உழவர்களின் பயிர்க்கடன் தள்ளுபடி வரவேற்கத்தக்கது:
திரைத்துறைக்கு மண்டிக் கிடக்கும் ஏகபோகத்தை
ஒழித்து சமவாய்ப்பு வழங்க சீர்திருத்தம் செய்ய வேண்டும்!
தமிழ்நாட்டில் கூட்டுறவு சங்கங்களில் கடந்த ஆண்டு மே மாதம் முதல் உழவர்கள் பெற்ற பயிர்க்கடன்களில் குறு விவசாயிகளின் ரூ.50,000 வரையிலான பயிர்க்கடன்களை முழுமையாகவும், அதே அளவுக்கான சிறு விவசாயிகளின் பயிர்க்கடன்களில் 50 விழுக்காட்டையும் தள்ளுபடி செய்து அரசு ஆணையிட்டிருக்கிறது. 50 ஆயிரத்திற்கும் மேல் ரூ. 1 லட்சம் வரையிலான கடன்களின் ரூ.5000 முதல் ரூ.40,000 வரை தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இது முழுமையாக பயனளிக்காது என்றாலும் கூட, விவசாயிகளுக்கு ஓரளவாவது பயனளிக்கக் கூடிய இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
தமிழ்நாட்டில் புதிய திரைப்படங்கள் திரையிடப்படும் போது முதல் 7 நாள்களுக்கு தினமும் 5 காட்சிகளைத் திரையிட அனுமதி அளித்து அரசு ஆணையிட்டுள்ளது. முதலமைச்சர் திரைத்துறையிலிருந்து வந்தவர் என்பதால் இந்த சலுகை வழங்கப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால் பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரித்தவர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்கும் என்பது மட்டும் தான் ஒற்றைப் பயன் ஆகும்.
தமிழ்த் திரையுலகம் கடந்த ஐந்தாண்டுகளாக ஒரே குடும்பத்தின் பிடியில் சிக்கித் தவித்தது. அந்தக் குடும்பத்தின் பிடியிலிருந்து திரையுலகை மீட்டெடுக்க வேண்டும்; ஏராளமான சீர்திருத்தங்களைச் செய்ய வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. தமிழ்த் திரையுலகில் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட 2000-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியிட முடியாமல் முடங்கிக் கிடக்கின்றன. அவற்றை வெளியிட அரசு உதவி செய்ய வேண்டும்.
வார இறுதி நாள்களில் திரைப்படங்கள் திரையிடப்படும் போது, எந்த ஒரு திரைப்படத்திற்கும் 33% திரையரங்குகளுக்கு மேல் ஒதுக்கப்படாமல் இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும். திரைத்துறையின் வீழ்ச்சிக்கு நடிகர்களுக்கு அதிக ஊதியம் தருவது தான் காரணம் என்றும், திரைப்படத்தின் மொத்த தயாரிப்பு செலவில் 80% நடிகர்களுக்கு மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதாகவும் தயாரிப்பாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இந்த நிலையை மாற்றி நடிகர்களின் ஊதியத்திற்கு உச்சவரம்பு நிர்ணயிக்கவும், அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் சமவாய்ப்பு கிடைக்கும் வகையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@CMOTamilnadu
கடுங்குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் மீது துரிதமாக வழக்குப் பதிந்து அதனை விரைவாக விசாரணை செய்தும், வழக்கினை நடத்தியும், கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் உத்தரவு.
#CMJosephVijay
தமிழக முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கம் கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 1 மில்லியன் ஃபாலோவர்ஸ்-ஐ கடந்துள்ளது. இதற்கு முன் 4 லட்சம் பேர் ஃபாலோ செய்த நிலையில் தற்போது 10 லட்சமாக உயர்வு
#CMJosephVijay#Instagram#ThanthiTV
தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள், எனது இல்லத்தில் மரியாதை நிமித்தமாக சந்தித்தபோது. உடன் முனைவர் சௌமியா அன்புமணி சட்டமன்ற உறுப்பினர் அவர்கள்.!
மாண்புமிகு தமிழ்நாட்டு முதல்வர் விஜய் அவர்கள் என்னுடைய இல்லத்திற்கு வருகைப் புரிந்தார். அவரை வரவேற்று, என்னுடைய அன்பையும், வாழ்த்துகளையும் தெரிவித்தேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் இன்று (11.5.2026) சென்னையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் ஆழ்வார்பேட்டையிலுள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான
திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் இல்லத்திற்கு நேரில் சென்று அவரை சந்தித்து, பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
தமிழ்நாடு முதலமைச்சராக பதவியேற்றுள்ள திரு சி. ஜோசப் விஜய் அவர்களுக்கு வாழ்த்துகள். அவரது பதவிக்காலம் சிறப்பானதாக அமைய நல்வாழ்த்துகள். மக்களின் வாழ்க்கையை மேம்படுத்த மத்திய அரசு தமிழ்நாடு அரசுடன் இணைந்து தொடர்ந்து பணியாற்றும்.
@TVKVijayHQ
இன்று (11.5.2026) தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், தற்காலிக சட்டமன்றப் பேரவை தலைவர் திரு. கருப்பையா அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு சட்டமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
#CMJosephVijay
C. ஜோசப் விஜய் எனும் நான்...
உளமாற உறுதி கூறுகிறேன்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள்
சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்றுக்கொண்டார்.
#CMJosephVijay
சென்னை, கிண்டியிலுள்ள மக்கள் மாளிகையில் தற்காலிக சட்டமன்றப் பேரவை தலைவராக பதவியேற்றுக் கொண்ட திரு. கருப்பையா அவர்கள், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களுக்கு மலர்கொத்து வழங்கி வாழ்த்து பெற்றார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்கள் சென்னை, வேப்பேரி பெரியார் திடலில் திராவிடர் கழகத் தலைவர் திரு. கி.வீரமணி அவர்களை சந்தித்து பொன்னாடை அணிவித்து, மலர்கொத்து வழங்கினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் தலைமையில் இன்று (10.5.2026) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
#CMJosephVijay