது பகிரப்படும்.
திட்டத்தில் இணைய பதிவு செய்யுங்கள் :
https://t.co/OKURkt8tUH
வாட்ஸப் : 7708248679
ஒன்றிணைவோம்! மாற்றத்தை உருவாக்குவோம்! 🌱
- பாலா, @aranvolunteers
#Aran #Aran_Vidhaigal #MonthlyContribution #VidhaigalClub #Volunteerism
Searched for this and looking at this post from 2021 now.
Looking at this for the nth time.
Mr. @prabhusean7 IAS has been a real visionary with this plan.
There is a great need for such a plan in Sriperumbudur Block. We have been demanding this for quite some time. We are dreaming of a better world for the Irula Tribes in Sriperumbudur.
Gave a representation to the Honourable Social Justice Minister Mr. @VanniTamizhVCK regarding the same. Thinks are now looking positive.
செய்வோம்!
திருப்பெரும்பூதூரைச் சேர்ந்த Instagram influencer ஒருவர் 50 விளிம்புநிலை மக்களுக்கு வயிறார விருந்து வழங்க அரண் அமைப்பை அணுகியுள்ளார்..
சமூக அக்கறையுடன் முன்வந்த அவருக்கு மனமார்ந்த நன்றி!
#மனிதர்கள்_மகத்துவமானவர்கள்
நமது முறையீட்டைத் தொடர்ந்து, செல்லப்பெருமாள் நகர் நியாய விலைக் கடையில் முறையின்றி அகற்றப்பட்டு புதிதாக எழுதப்பட்ட பெயர்கள் தற்போது அழிக்கப்பட்டு வருகின்றன..
உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு பாராட்டுகள்.. @KanchiCollector
நல்லது நடக்கட்டும்..
மக்கள் நலனுக்காக நியாய விலைக் கடை விரைவில் திறக்கப்படட்டும்..
- பாலா, @aranvolunteers
திருப்பெரும்பூதூர் த.வெ.க வின் கவனத்திற்கு
இது சரியல்ல!
செல்லப்பெருமாள் நகரில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை, மூன்று ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது.
அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில், அரண் அமைப்பு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டது. அதன் பலனாக, வரும் ஜூலை மாதத்தில் இந்த நியாய விலைக் கடை திறக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்கள் எங்களுக்கு உறுதியளித்துள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் நிதியில் கட்டப்பட்ட கட்டிடத்தில் இருந்த அவரின் பெயர் நேற்று அகற்றப்பட்டு தற்போதைய சட்டமன்ற உறுப்பினரின் பெயர் எழுதப்பட்டிருக்கிறது.. மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசுத் திட்டங்களின் வரலாற்றை மாற்றும் முயற்சியாகவே இது பார்க்கப்படும். எந்த நிதியில் கட்டப்பட்டது என்பதே பதிவாக இருக்க வேண்டும். ஆட்சி மாறினாலும் அந்த உண்மை மாறாது..
இத்தகைய நடவடிக்கை த.வெ.க. அரசின் நல்ல பெயருக்கும் தேவையற்ற விமர்சனத்தை ஏற்படுத்தும்.
இதற்கு அனுமதி வழங்கியது யார்?
@KanchiCollector அவர்கள் இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?
மக்களின் பணத்தில் கட்டப்பட்ட கட்டடங்களின் வரலாறு மாற்றப்படக் கூடாது. உண்மையே நிலைக்க வேண்டும்.
- பாலா, @aranvolunteers@Chief_Secy_TN@CMOTamilnadu
திருப்பெரும்பூதூர் த.வெ.க வின் கவனத்திற்கு
இது சரியல்ல!
செல்லப்பெருமாள் நகரில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட நியாய விலைக் கடை, மூன்று ஆண்டுகளாக திறக்கப்படாமல் இருந்தது.
அதை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்ற நோக்கில், அரண் அமைப்பு தொடர்ந்து முயற்சி மேற்கொண்டது. அதன் பலனாக, வரும் ஜூலை மாதத்தில் இந்த நியாய விலைக் கடை திறக்கப்படும் என்று சம்பந்தப்பட்ட அலுவலர்கள் எங்களுக்கு உறுதியளித்துள்ளனர்.
இந்நிலையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் நிதியில் கட்டப்பட்ட கட்டிடத்தில் இருந்த அவரின் பெயர் நேற்று அகற்றப்பட்டு தற்போதைய சட்டமன்ற உறுப்பினரின் பெயர் எழுதப்பட்டிருக்கிறது.. மக்கள் வரிப்பணத்தில் உருவாக்கப்பட்ட அரசுத் திட்டங்களின் வரலாற்றை மாற்றும் முயற்சியாகவே இது பார்க்கப்படும். எந்த நிதியில் கட்டப்பட்டது என்பதே பதிவாக இருக்க வேண்டும். ஆட்சி மாறினாலும் அந்த உண்மை மாறாது..
இத்தகைய நடவடிக்கை த.வெ.க. அரசின் நல்ல பெயருக்கும் தேவையற்ற விமர்சனத்தை ஏற்படுத்தும்.
இதற்கு அனுமதி வழங்கியது யார்?
@KanchiCollector அவர்கள் இதுகுறித்து என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார்கள்?
மக்களின் பணத்தில் கட்டப்பட்ட கட்டடங்களின் வரலாறு மாற்றப்படக் கூடாது. உண்மையே நிலைக்க வேண்டும்.
- பாலா, @aranvolunteers@Chief_Secy_TN@CMOTamilnadu
கடந்த ஆண்டு Field Work-க்காக அரண் அமைப்பைத் தேடி வந்த RGNIYD கல்லூரி மாணவர்களுக்கு, அரண் கற்றல் மையத்தை அறிமுகப்படுத்தும் வாய்ப்பு கிடைத்தது.. அது இரு தரப்பினருக்கும் அர்த்தமுள்ள கற்றல் அனுபவமாக அமைந்தது..
ஓராண்டிற்குப் பிறகு, தங்களின் கல்லூரிப் படிப்பு நிறைவடையும் தருணத்தில், அந்த மாணவர்களில் இருவர் மீண்டும் எங்களைத் தொடர்புகொண்டனர்.. தாங்கள் பெற்ற Pocket Money-இலிருந்து அரண் கற்றல் மையக் குழந்தைகளுக்காக நோட்டுப் புத்தகங்கள், எழுதுப்பொருட்கள் மற்றும் இனிப்புகளை வாங்கி, நேரில் வந்து குழந்தைகளைச் சந்தித்து வழங்கினர். மேலும், அவர்களின் கல்வி மற்றும் எதிர்காலப் பயணத்திற்கு மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தனர்..
கேரளாவைச் சேர்ந்த இந்த இளம் மாணவர்கள், எதிர்காலத்தில் எந்த மாநிலத்தில் பணியாற்றினாலும், இதே மனிதநேயமும் சமூக அக்கறையும் அவர்களின் செயல்களில் தொடர்ந்து ஒளிரட்டும். அவர்களின் பங்களிப்பு பலரது வாழ்வில் நல்விளைவுகளை ஏற்படுத்தட்டும்..
மக்கள் மகத்துவமானவர்கள்! 💚
- பாலா, @aranvolunteers
#Aran #RGNIYD #SocialWork #Humanity
இருளில் தள்ளப்பட்ட இருளர் பழங்குடியினக் குடும்பங்கள்!
12°59'59.7"N 79°54'20.4"E
கிளாய் கிராமம்,
திருப்பெரும்பூதூர் வட்டம்,
காஞ்சிபுரம் மாவட்டம்
பட்டா வழங்கப்பட்ட இடத்தில் மின்விளக்கு வசதி கூட இல்லாத சூழல்.
5 இருளர் பழங்குடியினக் குடும்பங்கள் தங்கள் குழந்தைகளுடன் கடந்த ஒரு வாரமாக இருளில் வசித்து வருகின்றனர்.
இதுகுறித்து அதிகாரிகளுக்குத் தெரிவித்தும், இதுவரை அங்கு மின்விளக்குகள் அமைக்கப்படவில்லை.
எவ்வளவு சொல்லியும் செயல்திட்டத்தை உருவாக்க மறுக்கிறது காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம்.
@KanchiCollector
இருளர் பழங்குடியின மக்களெல்லாம் மனிதர்கள் இல்லையா?????
@VanniTamizhVCK@Chief_Secy_TN@CMOTamilnadu@TVKVijayHQ@AadhavArjuna@arunraajkg@BussyAnand@ncsthq
திருப்பெரும்பூதூருக்காக இன்று நாள் முழுதும் உழைத்தோம்..
அதிகரித்துவரும் வெப்பத்தைத் தணிக்க,
சுற்றுச்சூழலை மேம்படுத்த, பறவைகளை மகிழ்விக்க, 2019, 2020-க்குப்பின் காடு செய்ய நகராட்சியுடன் இவ்வாண்டு இணைந்திருக்கிறோம்..
கடுமையாக உழைத்த அத்தனைத் தன்னார்வலர்களுக்கும், 15 மணி நேரத்திற்கும் மேல் களத்தில் நின்ற சூர்யாவுக்கும் @SreeSuryamohan எனது மனமார்ந்த பாராட்டுகள்..
#காடு_செய்வோம்
- பாலா, @aranvolunteers