மூச்சு காற்றினிலும் மேலாக மிகவும் நேசித்த இந்த கட்சிக்கு துரோகம் செய்யும் நபர்களை எத்தனை தேர்தலில் போட்டி இட்டாலும் கடவுள் என்றும் மன்னிக்க மாட்டார் 30 ஆண்டுகள் என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றி 🙏🏿
கடந்த 24 மணி நேரத்தில் 13 லட்சம் உறுப்பினர்கள் இணைந்து, https://t.co/bpwUirWN1w இயக்கத்திற்கு நீங்கள் அளித்துள்ள பேராதரவு, பெரும் நெகிழ்ச்சியையும், அதைவிட பெரிய பொறுப்பையும் எனக்கு அளித்திருக்கிறது.
இந்த இயக்கத்தின் மீது நம்பிக்கை வைத்து இணைந்துள்ள ஒவ்வொருவருக்கும், எனது மனமார்ந்த நன்றிகள். இது ஒரு தனி மனிதனின் பயணம் அல்ல; நல்ல மாற்றத்தை விரும்பும் நமது மக்களின் கூட்டுப் பயணம். மாற்றம் வேண்டும் என்று நம்பும் ஒவ்வொரு குடிமகனின் குரலும், நீங்கள் வழங்கியிருக்கும் பேராதரவில் எதிரொலிக்கிறது. உங்கள் நம்பிக்கையை மதித்து, நேர்மையுடனும், அர்ப்பணிப்புடனும் இந்தப் பயணத்தை முன்னெடுப்போம்.
தமிழகத்தின் சிறந்த எதிர்காலத்திற்கான இந்தப் பயணத்தில் தொடர்ந்து இணைந்திருங்கள்.
இசையால் நம்மையெல்லாம் ஆட்கொண்டிருக்கும் கலைத்தாயின் தவப்புதல்வர், இசைஞானி திரு. @ilaiyaraaja அவர்களுக்கு, இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
ஐம்பது ஆண்டுகளாக, வயது, இனம், மொழி, நாடு என எல்லைகள் கடந்து பல நூற்றாண்டுகள் நிலைத்திருக்கும் நல்லிசையை வழங்கி, பல கோடி மனங்களின் அனைத்து உணர்வுகளுக்கும் அருமருந்தாக விளங்கும் எங்கள் ராஜாதிராஜன் திரு @ilaiyaraaja அவர்கள், நூறாண்டுகளுக்கும் மேல் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.
தமிழகப் பள்ளி மாணவர்களின் மதிய உணவுத் திட்டத்தில் வழங்கப்படும் முட்டைகளுக்கு, ஆண்டு முழுவதும் ஒரு முட்டைக்கு ₹5.63 என்ற நிலையான விலையை தமிழக அரசு வழங்குகிறது. இந்த நிலையில், கடந்த மார்ச் மாதம் ஒரு முட்டை ₹3.70 என்று விலை குறைந்த போது, ஒப்பந்ததாரர்கள் சுமார் 20 கோடி முட்டைகளை வாங்கி குளிர்சாதன கிடங்குகளில் சேமித்து வைத்திருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன.
அதாவது, குறைந்த விலைக்கு பெருமளவில் சேமித்து வைத்து, ஆண்டு முழுவதும், பள்ளி மாணவர்களுக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.
முட்டை என்பது நீண்ட காலம் கெட்டுப் போகாமல் இருக்கும் பொருள் அல்ல. குளிர்சாதனக் கிடங்கில் மாதக்கணக்கில் வைத்திருந்து, பின்னர் தொலைதூர கிராமப்புற பள்ளிகளுக்கு கொண்டு செல்லப்படும் போது அதன் தரம், ஊட்டச்சத்து மற்றும் உணவு பாதுகாப்பு நிச்சயம் பாதிப்புக்குள்ளாகும்.
கடந்த திமுக ஆட்சியில், பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுக்கு பல முறை அழுகிய முட்டை வழங்கப்பட்டதைக் கடுமையாகக் கண்டித்திருந்தோம். தவெக ஆட்சியிலும், அதே நிலை தொடராமல் இருக்க வேண்டும். இது வெறும் கொள்முதல் சார்ந்த பிரச்சனை அல்ல. லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் பெற்றோரின் நம்பிக்கை சார்ந்ததாகும்.
எனவே, முட்டைகளின் சேமிப்பு காலம், தர பரிசோதனை, போக்குவரத்து மற்றும் விநியோக நிலை குறித்து தமிழக அரசு வெளிப்படையான கண்காணிப்பையும் கடுமையான ஆய்வையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தில், எந்தவித அலட்சியமும் ஏற்க முடியாது.
கடந்த 2026 ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம், CBSE அமைப்பு, மாணவர்களுக்கு ஆறாம் வகுப்பிலிருந்து மூன்று மொழிகள் கட்டாயம் என்றும், அந்த மூன்று மொழிகளில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும் அறிவித்தபோது, இந்தியாவின் பலதரப்பட்ட இலக்கிய மற்றும் கலாச்சார பாரம்பரியத்தை, சிறுவயதிலேயே குழந்தைகள் அறிந்து கொள்ள உதவும் என்பதால், அந்த முடிவை வரவேற்றவர்களில் நானும் ஒருவன்.
குறிப்பிட்ட 2026 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட அறிவிப்பில், ஒன்பதாம் வகுப்பு CBSE மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்குவது, இன்றிலிருந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால், கடந்த வாரம், மே 15, 2026 அன்று, CBSE அனைத்து இணைப்பு பள்ளிகளுக்கும் அனுப்பியுள்ள புதிய சுற்றறிக்கையில், இந்தக் கல்வியாண்டிலிருந்தே ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு மூன்றாவது மொழியை கட்டாயமாக்கியுள்ளது. இதன் மூலம், 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்தப்படும் என்ற தனது முந்தைய அறிவிப்பை, CBSE அமைப்பு மீறியிருக்கிறது.
CBSE அமைப்பின் இந்த திடீர் அறிவிப்பு, பெற்றோர்களுக்கு, குறிப்பாகத் தமிழக மாணவர்களின் பெற்றோர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில், அவர்களின் குழந்தைகள் ஏற்கனவே ஆறாம் வகுப்பிலேயே தாங்கள் விரும்பிய மொழியைத் தேர்வு செய்துள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பின் படி, ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மூன்று மொழிகளை கட்டாயமாகக் கற்க வேண்டும் என்றும், அதில் இரண்டு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும், அது இந்தக் கல்வியாண்டு 2026 ஜூலை 1 முதலே அமலுக்கு வரும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மிகவும் குறுகிய காலத்திற்குள் ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் மற்றுமொரு புதிய மொழியைக் கற்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, குழந்தைகளுக்கு தேவையற்ற மனஅழுத்தத்தை ஏற்படுத்தி, அவர்களின் மொத்தக் கல்வித் திறனையும் பாதிக்கும்.
எனவே, இந்த புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், ஒன்பதாம் வகுப்பில் மூன்று மொழிகள், அதில் இரண்டு இந்திய மொழிகள் கட்டாயமாக்கப்படும் திட்டத்தை, முன்பே அறிவித்தபடி மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, 2029-30 கல்வியாண்டிலிருந்து மட்டுமே அமல்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இந்த தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ Election Song-ஐ வெளியிட்டது தமிழக பாஜக.
#TNBJP#ElectionSong#TNElection2026#Chanakyaa
Stay informed with the latest news through Chanakyaa via https://t.co/sbYbLDGPqW
பரப்புரையின் போது நான் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலையிலும் எனக்காக கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் வாக்கு சேகரித்த அன்பு தம்பி அண்ணாமலை அவர்களுக்கும் மற்றும் நிர்வாகிகளுக்கும் நன்றி..
வாக்களியுங்கள் தாமரைக்கு வரலாற்று வெற்றியைக் கொடுப்போம் கோவை வடக்கில்#Vote4Vanathi | #Vanathi4North | #KovaiNorth | #Vanathi4KovaiNorth | #ValarchiWithVanathi | #NDA4TN | #கோவையின்மகள்
The flag carries within it the sweat, hard work, and sacrifices of countless karyakarthas across our country.
On the 47th Foundation Day of our party, I unfurled our party’s flag at my residence, as a mark of respect for those who’ve helped shape its glorious journey.
#47YearsOfNationFirst
@BJP4India@NitinNabin@BJP4TamilNadu
Hearty congratulations to all the @BJP4TamilNadu winning candidates announced for the 2026 Tamil Nadu Assembly elections. They carry the support of every brother & sister of TN who is tired of corruption, complacency, and the DMK's betrayal.
Under the visionary leadership of our Hon PM Thiru @narendramodi avl, India has moved forward with strength, scale, and purpose. While the nation progresses, Tamil Nadu has been held back by a failed, arrogant, and self-serving DMK govt.
I as a Karyakarta will stand shoulder to shoulder & campaign for all our winning BJP & other NDA candidates, with the aim of the NDA winning 210 seats in the upcoming assembly elections.
#NDA4TN
தமிழகத்தின் கல்வி தந்தை என போற்றப்படும், டாக்டர் V. கெங்குசாமி நாயுடு அவர்களது மனைவியும், தமிழ்நாடு கம்ம நாயுடு மகாஜன சங்கத்தின் மாநில தலைவர் திரு. ரவீந்திரன் கெங்குசாமி நாயுடு அவர்களது தாயாருமான திருமதி.ராஜலட்சுமி கெங்குசாமி நாயுடு அவர்கள் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன்.
அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களை தெரிவித்து கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டும்.
ஓம் சாந்தி!
மதுரை மாநகரில் 4400 கோடி ரூபாய்க்கு நெடுஞ்சாலைகள் இரெயில்வே மற்றும் வானொலி துறைகளில் தமிழ் நாட்டிற்கான நல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டிய பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களுக்கு நன்றி
அரசியலில் உண்மை என்று வந்துவிட்டால், காமராஜர் அவர்கள் நாட்டிற்கே எடுத்துக்காட்டாக விளங்குகிறார். திமுக அதற்கு நேர் எதிரான ஒரு எடுத்துக்காட்டு.
₹365 கோடி பணியிடமாற்றத்திற்கு பணம் வாங்கிய ஊழல், ₹900 கோடி வேலை வாங்கி தருவதாக பணம் பெற்று ஊழல், ₹1000 கோடி ஒப்பந்தம் கொடுக்க பணம் வாங்கி ஊழல், ₹4700 கோடி மணல் கொள்ளை ஊழல், ₹40000 கோடி TASMAC ஊழல். பொதுவாக அமைச்சர்கள் பணிகளை மேற்கொள்வதில் ஒருவருக்கொருவர் போட்டியிடுவார்கள். ஆனால், திமுக அமைச்சர்கள் ஊழல் செய்வதில் ஒருவருக்கொருவர் போட்டியிடுகிறார்கள். ஆனால், அவர்கள் யாரிடமிருந்து திருடுகிறார்கள். ஏழைகளிடமிருந்து, இளைஞர்களிடமிருந்து, விவசாயிகளிடமிருந்து திருடுகிறார்கள். இப்படிப்பட்ட ஊழல் நிறைந்த அரசு தொடர்வதற்கு எந்த தகுதியும் இல்லை.
அதனால், NDA ஆட்சியை கொண்டுவர தமிழக மக்கள் முடிவு செய்துள்ளனர். நாங்கள் தூய்மையான மற்றும் திறமையான ஆட்சியை வழங்குவோம் - மதுரையில் இன்று மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள்.
#ModiComesNDAWins
The Congress party has yet again proved itself to be a national embarrassment. It's been over 24 hours, and the Leader of the Opposition, Thiru @RahulGandhi, has yet to condemn the disgraceful conduct of the youth congress members who barged into the summit in an attempt to embarrass the Country in an event event that drew over five lakh visitors and was attended by 20 heads of state/government, 60 ministers, and 500+ global AI leaders.
Despite Congress’s displeasure with the AI summit's success, it showcased India's sovereign AI push, featuring three major indigenous AI models: Sarvam AI's large language models, Gnani AI's multilingual voice model (12 languages) and BharatGen's 17-billion-parameter foundational model.
The Congress party did not expect that the summit could secure over $250 billion in infrastructure-related investments (including data centres and semiconductor facilities) and $20 billion in VC deep tech investments. That is the trust the world has in India’s future under the dynamic leadership of our Hon PM Thiru @narendramodi avl.
While the world invested its confidence in India’s AI future, the Congress party chose theatrics over the nation’s interest, yet again proving why it remains totally disconnected from India’s aspirations and global rise.