தினமும் பொய்களை மட்டுமே பேசி ஆட்சிக்காலத்தை ஓட்டிவிடலாம் என நினைக்கும் இந்த ஜென்மங்களை எதில் சேர்ப்பது? நல்ல மாட்டுக்கு ஒரு சூடு தான். ஆனால், இவர்களுக்கு எத்தனை சூடு போட்டாலும் திருந்த மாட்டார்கள் போல.
#Wingகுரல்
கிளை முதல் தலைமை வரைக்குமான பொறுப்புகளுக்குத் தேர்தல்தான் நடக்கப்போகிறது என்று தலைவர் சொல்லிவிட்டார். அது அனைத்துமே சுதந்திரமான – நேர்மையான தேர்தலாகத்தான் நடைபெறும். அப்போதுதான் புதிய நிர்வாகிகள், இளைஞர்கள் பொறுப்புகளுக்கு வருவார்கள். அதற்கு நீங்கள் தான் ஒத்துழைக்க வேண்டும்.
கழகத் தலைவர் திரு @mkstalin அவர்கள்
2018-ஆம் ஆண்டு இதே நாளில், தி.மு.க. தலைவராக உடன்பிறப்புகளால் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன்.
அப்போது, “நாம் யார்? நம் கொள்கைகள் என்ன? நமக்குள் இருக்கும் குறைகள் என்ன? காலத்திற்கேற்ப நாம் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் எவை?
காலத்தின் மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றிக் கொள்ளாத விலங்கோ, இனமோ இந்த மண்ணில் நீடித்திருப்பதில்லை. மாற்றங்கள் நம்மில் இருந்து தொடங்கட்டும்” எனப் பேசியிருந்தேன்.
கழகத் தலைவராக 9-ஆவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் நாளில், அப்படி ஒரு மாற்றத்தை, மறுசீரமைப்பை அறிவித்துள்ளேன். கழகத்தின் நலனை முன்னிறுத்திச் செய்யப்பட்டிருக்கும் இந்த மறுசீரமைப்புக்குக் கழகத்தினர் அனைவரும் துணைநிற்க வேண்டும்.
உங்களின் துணையோடு மீண்டும் நம் கழகத்தை வெற்றிக்கு அழைத்துச் செல்வேன்!
(1/2)
#DMK4TN
தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் பேரியக்கமாம் தி.மு. கழகத்தின் தலைவராக கழகத் தலைவர் @mkstalin அவர்கள் பொறுப்பேற்ற நாள் இன்று!
தந்தை பெரியார் -பேரறிஞர் அண்ணா- முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், உறுதியான கொள்கைப் பிடிப்புடன், தொண்டர்களைத் தொய்வின்றி வழிநடத்தி- அமைப்பின் பலத்தை வலுப்படுத்தும், கழகத் தலைவருக்கு உறுதுணையாக நிற்போம்!
இந்த இயக்கத்தை அழிக்க நினைக்கும் வஞ்சகர்களை, வீழ்த்த கழகத் தலைவர் தலைமையில் அணிதிரள்வோம்!
#DMK @arivalayam
Honoured to be a guest and part of the jury at MSME Hackathon 6.0, held at JJ College of Engineering and Technology.
An opportunity to listen to innovative ideas, evaluate promising solutions, and interact with the minds behind them.
A rewarding experience of contributing, evaluating, and inspiring.
Grateful to be a part of MSME Hackathon 6.0.
@TRBRajaa
விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாள் இன்று!
ஆங்கிலேயே ஆதிக்கத்துக்கு எதிராக அன்னைத்தமிழ் மண் காக்க போராடிய மாவீரர் தீரன் சின்னமலையின் புகழ் என்றும் நிலைத்திருக்கும்.
‘சென்னிமலைக்கும் – சிவன்மலைக்கும் இடையே ஒரு சின்னமலை’ என்று வீரமுழக்கமிட்ட தீரன் சின்னமலையின் தியாகத்தையும் – வீரத்தையும் போற்றுவோம்!
#தீரன்_சின்னமலை
#WATCH | "கர்நாடகா செல்ல CM விஜய் திட்டம் போட்டது அவரின் அரசியல் தெளிவின்மையையே காட்டுகிறது.. கர்நாடக அரசுக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர வேண்டும்.."
-திமுகவின் கண்டன ஆர்ப்பாட்டத்தில் மஜக தலைவர் தமிமுன் அன்சாரி பேச்சு
#SunNews | #DMK | #Thanjavur | #ThamimunAnsari
விவசாயிகளின் வாழ்வுரிமையை காக்க #TVK அரசை கண்டித்து தஞ்சையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்கள் உரை: https://t.co/LdGrRUKW5L
#விவசாயவிரோதிவிஜய்
காவிரி விவகாரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் செய்தியாளர்களை கண்டு ஓடுகிறார், திருட்டு லாட்டரி முதல் பவுடர் அமைச்சர் வரை மொத்த அமைச்சரவையும் ஜோக்கர் கூட்டமாக அமைந்துள்ளது!
- மாண்புமிகு தமிழ்நாடு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @udhaystalin அவர்கள்
#விவசாயவிரோதிவிஜய்
ஆங்கிலேய ஆதிக்கத்தை அசரடித்த வீர வித்து தீரன் சின்னமலை நினைவு நாள்!
எத்தனை முறை எத்தகு படைகளைக் கொண்டு தாக்கியும் வெற்றி கொள்ள முடியாத பெருவீரனாகப் போரிட்டவர் தீரன் சின்னமலை.
திப்பு சுல்தானுடன் கூட்டணி அமைத்து பிரிட்டிஷாருக்குச் சிம்ம சொப்பனமாக விளங்கிய விடுதலைப் போராளி.
நேரடியாக எதிர்கொள்ள இயலாத எதிரிகள் சூழ்ச்சியால் அவரைத் தூக்கிலிட்டாலும் அவர் புகழைத் தமிழ்நாடு போற்றிக் கொண்டே இருக்கும்!
#DheeranChinnamalai
காவிரி விவசாயிகளுக்காக எதிர்க்கட்சித் தலைவர் @UdhayStalin தலைமையில் தஞ்சையில் திரண்ட கழகம்!
உழவர் பெருமக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் போராட்டம் பெருகும்!
காவிரி பெருக்கெடுக்க வேண்டிய ஆடிப்பெருக்கு நாளில் டெல்டா விவசாயிகள் ஆதங்கம் பெருக்கெடுக்கப் போராடி வருகின்றனர்!
விவசாயப் பெருங்குடி மக்களின் உணர்வுகளை உரக்கச் சொல்லும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற தோழமைக் கட்சித் தலைவர்கள் @Jawahirullah_MH, @ThamimunansariM, @nellai_mubarak ஆகியோருக்கும், அக்கட்சிகளின் நிர்வாகிகள் உள்ளிட்ட தோழர்களுக்கும், பல்வேறு விவசாயச் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஜூன் 12 வந்து சேர்ந்திருக்க வேண்டிய காவிரி நீர் ஆகஸ்ட் பிறந்தும் வரவில்லை.
ஆடி பதினெட்டில் பொங்கி வரும் புதுப்புனலை வரவேற்ற காவிரிக்கரையின் மைந்தர்கள் #விவசாயவிரோதிவிஜய் ஆட்சியின் சோம்பேறித்தனத்தால் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
தமிழ்நாட்டுக்குத் தண்ணீர் திறந்து விட மறுக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து ஒரு வார்த்தை கூட பேசாத முதலமைச்சரைத் தமிழ்நாடு இப்போதுதான் பார்க்கிறது. அண்டை மாநிலத்தில் திரைப்படம் ஓடுவதற்காக நம் விவசாயிகளின் வாழ்க்கையையா அடகு வைப்பீர்கள்?
முழுக் கடன் தள்ளுபடி என வாழைப்பழம் போல வாக்குறுதி தந்து வெற்றி பெற்றுவிட்டு, விவசாயிகளை ஏமாற்றிய மோசடி ஆட்சியாக இந்தத் த.வெ.க. ஆட்சி நடந்துகொண்டிருக்கிறது.
#MekedatuDam கட்டியே தீருவோம் என அடம் பிடிக்கும் கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தைக்குச் செல்லத் துடியாய்த் துடிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று கர்நாடகத்தில் நடந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் பற்றிய செய்திகளைப் பார்த்தாரா? இங்கு அதேபோல் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்ட முதலமைச்சருக்கு நேரமில்லையா?
விவசாயிகளைச் சந்திக்காமல் புறக்கணித்துவிட்டு, வேளாண் பட்ஜெட்டைத் திருப்பதிக்குத் தூக்கிக் கொண்டு சென்றால் உங்கள் பாவங்கள் போய்விடுமா?
நாக்பூரில் நம் விவசாயிகள் கைது செய்யப்பட்டதற்குக் கூட கண்டனம் தெரிவிக்காமல், கள்ள மவுனம் காக்கிறார் திரையில் தன்னூத்து விவசாயியாக வேடம் தரித்தவர்.
விவசாயிகளை இனியும் வஞ்சிக்காமல் த.வெ.க. அரசு வாக்குறுதியளித்தபடி முழுக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.
குறுவை சிறப்பு நிவாரணத் தொகுப்பு வழங்கி, டெல்டா மாவட்டங்களை வறட்சி மாவட்டங்களாக அறிவித்திட வேண்டும்.
காவிரியில் தமிழ்நாட்டின் உரிமையைக் காற்றில் பறக்க விடாமல் தீவிரமாகச் செயல்பட வேண்டும். அதுவரை கழகத்தின் போராட்டம் தொடரும்!