@mkstalin கழகத்தின் உண்மையான ஒரு மனிதரை இழந்து வாடுகிறோம் உண்மையை உரக்கச் சொல்லும் கழகத்தின் மாமனிதர் ஐயா தஞ்சை மாவட்டத்தில் கழகத்திற்கு பெரும் இழப்பை விட்டுச் சென்றுள்ளார்
தஞ்சை மண்ணில் கழகத்தின் தூணாக விளங்கிய எம். இராமச்சந்திரன் அவர்கள் மறைந்த செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்.
எம்.ஆர். என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்பட்ட எம்.இராமச்சந்திரன் அவர்கள், களப்பணியில் மக்களோடு மக்களாக வாழ்ந்தவர். புல்லட் வண்டியில் சென்று, வயல்வெளிகளில் நின்று மக்களின் குறைகளைக் கேட்டவர்; அவற்றுக்குத் தீர்வுகாணச் சட்டமன்றத்தில் வாதாடியவர். 1989 மற்றும் 1996-ஆம் ஆண்டு தேர்தல்களில் திருவோணம் தொகுதியிலும், 2016-ஆம் ஆண்டு தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியிலும் வென்று சட்டமன்ற உறுப்பினராகச் சிறப்பாகச் செயலாற்றியவர். 2016-2021 காலகட்டத்தில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த நான், அவரது சட்டமன்றப் பேச்சுகளை ஆழ்ந்து கவனித்து வியந்திருக்கிறேன்.
கள்ளங்கபடமற்ற பேச்சுக்குச் சொந்தக்காரரான அவர், தேர்ந்த வழக்கறிஞராகவும் இருந்து, எளிய மக்களுக்குத் தேவையான சட்ட உதவிகளையும் செய்து வந்தவர்.
தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அவர் என்னை வந்து சந்தித்துபோது வருந்திய அவருக்கு நம்பிக்கையளித்து வழியனுப்பி வைத்தேன். இனி அந்த அன்பு முகத்தைக் காண முடியாதே என்கிற ஏக்கமும், அவர் நம்மைவிட்டுப் பிரிந்த துயரமும் ஒருசேர வாட்டுகின்றன.
செயல்வீரராக இருந்து தஞ்சை மண்ணில் கழகத்தை வளப்படுத்திய எம்.இராமச்சந்திரன் அவர்களது மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதோடு, அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், கழக உடன்பிறப்புகள், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
❤️ வெண்மை இதழ்
ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும், அந்த ஆண்டைப் பற்றி முழுமையாக அலசி டைரியில் எழுதுவது ஒரு குடும்பத்தில் வழக்கம். டிசம்பர் மாதத்தின் கடைசி நாளில், அந்தக் குடும்பத் தலைவர் தனது அறைக்குள் வந்து,... https://t.co/DTEbC1nnhH