மாநில நலனையும், மத நலிக்கணத்தையும் நிலைநாட்ட, நீங்கள் போராடியதை தமிழ்நாடு ஒருபோதும் மறக்காது....
Men may come., Men may go.. But you'll be Remembered....
May 4/5/2026
#Mkstalin@arivalayam
கூட்டணி தலைவர்களுக்காக அவர்களின் கட்சி பிம்பத்தை தூக்கி பிடித்தது திமுக என்பதை மறக்கவேண்டாம்.
இதையெல்லாம் கூட்டணி கட்சிகள் தேர்தலுக்கு முன்பே மாற தைரியம் இல்லாமல்,இன்று திமுக வின் வாக்குகளை பெற்று போனதுதான் வருத்தம்.
சில சிற்றோடைகள் பிரிந்து சென்றதால் காவிரிஆறு வற்றிப் போவதில்லை. அதுபோல கூட்டணிக் கட்சிகள் வெளியேறியதால் மக்கள் இயக்கமான திமுகவின் ஓட்டம் நின்றுவிடாது.
" திமுக என்பது தலைமுறைகளை உருவாக்கிய இயக்கம். ஒரு கட்சி விலகலாம், ஆசையால் ஒரு தலைவர் மாறலாம்,மாற்றப்படலாம். ஆனால் சமூகநீதிக்காக போராடும் இந்த இயக்கத்தின் பயணம் நிற்காது. பெரியார் விதைத்த விதை, அண்ணா வளர்த்த மரம், கலைஞர் காத்த நிழல், @mkstalin முன்னெடுக்கும் பாதை — இவை எந்த கொம்பனாலும் அளக்க முடியாதவை."
ஒன்றைமட்டும் தமிழ்நாடு பார்க்கபோகிறது.பிரிந்து சென்ற சிற்றோடைகள் வற்றிபோய் இருந்த இடம் காணாமல் போகும்.இந்த நிலையை உருவாக்குவதுதான் இன்றைய தற்குறிகளின் தொலைநோக்கு சிந்தனை.
முடிந்தால் கட்சியை காப்பாற்றி கொள்ளுங்கள். @Udhaystalin@arivalayam@DMK_Chennai@dmk_youthwing@DMKITwing@DMK_Chennai
தவெக அரசு வெளிப்படைத்தன்மை உடைய அரசு என்ற பொருள்பட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பலமுறை பேசிய நிலையில்,
இப்போது அதற்கு முரணாக அவை விவாதங்களை, குறிப்பாக எதிர்க்கட்சியினரின் விவாதங்களை, வாக்களித்த மக்கள் தெரிந்துகொள்ள விடாமல் செய்வது ஜனநாயகத்தையே இருட்டில் தள்ளுவதற்குச் சமம்.
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TVKFails
பத்திரிகைச் செய்தி
மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அவர்களுக்கு கடிதம்
இன்று (20-06-2026), மாண்புமிகு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் திரு.உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டமன்ற நேரலை குறித்து, மாண்புமிகு சட்டப்பேரவைத் தலைவர் அவர்களுக்கு எழுதியுள்ள கடிதம்:
மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களுக்கு, வணக்கம்.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகள் நேரலை செய்யப்படும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, தற்போது நடைபெற்று வரும் மாண்புமிகு ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படுவதில்லை என்பதைத் தங்களது மேலான கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.
"கொடுத்த வாக்கைக் காப்பாற்றியுள்ளார் முதலமைச்சர். இரண்டு, மூன்று ஆண்டுகளாக இருட்டடிப்புச் செய்யப்பட்ட சட்டப்பேரவை நேரலை, மீண்டும் தொடங்கியிருக்கிறது. இனி சட்டப்பேரவை நேரலை தொடரும். இது ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டு. வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான நிர்வாகத்திற்கு இன்றைய நிகழ்வு மிகப்பெரிய எடுத்துக்காட்டு" என மாண்புமிகு அமைச்சர் ராஜ்மோகன் குறிப்பிட்டுச் சொன்ன அன்றே நேரலை துண்டிக்கப்பட்டிருக்கிறது.
நேற்றைய தினம் (19.06.2026) மேகதாது அணை கட்டுவதைக் கண்டித்து மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்த அரசினர் தீர்மானத்தின் மீதான விவாதங்கள் நேரலை செய்யப்பட்டன.
அடுத்து, உடனடியாக இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மாண்புமிகு ஆளுநர் உரை மீதான விவாதங்கள் தொடங்கிய நிலையில் அவை இருட்டடிப்புச் செய்யப்பட்டுள்ளன. ஆளுநர் உரை மீதான விவாதம் நேரலை செய்யப்படவில்லை.
இது இன்றைய ஆளுங்கட்சி கொடுத்த வாக்குறுதிக்கு மாறானது ஆகும்; மக்கள் பிரதிநிதிகளின் குரலை மறைப்பது ஆகும்; சட்டமன்ற மாண்பைக் குலைப்பதாகும்.
நேரலை நிறுத்தப்பட்டது மிகப்பெரிய தவறு என்றால், அதைவிடப் பெரிய தவறு பின்னர் இழைக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியினரின் விவாதங்கள் முற்றிலும் இருட்டடிப்புச் செய்யப்பட்டு, ஆளுங்கட்சியினருக்கு வேண்டிய விவாத வீடியோக்கள் மட்டும் Edit செய்யப்பட்டு மாலையில் வெளியிடப்பட்டுள்ளன. பேச்சுரிமையை, அதிலும் குறிப்பாகச் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு அவைக்குள் இருக்கும் பேச்சுரிமையை நகக்கும் செயலாகும். இது நல்லதொரு ஆக்கப்பூர்வமான சட்டமன்ற ஜனநாயகத்திற்கு உகந்தது இல்லை.
'மாற்றம்' என்ற சொல்லை மையமாக வைத்துத் தேர்தலைச் சந்தித்தவர்கள், சட்டமன்ற உறுப்பினர்களின் குரலை நசுக்குவதுதான் அவர்கள் செய்ய நினைக்கும் மாற்றமா? மக்கள் பிரதிநிதிகளின் பேச்சை மறைப்பது மக்களையே அவமானப்படுத்துவது ஆகும்.
இந்த அரசு வெளிப்படைத்தன்மை உடைய அரசு என்ற பொருள்பட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பலமுறை பேசிய நிலையில், இப்போது அதற்கு முரணாக அவை விவாதங்களை, குறிப்பாக எதிர்க்கட்சியினரின் விவாதங்களை, வாக்களித்த மக்கள் தெரிந்துகொள்ள விடாமல் செய்வது ஜனநாயகத்தையே இருட்டில் தள்ளுவதற்குச் சமம்.
மேலும், ஜனநாயகத்தின் நான்காவது தூண் எனப் போற்றப்படும் ஊடகங்களுக்குச் செய்திகளை வழங்க மறுப்பதும், அரைகுறைச் செய்திகளை அளிப்பதும், "நாங்கள் தருவதை மட்டுமே ஒளிபரப்ப வேண்டும்" என்று சொல்வதும் பாசிச நடவடிக்கைகள் ஆகும்.
ஒரே நேரத்தில் சட்டசபை, மக்கள் பிரதிநிதிகள், ஊடகங்கள் ஆகிய அனைத்தையும் அவமானப்படுத்தும் செயல் செய்யப்பட்டுள்ளது. உடனடியாக இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுகிறேன். வரும் திங்கட்கிழமையன்று (22.06.2026) எதிர்க்கட்சித் தலைவரான நானும், பிற தலைவர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் உரையாற்ற உள்ளதால், தமிழ்நாடு சட்டப்பேரவையின் நடவடிக்கைகளை நேரலை செய்வதற்குத் தங்களுக்கு உள்ள பேரவைத் தலைவர் அதிகாரத்தைப் பயன்படுத்தி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
இல்லாவிட்டால் சட்டமன்றம் கூடுவதற்கான அர்த்தமே இல்லாமல் போய்விடும்; மக்கள் அளித்த வாக்குக்கே மரியாதை இல்லாமல் போய்விடும். சட்டமன்றத்தையும் சட்டமன்ற உறுப்பினர்களையும் அவமானப்படுத்தும்இதுபோன்ற செயல்களை இனியும் செய்யவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் #நான்_முதல்வன் Social Media பக்கங்களின் பெயரை மாற்றலாம். அதில் இருந்த பதிவுகளை delete செய்யலாம்.
ஆனால், இதுபோல ஆயிரம் ஜெனிபர்களின் கனவை நனவாக்கிய நான் முதல்வன் திட்டத்தின் சாதனைகளையும் நன்றியுணர்வையும் மக்கள் மனங்களில் இருந்து Delete செய்யவே முடியாது. அவை அவர்களின் இதயத்தில் ஆழமாக Archive செய்யப்பட்டுவிட்டன.
கடந்த 5 ஆண்டுகளாக, எனது ஆட்சிக்காலத்தில் “படிங்க, படிங்க, படிங்க” என்று தொடர்ந்து சொல்லி வந்தேன். அப்படி படித்து முன்னேற விரும்பும் இளைஞர்களுக்கு உதவத்தான் #நான்_முதல்வன் எனும் என் கனவுத் திட்டத்தைத் தொடங்கினேன். அதனை முடக்குவது தமிழ்நாட்டு இளைஞர்களின் வளர்ச்சியை முடக்கும் செயலாக அமைந்துவிடும்!
மேகதாது அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசை நாம் அனைவரும் ஒற்றுமையாக இருந்து தடுத்து நிறுத்துவோம் என்று கூறி, இந்தத் தீர்மானத்துக்கு எங்கள் முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறேன்!
- மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில், மேகதாதுவில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடகாவின் செயலுக்கு எதிராக, தமிழ்நாடு சட்டமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தனித்தீர்மானத்தை தி.மு.கழகம் சார்பில் ஆதரித்து உரையாற்றினோம்.
கழகத்தலைவர் @mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, மேகதாதுவில் அணை கட்ட முயல்வது New Dispute ஆக இருப்பதால், The Inter-State Water Disputes Act 1956-ன்படி புதிய தனி நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்ற திருத்தத்தைத் தீர்மானத்தில் சேர்க்க வேண்டும் என்றும்,,
இந்த தீர்மானத்தை கடிதமாக ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல், தமிழ்நாட்டு சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒரு குழுவாகச் சென்று நேரில் வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
நாம் அளித்தத் திருத்தத்தை இணைத்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
காவிரி மீதான தமிழ்நாட்டின் உரிமையை நிலைநாட்ட தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் தி.மு.கழகம் துணை நிற்கும்!
#Mekedatu #CauveryRights
அன்றாட சட்டம், ஒழுங்கு பிரச்சனைகளுக்குக் கூட முதலமைச்சர் விஜய் வாய் திறப்பதில்லை. சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினால் நிழல் முதலமைச்சர் போல ஆதவ் அர்ஜுனா பதிலளிக்கிறார்!
- முன்னாள் அமைச்சர் திரு @sivasankar1ss எம்.எல்.ஏ அவர்கள்
#TVKFails#TNAssembly
மேகதாது அணை கட்டுவதற்கு எதிராக நிறைவேற்றும் தீர்மானத்தை கடிதமாக ஒன்றிய அரசுக்கு அனுப்பாமல், தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றாக இணைந்து குழுவாக சென்று ஒன்றிய அரசிடம் வழங்கி நம் ஒற்றுமையை வெளிப்படுத்த வேண்டும்.
- மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு @Udhaystalin அவர்கள்
#TNAssembly
திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிந்தனையான சமூகநீதி, சமத்துவம், சகோதரத்துவம் மற்றும் மனிதநேயத்தை அடிப்படையாகக் கொண்டு, சவூதி அரேபியாவில் வாழும் தமிழ் இளைஞர்களும் தமிழ்மகள்களும் ஒன்றிணைந்து இந்த Gen-Z Meet-up
சவூதியில் வாழும் தமிழ் இளைஞர்களும் தமிழ்மகள்களும் ஒன்றிணைந்து, கருத்தால் இணைந்து, செயலால் உயர்ந்து, சமூகப் பொறுப்புணர்வுடன் இந்த முயற்சியை வெற்றிப்பாதைக்கு கொண்டு செல்ல வாழ்த்துகள்
🖤❤️
#GenZDMK #DMKGenZ #UdhayanidhiStalin #SocialJustice #DravidianModel
நான் முதல்வன்' அப்படின்னு சொன்னாலே, 'முதல்வன்' அப்படின்னு சொன்னாலே மக்களுக்கு எங்களோட தலைவர் திரு. முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், அவருடைய பேர்தான் மக்களுக்கு ஞாபகம் வரும்னு அப்படிங்கிற ஒரு சிறிய குறுகிய எண்ணத்தோடு அந்த திட்டத்தோட பெயரையே நீக்கி இருக்காங்க.
கழக இளைஞரணி செயலாளர், மாண்புமிகு சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
#வாயை_திறங்க_CM
"ஆட்டுக்கு தாடியும்,
நாட்டுக்கு கவர்னரும் தேவையில்லை"
Apdinu Anna sonna TN la inaki TVK supporters governor ku fire vidranunga...
What a downfall My TN
#TVKFails#DMK