Being smart means seeing the patterns others miss, recognizing the games people play, and knowing when to stay silent. Sometimes, the smartest move isn’t proving you’re right—it’s knowing when pretending not to understand is the wiser choice
#Wisdom#Mindset#LifeLessons
🐍 WELCOME TO CHU CHÁ’S WORLD…
Meet Chu Chá — a little blue snake with a big heart, endless curiosity, and a world waiting to be discovered.
But every trail has a secret…
and Chu Chá is about to find one.
#ChuCha#SnakeTale#TrixMix#AnimatedFilm#ComingSoon
🐍 A little sneak peek into Chu Chá’s World…
A creative test exploring the look, feel and personality of Chu Chá — Snake Tale.
https://t.co/aAzK2YshA8
Not the official character intro — just an early experiment as we build the world.
#ChuCha#animation#TrixMix
ஆக்கு பாக்கு வெத்தல…
ஆட்டம் இன்னும் முடியல! 🔥
9 TO 5 🆚 OWN BOSS
Salary 🆚 Dream
A new Tamil rap battle pilot from Trimmy Music.
🎧 Listen to the pilot and tell me: Which side are you?
https://t.co/P9vEIH8j5P
#AakkuPaakuVethala#TamilRap#TamilHipHop#TamilMusic
அரசு செலவில் உயர்படிப்பு படிக்கிறார்கள். படிக்கும் சமயத்தில் அவர்��ளுக்கு சம்பளமும் தரப்படுகிறது. இதற்கு பதிலாக அரசாங்கம் அவர்களை அரசு மருத்துவமனைகளில் அரசு சம்பளத்துடன் பணிபுரிய சொல்கிறது. அப்படி பணி செய்ய முடியவில்லை என்றால் அவர்கள் படிப்பிற்கு அரசாங்கம் செய்த செலவை கொடுத்துவிட்டு செல்லலாம் என்று ச��ல்கிறது.
ஆனால் 10% மருத்துவர்கள் அரசு செலவில் படித்துவிட்டு நீண்ட விடுப்பில் வெளிநாடுகளுக்கு சென்று பணிபுரிகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் பணிபுரிகிறார்கள். தனியார் மருத்துவமனை மற்றும் ஸ்கேன் சென்டர்கள் நடத்துகிறார்கள். இவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள் என்று அரசாங்கத்தை நோக்கி அறப்போர் இயக்கம் கேள்வி எழுப்பியதை அடுத்து தற்பொழுது அரசாங்கம் முழுமையற்ற ஒரு தகவலை வெளியிட்டுள்ளது. 680 மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்க இறுதி ஆணை பிறப்பிக்கப்பட்டு விட்டதாக சொல்லி இருக்கிறது. ஆனால் அந்த 680 மருத்துவர்கள் யார்? அவர்கள் மீது பிறப்பிக்கப்பட்ட இறுதி ஆணை என்ன என்பதை வெளியிடவில்லை.
வெளிப்படையான நிர்வாகத்தை தருவதாக உறுதி அளித்துள்ள TVK அரசு ஏன் இந்த விவரங்களை வெளிப்படையாக வெளியிடவில்லை. யார் அவர்களை தடுத்தது? இரண்டு மாதங்களாக தொடர் விடுமுறையில் இருந்தாலே காவல்துறையில் தெரிவிக்க வேண்டும், பிணயப்பத்திர தொகை வட்டியுடன் வசூலிக்கப்பட வேண்டும், பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்க பல ஆண்டுகளாக நீண்ட நெடிய விடுமுறையில் இருக்கும் இந்த 10% மருத்துவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து கொள்ள மக்களாகிய எங்களுக்கு உரிமை இல்லையா?
@arunraajkg @CMOTamilnadu @TVKVijayHQ @TNHealthDept @TNDIPRNEWS
ஏற்கனவே கடும் பணி சுமையில் இருக்கும் அரசு மருத்துவர்கள் மீது மேலும் அழுத்தத்தை அதிகரிக்கும் இந்த 10% காணாமல் போன மருத்துவர்கள�� மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு மருத்துவர்கள் அரசுக்கு கோரிக்கை வைப்பார்களா?
பள்ளிக்கரணை ராம்சார் சதுப்புநிலப் பகுதி எல்லையை சுற்றி 1 கிமீ சுற்றளவிற்கு ��ந்த கட்டிட அனுமதியும் கொடுக்க கூடாது என்று பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் திமுக ஆட்சியில் CMDA பொறுப்பு வகித்த சேகர் பாபு அந்த ராம்சார் நிலத்தின் எல்லைக்கு உள்ளேயே 1250 வீடுகள் கட்ட அனுமதி கொடுத்துள்ளார். இங்கே கட்டிடம் கட்ட ஆட்சே��னை இல்லை என்று சுற்றுச்சூழல் துறை மோசடியாக தடை இல்லா சான்றிதழும் கொடுத்துள்ளது.
தற்பொழுது சுற்றுச்சூழல் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் CMDA கொடுத்த முறைகேடான கட்டிட அனுமதி ஏன் இது வரை ரத்து செய்யப்படவில்லை என்ற கேள்வி எழுகிறது. தமிழக அரசு பதில் சொல்லுமா?
#DVAC40
சைதாப்பேட்டை TVK கோட்டை என்று பேனர் வைத்துள்ளவர்��ளுக்கு, அது அங்கே செல்லும் மக்கள் மீது விழுந்தால், மண்டையில் விழும் ஓட்டை பற்றிய கவலை கொஞ்சமாவது இருக்கிறதா? அடிப்படை அறிவும் நாகரீகமும் கொஞ்சமாவது இருந்தால் இந்த வேலையை செய்வீர்களா?
ஒரு ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் தனது அலுவலகத்தின் வாயிலில் மக்கள் நடந்து செல்லும் நடைபாதையில், இது போல பேனர் வைத்து விளம்பரம் செய்து கொள்வதை பார்க்கும் போது அருவருப்பாக இருக்கிறது. இந்த இடத்திற்கு அருகில் அரசு பள்ளி இருக்கிறது. அந்த மாணவர்கள் அனைவரும் அந்த வழியாக தான் கடந்து செல்வார்கள். இந்த பேனர் வைத்துள்ளதால் அனைவரும் சாலையில் நடந்து செல்கிறார்கள். இந்த மாணவர்கள் உயிரை விட உங்கள் சுய விளம்பர பேனர் முக்கியமாக போய்விட்டதா? மாணவர்களின் நலனில் கொஞ்சமாவது அக்கறை இருப்பவர்கள் இந்த அறிவு கெட்டத்தனமான சமூக விரோத செயலை செய்வார்களா?
கடந்த திமுக ஆட்சியில் பேனர் விளம்பர கலாச்சாரத்துக்கு எதிராக குரல் கொடுத்த tvk கட்சியினர் தற்பொழுது என்ன சொல்லப் போகிறார்கள்? திமுகவை ஆட்சியில் இருந்து விரட்டுவோம் என்று கொக்கரித்த முதல்வர் விஜய், திமுக-அதிமுக ஆட்சி விட்டுச்சென்ற பேனர் கலாச்சாரத்தை விரட்ட ஏ���் முயற்சிக்கவில்லை? TVK கட்சியினர் பேனர் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவித்த அந்த கட்சியின் பொது செயலாளர், பேனர் வைத்த TVK கட்சியினர் மீது இது வரை எடுத்த நடவடிக்கை என்ன?
வெளிப்படையான, சுதந்திரமான ஆட்சி ��டத்துகிறோம் என்று சொல்லும் TVK அரசு, பேனர் வைப்பவர்கள் தங்கள் கட்சியாக இருந்தாலும் அந்த பேனர்களை அகற்றி அதை வைத்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க தமிழக காவல்துறைக்கு உத்தரவிடுவார்களா?
@TVKVijayHQ @BussyAnand @TVKPartyHQ @chennaipolice_ @chennaicorp @ChennaiTraffic @CMOTamilnadu @Chief_Secy_TN @CmcellTamilNadu
அறப்போர் புகாரின் அடிப்படையில் முன்னாள் திமுக அமைச்சர் வேலு மீது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு பதிவு செய்து ரெய்டு செய்து வருகிறது.
அது என்ன புகார்?
சாலைகளை போடாமலேயே அதை போட்டு முடித்ததாக சொல்லி பல கோடிகளை ஆட்டையை போட்டு இருக்கிறார்கள். புகாருக்கு பிறகு அர���ு ஊழியர்களை சஸ்பெண்ட் செய்து அவசர அவசரமாக இரவோடு இரவாக அந்த சாலைகளை காவல்துறை பாதுகாப்புடன் போட்டு ஆதாரத்தை அழிக்கிறார்கள். வழக்கு பதிவு செய்து விசாரிக்க சொன்னால் திருடனுக்கு தேள் கொட்டியது போல கம்முன்னு உம்முன்னு இருந்து கொள்கிறார்கள்.
Youtube link - https://t.co/xGQkabCKmS
இந்த ஊழல் மீது வழக்கு தொடுத்து இதில் சம்பந்தப்பட்ட ஆட்சியாளர்கள், ஒப்பந்ததாரர் மற்றும் அரசு ஊழியர்கள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறப்போர் அளித்த புகாரின் அடிப்படையில் தான் தற்பொழுது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு மீது FIR பதிவு செய்து ரெய்டு நடத்தி வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட மற்றொரு முன்னாள் திமுக அமைச்சரின் நெருங்கிய நண்பரான ஒப்பந்ததாரர் சங்கர் வீட்டிலும் ரெய்டு நடந்து வருகிறது.
#PF #DMK #Velu