கலைஞர் ஏன் இளைஞர்களின் நாயகனாக இன்றும் மிளிர்கிறார்..?!
ஒடுக்கப்பட்ட மக்களிலிருந்து வந்த ஒரு சிறுவன்...
பின்பு எழுத்தாளன்..
மேடை நாடக கதை ஆசிரியர்..
பத்திரிக்கை ஆசிரியர்..
மாணவர் புரட்சி படை இளைஞர்களில் தலைமையாளர்..
அரசியல்வாதி..
சட்டமன்ற உறுப்பினர்..
அண்ணாவின் கொள்கை பிடிப்புள்ள தம்பிகளில் ஒருவர்..
முதலமைச்சர்..
பலர் பிரதமர்களை தேர்ந்தெடுத்த மூத்த தலைவர்..
சக்கர நாற்காலியில் அமர்ந்த பின்பும் அயராது உழைத்த மாண்புமிகு முத்தமிழறிஞர்..
தலைவர் ஆம் போராட்ட குணத்தை நான் இருவரிடம் கற்றுக்கொண்டேன் பொது வாழ்விலும் சரி போராடுவதை தனிமனித வாழ்க்கையிலும் சரி..
ஒன்னு என் அப்பத்தா!!
இன்னொன்னு எம் தலைவர்
கலைஞர்🔥
சிலரின் துரோகத்தாலும் சிலரின் ஆணவத்தினாலும் சுய வாழ்வில் வீழ்ச்சியடையும் போது சிலரை நினைவுகூர்வேன் அப்போது அங்கும் நினைவுக்கு வருவது எம் தலைவர் கலைஞர் தான்..
ஆம் கலைஞர் ஒவ்வொரு உடன்பிறப்புகளின் உள்ளத்தில் வாழ்கிறார் உணர்வில் வாழ்கிறார்..
வீழ்ச்சியிலும்,எழுச்சியிலும் தலைவன் முகம் வந்து செல்லும்..🖤❤️
"கட்டை விரலோ, தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால்,பட்டை உரியும், சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்!"
கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று கோவை தெற்கு தொகுதி புலியகுளம் பகுதியில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில், எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த பொது மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த போது..
தலைவர் கலைஞரின் நினைவுகளே இன்றும் நம் மனங்களில் நிறைந்திருக்கின்றன. தந்தையாக, ஆசிரியராக, உற்ற நண்பராக, தலைவராக அவருடனான எனது அனுபவங்களே என்னை வழிநடத்துகின்றன.
அதேபோல, அவரோடு நீங்கள் கழித்த தருணங்களை, பெற்ற அனுபவங்களை, அந்த அரிதான நொடிகளைப் படம்பிடித்து நினைவுகளாக வைத்திருக்கும் புகைப்படங்களை comment-ல் பகிருங்கள்.
Tribute to ‘Kalaignar’ M Karunanidhi Ji, former Chief Minister of Tamil Nadu, on his birth anniversary. He was a poet, author, statesman, and great leader, loved by all. After he passed in 2018, we had sent our senior MP to his memorial meeting in Tamil Nadu @mkstalin@arivalayam
நாளை நடப்பதை இன்றே கணித்து, நவீன தமிழ்நாட்டைச் செதுக்கிய சிற்பி!
எளியோரின் வாழ்வில் ஒளியேற்றி, இந்தியாவுக்கே முன்னோடித் திட்டங்களை வகுத்துத் தந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர்.
#KalaignarForever#Kalaignar103
கழகத் தலைவர், மாண்புமிகு தளபதி @mkstalin அவர்களின் ஆணைக்கிணங்க, இன்று கோவை தெற்கு தொகுதி கொண்டசாமி லே-அவுட் பகுதியில், கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில், எனக்கு வாக்களித்து வெற்றி பெற வைத்த பொது மக்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்த போது..
கோடை விடுமுறைக்குப் பிறகு மீண்டும் பள்ளி வளாகம் குழந்தைகளின் சிரிப்பாலும் உற்சாகத்தாலும் நிரம்பவிருக்கிறது.
புது புத்தகங்கள், புது நண்பர்கள், புது கனவுகள் என இந்தக் கல்வியாண்டு ஒவ்வொரு குழந்தைக்கும் மகிழ்ச்சியும் சாதனைகளும் நிறைந்த புதிய பயணமாக அமையட்டும்.
விடுமுறை கதைகளைக் கேட்டு, குழந்தைகளை மீண்டும் கற்றல் சூழலுக்குள் மகிழ்ச்சியோடு அழைத்துச் செல்லவுள்ள ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் அன்பும் நன்றியும். 🌸📚✨
இன்று சென்னையில் கழக மகளிரணி சார்பில் நடைபெற்ற, முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களின் பிறந்தநாள் மற்றும் கழகத்திற்காக தேர்தல் களத்தில் உழைத்த வெல்லும் தமிழ்ப் பெண்களுக்கு நன்றி பாராட்டும் விழாவில் கலந்துகொண்டேன்.
மகளிரணி தலைவர் திருமிகு. விஜயா தாயன்பன், செயலாளர் திருமிகு. @HelenDa07123213, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் திரு. @mylaivelu71, திரு. @Dr_Ezhilan, திருமிகு. @TamilarasiMLA உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.
முத்தமிழ் அறிஞர் முன்னாள் முதலமைச்சர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103-வது பிறந்தநாளில்,
மாண்புமிகு சென்னை உயர்நீதி மன்றம் இன்று (03.06.2026),
2016 பொது தேர்தலில் ராதாபுரம் சட்டமன்றத்தொகுதியில் 104 வாக்குகள் வித்தியாசத்தில்
மு. அப்பாவு வெற்றி பெற்றதாக தீர்ப்பு வழங்கியதையடுத்து,
கழகத் தலைவர் முன்னாள் முதலமைச்சர் திரு மு.க.ஸ்டாலின் அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றேன்.
@arivalayam@mkstalin