ஸ்பெயினில் இரண்டு அதிவேக ரயில்கள் மோதிக்கொண்ட விபத்தில் குறைந்தது 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர். விபத்தில் சிக்கிய ரயில்களில் 500-க்கும் மேற்பட்ட பயணிகள் இருந்த நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Link: https://t.co/8rRbxjgW48
காரின் மேல் அமர்ந்து பயணித்த குரங்கு
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த நெக்குந்தி பகுதியில் உள்ள சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் சென்ற காரின் மேல் குரங்கு ஒன்று அமர்ந்து பயணித்துள்ளது. சக வாகன ஓட்டிகள் பதிவு செய்த இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
#Tirupathur #Monkey
தேனி சிறையில் இருந்து தப்பியோடிய 17 சிறைக் கைதிகளும் பிடிபட்டனர்
அக்டோபர் 26 தேனி மாவட்டம் தேக்கம்பட்டி சிறையிலிருந்து 17 சிறைக்கைதிகள் தப்பியோடினர். இதில் நேற்றைய தினம் 13 பேர் பிடிபட்ட நிலையில் இன்று காலை இருவரை காவல் துறையினர் பிடித்து சிறையில் அடைத்தனர்.
மீதமுள்ள இருவரை தீவிரமாக தேடி வந்த நிலையில் கம்பம் காண விளக்கு பகுதியில் இருவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். சிறையில் இருந்த தப்பிய 17 கைதிகளும் தற்போது பிடிபட்டுள்ளனர்.
மேலும் படிக்க: https://t.co/WRWnQhN7Cs
#Theni #Prison
இஸ்ரேல் தேர்தல்: நெதன்யாகு மீண்டும் பிரதமராவதில் சிக்கலா? அடுத்து என்ன நடக்கும்?
இஸ்ரேலில் அக்டோபர் 27ஆம் தேதி நடந்தது. கடந்த சில தசாப்தங்களில் இல்லாத வகையில் அதிகளவு வாக்குகள் பதிவாகியுள்ளன. வாக்குப் பதிவு நாள் நெருங்கியபோது, சமீபத்திய ஆண்டுகளில் மிகவும் கடுமையான போட்டிகளில் ஒன்றாக இது இருக்கும் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. இரு தரப்புக்கும் உடனடியாகத் தெளிவான வெற்றி கிடைக்காது என்று பெரும்பாலான தேர்தல் பார்வையாளர்கள் கணித்தனர்.
#IsraelElection #Netanyahu
நொய்யல் ஆற்றில் ஏற்பட்ட நுரைக்கு ஷாம்பு காரணமா? - விமர்சனங்களுக்கு பதிலளித்த அமைச்சர்
வடகிழக்கு பருவமழை காரணமாக அண்மையில் திருப்பூர் மாவட்டம் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளநீரூடன் அளவுக்கு அதிகமாக நுரை பொங்கி காணப்பட்டது. இதுதொடர்பாக அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது சுற்றுச்சூழல் அமைச்சர் ராஜீவ் அளித்த பதில் பேசுபொருளானது. அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ இதுகுறித்து விமர்சித்துப் பேசினார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் இதுபற்றி தனது X தளத்தில் விமர்சித்திருந்தார். அதில், "சோப்பு மற்றும் ஷாம்பூ பயன்பாடுதான் ஆறுகளில் நுரை உருவாகக் காரணமா? யாருக்கான குரலாக சுற்றுச்சூழல் அமைச்சர் ஒலிக்கிறார்? எனக் குறிப்பிட்டுள்ள அவர், "அமைச்சரின் பதில் அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்தார். மேலும் "இத்தகைய கருத்தைத் தெரிவித்திருப்பவர் தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டுத் துறை அமைச்சர் என்பதுதான் இதைவிடவும் வேதனையளிக்கும், கவலையளிக்கும் விஷயம்" என அவர் குறிப்பிட்டிருந்தார்.
#NoyyalRiver #SellurRaju
தண்ணீர் இன்றி தவிக்கும் குதிரைகள்; நெடுந்தீவின் அடையாளம் இன்று அழிவின் விளிம்பில்...
யாழ்ப்பாணக் கடற்பரப்பில் உள்ள நெடுந்தீவில் பல நூற்றாண்டுகளாக சுதந்திரமாக வாழ்ந்து வரும் காட்டுக் குதிரைகள் தற்போது கடும் வறட்சி மற்றும் குடிநீர் பற்றாக்குறையால் அழியும் நிலையை எதிர்கொண்டுள்ளன.
பதினாறாம் நூற்றாண்டில் போர்த்துகேயர் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் இந்தக் குதிரைகள், காலப்போக்கில் மனிதக் கட்டுப்பாடின்றி தன்னிச்சையாக வாழத் தொடங்கி நெடுந்தீவின் தனித்துவமான அடையாளமாக மாறின.
ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கில் இருந்த இவற்றின் எண்ணிக்கை தற்போது சில நூறுகளாகக் குறைந்துள்ளது. கடும் கோடை, புல்வெளிகள் காய்ந்துபோதல் மற்றும் நீராதாரங்கள் வற்றியதால் மனிதர்களின் உதவிக்காக இவை காத்திருக்கின்றன.
உருகும் பனிப் பாறையிலிருந்து கிராமத்தைக் காக்கப் பிரார்த்தனை
நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப்பெருக்கைத் தொடர்ந்து, இமயமலையில் காலநிலை மாற்றத்தின் தாக்கம் குறித்து கடுமையான எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன. அங்குள்ள ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நேபாள சமூகம், உருகிவரும் பனிப்பாறையால் கடுமையான அச்சுறுத்தலை எதிர்கொண்டுள்ளது.
#Nepal #Glacier
போர் பணி முடிந்து திரும்பிய விமானியை வயல்களில் திரண்டு வரவேற்ற யுக்ரேனிய மக்கள்
யுக்ரேனின் டானெஸ்க் பகுதியில் போர் நடவடிக்கையை முடித்து வீடு திரும்பிய விமானிக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அருகிலுள்ள வயல்வெளிகளில் ஓடி யுக்ரேன் தேசியக் கொடிகளை அசைத்து விமானியை அவர்கள் வரவேற்றனர்.
எம்.ஐ-24 ரக ஹெலிகாப்டரில் வந்த அந்த விமானி தனக்கு கிடைத்த வரவேற்பை பார்த்து கண் கலங்கியதாக தெரிவித்தார்.