தனியார் பள்ளிகளுக்கு அனுமதி பெற்றுத் தருவதாக ரூ.100 கோடி மோசடி வழக்கில் கைதாகியுள்ள பி.டி. அரசக்குமார் மற்றும் அன்பில் மகேஷ் இருவரும் நடத்திய நாடகத்தை சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பே அண்ணன் அண்ணாமலை தெளிவாக விளக்கியுள்ளார் .
தமிழகத்தில் தலைவிரித்தாடும் லாட்டரி விற்பனை!
தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை இப்படி பட்டவர்த்தனமாக பொதுவெளியில் நடக்கிறது என்றால், குற்றவாளிகளுக்கு எவ்வளவு தைரியம் இருக்க வேண்டும்?
பல ஏழை, எளிய குடும்பங்களை நடுத்தெருவில் நிறுத்தி பாழாக்கும் இந்த லாட்டரி கலாச்சாரம் மீண்டும் பகிரங்கமாகத் தலைதூக்கியுள்ளது.
இதற்குப் பின்னால் அமைச்சர் திரு.@AadhavArjuna அவர்களின் தூண்டுதல் இருக்குமோ என்ற கடுமையான சந்தேகம் மக்கள் மத்தியில் எழுகிறது. பொதுமக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்த சட்டவிரோத லாட்டரி விற்பனையை அரசு உடனடியாக இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்!
#TVKFails
Hearty birthday wishes to our @BJP4India National President Thiru @NitinNabin avl.
From humble beginnings to leading the world’s largest political party, his journey is a testament to dedication, discipline, and an unwavering commitment to nation-building.
His leadership continues to inspire millions of karyakartas across the nation. Wishing him good health and many more years of service to the nation.
ஊழல் செய்து குற்றப்பத்திரிக்கையில் பெயரை பதித்துள்ள IAS அதிகாரியை வைத்து தான் ஊழல் இல்லாத ஆட்சியை நடத்த போகிறீர்களா? @TVKVijayHQ@srinathtvk
இது தான் ஒரே வாரத்தில் ஊழலை ஒழிப்பதா? @AadhavArjuna
நெசவாளர்களின் வாழ்வாதரத்தை சீர்குலைத்த ஆளுங்கட்சி அராஜகம்
நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி தாலுகா தெற்கு வீரவநல்லூர் ஊராட்சியில் "விஜய் கட்சி" நிர்வாகியின் "ஆளுங்கட்சி அராஜக" செயல்.....
நெசவாளர்களின் வாழ்வாதரமான நூல் பாவு நெய்து கொண்டிருக்கும் போது வேண்டும் என்றே "ஆளுங்கட்சி நிர்வாகி" என்ற அதிகாரத் திமிரில் காரை ஏற்றி அந்த நெய்த பாவினை சீர்குலைத்துள்ளார்.
@annamalai_k@TVKVijayHQ@CMOTamilnadu
கல்வியில் சிறந்த தமிழ்நாடு, #திராவிடமாடல் ஆட்சியில் பாலாறும், தேனாறும் ஓடுகிறது, அமெரிக்காவிற்கு இணையான கல்வி என்று PR ஸ்டண்ட் மூலம் வெறும் வெற்று மாயையை மட்டுமே தி.மு.க உருவாக்கியது.
ஆனால் தமிழகத்தின் உண்மையான கல்வி நிலை இதுதான்!
செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் கணினி அறிவியல் உச்சத்தில் இருக்கும் இந்த நவீன யுகத்தில், நமது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கணினி அறிவியல் என்ற ஒரு பாடமே இல்லை. ஆசிரியர்களை மாணவர்களுக்குக் கற்பிக்க விடாமல், அவர்களின் மீது அதீத Data Entry பணிகளைத் திணித்து கல்வியை அடியோடு சீரழித்தீர்கள்.
திமுக ஆட்சியின் அவலங்கள்:
11,000 ஆரம்பப் பள்ளிகள் வெறும் 2 ஆசிரியர்களுடன் இயங்கும் அவலம்.
4,500 அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள் இல்லை.
30,000+ ஆசிரியர் பணியிடங்கள் காலி.
20% மாணவர்களுக்கு அறிவியல் ஆய்வக வாய்ப்பு மறுப்பு (CAG அறிக்கை).
5-ஆம் வகுப்பு மாணவர்களில் 64.4%-பேரால், 2-ஆம் வகுப்பு தமிழ் பாடத்தைக்கூட வாசிக்க முடியவில்லை (ASER 2024).
8-ஆம் வகுப்பு மாணவர்களில் 37.8%-பேரால், 2-ஆம் வகுப்பு பாடத்தைக்கூட வாசிக்க முடியவில்லை (ASER 2024).
8-ஆம் வகுப்பு மாணவர்களில் 60%-பேரால், அடிப்படை வகுத்தல் கணக்கைக்கூட போட முடியவில்லை (ASER 2024).
இப்படி குறைகளால் மட்டுமே நிறைந்த ஆட்சி செய்துவிட்டு, மாணவர்களின் எதிர்காலமான கல்வியில் விளையாடிவிட்டு, மக்கள் எப்படி உங்களுக்கு மீண்டும் ஆட்சியை கொடுப்பார்கள் என்று எதிர்பார்த்தீர்கள்? இந்த லட்சணத்தில் பள்ளிக்கல்வித் துறையை வைத்திருந்ததால்தான் 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்கள் உங்களுக்குத் தக்க பதிலடி கொடுத்து வீட்டுக்கு அனுப்பினார்கள்.
உங்கள் தவறுகளைத் திருத்திக்கொள்ளாமல், வாக்களிக்காத மக்களைப் பார்த்து குறை மட்டும் சொல்கிறீர்கள். மக்கள் எப்போதும் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்!
#DMKFails
TVK Minister Thiru Aadhav Arjuna has relived the famous Tamil comedy; "ஏணி சின்னத்துல ஒரு குத்து, தென்னமர சின்னத்துல ஒரு குத்து". For a moment, Thiru Aadhav Arjuna seemed to have forgotten which party he presently belongs to now. Party Hopper’s Paradox!
Even DMK cadres did not go this length to defend Thiru Udhayanidhi Stalin as Thiru Aadhav Arjuna did.
How does Sanathana Dharma become synonymous with the Hindu religion in North India, but conveniently get redefined as inequality the moment the discussion shifts to Tamil Nadu?
Very confusing bro!
Instead of expressing regret for the deeply irresponsible remarks made by the TVK MLA, Thiru Aadhav Arjuna has chosen to justify and normalise them.
முதலாம் ராஜராஜ சோழரின் ஆட்சிக்காலத்தைச் சேர்ந்த வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய சின்னமாக கருதப்படும் "ஆனைமங்கலம் செப்புப்பட்டயங்களை" நெதர்லாந்து அரசிடம் இருந்து மீட்டு, மீண்டும் நமது தாயகத்திற்கு கொண்டு சேர்த்துள்ள நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. @narendramodi அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
சோழர்களின் வம்ச அடையாளத்தையும், நமது தென்னிந்திய வணிகத் தொடர்புகளையும், சோழ மன்னர்கள் பிற மதத்தினருடன் நட்பு பாராட்டியதையும் குறிக்கும் 11 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த "ஆனைமங்கல செப்புப்பட்டயங்கள்", மீண்டும் நமக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சியான தருணம் மட்டுமன்றி, உணர்வுப்பூர்வமான ஓர் அற்புத நிகழ்வு.
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
எனக்கு ஒரு டவுட் ஒரு மாதிரி ஆட்சிக்கு தவெக வந்திட்டாங்கள். இவர்கள் சொல்வது போல் 41 பேரை கொன்ற செந்தில் பாலாஜியை பிடித்து உள்ளே போடுவார்களா?விஜய் and கோ சொல்வது போல் 41 பேரை கொள்ள உடந்தையாக இருந்த ஸ்டாலின்னை பிடித்து உள்ளே போடுவார்களா.இதை மக்களிடம் சொல்லி தானே ஆட்சிக்கு வந்தார்கள்... இறந்து போன மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் அல்லவா...
மக்களுக்கு நன்றி தெரிவிக்கத்தான் சென்றேன். ஆனால் நான் அவர்களுக்கு ஆறுதல் தெரிவிக்க வேண்டியதாகிவிட்டது!
வாழ்க்கையில் சிறுவயது முதல் பல ஏற்றத் தாழ்வுகளை கண்டதால், தேர்தல் தோல்வி என்னை பெரிதாக சலனப்படுத்தவில்லை.
ஆனால் பலரின் கண்களில் இருந்த கண்ணீர் இன்று என்னை உணர்ச்சிவசப்படச் செய்தது!
எங்களுக்கு வாக்களித்த 56,462 மக்களுக்கும், இனி வரும் காலங்களில் எங்களுடன் நிற்க இருக்கும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் கோடான கோடி நன்றிகள்!
வலிமையான பாரதம்!
வளமான தென்காசியை உருவாக்குவோம்!
வந்தே மாதரம்!
Don’t accuse Modi ji for the lack of LPG cylinders. Women were cooking with wooden logs before him. Now everything changed. This LPG shortage is due to the war, says TVK Sivakasi MLA.
Such clarity, without hatred.
She's becoming a minister today. Good choice @TVKVijayHQ
இன்று மேற்கு வங்க முதல்வர் பதவியேற்பு விழாவின் போது பலரும் வியந்த ஒரு காட்சி.
ஒரு நாட்டின் உச்சபட்ச அதிகாரமிக்க மனிதர் - பிரதமர் திரு.நரேந்திர மோடி ஒரு சாமானியரின் காலில் விழுந்தார்.அவர் யார்?
அவர்தான் 98 வயதான திரு.மாக்கன்லால் சர்க்கார். சுதந்திரத்திற்குப் பிந்தைய இந்தியாவில் ஜனசங்கத்தின் அடிமட்ட அளவில் தீவிரமாக செயல்பட்ட மூத்த தொண்டர்களில் ஒருவர்.
1952 ஆம் ஆண்டு காஷ்மீரில் நமது இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றுவதற்கான போராட்டத்தின் போது, ஜனசங்கத்தின் நிறுவனரான திரு.சியாமா பிரசாத் முகர்ஜி அவர்களுடன் இணைந்து சென்று கைதான தியாகி.
1980 இல் பாரதிய ஜனதா கட்சி தொடங்கப்பட்ட பிறகு, மேற்கு தினாஜ்பூர், ஜல்பைகுரி மற்றும் டார்ஜிலிங் ஆகிய மாவட்டங்களின் அமைப்பு ஒருங்கிணைப்பாளராகப் பொறுப்பேற்று, ஒரே ஆண்டில் 10,000 பேரை கட்சியில் இணைத்தவர்.
அப்போதைய ஆளும் அரசின் அடக்குமுறைகளால் எந்த ஒரு தலைவரும் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் ஒரே பதவியில் தாக்குப் பிடிக்க முடியாத அந்த கடுமையான காலகட்டத்தில், 1981 முதல் தொடர்ந்து ஏழு ஆண்டுகள் மாவட்டத் தலைவராகப் பணியாற்றி அசாத்திய சாதனை படைத்தவர்.
இன்று, மேற்கு வங்கத்தில் பா.ஜ.க தனது முதல் அரசாங்கத்தை அமைக்கும் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க நாளில், அதே மேடையில் அவரைப் பெருமைப்படுத்தி அவரது காலில் விழுந்து ஆசி பெற்றார் பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்கள்.
தங்களை வளர்த்தெடுத்த மூத்தவர்களையும், தியாகம் செய்த அடிமட்டத் தொண்டர்களையும் இப்படி நெஞ்சார மதித்து கொண்டாடும் பண்பு பா.ஜ.க-வில் மட்டும் தான் சாத்தியம்!
#NarendraModi #WestBengal