இன்று KPY பாலா exposed ஆகியிருக்கிறார். ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளராக ஆரம்பித்து சினிமாவில் கதாநாயகன் ஆகும் இலக்குடன், கஷ்டப்பட்டவர்களுக்கு உதவிகள் செய்வதாகக் காண்பித்து, 'கலியுகக் கர்ணன்' டைட்டிலுடன் சமீப காலமாக நீண்ட நாட்கள் பேசுப��ருளாகக் கவனம் ஈர்த்தவர் பாலா. அவர் செய்துவரும் உதவிகளெல்லாம் இணையம் எங்கும் பரப்பப்பட்டன.
இப்போதெல்லாம் 'பிறருக்கு உதவுதல்' என்பதை மனிதாபிமானமாகப் பார்க்கமுதல் அதன் பின்னணியில் இருக்கக்கூடிய அரசியல் அல்லது மோசடியை மனதில் வைத்து சந்தேகத்துடனேயே பார்க்க வேண்டியிருக்கிறது.
இதையெல்லாம் பார்க்கும்போது தான் எனக்கு மறைந்த நடிகர் மயில்சாமி நினைவுக்கு வருகிறார். அவர் ஒன்றும் பெரிய முன்னணி நகைச்சுவை நடிகரும் இல்லை. ஆனால் உயிருடன் இருந்தவரை கையில் இருக்கும் பணத்தைப் பகிர்ந்து கொடுத்து உதவிகள் பல செய்தவர். ஆனால் என்றுமே அதை வைத்து விளம்பரமும் தேடிக்கொண்டதில்லை. அவரிடம் உதவி பெற்றவர்கள் முகம் யாருக்கும் தெரியாது. அவரது இந்தக் குணாதிசயம் கூட அவருடன் பயணித்த நடிகர்களால் ��வர் இறந்த பின்னரே அதிகம் பேசப்பட்டது.
நிஜத்தை விட போலிகளே அதிகம் ஜொலிக்கின்றன.
பதிவு: மதிரூபன் 🙏