மேகதாது அணை தொடர்பான அரசினர் தனித் தீர்மானத்தின் மீது மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் @Udhaystalin அவர்களின் உரை வருமாறு:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களே, அமைச்சர் பெருமக்களே, சட்டமன்ற உறுப்பினர்களே!
நம் தமிழ்ந���ட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை அழிக்க, முயற்சிக்கின்ற மேகதாது அணை கட்டப்படக் கூடாது என்பதுதான், திராவிட முன்னேற்றக் கழகத்தின் உறுதியான நிலைப்பாடு ஆகும்.
அனுமதிக்கக் கூடாது
காவிரி நதிநீரில் தமிழ்நாட்டின் உரிமை பறிபோக நாம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. காவிரி நடுவர் மன்றம், காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பு, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்��த்தின் இறுதித் தீர்ப்பு, காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் உள்ளிட்ட அனைத்திற்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, கழக அரசு எடுத்த ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள்தான் முழுகாரணம். அதை, இந்த அவையில் இருக்கின்ற மூத்த உறுப்பினர்கள் அனைவரும் அறிவார்கள். நீண்ட நெடிய சட்டப் போராட்டங்களையும், அரசியல் போராட்டங்களையும் நடத்தித்தான், நாம் காவிரியின் மீதான நம் உரிமைய��ப் போராடிப் பெற்றிருக்கிறோ��். ஆனால், அதனைப் பறிக்கும் வகையில், கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.
அந்த முயற்சியை அவர்கள் எடுத்தபோது, அந்தச் சமயத்தில், எங்கள் கூட்டணியில் இருந்த கட்சி கர்நாடகாவில் ஆட்சி செய்தபோதிலும், அதனைப் பற்றிக் கவலைப்படாமல், மேகதாது அணைத் திட்டத்தை எங்களுடைய தலைவர், அப்போதைய முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் கடுமையாக எதிர்த்தார்கள். இன்றைக்கும் நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மேகதாதுவில் அணைகட்டும் கர்நாடகாவின் முயற்சிக்கு எதிராக இந்த தீர்மானத்தை, இன்றைக்குக் கொண்டு வந்துள்ளார்கள். இதை திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பாக, நாங்கள் மனதார வரவேற்கிறோம். மேகதாது அணை கட்ட நினைக்கும் கர்நாடக அரசிற்கு எதிராக, எங்கள் தலைவர், எங்கள் அரசு எடுத்த நடவடிக்கைகள் சிலவற்றை ஆளுங்கட்சிக்கும், முதலமைச்சருக்க���ம், அவைக்கும் நினைவுபடுத்த விரும்புகிறேன்.
தீர்மானம் நிறைவேற்றினோம்!
2021-ஆம் ஆண்டு மே மாதம் நாங்கள் ஆட்சிக்கு வந்தோம். ஆட்சிக்கு வந்த அடுத்த மாதமே, அதாவது ஜூன் 17, 2021 அன்று `மேகதாது அணை கட்ட அனுமதியளிக்கக் கூடாது’ என்று எ��்கள் தலைவர் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதினார். பிறகு, அதே கருத்தை வலியுறுத்தி, ஜூலை மாதத்தில், ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சருக்கும் எங்கள் தலைவர் அவர்கள் ஒரு கடிதம் எழுதினார்கள். இதனையடுத்து, அனைத்து சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தைக் கூட்டி, `மேகதாது அணையை எந்தக் காலத்திலும் கட்ட அனுமதிக்கக் கூடாது’ என்ற தீர்மானத்தையும் நாங்கள் நிறைவேற்றினோம். ஜூலை மாதத்தில் அதைய�� ஒன்றிய அமைச்சரிடமும் நேரில் வலியுறுத்தினோம்.
கடந்த 2022-2023 நிதியாண்டில், மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்த விஷயம் தெரிந்ததும், இதே அவையில் அதைக் கண்டித்து, அரசின் தனித் தீர்மானத்தையும் எங்கள் அரசு அன்று நிறைவேற்றியது. அன்று “தமிழ்நாட்டின் உரிமையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு நிற்போம்” என்று எங்கள் தலைவர் பேசினார்கள்.
திருப்பி அனுப்பப்பட்டத���
மேகதாது அணை கட்டுவது குறித்தான விரிவான திட்ட அறிக்கையை விவாதிக்க வேண்டும் என்று காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் கர்நாடக அரசும், ஒன்றிய அரசும் வைத்த அஜெண்டாவை நீக்க, எங்கள் தலைவர் தலைமையிலான அரசு அன்றைக்குக் கடுமையாக வலியுறுத்தியது. இதற்காக, அன்றைய முதலமைச்சரான எங்கள் தலைவர் அவர்கள் ஜூலை மாதம், 2022-ஆம் ஆண்டு பிரதமருக்கு மீண்டும் கடிதம் எழுதினார். அப்போதைய நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் தலைமையில், தமிழ்நாடு சட்டமன்ற அனைத்துக் கட்சிக் குழுவினர், ஒன்றிய ஜல் சக்தி துறை அமைச்சரை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார்கள். இப்படி, நமது தொடர் எதிர்ப்பின் காரணமாக, மேகதாது அணையின் விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report), பிப்ரவரி மாதம் மத்திய நீர்வள ஆணையத்திற்கே மீண்டும் திருப்பி அனுப்பப்பட்டது.
மேல��ம், கழக அரசின் எதிர்ப்பால், மேகதாது அணையின் நிபந்தனை விவரங்களை (Terms of Reference-ஐ) தன்னுடைய `திட்டப் பட்டியலில்’ இருந்து, ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகமும் நீக்கியது. அதுமட்டுமில்லாமல், 2024-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சர் எங்கள் அரசின் நீர்வளத்துறை அமைச்சருக்கு ஒரு கடிதம் அனுப்பியிருந்தார். அவர் எழுதிய கடிதத்தில், `இரு மாநிலங்களுக்கு இடையே சுமுகத் தீர்வு எட்டப்பட��ட பிறகுதான், Terms of Reference அனுமதி பற்றி ஆலோசிக்கப்படும்’ என்று சொல்லியிருந்தார்.
கழக அரசும், எங்கள் தலைவரும்
மேகதாது அணை தொடர்பாக, கர்நாடக அரசு விரிவான திட்ட அறிக்கை’ (Detailed Project Report) சமர்ப்பிக்கவில்லை என்பதுதான் எங்கள் கழக அரசு இருந்த வரையிலான நிலை ஆகும். திராவிட முன்னேற்றக் கழக அரசும், எங்கள் தலைவரும் தைரியமாகத் தமிழ்நாட்டின் எதிர்ப்பைப் பதிவு செய்ததால்தான் இது சாத்தியமானது என்பதை இந்த மாமன்றத்தில் மீண்டும் பதியவைக்க விரும்புகிறேன்.
இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், மத்திய நீர்வள ஆணையம் (Central Water Commission), 22-11-2018 தேதியிட்ட கடிதத்தின் மூலமாகக் கர்நாடக அரசுக்குச் சில முக்கியமான நிபந்தனைகளைத் தெரிவித்திருந்தது. அதில் முதலாவதாக, மேகதாது அணை கட்ட மத்திய நீர்வள ஆணையம் நிபந்தன��யற்ற அனுமதி எதுவும் கொடுக்கவில்லை. இரண்டாவதாக, அணை கட்டுமானத்திற்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு தயாரிப்பதற்கு முன்பாக, தமிழ்நாடு அரசு தெரிவிக்கும் பல்வேறு ஆட்சேபணைகளை அவர்கள் பரிசீலனை செய்ய வேண்டும். மூன்றாவதாக, மத்திய மின்வாரிய ஆணையத்திடமும், சம்பந்தப்பட்ட மாநிலத்தில் இருக்கின்ற மத்திய நீர்வள ஆணையப் பிரிவிடமும் கலந்து ஆலோசனை செய்ய வேண்டும்.
ஒரு புதிய விவாதம்
இவை எல்லாவற்றிற்கும் மேலாக, `காவிரி நதிநீர் மேலாண்மை ஆணைய’த்தின் (Cauvery Water Management Authority) முன் அனுமதியையும் பெற வேண்டும்’ என்று அந்தக் கடிதத்தில் தெளிவாக எழுதியிருக்கிறார்கள். எனவே, மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இந்த அரசு இவற்றை��்லாம் ஒன்றிய அரசிடம் உறுதியாக எடுத்துப் பேசி, காவிரியில் நம் தமிழ்நாட்டின் உரிமையை நாம் அனைவரும் சேர்ந்து நிலைநாட்ட வேண்டும். இன்னொரு முக்கியமான விஷயத்தை, இங்கு நான் பதியவைக்க விரும்புகிறேன். மேகதாது பிரச்சினை தொடர்பாக, கடந்த 13.11.2025 அன்று உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளிவந்த பிறகு, 04.03.2026 அன்று அன்றைய முதலமைச்சரான எங்கள் தலைவர் அவர்களின் உத்தரவுப்படி, தமிழ்நாடு நீர்வளத்துறை அரசுச�� செயலாளர் ஒன்றிய ஜல் சக்தி துறைச் செயலாளருக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில், `கர்நாடக மாநிலத்தின் மேகதாது அணை கட்டும் பிரச்சினை ஒரு புதிய விவாதம் (New Dispute) என்பதால், நதிநீர் தாவா சட்டம்-1956-ன் படி (The Inter-State River Water Disputes Act, 1956) அடிப்படையில் நடுவர் மன்றம் அமைக்க வேண்டும்’ என்று ஒன்றிய அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தோம். ஆகவே, இந்த அரசு இப்போது கொண்டு வந்திருக்கின்ற தீர்மானத்தில், `மேகதாது அணை கட்டுவது தொடர்பாகத் தமிழ்நாடு அரசு, மார்ச் 4, 2026 அன்று எழுதிய கடிதத்தில் கேட்டுக்கொண்டபடி, மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தாவா சட்டம்-1956, பிரிவு 4-ன் கீழ், அந்த அடிப்படையில் புதிய நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என ஒன்றிய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது’ என்கிற திருத்தத்தைச் சேர்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
தடுத்து நிறுத்துவோம்
கர்நாடகா மேகதாது அணை கட்டுவதைத் தடுக்க, சட்டரீதியாகவும், பிரதமர் மூலமாக��ும் இந்த அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக துணைநிற்கும். மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தடுத்து நிறுத்துவோம் என்று கூறி, இந்தத் தீர்மானத்துக்கு எங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, அதே மாதிரி இந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி மேட்டூர் அணையைத் திறக்காததால் டெல்டா விவசாயிகள் கஷ்டத்தில் இருக்கிறார்கள். குறுவை சாகுபடி பாதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்து நடக்கவிருக்கின்ற காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் (Cauvery Water Management Authority), இது தொடர்பாக தமிழ்நாடு அரசு நம் தரப்பு நியாயங்களையெல்லாம் எடுத்து வைத்து, நமக்குரிய நீரை விரைவாகப் பெற்றுத் தர வேண்டும் என்று விவசாயிகள் சார்பாக இந்த அவையில் கேட்டுக்கொள்கிறேன். இறுதியாக, எங்கள் கழக���் தலைவர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் ஒரு முக்கியமான வேண்டுகோளையும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களுக்கு வைக்க விரும்புகிறேன்.
மிக முக்கியமான தீர்மானம்
இன்று நாம் நிறைவேற்றுகின்ற இந்தத் தீர்மானம் மிக முக்கியமான தீர்மானம். இந்த தீர்மானத்தைக் கடிதம் மூலமாக ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைப்பதற்குப் பதிலாக, தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்றக் கட்சி உறுப்பினர்களும், நாடாளுமன்��� உறுப்பினர்களும் சேர்ந்து ஒரு குழுவாகச் சென்று, ஒன்றிய அரசிடம் கொடுத்து நம் ஒற்றுமையை வெளிப்படுத்தவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதற்குத் திராவிட முன்னேற்றக் கழகம் தயாராக இரு��்கிறது. அரசியல் வேறுபாடுகளைக் கடந்து செயல்பட இந்த அரசும் முன்வர வேண்டும் என்று எங்கள் தலைவரின் சார்பில் கேட்டுக்கொண்டு, தீர்மானத்தை முழுமனதாக ஆதரித்து அமைகிறேன்.
நன்றி, வணக்கம்.
#TNAssembly #MekedatuDam #Cauvery
ஆபாச பாடலுக்கு நடனமாடிய உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன்.
காங்கிரஸ் கட்சி ஏன் அவசர அவசரமாக தவெக கூட்டணியில் இணைந்தது என்று இப்போது புரிகிறதா?
பாஜகவை வீழ்த்துவது இவர்களுடைய நோக்கம் அல்ல. ஆட��டம் போடுவது தான் நோக்கம்.
#TVKFails
திராவிட நாயகர் திரு. @mkstalin அவர்கள் கண்ணும் கருத்துமாக உருவாக்கிய நான் முதல்வன் திட்டத்தில் ஆண்டுதோறும் எண்ணற்ற மாணவர்கள், பட்டதாரிகள் பயற்சிப் பெற்று பல்வேறு அரசு உயர் பதவிகளுக்கு தேர்ச்சியடைந்து வந்துக் கொண்டிருக்கிறார்கள்.
அந்த மகத்தான திட்டத்தை மூடக்கும் தவெக அரசை மாணவச் சமூகம் மன்னிக்காது.
#நான்_முதல்வன்
#TVKFails
கோவில் காசு ஏழைகளின் கல்விக்கு உதவினால் என்ன தப்பு? என் பையன் இந்த நிதியில் நடைபெறும் கல்லூரியில் தான் படிக்கிறான், இதை நிறுத்துவது ரொம்ப தப்பு எனப் பொதுமக்கள் தங்களின் நேரடிப் பயனைப் பகிர்ந்து கொள்கிறா��்கள். தவெக அரசின் அரசியல் காழ்ப்புணர்ச்சியால் பாதிக்கப்படுவது ஏழை மாணவர்களின் எதிர்காலம் தான்!
#DMK4TN
அப்போது!..
திராவிடமாடல் அரசின் திட்டங்களால் மக்கள் பலன்பெற்று பயனுற்றதை பொறுக்க முடியாமல்,
'வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ' என மனம் போன போக்கில் கட்டுக் கதைகளை அவிழ்த்து விட்டு ஆட்சியைப் பிடித்தவர்கள்;
இப்போது!..
ஒட்டுமொத்த குற்றங்களையும் குத்தகைக்கு எடுத்தவர்கள் போல், கேவலமான கேடுகெட்ட சம்பவங்கள் அரங்கேறி வரும் சூழலிலும் சொரணையற்ற சொங்கிகளைப் போல் வாய் மூடி மௌனம் காப்பது ஏன்?!🔥����
@mkstalin @Udhaystalin
#LeaderOfOpposition
#DMK
#TNAssmebly
#TVKFails
இலங்கைத் தமிழர்களின் துயர் குறித்து 20 ஆண்டுகளுக்கும் மேல் பத்திரிகையுலகில் எழுதிவந்த அன்புக்குரிய @RKRadhkrishn அவர்கள், 30 ஆண்டுகளுக்கும் மேலாக மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழரின் வாழ்க்கை குறித்து #FacelessPeople எனும் ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். அதனைப் பார்த்தேன்; நெகிழ்ந்தேன்!
இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியக் குடிய���ரிமையைத் தெளிவாக வலியுறுத்தும் இந்த ஆவணப்படத்தை உணர்வுடனும், பொறுப்புடனும் இயக்கிய திரு.ஆர்.கே. அவர்களுக்கு பாராட்டுகள்! வாழ்த்துகள்!
#DravidianModel ஆட்சியில், முகாம் வாழ் தமிழர்கள் நலன் காக்க:
🔷 மறுவாழ்வு முகாம் எனப் பெயர் மாற்றம்
🔷 7 ஆயிரத்துக்கும் அதிகமான புதிய வீடுகள்,
🔷 மாதாந்திர பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள்,
🔷 கல்வி உதவித்தொகை, வேலைவாய்ப்பு முகாம், திறன் மேம்பாட்டுப் பயிற்சி உள்ளிட்ட வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களைச் செயல்படுத்தினோம்.
அதுமட்டுமின்றி, அவர்களது வாழ்வுரிமைக்கான நீண்டகாலத் தீர்வு குறித்து நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இலங்கைத் தமிழர்களுக்கான இந்தியக் குடியுரிமை குறித்த சட்டப்பூர்வ உரிமைகளை வலியுறுத்தி தி.மு.க. சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
நான் ம��தலமைச்சராகப் பொறுப்பேற்றிருந்த போது, மறுவாழ்வு முகாம்களில் வாழும் இலங்கைத் தமிழர்களுக்குக் குடியுரிமை வழங்குவது தொடர்பாக 11-01-2026 அன்று மாண���புமிகு பிரதமர் அவர்களுக்குக் கடிதம் எழுதி வலியுறுத்தினேன்.
தி.மு.க. ஆட்சியில் சட்ட உதவிகள் மூலம் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்கள் 10 பேர் நீதிமன்றத் தீர்ப்பினைப் பெற்று, இந்திய குடிமக்களானதுடன், கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்களித்து தங்கள் ஜனநாயகக் கடமையையும் நிறைவேற்றியுள்ளனர். குடியுரிமை பெறத் தகுதி உள்ள ஏறத்தாழ 25 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்காகத் தி.மு.க எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் தொடர்ந்து குரல் எழுப்புவார்கள்.
தற்போதைய அரசும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் மக்களுக்காகத் திராவிட மாடல் அரசு மேற்கொண்ட திட்டங்களைத் தொய்வின்றித் தொடர்ந்து நிறைவேற்ற வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்த���கள்!
நம்முடைய தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையில் கடந்த ஐந்து ஆண்டுகளில் திராவிட மாடல் அரசின் மூலம் அன்றைய முதலமைச்சர் - எங்களுடைய கழகத் தலைவர் மு.க.ஸ்ட��லின் வழிகாட்டுதலின்படி, சுமார் 80 முன்னோடித் திட்டங்களை செயல்படுத்தினோம்.
அவற்றில் “TN SPARK திட்டம்”, “மாதிரிப் பள்ளிகள் திட்டம்”, “வெற்றிப்பள்ளிகள் திட்டம்” ஆகிய மூன்று திட்டங்களும் மாணவச் செல்வங்களின் எதிர்கால வளர்ச்சிக்கு மிகப்பெரிய அடித்தளத்தை அமைத்து வருகின்றன.
அத்தகைய தாக்கங்களை ஆய்வுக்கு உட்படுத்தியுள்ள இந்தியாவின் முன்னணி Think Tank அமைப்பான SKOCH அறக்கட்டளை, GOLD, SIlver ஆகிய பிர���வுகளின் கீழ் மூன்று திட்டங்களுக்கும் SKOCH 2026 என்ற விருதினை வழங்கி இருக்கிறது. அதற்காக உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.
- தி.மு.க முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி!
#DMK #AnbilMahesh #TNEducation #TNSchools #MKStalin #DravidianModel #Tamilnadu #KalaignarSeithigal @Anbil_Mahesh
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin தலைமையில் தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்துள்ள நிலையில், "வாய் திறங்க CM" என்ற கருப்பு பேட்ஜ் அணிந்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டப்பேரவை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
#வாயை_திறங்க_CM
திமுக ஆட்சியில் 2025 ஆம் ஆண்டு டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ரூ. 50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வந்த அய்யன் திருவள்ளுவர் சிலையை டம்மி முதலமைச்சர் திரு. விஜய் திறந்து வைக்க உள்ளார்!
#TVKFails
தவெக ஆட்சியில் இன்று நடந்த கொடூர சம்பவங்கள்!
தினந்தோறும் படுகொலை��ள், பாலியல் வன்முறைகள் என தமிழ்நாடே பதட்டத்தில் இருக்கிறது. சட்டம் ஒழுங்கை சீர் செய்ய வேண்டிய முதலமைச்சர் என்ன செய்கிறார்? அவர் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை என்ன செய்கிறது?
# TVKFails
வாயைத் திறங்க டம்மி CM சார்!
நீங்க ஆட்சிக்கு வந்தது முதல் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்க ஆரம்பிச்சிடுச்சு! ஆணவக் கொலைகள், பத்துக்க்கும் மேற்பட்ட தொடர் கொலைகள், சிறுமி மற்றும் முதியவர்கள் மீது பாலியல் வன்கொடுமைகள், கொள்ளை என மாநிலமே தடம் மாறிப் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால், இதையெல்லாம் தட்டிக்கேட்க வேண்டிய முதலமைச்சர் என்ன செய்கிறார்? பொறுப்பை உணர்ந்து செயல்படாமல், ஊடகங்களைச் சந்திக்க பயந்து ஓடி ஒளிந்து மௌன விரதம் இருக்கிறார்!
முதலமைச்சர் நாற்காலியில் நீங்கள் அமர்ந்திருந்தாலும், 'நிழல் முதலம���ச்சராக' (Shadow CM) அந்த ஆதவ் அர்ஜுனாதானே எல்லாத்துக்கும் முன்னாடி வந்து பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார்? அப்போ நீங்கள் உண்மையிலேயே வெறும் 'டம்மி' முதல்வர் தானா? உங்களை இயக்கும் ரிமோட் கண்ட்ரோல் யார் கையில் இருக்கிறது?
உங்களின் சோஷியல் மீடியா மாஃபியாக்களை (Social Media Mafia) வைத்து, மக்களின் குரல்வளையை நசுக்கி இந்த அக்கிரமங்களை எல்லாம் மூடி மறைத்துவிடலாம் என்று தப்புக் கணக்கு போடாதீர்கள். உங்களுக்கு வாக்களித்த மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பும் கடமையும் உங்களுக்கு இருக்கிறது.
தைரியம் இருந்தால், பொறுப்புள்ள முதலமைச்சராக கேமரா முன்னாடி வந்து மக்களின் நியாயமான கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள். இல்லை என்றால், நீங்கள் 'டம்மி முதல்வ��்' தான் என்று ஒப்புக்கொள்ளுங்கள்.
#WINGகுரல்