மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் என்னும் தமிழின துரோகிகள்
தனித் தமிழீழத்தை ஏகாதிபத்தியம் ஆதரிக்கிறதா?
இந்த நூற்றாண்டின் மாபெரும் துயரமான ஈழத் தமிழர் விவகாரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு அறிவுச் சூழலில் அதிர்ச்சியையும் ஆச்சர்யத்தையும் ஏற்படுத்தி வருகிறது. ஈழத் தமிழர் வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பற்றிய கவலையைவிட, இலங்கையின் இறையாண்மையைக் காப்பாற்றுவதில் அந்தக் கட்சிக்கு அதீத அக்கறை முளைத்து இருப்பதைத்தான் பார்க்க முடிகிறது.
இலங்கை எல்லைக்குள் இருந்து உரிமைகளைப் பெற்று வாழ்வதா, அல்லது தனியாகப் பிரிந்து தனிக்குடித்தனம் போனால் நிம்மதியா என்பதை, ஈழத் தமிழினம்தான் முடிவுசெய்ய வேண்டும். இதில், ஒன்றுபட்ட இலங்கைக்குள் இருந்து தமிழர்கள் உரிமை பெற்றவர்களாக வாழ வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகிறது. இந்த நிலைப்பாடு அவர்களது கட்சி அறிவுஜீவிகளின் விருப்பம் சார்ந்ததும் படிப்பு சார்ந்ததும். ஆனால், தனித் தமிழீழம்தான் தீர்வு என்று சொல்பவர்களுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வைக்கும் விமர்சனம், அபத்தமானதும் உள்நோக்கம் கொண்டதும் ஆகும். கடந்தகால வரலாற்றின் சூழ்ச்சிகள் எதையும் உள்வாங்கிக்கொள்ளாத தன்மையும் கொண்டது.
"இன்றுள்ள ஏகாதிபத்தியம் கோலோச்சும் உலகச் சூழலில், அது வளரும் நாடுகளைத் துண்டாடச் செய்யும் முயற்சிகளையும், தந்திரங்களையும் கணக்கில் எடுத்ததாக நிலைப்பாடு அமைய வேண்டும்" என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி சொல்கிறார். ஒன்றுபட்ட இலங்கையில் இருந்து தமிழர் வாழும் வடக்கு, கிழக்கு மாகாணத்தைப் பிரித்துத் தனித் தமிழீழம் அமைப்பதை எந்த ஏகாதிபத்திய நாடு ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டுகள்தான் கண்டுபிடித்துச் சொல்ல வேண்டும். ஏகாதிபத்தியம் என்று வாசுகி சொல்வது, அமெரிக்க ஏகாதிபத்தியமாக மட்டுமே இருக்கும். மறந்தும் அவர்கள் சீனாவை ஏகாதிபத்திய நாடாகச் சொல்ல மாட்டார்கள். தலைக்கு ஒரு ஷாம்பூ; தாடிக்கு ஒரு ஷாம்பூ போடுவது சிலரது வழக்கம்!
தனித் தமிழீழத்தை அமைதி வழியில் முன்மொழிந்தவர் ஈழத் தந்தை செல்வா. அமைதி வழியில் அது சாத்தியம் இல்லை என்று உணர்ந்து ஆயுதம் தூக்கியவர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். இவர்கள் எந்த சிங்கள அரசாங்கத்தை எதிர்த்துப் போராடினார்களோ, அவர்களுக்குத்தான் அமெரிக்க ஏகாதிபத்தியம் முழு ஒத்துழைப்பைக் கொடுத்தது. ஆதரவு தந்தது. ஏகாதிபத்தியக் குணாசம்சத்தை சிங்களத் தலைவர்களுக்கு ஊட்டி வளர்த்தது. பேரினவாத எண்ணம் கொண்ட இலங்கை ஆட்சியாளர்களுக்குச் சாதகமானதைச் செய்துகொடுப்பதன் மூலமாக இலங்கையைக் கபளீகரம் செய்வதே ஏகாதிபத்தியங்களின் எண்ணமாக மாறியது.
முதலில் இதை பிரிட்டன் செய்தது. பிறகு அதை அமெரிக்கா பின்பற்றியது.
திரிகோணமலையில் அமைந்துள்ள இயற்கைத் துறைமுகம்தான் இலங்கையைப் பற்றி ஏகாதிபத்தியங்கள் அதிகம் கவலைப்படக் காரணம். ஆசியாவின் ராணுவரீதியான முக்கியத்துவத்தை இந்த இடம் தீர்மானித்தது. இதைக் கண்டுகொண்ட பிரிட்டன், 1947&ல் இலங்கைக்கு விடுதலை கொடுத்தாலும், தன்னை ஆதரிக்கும் ஆட்சி இருக்க வேண்டும் என்று விரும்பியது. முதல் 10 ஆண்டுகள் (1948&58) பிரிட்டன் ஆதரவு நிலைப்பாட்டை இலங்கை ஆட்சியாளர்கள் எடுத்தனர். அதன்பிறகு, பிரிட்டனை கழற்றி விட்டுவிட்டு கம்யூனிஸ்ட் ஆதரவு ஆட்சி (1956&1965) அமைந்தது. லேசான அமெரிக்கச் சார்பு 1970&ல் தொடங்கியது. அது வளர வில்லை. 1977&ல் கே.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சி, அமெரிக்காவுக்கு முழு வாசலைத் திறந்துவிட்டது. 1994 வரை பிரேமதாசா அதைத் தொடர்ந்தார். சந்திரிகா குமாரதுங்காவின் காலம், பல்வேறு நாடுகளை அனுசரித்துப்போவதாக இருந்தது. அமெரிக்கா, ஜப்பான், இந்தியா அரவணைப்பாளராக அடுத்து வந்த ரணில் விக்கிரமசிங்கே இருந்தார். 2005&க்குப் பிறகான
ராஜபக்ஷேவோ சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஆதரவாளராகச் செயல்பட்டு வருகிறார். அதற்காக அமெரிக்க உதவிகளை புறந்தள்ளிவிடவில்லை, இன்றுவரை!
இதில், 1977-ம் ஆண்டு முதல் இலங்கை அரசாங்கத்துக்கு பெருமளவிலான உதவிகளைச் செய்தது அமெரிக்காவே தவிர வேறு நாடு அல்ல. இலங்கையில் நடந்தது ஒரு சிறுபான்மைத் தமிழ் இனத்துக்கும் சிங்களப் பேரினவாத இனத்துக்குத் துணைபுரிந்த ஏகாதிபத்தியங்களுக்கும் நடந்த போர் என்பதை ஏற்றுக்கொண்டால் மட்டுமே, ஈழத் தமிழருக்கு சரியான தீர்வை யாரும் முன்மொழிய முடியும். இதை ஏற்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தயாராக இல்லை போலும்!
1983... சிங்களப் பேரினவாதத்தின் கொலைகாரப் படலம் ஆரம்பம். 'சிங்கள மக்களை ஆத்திரமூட்டும் வகையில் பயங்கர வாதிகள் நடந்துகொண்டதன் விளைவாக ஏற்பட்ட சம்பவமே இனக் கலவரமாகும்' என்று அமெரிக்கா தனது அதிகாரப்பூர்வ ஆண்டறிக்கையில் கூறியது. இதற்குக் காரணம் அமெரிக்கச் சார்பு அமைப்பான 'ஆசியனில்' இலங்கை அதற்குமுன்தான் சேர்ந்திருந்தது. ஜெயவர்த்தனா பாகிஸ்தானுக்கும், அவரது சகோதரர் ஹெச்.டபிள்யூ.ஜெயவர்த்தனா சீனா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கும் சென்றனர். 2009 பச்சைப் படுகொலையில் அங்கம் வகித்த நாடுகள்தான் இவை.
அன்று முதல் ஆதிக்க எண்ணம் கொண்ட நாடுகள் அனைத்துமே இலங்கையின் பக்கம் நின்றன.
சோவியத் சார்பானவராக இருந்த இந்தியப் பிரதமர் இந்திரா, இந்தக் காலகட்டத்தில் மரணம் அடைகிறார். அதுவரை இந்திரா காந்திக்கு தராத முக்கியத்துவத்தை ராஜீவுக்கு அமெரிக்கா தந்தது. இலங்கையை இழுத்துவந்து இந்தியாவின் கையில் ஒப்படைப்பதும், சோவியத் சார்பான இந்தியாவை அதனிடம் இருந்து நகர்த்துவதும் அமெரிக்காவின் தந்திரம். எனவேதான் ராஜீவ் & ஜெயவர்த்தனா ஒப்பந்தத்தை ஆதரித்த முதல் அறிக்கை அமெரிக்காவிடம் இருந்து வந்தது. ராஜீவ் கையெழுத்துப் போட்ட மூன்று மணி நேரத்தில் ரீகன் பாராட்டுக் கடிதம் அனுப்பினார். 'ஸ்ரீலங்காவைப் பொறுத்தவரை எமது கொள்கைகளும் இந்திய அரசாங்கத்தின் கொள்கைகளும் ஒன்றுக்கொன்று மிகவும் ஒரே நேர்க்கோட்டில் உள்ளன என்பதை கடந்த ஓரிரு ஆண்டுகளாக உணர்ந்து திருப்தி அடைந்துள்ளோம்' என்று, அமெரிக்க ராஜாங்க துணை உதவிச் செயலாளர் ராபர்ட் பெக் பேசினார். இந்த ஒப்பந்தத்தை அன்று 'ஏகாதிபத்தியமாக' இருந்த சோவியத் ஆதரித்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மொழியில் சொல்வதானால், ஏகாதிபத்தியங்களால் ஆசீர்வதிக்கப்பட்ட அந்த ஒப்பந்தத்தை விடுதலைப் புலிகள் இயக்கம் நிராகரித்தது. தமிழர்கள் நிராகரித்தனர். 'இந்துமாக் கடலைப் பங்கிடுவது மட்டுமே இவர்களது நோக்கம். இந்த நோக்கத்தை ஏற்க மாட்டோம்' என்று 1987&ல் இந்தியாவுக்கும், 2005-ல் அமெரிக்காவுக்கும் புலிகளும் ஈழத் தமிழர்களும் தெளிவு படுத்தினர். அதனாலேயே பழிவாங்கப்பட்டனர். எனவே, ஏகாதிபத்தியத்தின் இரும்புப் பிடியில் ஈழத் தமிழனின் விடுதலைப் போராட்டம் சிதைக்கப்பட்டது என்பதே உலகியல் அறிவு கொண்டவர் உணர வேண்டியது.
ராணுவம், படை உதவிகள் செய்துவந்த ஆக்கிரமிப்பு நாடுகளுக்கு 2004 சுனாமி, வெளிப்படையாக வாசலைத் திறந்துவிட்டது. உதவி, கடன், முதலீடு என்ற பெயரால் கடன் கொடுத்து உள்ளே வந்தன அந்த நாடுகள். 'எங்களுக்கு 15 ஆயிரம் கோடி தேவை' என்று இலங்கை அறிவித்தது. 14 ஆயிரம் கோடி பணம் கிடைத்தது. ஒரு தேசம், சுனாமியின் பெயரால் அன்றுதான் விற்கப்பட்டது. அமெரிக்கா, ஜப்பான், சீனா, இந்தியா போன்றவை பணத்தை அள்ளிக் கொடுத்தன. உலக வங்கியையும் சர்வதேச நிதி நிறுவனத்தையும் தடையின்றிப் பணம் தர உத்தரவிட்டது அமெரிக்கா. இதற்குக் காரணம், விடுதலைப் புலிகள் அமைப்பு தங்களிடம் அடிபணியாததுதான். இனப் பிரச்னையை தீர்க்க நார்வே நாட்டை வைத்துப் பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தியது அமெரிக்கா. புலிகளுக்கு அமெரிக்க ராஜாங்க இணை அமைச்சர் வைத்த மூன்று கோரிக்கைகள் என்ன தெரியுமா?
'வன்முறையைக் கைவிட வேண்டும், தனி நாடு போராட்டத்தைக் கைவிட வேண்டும், இலங்கை முழுவதும் கொழும்பு அரசின் ஆளுமையை ஏற்றுக்கொள்ள வேண்டும்' & என்றது அமெரிக்கா. புலிகள் இதை ஏற்கவில்லை. பேச்சுவார்த்தை முறிந்ததும், இலங்கை அரசின் குரலை அமெரிக்க அதிகாரிகளும் அமைச்சர்களும் எதிரொலித்தனர்.
அமெரிக்க ராணுவக் கல்லூரி அதிகாரிகள் 20 பேர் கொழும்புவுக்கு வந்தனர். கண்ணி வெடியை அகற்ற 26 பேர் வந்தனர். யு.எஸ். எய்ட் என்ற அமைப்பு திரிகோணமலையிலும் அம்பாறையிலும் அலுவலகம் திறந்தது. அமெரிக்க ஏவுகணைக் கப்பல் ஓகானே டிடிஜி77 வந்தது. ஹெலிகாப்டர் தாங்கிச் செல்லும் நவீன ரக கரையோர ரோந்துக் கப்பல் வந்தது.
'புலிகள் தமது அரசியல் ஆயுதமாக வன்செயலைப் பயன் படுத்துவதைக் கைவிடச் செய்யும் அழுத்தமாக
அவர்களை அமெரிக்கா தொடர்ந்து வேட்டையாடும்' என்று ராஜாங்க அமைச்சர் ரிச்சர்ட் அர்மிடேஜ் அறிவித்தார். 'இந்தப் பிராந்தியத்தைச் சாராத சக்திகளைத் தேவையற்ற விதத்தில் முறையற்ற செல்வாக்குடன் இனப் பிரச்னைக்குள் தலையிட இடமளித்து, சமாதான நடவடிக்கைகளைக் குழப்பி வருகிறது இலங்கை அரசு' என்று புலிகள் எதிர் அறிக்கை வெளியிட்டனர். அதாவது, நார்வேயை வைத்து பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே சிங்கள பௌத்த பெருந்தேசியவாதத்துக்கு அமெரிக்கா ஆதரவாக நின்றது.
2006 ஏப்ரல் மாதம், கனடா அரசு புலிகளைத் தடைசெய்தது. 2006 மே மாதம் ஐரோப்பிய ஒன்றியம் தடைசெய்தது. இரண்டுமே அமெரிக்க நிர்ப்பந்தத்தின் விளைவு (1997-ல், புலிகளை அமெரிக்கா தடைசெய்து விட்டது!). இலங்கை அரசு, புலிகள் இரண்டையும் ஒன்றாக வைத்து அமெரிக்கா சார்பில் நார்வே நடத்திய பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததுமே, இஸ்ரேலின் கிபீர் விமானங்கள் இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் குண்டுகள் போடத் தொடங்குகின்றன. நார்வே பேச்சு நடத்தும்; இஸ்ரேல் குண்டு போடும். இதைத்தான் 'அமெரிக்காவின் அமைதியான முகம் நார்வே. கொடூரமான முகம் இஸ்ரேல்' என்று பிரபாகரன் சொன்னார். இந்த இரண்டு முகங்களாலும் சிதைக்கப்பட்டதே ஈழத் தமிழ் முகம்.
2006 ஜனவரி 11-ம் நாள். கொழும்பு தொழில் வணிகக் கருத்தரங்கில் இலங்கைக்கான அமெரிக்கத் தூதர் ஜெஃப்ரி லூன்ஸ்டெட் பேசும்போது 'புலிகள் பழைய நினைப்பில் இலங்கைப் படையுடன் மோத வேண்டாம். இப்போது இலங்கையிடம் இருப்பது அமெரிக்காவில் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ராணுவம். அமெரிக்கா வழங்கிய நவீன ஆயுதங்கள் இலங்கைப் படை வசம் உள்ளன. போர் முனையில் புலிகள் படுகேவலமாகத் தோற்றுப்
போவார்கள்' என்று சொன்னது தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தெரியுமா, புரியுமா எனத் தெரியவில்லை!
- நீங்கள் எந்தப் பக்கம்?
மார்க்சிஸ்ட்டுகள் சிந்தனைக்கு.. என்னும் நூலில் இருந்து ஆசிரியர் ப.திருமாவேலன்
மதுரை தியாகராயர் பொறியியல் கல்லூரி தமிழ்நாட்டின் ஆகச்சிறந்த கல்லூரிகளில் ஒன்று. தமிழ்நாட்டின் சிறந்த பொறியாளர்களை உருவாக்கிக்கொடுத்த நிறுவனம் அது.
இக்கல்லூரியின் தலைமைப் பொறுப்பை ஏற்ற பேரா.அசோக்குமார் என்பவர் முன்னர் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் இருந்தவர். தற்போது தியாராயர் பொறியியர் கல்லூரியும் இசுரேல் நாட்டின் பென்குரியன் பல்கலைக்கழகமும் இணைந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை உருவாக்கியுள்ளார்கள்..
இதற்கு முன்பாக பாஜக சங்கித்தனமான 'ஜெய்ஸ்ரீராம்' முழக்கத்தை ஆர்.என்.ரவி நிகழ்வில் முழக்கமிட வைத்தது நடந்தது. தற்போது 'இனப்படுகொ*லை குற்றச்சாட்டிற்கு உள்ளாகி இருக்கும் இசுரேல் அரசின் பல்கலைக்கழகத்தோடு ஒப்பந்தமிட்டிருப்பது இந்தியாவின் இனப்படுகொ*லை ஆதரவு செயலாகவே பார்க்க இயலும். இந்திய அரசு ஐ.நாவின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டது. இசுரேல் மீது இனப்படுகொ**லைக்கான வழக்கு சர்வதேச நீதிமன்றத்தில் நடந்துகொண்டிருக்கிறது.
பாலஸ்தீனம், ஈரான், ஏமன், லெபனான், சிரியா ஆகிய நாடுகளில் சட்டவிரோத தாக்குதலை நடத்தி மக்களை கொன்றழிக்கும் இசுரேல் உடனான தியாகராயர் பொறியியல் கல்லூரியின் ஒப்பந்தம் என்பது அற உணர்விற்கு முரணானது, வன்மையான கண்டனத்திற்குரியது.
இந்நிலையில் தமிழ்நாட்சின் முற்போக்கு இயக்கங்கள் இசுரேல் உடனான உறவுகளை கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு எதிராக குரல் எழுப்ப வேண்டும். பாலஸ்தீன இனப்படுகொ**லை குறித்து தமிழ்நாடு சட்டசபை தீர்மானம் இயற்றிய நிலையில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் கட்சிகளும் இதற்கு எதிராக குரல் எழுப்பி இந்த சனநாயக விரோத ஒப்பந்தத்தை ரத்து செய்ய வைக்க வேண்டும். சங்கித்தனமான பேராசிரியர் உடனடியாக பதவி விலக வைக்கும் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டும்.
மே17 இயக்கம் தனது வன்மையான கண்டனத்தை தியாகராயர் கல்வி நிறுவனத்திற்கு தெரிவித்துக்கொள்கிறது.
ஆய்வாளர் அமர்நாத் அவர்களின் கீழடி ஆய்வறிக்கையை நிராகரித்துவிட்டு, மேலதிக சோதனை எனும் பெயரில் பாஜகவால் அனுப்பப்படும் ஆய்வுக்குழு கீழடிக்கு வருகிறது. கீழடி உறுதி செய்த தமிழினத்தின் தொன்மையையும், சமயசார்பற்ற வாழ்வியலையும், தமிழ் மொழியின் பயன்பாட்டையும், தமிழர்களின் கல்வியறிவையும், தமிழரின் தொழில்வளம் கொழிக்கும் நகர நாகரீகத்தையும் பாஜக அரசு ஏற்க மறுத்து வருகிறது.
கீழடி பெருமையை உலகிற்கு தெரிவிக்கும் ஆய்வாக நடத்தி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலான உழைப்பைச் செலுத்தியவர் ஆய்வாளர் அமர்நாத் அவர்கள். அவ்வகையில் கீழடி வெளிப்படுத்தும் உண்மைகளை பாதுகாக்கும் பொறுப்பு நமக்குண்டு. ஜீன்30ம் தேதிக்குள்ளாக சங்கிகளிம் ஆய்வுக்குழு வந்தடைவதாக இருக்கிறது. ஏற்கனவே 2016ம ஆண்டில் இவ்வாறான முயற்சியை மோடினரசு மேற்கொண்டபோது மறியல் போராட்டத்தை மே17 இயக்கம் , குடந்தை அரசன், கே.எம்.சரீப் , நாகை திருவள்ளுவன் உள்ளிட்டோர் நடத்தி அதை தடுத்து நிறுத்தியது. நேரடியாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.முருகவேல்ராஜன் அவர்கள் கீழடியில் நேரடியாக நிர்மலா சீதாராமன், தமிழிசையை எதிர்த்துப்போராட்டம் நடத்தினார். இவ்வாறாக கீழடிக்கான நமது போராட்டம் தொடர்போராட்டமாக இருக்கும் வேளையில் மீண்டும் ஒரு மறியலை நடத்த வேண்டிய சூழலில் தமிழ்ச்சமூகம் உள்ளது. ஆகவே அனைத்து சனநாயக ஆற்றல்களும் சங்கிகளின் இந்த சதியை முறியடிக்க அணிதிரள வேண்டுமென மே17 இயகம் கோரிக்கை வைக்கிறது. வழக்கம் போல போலித்தமிழ்தேசியவாதிகள், பிராமன கடப்பாரைகள் வேடிக்கை பார்ப்பார்கள் என்பதால் அவர்களையும் அம்பலப்படுத்தும் விதமாக திராவிட-பெரியாரிய ஆதரவு ஆற்றல்கள் அணிதிரள வேண்டும். தமிழின அடையாளமாகிய கீழடியை காக்கும் பணியில் மே17 இயக்கத் தோழர்கள் போராட்ட களத்திற்கு அணிதிரள தயாராக வேண்டும்.
உரிய விசாரணை நடத்தி, இளம் தம்பதியினருக்கு மிரட்டல் கொடுக்கும் திமுக சட்டமன்ற உறுப்பினர் மீது கட்சி ரீதியாகவும், தவெக அரசு சட்டரீதியாகவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த தம்பதியினரின் பாதுகாப்பை காவல்துறை உறுதி செய்ய வேண்டும்.
அண்ணாமலையை, அவரது சாதிய-மதவெறி அரசியலை நார்மலைஸ் செய்யும் நடிகர் போஸ்வெங்கட்டின் பேட்டி கண்டனத்திற்குரியது.
அண்ணாமலை சிறந்த தலைவர், பேச்சில் நேர்மை, சிறப்புதன்மைக் கொண்டவர் எனும் போஸ்வெங்கட் அவர்கள் பேசுகிறார். திருப்பரங்குன்றம், மைக்கேல்பட்டி மாணவி சாவு என அண்ணாமலையின் சீரழிவு அரசியலை எந்த பெரியாரிஸ்டாலும், திராவிட செயற்பாட்டாளராலும், மானுட நேயம் கொண்டவராலும் ஏற்க இயலாது.
அண்ணாமலையை பாராட்டக் கூடிய எவரும் சந்தேகப்படப்பட வேண்டியவரே. ஆர்.எஸ்.எஸ் கும்பலின் எடுபிடியை எந்த முற்போக்காளனாலும் ஏற்க இயலாது. அண்ணாமலை எனும் சீரழிவு நபரை முன்னிறுத்துபவர்கள், ஆதரிப்பவர்கள், அந்த நபருக்கு ஆதரவாக நார்மலைஸ் செய்பவர் எவராயினும் மே17 இயக்கம் எதிர்த்து நிற்கும். 2024 நாடாளுமன்ற தேர்தலின் போது இந்துத்துவத்திற்கு எதிரான பரப்புரையின் போது அண்ணாமலையின் ரவுடிகளை துணிந்து எதிர்த்து நின்று போராடியவர்கள் மே17 இயக்கத்தின் தோழர்கள்.
To DMK உத்திமர்களே 😁
In DMK period
Foxconn Semiconductor JV | ₹1.54 Lakh Crore | Moved to Gujarat
Foxconn iPhone Expansion | ₹4,000 Crore | Moved to Karnataka
DRDO & AMCA Defence Project | ₹15,000 Crore | Moved to Andhra Pradesh
Mazagon Dock Shipbuilders | ₹15,000 Crore | Moved to Andhra Pradesh
Royal Enfield Plant | ₹2,500 Crore | Moved to Andhra Pradesh
Juan Singh Footwear | ₹1,720 Crore | Moved to Andhra Pradesh
அப்போ திமுக தோழர்கள் என் செய்தார்கள் கேள்வி ☺️
20ஆண்டுகளாக ஆர்.கே.ராதாகிருஷ்ணன் எனும் ப்ரண்ட்லைன் ஊடகவியலாளர் இலங்கையில் இருந்து, சிங்களப் பேரினவாதிகளுக்கு ஆதரவான பொய் செய்திகளை எழுதிக்கொண்டிருந்தவர். தமிழர் போராட்டங்களை தீவிரவாதமாக-பயங்கரவாதமாக திரித்து எழுதிய உத்தமர். சிங்களப் பேரினவாதிகளுக்குள்ளாக நடந்த கொலைகளை விடுதலைப்புலிகள் மீது கணக்குகாட்டிய உத்தமர். 2009ல் நடந்த இனப்படுகொலையின் போது, சிங்கள ராணுவத்தின் செய்திகளை பரப்பி தமிழர்களின் துயரங்களை மறைத்தவர். சிங்கள ஆட்சியாளர்களின் மாளிகையான அலரி-மாளிகையின் காவல்காரராக செயல்பட்டவர். தமிழின விரோத அரசியலில் ஆர்.எஸ்.எஸ்சுக்கு நிகரானவர். இலங்கையின் மோடி எனப்படும் ராஜபக்சேவின் உற்ற நண்பர்.
முள்ளிவாய்க்காலில் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காத்த மருத்துவர் வரதராஜா விரைந்து நலம்பெற வேண்டும். தமிழினத்தின் ஒப்பற்ற மானுடப்பணியை செய்த போராளி அவர்.
தமிழினப்படுகொலையின் சாட்சியம் அவர். இலங்கை அரசு நடத்திய விதிமீறல் ஆயுதங்களின் பயன்பாடு குறித்த அவரது வாக்குமூலங்கள் மிக மிக இன்றியமையாதவையாக இருந்தன. அவர் உயிர்பிழைத்து நம்மினத்தின் ஒப்பில்லா வீரனாய் நிறைவாழ்வு பெற விரும்புகிறோம். மீண்டு வருக!
'போதைபொருள் பயன்பாடு' என்கிறார் அண்ணாமலை.
போதைப்பொருள் என்பது
'பயன்பாடா' அல்லது 'பழக்கமா'?
'பயன்பாடு' என்பது ஏதேனும் ஒரு தேவைக்காக பயன்படுத்தப்படுவது.
'பழக்கம்' என்பது பழக்கப்பட்டு அடிமைப்படுதலுக்குள்ளாவது. அதனால் தான் போதைப்பழக்கம் என்கிறோம், இந்தப் பழக்கத்தை அடிமையாதல் என்கிறோம்.
இந்தவகையில் அண்ணாமலையின் 20,000 புத்தக வாசிப்பு அறிவை அறிந்துகொள்ளலாம். அடுத்து அவரது வாதத்தின் அபத்தத்தை பார்க்கலாம்.
போதைப்பொருள் 'பயன்பாடு' இருப்பதால் போதைப்பொருள் 'புழக்கம்' இருக்கிறது என்கிறார் அண்ணாமலை.
ஆனால் உண்மை என்ன?
கடந்த 40-50ஆண்டுகளாக தமிழ்நாட்டில் போதைப்பழக்கம் இல்லாமல் இருந்ததற்கு 'புழக்கம்' இல்லாமல் இருந்தது தானே காரணம்!
'போதைப்பொருள் புழக்கம்' என்பது சட்டவிரோதமானது. சமூகத்தில் இதன் புழக்கத்தை கொண்டு வருபவர்கள் தான் முதன்மைக் குற்றவாளிகள். இவர்கள் தான் சமூகத்தை சீரழிப்பவர்கள். இவர்களை காப்பாற்றும் விதமாக அண்ணாமலை பதிவு இருக்கிறது. 'பயன்பாடு' இருப்பதால்தான் 'புழக்கம்' இருக்கிறதெனச் சொல்வது, என்பது, போதைபொருளை 'பயன்படுத்தக்கூடியவர்கள்' இருப்பதால் 'அதை சட்டவிரோதமாக புழக்கத்திற்கு'கொண்டு வருகிறார்கள் என்கிறார். அதாவது போதைப்பொருளை கடத்துபவர்களைவிட போதைபொருளை பயன்படுத்துபவரே முதன்மைக் குற்றவாளி என்கிறார்.
ஒரு காவல்துறை அதிகாரியாக இருந்தவர் இவ்வாறு, குற்றத்தின் தன்மையை திரித்துப் பேசுகிறார் என்றால் அது அயோக்கியத்தனமில்லையா?
போதைப்பொருளை கட்டுப்படுத்தினால் தானே போதைப்பழக்கம் குறையும்.
சாராயக்கடைகளை ஒழித்தால் தானே குடிப்பழக்கத்தை குறைக்க முடியும்.
இந்த நபர் தமிழ்நாட்டின் அரசியல்வாதியாகிறார் என்றால் அதைவிட துயரம் வேறென்ன இருக்கும்!
இவ்வாறு 'கிரிமினலாக' யோசிக்கக்கூடிய அண்ணாமலையை தொடர்ந்து மே17 இயக்கம் அம்பலப்படுத்தும்.
ஏன் சார் கைது செய்யரதோட நிறுத்திடரீங்க... ஆகாஷை போல அவனது பெற்றோரையும் அடித்து துவைத்தால் தானே உங்கள் காவல்துறைக்கு பெருமை. பல பதக்கம் வாங்கலாம், ஸ்டெர்லைட்டில் ஸ்னோலினை கொலை செய்த அதிகாரிக்கு பதவி உயர்வு கொடுத்ததை போல உங்களுக்கும் பதவிஉயர்வு கிடைக்கலாம். அப்பாவிகளக் கொலை செய்தால் உங்களை காப்பாற்ற அதிகாரமிக்க கட்சிகளும், முன்னாள் இன்னாள் முதல்வர்கள் உள்ளார்கள். அவர்களது கட்சிகள் உள்ளன. கலெக்டர் இருக்கிறார், உயர் அதிகாரிகள் உள்ளனர்.
இருக்கவே இருக்கிறது நீதிமன்றமும், நீதியரசர்களும்.
இத்தனை பேர் உங்களை காப்பாற்றுவதே தமது தலையாய கடமையாக வைத்திருக்கும் போது எத்தனைபேரை வேண்டுமானாலும் காவலர்கள் அடித்துக்கொல்லலாம் தானே. இதுதானே இந்திய சனநாயகம்?
நீதிமன்றம் 100 நாட்களாக மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்ததே, எதனால் என சிலர் கேட்கலாம்..
"தீபப்பிரச்சனையை விடவா ஆகாஷ் படுகொலை முக்கியமானது" என மதுரை நீதிமன்றம் நினைப்பது அவர்களுக்கு தெரியாது போல...
'திருப்பரங்குன்றம் மலையில் தீபம் ஏற்றாமல் போனால், மூன்றாம் உலகப்போர் மூண்டுவிடும்' என்பதால் தானே நீதியரசர் அந்த மலைமீதேறி ஆய்வு செய்து தீர்ப்பு கொடுத்து, இன்றளவும் அதற்காக போராடுகிறார். மூன்றாம் உலகப்போரை நிறுத்தும் பணியிலிருக்கும் நீதிமன்றம் ஆகாஷுக்காக ஏன் வேலை செய்யவேண்டுமென கேட்பார்கள் அல்லவா... இதுவும் நியாயம் தானே.. ஆகாஷ்க்கு நீதி கொடுத்தால் தீபப்பிரச்சனை தீர்ந்துவிடுமா?.. எது முக்கியமென கணம் கோர்ட்டார் அவர்களுக்கு தெரியாதா?
இந்த லட்சணத்தில் ஆட்சி, அதிகாரம், நீதிமன்றங்கள் இருக்கின்றன.
இவர்களும், இவர்களது வெங்காய சனநாயகமும். இந்த நபர்களுக்காக நாம் வரி கட்டி, சம்பளம் கொடுத்து வேலைக்கு வைக்க வேண்டி இருக்கிறது.
நினைவில் கொள்ளுங்கள்:
ஸ்னோலினை காவல்துறை சுட்டுப் படுகொலை செய்ததை ஜெயக்குமார்-பென்னிக்ஸ் அறிந்திருக்கலாம். இந்த இருவரும் காவலர்களால் படுகொலை செய்யபப்ட்டதை
அஜித்குமார் அறிந்திருக்கலாம். காவலர்களால் அஜித்குமார் படுகொலை செய்யப்பட்டதை ஆகாஷ் அறிந்திருக்கலாம். ஆகாஷ் படுகொலை செய்யப்பட்டதை நாம் அறிந்திருக்கிறோம். இவர்களுக்கு அடுத்து நம்மில் யார் என்பது மட்டும் தான் நாம் அறியாதது.
இது அடுத்தவீட்டில் நடப்பதால் நாளை நமக்கும் நடக்காது என்பது அர்த்தமல்ல.
காவல்துறையால் அடித்துக்கொலை செய்யப்பட்ட இளைஞனுக்கான நீதியை அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் வெட்கமின்றி மறுத்துள்ளன. அதிகாரவர்க்கம், எனது மக்களை அடித்துக்கொலை செய்யலாம் எனும் துணிச்சல் கொண்ட பயங்கரவாத கட்டமைப்பாக மாறுகிறதா எனும் கேள்வியை மதுரை உயர்நீதிமன்றத்தால் மறுக்க இயலுமா?
தவெக அரசும், முதலமைச்சரும் 'அஜித்குமார்' அதிகாரவர்க்க வன்முறையால கொல்லப்பட்டபோது பேசியவர்கள், தற்போது ஆகாஷ் படுகொலைக்கு நீதிவழங்க தவிர்ப்பது ஏன்?
ஒரு இளைஞன் காவல்துறையால் சித்தரவதை செய்யப்பட்டு கொலை செய்யல்படுகிறான். அவரது கொலைக்கு காரணமான காவல்துறை சார்ந்த எவரும் வழக்கில் இணைக்கப்படவில்லை. குற்றவாளிகளின் பெயரை இணைக்கச் சொல்லி 100 நாட்களாக அக்குடும்பமும், சமூகசெயற்பாட்டாளர்களும் போராடுகின்றனர். திமுக ஆட்சியில் ஆரம்பித்த போராட்டம் தவெக ஆட்சியிலும் தொடர்ந்தது. திமுக, தவெக, அதிமுக என எந்த கட்சியும் நீதிக்காக குரல்கொடுக்கவில்லை. சாமானியனுக்கு நியாயம் கேட்க நாதியில்லை.
அஜித்குமார், ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோருக்கு கிடைத்த குறைந்தபட்ச கவனம், நடவடிக்கைகூட ஆகாஷுக்கு கிடைக்காத காரணம் என்ன? பட்டியல் சமூகமென்றால் நீதியும், ஆதரவும் கண்மூடி மெளனம் காக்குமா? அஜீத்குமார் வீட்டுக்குச் சென்றார் இன்றய மாண்புமிகு முதலமைச்சர். அன்றய திமுக அரசு கேள்விக்குட்படுத்தபப்ட்டது. அனைவரும் அணிவகுத்துச் சென்றார்கள். இன்றைக்கு அரசியல் செய்யக்கூட எந்த தலைவரும் ஆகாஷ் வீட்டிற்கு செல்லவில்லை. ஏன் அவர் பட்டியல் சமூகமென்பதாலா? காவக்துறையால் கொலையுண்ட அஜித்குமாரும், ஆகாஷுக்கும் வேறுபாடு என்ன? சாதிதானே!..
திமுக அரசு தராத நீதியை, தவெக அரசால் ஏன் தர இயலவில்லை. காவல்துறையை கண்டு இருவரும் அஞ்சுகிறார்களா? அல்லது பட்டியல் சமூகத்தின் மீதான ஒவ்வாமையா?
நீதிமன்றத்தில் நடத்தப்பட்ட வழக்கில் நீதியை கொன்று புதைத்திருக்கிறார்கள். பாதிக்கபட்டவனின் பக்கம் நின்றும், அதிகாரவர்க்கத்தால் வஞ்சிக்கப்பட்ட சாமானிய தலித் குடும்பத்தின் பக்கம் நின்று வழக்கை அணுகத் விரும்பாத நீதிமன்றமாக மதுரை உயர்நீதிமன்றம் தீர்ப்பை கொடுத்திருப்பது என்பது, (திருப்பரங்குன்றம் தீப வழக்கில் கொடுக்கப்பட்ட அநீதியான தீர்ப்பைவிட) மிகமோசமான அரசபயங்கரவாதத்தினை ஆதரிக்கும் அதிர்ச்சிகரமான தீர்ப்பு.
காவல்துறையினரால் நடத்தப்படும் வன்முறைக்கு நீதிமன்றமும், தவெக-திமுக ஆட்சியாளர்களும், அதிகாரவர்க்கமும் கொடுத்திருக்கும் தீர்வு என்பது என்ன? கொலை செய்த அதே காவல்துறையால், கொலையான அப்பாவியின் உடலை வலிந்து கைப்பற்றி, பெற்றோர் அனுமதியில்லாமல், இறுதிக்கடன் செய்யச் சொல்வது.
என்னே ஒரு நீதி!!
என்னே ஒரு சனநாயகம்!!
இதைக் கல்வெட்டாக எழுதி மதுரை உயர்நீதிமன்றத்தின் வாசலிலும், கலெக்டர் அலுவலக வாசலிலும், முதலமைச்சர் அலுவலக வாசலிலும், சட்டமன்ற வாசலிலும் நட்டு வைத்துக்கொள்ளுங்கள் உங்கள் யோக்கியதை உலகம் மெச்சட்டும்.
ஆகாஷின் பெற்றோர்களின் ஆற்றாமை உங்களையெல்லாம் வாழ்வாங்குவாழ்த்தட்டும்..
அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றேசெல்வத்தைத் தேய்க்கும் படை.— (குறள் எண்: 555)
என 'கொடுங்கோன்மை' அதிகாரத்தில் வள்ளுவர் எழுதிய குறளை அனைத்து அரசு அலுவலகத்திலும் எழுதி மாட்டிடுங்கள், குறிப்பாக நீதிமன்றத்தில் நீதிபதிகளின் முதுகுக்குப் பின்னால் அல்ல, அவர்கள் கண்ணுக்கு தெரியும்படியாக..
மிகக்கீழ்த்தரமான அறிக்கை! வெட்கங்கெட்ட ஆளுநர் அலுவலகமே!
மருதுபாண்டியர்கள் 225 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில் சாதி-மதம் கடந்து வாருங்கள் என அறைகூவல் விடுத்ததை கொச்சைப்படுத்தும் வகையில் மருதுபாண்டியர்களை ஷத்திரியர்கள் என சனாதன-வர்ணபேதத்தைக் கொண்டு மருதுபாண்டியர் சகோதரர்களை பார்ப்பனர்களுக்கு சேவகம் செய்யும் பிரிவினர் என சாதிய வன்மத்தை வெளிப்படுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஆளுநர் அறிக்கையை திரும்பப்பெறு!
சாதிய வன்மத்தால் மருதுபாண்டியர்களை கொச்சைப்படுத்தாதே!!
மருதுபாண்டியர்கள் சாதியை கடந்து போரிட்டவர்கள். தமிழர்களாய் ஒன்றுகூடுங்கள் என முழங்கியவர். ஜம்பு தீபகற்ப பிரகடனத்தில் 'சாதி-மதம்' கடந்து போரிடுங்கள் என்றவர்.
வட-இந்தியாவில் ஒரு இந்து அரசனும் இதுபோல வாய்திறந்து பேசியதில்லை. ஆனால் மருதுபாண்டியர்கள் திப்புசுல்தான், தீரன்சின்னமலை, வீரபாண்டியகட்டபொம்மன், விருப்பாச்சி கோபாலர், சுந்தரலிங்கம், பொல்லான் என அனைத்து சமூகங்களோடும் இணைந்து போர் புரிந்த பெருவீரர்கள். மாவீரர்களை சாதிய அடையாளத்தோடும், சிறுபுத்தியோடு கொச்சைப்படுத்தாதே!!
மருதுபாண்டியர் போன்ற போராளிகளை வீழ்த்துவதற்காக வெள்ளையோரோடு கைகோர்த்தவர்கள் மாராத்திய பார்ப்பனர் கூட்டமான பேஷ்வாக்கள். இந்த பேஷ்வாக்கள் ஆங்கிலேயரோடு சேர்ந்துகொண்டு கலகக்காரர்களை அழித்தொழித்தார்கள். இந்த பேஷ்வாக்களின் வம்சத்தினரே இன்றய ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை தொடங்கியவர்கள். இந்த கூட்டமே துரோகக்கூட்டம் தான்.
தஞ்சையை ஆண்ட சரபோஜி எனும் மாராத்திய போன்ஸ்லே எனும் ஷத்திரிய வழிவந்த அரசன் மருதுபாண்டியர்களுக்கு ஆதரவு தரமறுத்து ஆங்கிலேயருக்கு கைக்கூலி வேலைபார்த்தது வரலாறு. மராத்திய அரசனிடம் உதவிகேட்டு சென்ற போராளிகளின் தூதர்களை வெள்ளையரிடம் சாவர்க்கர் போல காட்டிக்கொடுத்தது வரலாறு. இந்த போன்ஸ்லே எனும் மராத்திய அரசன் மராத்திய சிவாஜி வம்சாவழியினர். இதுதான் உங்கள் மராத்திய ஷத்திரிய-பார்ப்பன கும்பல்களின் துரோக வரலாறு.
மருதுசகோதரர்கள் உள்ளிட்ட போராளிகள் சூத்திர சமூகத்தை சார்ந்தவர்கள், ஆகவே இவர்கள் அதிகாரத்தை கைப்பற்றக்கூடாது என்பதற்காக மராத்திய பேஷ்வாக்களும், தஞ்சை சரபோஜிகளும் வெள்ளையரோடு கைகோர்த்தவர்கள். மருதுசகோதரர்களுக்கு ஆதரவாக படை, ஆயுதம் கொடுத்த திப்புசுல்தான் மீது படையெடுக்க மராத்திய பேஷ்வாக்கள் ஆங்கிலேயரோடு ஒப்பந்தம் உருவாக்கினார்கள். இந்த ஒப்பந்தத்தை செய்தவர் மராத்திய பார்ப்பனரான தாதா-பட்னாவிஸ் (இன்றய மராத்திய பாஜக முதல்வரின் வம்சாவழி). இந்த ஒப்பந்தத்தைக் கொண்டு திப்புசுல்தானின் மைசூர் மீது படையெடுப்பு நடக்கிறது. திப்புசுல்தான்-மருதுபாண்டியர்கள்-தீரன்சின்னமலை-விருப்பாச்சிகோபாலநாயக்கர்-பொல்லான் ஆகியோர் கூட்டணிக்கு வலுப்பெறுவதை தடுக்க மைசூர் மீது படையெடுப்பு நடத்தி திப்புவை வீழ்த்தினார்கள். இதனாலேயே மருதுசகோதரர்களுக்கு கிடைக்கவேண்டிய படை உதவி தக்க சமயத்தில் கிடைக்காமல் வீழ்த்தப்படுகின்றனர். பின்னர் சிவகங்கைச் சீமையில் நடந்த கொரில்லா போரில் மருதுசகோதரர்களை வீழ்த்த வழியில்லாதபோது, மருதுபாண்டியர்களை சாதியரீதியாகவும், வர்ணரீதியாக ஆட்சி செலுத்தும் வம்சாவளி உரிமை கிடையாதென சாதியை வைத்து பிரித்தார்கள் வெள்ளையர் என்பது வரலாறு.
ஆளுநர் எனும் சதிகார தமிழின விரோத பதவியை வைத்து தமிழனை கொச்சைப்படுத்த எத்தனைக்காலம் அனுமதிக்கப்போகிறோம்?
மருதுபாண்டியர்களின் பெருவீரத்தை குறித்து எந்த வடநாட்டானவது அறிவானா? இந்தி புத்தகத்தில் மருதுபாண்டியர் தியாகத்தை சேர்த்தார்களா? 'மங்கள்பாண்டே' எனும் பீகாரி பார்ப்பானின் மதவெறியை வைத்து நடந்த போரை 'முதல்விடுதலைப் போர்' என சொல்லுகிற இந்திய ஒன்றியம், என்றைக்காவது மருதுபாண்டியர்களின் சாதி-மதம் கடந்த புரட்சியை முதல் விடுதலை போர் என அறிவித்தார்களா? அப்புறம் எதற்கு பாரதத்தின் விடுதலைக்காக போரிட்டவர் என மருதுபாண்டியர்களை சொந்தம் கொண்டாடுகிறீர்கள் துரோகிகளே!!
மருதுபாண்டியர்களின் கலகமே முதல் சுதந்திர போர் என அறிவிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்கிய மூத்த ஆய்வாளர் பேரா.ராஜய்யன் இன்னும் உயிரோடுதான் 97 வயதில் இருக்கிறார். இருந்தும் அவரது தீர்ப்பை ஏன் வடநாட்டு இந்தி வெறியன்கள் நடைமுறைபப்டுத்தவில்லை? பதில்சொல்வாரா ஆளுநர்?
மருதுபாண்டியர்களை கொச்சைப்படுத்தும் ஆளுநரை வெளியேற்றும் போராட்டத்தை நாம் நடத்தவில்கையெனில் நமது வரலாறு இழிவுசெய்யப்படுவதை தடுக்க இயலாது.
ஆளுநர் மாளிகையின் அவதூறுக்கு எதிராக தவெக அரசு வாய்திறக்குமா? முதல்வர் அறிக்கை கொடுப்பாரா? என்ன செய்யப்போகிறீர்கள்?
அனைத்து கட்சி தலைவர்களும் இதற்கான கண்டன அறிக்கையையும் போராட்டத்தையும் உடனடியாக நடத்திட வேண்டும் என மே17 இயக்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்
16-06-2026
மிகக்கீழ்த்தரமான அறிக்கை! வெட்கங்கெட்ட ஆளுநர் அலுவலகமே! @lokbhavan_tn
மருதுபாண்டியர்கள் 225 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்ட அறிக்கையில் சாதி-மதம் கடந்து வாருங்கள் என அறைகூவல் விடுத்ததை கொச்சைப்படுத்தும் வகையில் மருதுபாண்டியர்களை ஷத்திரியர்கள் என சனாதன-வர்ணபேதத்தைக் கொண்டு மருதுபாண்டியர் சகோதரர்களை பார்ப்பனர்களுக்கு சேவகம் செய்யும் பிரிவினர் என சாதிய வன்மத்தை வெளிப்படுத்துவது வன்மையான கண்டனத்திற்குரியது.
ஆளுநர் அறிக்கையை திரும்பப்பெறு!
சாதிய வன்மத்தால் மருதுபாண்டியர்களை கொச்சைப்படுத்தாதே!!
மருதுபாண்டியர்கள் சாதியை கடந்து போரிட்டவர்கள். தமிழர்களாய் ஒன்றுகூடுங்கள் என முழங்கியவர். ஜம்பு தீபகற்ப பிரகடனத்தில் 'சாதி-மதம்' கடந்து போரிடுங்கள் என்றவர்.
வட-இந்தியாவில் ஒரு இந்து அரசனும் இதுபோல வாய்திறந்து பேசியதில்லை. ஆனால் மருதுபாண்டியர்கள் திப்புசுல்தான், தீரன்சின்னமலை, வீரபாண்டியகட்டபொம்மன், விருப்பாச்சி கோபாலர், சுந்தரலிங்கம், பொல்லான் என அனைத்து சமூகங்களோடும் இணைந்து போர் புரிந்த பெருவீரர்கள். மாவீரர்களை சாதிய அடையாளத்தோடும், சிறுபுத்தியோடு கொச்சைப்படுத்தாதே!!
மருதுபாண்டியர் போன்ற போராளிகளை வீழ்த்துவதற்காக வெள்ளையோரோடு கைகோர்த்தவர்கள் மாராத்திய பார்ப்பனர் கூட்டமான பேஷ்வாக்கள். இந்த பேஷ்வாக்கள் ஆங்கிலேயரோடு சேர்ந்துகொண்டு கலகக்காரர்களை அழித்தொழித்தார்கள். இந்த பேஷ்வாக்களின் வம்சத்தினரே இன்றய ஆர்.எஸ்.எஸ் அமைப்பினை தொடங்கியவர்கள். இந்த கூட்டமே துரோகக்கூட்டம் தான்.
தஞ்சையை ஆண்ட சரபோஜி எனும் மாராத்திய போன்ஸ்லே எனும் ஷத்திரிய வழிவந்த அரசன் மருதுபாண்டியர்களுக்கு ஆதரவு தரமறுத்து ஆங்கிலேயருக்கு கைக்கூலி வேலைபார்த்தது வரலாறு. மராத்திய அரசனிடம் உதவிகேட்டு சென்ற போராளிகளின் தூதர்களை வெள்ளையரிடம் சாவர்க்கர் போல காட்டிக்கொடுத்தது வரலாறு. இந்த போன்ஸ்லே எனும் மராத்திய அரசன் மராத்திய சிவாஜி வம்சாவழியினர். இதுதான் உங்கள் மராத்திய ஷத்திரிய-பார்ப்பன கும்பல்களின் துரோக வரலாறு.
மருதுசகோதரர்கள் உள்ளிட்ட போராளிகள் சூத்திர சமூகத்தை சார்ந்தவர்கள், ஆகவே இவர்கள் அதிகாரத்தை கைப்பற்றக்கூடாது என்பதற்காக மராத்திய பேஷ்வாக்களும், தஞ்சை சரபோஜிகளும் வெள்ளையரோடு கைகோர்த்தவர்கள். மருதுசகோதரர்களுக்கு ஆதரவாக படை, ஆயுதம் கொடுத்த திப்புசுல்தான் மீது படையெடுக்க மராத்திய பேஷ்வாக்கள் ஆங்கிலேயரோடு ஒப்பந்தம் உருவாக்கினார்கள். இந்த ஒப்பந்தத்தை செய்தவர் மராத்திய பார்ப்பனரான தாதா-பட்னாவிஸ் (இன்றய மராத்திய பாஜக முதல்வரின் வம்சாவழி). இந்த ஒப்பந்தத்தைக் கொண்டு திப்புசுல்தானின் மைசூர் மீது படையெடுப்பு நடக்கிறது. திப்புசுல்தான்-மருதுபாண்டியர்கள்-தீரன்சின்னமலை-விருப்பாச்சிகோபாலநாயக்கர்-பொல்லான் ஆகியோர் கூட்டணிக்கு வலுப்பெறுவதை தடுக்க மைசூர் மீது படையெடுப்பு நடத்தி திப்புவை வீழ்த்தினார்கள். இதனாலேயே மருதுசகோதரர்களுக்கு கிடைக்கவேண்டிய படை உதவி தக்க சமயத்தில் கிடைக்காமல் வீழ்த்தப்படுகின்றனர். பின்னர் சிவகங்கைச் சீமையில் நடந்த கொரில்லா போரில் மருதுசகோதரர்களை வீழ்த்த வழியில்லாதபோது, மருதுபாண்டியர்களை சாதியரீதியாகவும், வர்ணரீதியாக ஆட்சி செலுத்தும் வம்சாவளி உரிமை கிடையாதென சாதியை வைத்து பிரித்தார்கள் வெள்ளையர் என்பது வரலாறு.
ஆளுநர் எனும் சதிகார தமிழின விரோத பதவியை வைத்து தமிழனை கொச்சைப்படுத்த எத்தனைக்காலம் அனுமதிக்கப்போகிறோம்?
மருதுபாண்டியர்களின் பெருவீரத்தை குறித்து எந்த வடநாட்டானவது அறிவானா? இந்தி புத்தகத்தில் மருதுபாண்டியர் தியாகத்தை சேர்த்தார்களா? 'மங்கள்பாண்டே' எனும் பீகாரி பார்ப்பானின் மதவெறியை வைத்து நடந்த போரை 'முதல்விடுதலைப் போர்' என சொல்லுகிற இந்திய ஒன்றியம், என்றைக்காவது மருதுபாண்டியர்களின் சாதி-மதம் கடந்த புரட்சியை முதல் விடுதலை போர் என அறிவித்தார்களா? அப்புறம் எதற்கு பாரதத்தின் விடுதலைக்காக போரிட்டவர் என மருதுபாண்டியர்களை சொந்தம் கொண்டாடுகிறீர்கள் துரோகிகளே!!
மருதுபாண்டியர்களின் கலகமே முதல் சுதந்திர போர் என அறிவிக்க வேண்டுமென நீதிமன்றத்தில் தீர்ப்பு வாங்கிய மூத்த ஆய்வாளர் பேரா.ராஜய்யன் இன்னும் உயிரோடுதான் 97 வயதில் இருக்கிறார். இருந்தும் அவரது தீர்ப்பை ஏன் வடநாட்டு இந்தி வெறியன்கள் நடைமுறைபப்டுத்தவில்லை? பதில்சொல்வாரா ஆளுநர்?
மருதுபாண்டியர்களை கொச்சைப்படுத்தும் ஆளுநரை வெளியேற்றும் போராட்டத்தை நாம் நடத்தவில்கையெனில் நமது வரலாறு இழிவுசெய்யப்படுவதை தடுக்க இயலாது.
ஆளுநர் மாளிகையின் அவதூறுக்கு எதிராக தவெக அரசு வாய்திறக்குமா? முதல்வர் அறிக்கை கொடுப்பாரா? என்ன செய்யப்போகிறீர்கள்?
அனைத்து கட்சி தலைவர்களும் இதற்கான கண்டன அறிக்கையையும் போராட்டத்தையும் உடனடியாக நடத்திட வேண்டும் என மே17 இயக்கம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம்.
திருமுருகன் காந்தி
மே பதினேழு இயக்கம்
16-06-2026
தவெகவின் வெற்றி அதிமுக கட்சியை அசைத்துக் கொண்டிருக்கிறது. அப்படியென்றால் அண்ணாமலையின் கட்சி எதன் அடித்தளத்தை குறிவைத்து உருவாக்கப்பட்டிருக்கிறது எனும் கேள்வி எழவேண்டுமல்லவா?
அண்ணாமலை ஆதரவாளர்கள் பாஜகவிற்கு எதிராகவா கட்சி கட்டுகிறார்கள்? பாஜகவோடு ஏன் அட்டைகத்தி சண்டை செய்கிறார்கள்? இந்துத்துவத்தை ஒழிக்கவா?..
சிரித்துவிட மாட்டோமா?
அன்றாடம் அண்ணாமலை பாஜக, தவெக கட்சிகளுக்கு எதிராக நடைமுறை சிக்கல்குறித்து அறிக்கை வெளியிடுமளவு அவரது ஐ.டி கும்பல் அறிவாளியாக திடீரென மாறுகிறதே எப்படி? சாமானிய மக்கள் மீதான அன்பினால் இது நடக்கிறதா?
யார் செயலுக்தி வகுக்கிறார்கள்?
மிகக்கவனமாக தலித்துகள் மீதான தாக்குதல் குறித்து அண்ணாமலை அதிகம் பேசுவதில்லையே எதனால்? தன்னை யாருடைய அடையாளமாக மாற்றிக்கொள்ள முயல்கிறார்?
அதிமுகவை தவெக தின்று செறிக்குமென்றால், கொங்கு மண்டல இடைநிலை சாதிகளுக்கு எடப்பாடியார் தேவைப்படுவாரா?
பாஜக வலுவிழந்தபின் நயினார் நாகேந்திரன் தென்மண்டல இடைநிலை சாதிகளுக்கு தலைவராக இயங்க முடியுமா?
சீமான் கட்டியெழுப்பிய கற்பனை கோட்டை சிதைவதால் சிதறும் ஆதரவாளர்கள் திமுக அல்லாத தலைமையை தானே விரும்புவார்கள்?
' திராவிட எதிர்ப்பு பார்ப்பன கடப்பரையாகவே மாறிநிற்கும்' அண்ணாமலை தம்பிகளை ஈர்க்காமல் இருப்பாரா?
பலமிழந்த பாஜகவை நம்பி நிற்க இயலாதென ஜி.கே.வாசனே முடிவெடுத்தபின்னர் அன்புமணி மட்டும் பாஜகவோடும், அதிமுகவோடும் நிற்பாரா? அப்படியெனில் டி.டி.வி என்ன செய்வார்? பாஜக கூட்டணி சத்தமில்லாமல் கரைகிறதே, யாருடைய வேலை இது?
வடக்கு, மேற்கு, தெற்கு பகுதி இடைநிலை சாதிகளுக்கு தலைவராக அண்ணாமலையை தவிர வேறுயார் அமைவார்கள் எனும் கருத்தை (நேரேட்டிவ்வை) செயற்கையாக உருவாக்க, இருக்கவே இருக்கிறார்கள், 'பத்திரிக்கையாள-கருத்து-கந்தசாமிகள்'. காசுகொடுத்தால் அண்ணாமலைக்கு குடமுழுக்கை நடத்தி கோபுரம் ஏற்றிவிடமாட்டார்களா?
கொங்கு இடைநிலை சாதிகளும், தென்மாவட்ட இடைநிலை சாதிகளும், வடமாவட்ட இடைநிலை சாதிகளும் இணைந்து அண்ணாமலையை மேலே தூக்கிவிட அமித்ஷா ஒத்துழைப்பு தராமலா போவார்? ரஜினிகாந்தும், அவரது கார்-பார்க்கிங் இயக்கமான லதாரஜனிகாந்த்தும் சேர்ந்து மயிலை-மாம்பலம் கோஷ்டிகளை வளைத்து நிறுத்தினால் அண்ணாமலையை வைத்து ஆர்.எஸ்.எஸ் ஆட்சியை அமைக்க இயலாதா என யோசிக்கமாட்டார்களா?
இதற்கு இடையில் 'அண்ணாமலை'க்கெல்லாம் எதிர்வினையாற்றி அவரை பெரியாளாக்கிவிட வேண்டுமா, என விஜயை முதலமைச்சர் ஆக உதவி செய்த பென் நிறுவன ஜாம்வான்கள் அண்ணாமலைக்கும் உதவி செய்யாமலா இருப்பார்கள். (ஏற்கனவே அண்ணாமலையை விமர்சித்தவுடன் ஒரு திமுக ஐடிவிங் தலைமை பொங்கி எழுந்து, ஏன் விஜயை விமர்சிக்கவில்லை என்றது)
திமுக ஐடி குழுவினர் அண்ணாமலையின் அறிக்கையை போல அன்றாட அறிக்கைகளை தயாரிப்பதற்காக சுதாரிப்பதற்கு முன்னர் அண்ணாமலை ஒருபடி மேலேறித்தானே சென்றிருப்பார். ஜென்-ஜீ மொழியில் அரை தமிழ், அரை இங்கிலீஷில் பேசினால் புது தலைமுறையை ஈர்க்கலாம், ஜென்-ஜீ திமுகவை கட்சி பிரமுகர்களின் பிள்ளைகளை வைத்து நடத்தினால் ஒப்பீனியனை மாற்றிவிடலாமென முயல்வது பழைய யுக்திகள் தானே. திரைத்துறையில் எம்.ஜி.ஆர்., ரஜினி, விஜய்க்கு மாற்று பிம்பத்தை திமுகவில் இருந்து உருவாக்கினால் வென்றுவிடலாமெனும் பழைய கால யுக்திகள் இல்லாமல் புதுயுக்திகள் வகுக்கப்படுமா என தெரியாது.
அண்ணாமலையின் வழியாக வைக்கப்பட்ட இலக்கு, விஜய்க்கு வைக்கபப்ட்டதல்ல.
திமுகவினர் இதற்கு பின்னரும் விசிக, கம்யூனிஸ்டு, முஸ்லீம்லீக் என ப்ரேக்-அப் மனநிலையில் இருந்து, புதியதாக உருவெடுத்துள்ள ஆபத்தை எதிர்கொள்ள வழிபார்ப்பார்களா என நமக்கு தெரியாது.
'தவெக ஆட்சி என்பது தலித்துகள் நலன் சார்ந்த ஆட்சி அதனால் இடைநிலை சாதிகளுக்கு (துணிச்சலாய் பொய்சொல்லும் v-log) அண்ணாமலைதான் சிறந்தவர்' என ஆர்.எஸ்.எஸ் வட்டாரங்கள் நேர்ரேடிவ் உருவாக்க ஆரம்பித்திருப்பதை திமுக கவனித்ததாக தெரியவில்லை. இதனாலேயே மே17 இயக்கம் அண்ணாமலையை அம்பலப்படுத்திக் கொண்டிருக்கிறது.
ஆனால், இடைநிலை சாதிகளின் தலைவராக அண்ணாமலையை மாற்றும் ஆர்.எஸ்.எஸ் நகர்வினை நாம் தோற்கடிக்காமல் போனால் தமிழ்நாடு மாபெரும் நெருக்கடியில் வீழும். இதைப் பற்றி கவலைப்பட வேண்டியது இடைநிலை சாதிகளே. ஏனெனில் அவர்களின் தொழிலுக்கும், இட ஒதுக்கீட்டிற்கும் வேட்டுவைத்த பாஜகவை தலைவராக தன்னெழுச்சியாக ஏற்றுக்கொள்ளுமளவு மூளைச்சலவை செய்யப்பட்ட பலர் அங்கே இருக்கிறார்கள்.
அதிமுகவை எடப்பாடி பலவீனப்படுத்துவார். திமுகவை அண்ணாமலை பலவீனப்படுத்துவார்.
'கழகங்கள் இல்லா தமிழகம்' எனும் ஆர்.எஸ்.எஸ் முழக்கத்தை நோக்கி வேகமாக நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.
RahulGandhi didn't hesitate to hug Modi. But he said will surely won't hug comrade Pinarayi Vijayan.
How can he defeat RSS?
His hollow slogans against RSS is nothing but to upease liberals of North Indians. Anyone who understands RSS is a Fascist organisation, wont say no to communists.
Congress is half-sanghi. BJP completes the next half.
அண்ணாமலைக்கும், பாஜகவுக்கும் வாய்ச்சண்டை என
'வருத்தப்படாத வாலிபர்' சங்கத்திற்குள் சலசலப்பு.
இதை நம்பினால் தான் அண்ணாமலையிடம் ஆட்களை சேர்க்க இயலும்.. போலி தமிழ்த்தேசியவாதிகளால் 'பச்சைத்தமிழன்' என அண்ணாமலையின் சாதிய பின்புலத்தின் ஆதாயத்திற்காக பொங்கவும் இயலும்.
'பாஜக ஆதரவு' என்று சொன்னால் 'தமிழன் திரும்பிகூட பார்க்கமாட்டான்' எனும் உண்மை அமித்ஷாவுக்கும், அண்ணாமலைக்கும் தெரிந்துதான் இருக்கிறது.
பாவம் அண்ணாமலை ஆதரவாளர்கள், போலிச்சண்டையை போராளி சண்டை என நினைக்கிறார்கள்.