‘குதிரை வேக’த்தில் நடக்கும் ‘குதிரை பேரம்’!
Scene 1: பெரும்பான்மை இல்லாத நிலையில், தி.மு.க. கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் ஆதரவு கேட்பது.
Scene 2: நம்பிக்கை வாக்கெடுப்பில் அ.தி.மு.க.வின் ஒரு அணியை ஆதரவாக வாக்களிக்க விலை பேசுவது. அ.ம.மு.க. உறுப்பினரையும் கொசுறு வாங்குவது.
Scene 3: அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரைப் பதவி விலகச் செய்து, தலைமைச் செயலகத்தில் வைத்தே தன் கட்சியில் இணைப்பது.
இந்த கண்றாவிக் காட்சிகளைப் பார்க்கத்தான் மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்களா?
‘தூயசக்தி’ என்று சுயதம்பட்டம் அடித்தவர்கள், ‘துயரசக்தி’ என அம்பலப்பட்டிருக்கிறார்கள்.
NDA ஆதரவைக் கோராமல் இருந்தால் மட்டுமே ஆதரவு எனச் சொல்லிக் கடிதம் அளித்துவிட்டு, இப்போது நடக்கும் காட்சிகளை அமைச்சரவையில் இருந்து இரசித்து விசிலடிக்கும் காங்கிரசின் போலி பா.ஜ.க. எதிர்ப்பும் பல்லிளிக்கிறது!
தமிழ்நாட்டின் புதிய அரசுக்கும் - முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ள திரு.@actorvijay அவர்களுக்கும் என் வாழ்த்துகள்.
இந்த நேரத்தில், 17-ஆவது தமிழ்நாடு சட்டப���பேரவையின் எதிர்க்கட்சித் தலைவரா பணியாற்றும் பெரிய பொறுப்பை எனக்கு வழங்கியிருக்க கழகத்தலைவர் எங்க உயிரான @mkstalin அவர்களுக்கும், கழகப் பொதுச்செயலாளர் மற்றும் கழகச் சட்டமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகள், எல்லாத்துக்கும் மேல தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் என்னோட அன்பான நன்றி!
கழகத்தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி,
சட்டமன்றத்திலும் - மக்க��் மன்றத்திலும் - சமூக ஊடகங்களிலும் ஆற்றல்மிகு எதிர்க்கட்சியா மக்களின் குரலை நாங்க எதிரொலிப்போம்.
ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை முன்வைப்போம்.
எங்க தலைவர் சொன்ன மாதிரி, எதிரிக்கட்சியா இல்லாம, ஒரு நல்ல எதிர்க்கட்சியா செயல்படுவோம்.
மக்களுக்கும் - அரசுக்கும் இடையிலான ஊடகமா நாங்க தான் இனி இருப்போம்.
என் மேல நம்பிக்கை வச்சு மக்கள் கொடுத்திருக்க இந்தப் பொறுப்புக்கு நான் 100% உண்மையா இருப்பேன்.
கடுமையாக உழைப்பேன்!
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர் திரு. @ActorVijay அவர்களுக்கு எனது மனப்பூர்வமான வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பதவியேற்றதும் தாங்கள் கையெழுத்திட்டுள்ள அறிவிப்புகளையும் வரவேற்கிறேன்.
எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே… அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
“நடைமுறைக்கு சாத்தியமானதை மட்டுமே வாக்குறுதிகளா��� அளிக்கிறேன்” எனக் கூறி ஆட்சிக்கு வந்துள்ள நீங்கள் இப்போதுதான் அரசு நிர்வாகத்துக்குள் அடியெடுத்து வைக்கிறீர்கள். கூடிய விரைவில் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றலாம் எனும் நுணுக்கங்களையும் எங்களைப் போலவே நீங்களும் நிச்சயம் கற்றுக்கொள்வீர்கள் என நான் நம்புகிறேன். வாக்களித்த மக்களோடு, நானும் அதையே எதிர்பார்க்கிறேன்.
தங்களின் ஆட்சியில் தமிழ்நாட்டின் வளர்ச்சிப் பயணம் தொடர மீண்டும் எனது வாழ்த்துகள்!
என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கும், என் உயிர்நிகர் தமிழ் மக்களுக்கும் என் அன்பு வணக்கம்.
தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பின்பு, நடக்கும் நிகழ்வுகளை நீங்கள் பார்க்கிறீர்கள். எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை கிடைக்காத வகையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அமைந்திருந்தன. ஆட்சி அமைக்கும் அளவுக்குப் பெரும்பான்மை இடங்களைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெறவில்லை என்றாலும், குறிப்பிடத்தக்க வாக்குகளை நாம் பெற்றுள்ளோம்.
நான் ஏற்கனவே பத்திரிகைகளுக்கு அளித்த பேட்டியில், புதிய ஆட்சி அமைவதற்கு இடையூறாக இருக்க மாட்டோம் என்றும், ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக தி.மு.க. செயல்படும் என்றும் சொல்லியிருந்தேன்.
அதன்பின், என் தலைமையில் நடந்த சட்��மன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில், முடிவெடுக்கும் பொறுப்பை எனக்குக் கொடுத்தார்கள். அந்தக் கூட்டத்தில், “கட்சியின் நலனை மனதில் வைத்து, தலைமைக் கழக நிர்வாகிகளுடன் கலந்து பேசி முடிவெடுப்பேன்” எனத் தெரிவித்தேன்.
ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை யாருக்கும் கிடைக்காத நிலையில், மாற்று யோசனைகளைப் பலரும் சொன்னார்கள். என்னைப் பொறுத்தவரை, தோழமைக் கட்சிகள் எந்த முடிவை எடுத்தாலும் அவர்களின் முடிவை மதித்து ஒருங்கிணைந்து செயல்பட்டு, நிலையான ஆட்சி அமைய வேண்டும்; இன்னொரு தேர்தலுக்கு வழிவகுத்துவிடக் கூடாது என்பதே எனது எண்ணமாக இருந்தது.
எங்களது கூட்டணியைச் சார்ந்த தோழர்கள், “இன்றைய நெருக்கடியான சிக்கலைத் தவிர்க்க, நாங்கள் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ஆட்சி அமைக்க ஆதரவு தெரிவித்தாலும், கொள்கை அடிப்படையில் தி.மு.க. தலைமையிலான மதச்சார���பற்ற முற்போக்குக் கூட்டணியில் தொடர்கிறோம்” என்று அறிவித்திருப்பதை நான் வரவேற்கிறேன்.
கூட்டணியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நன்றி தெரிவிக்க அண்ணா அறிவாலயம் வரவில்லை. ஒரே நாளில் தி.மு.க.வுடனான உறவை முறித்துக்கொண்டு காங்கிரஸ் கட்சி சென்றது. அதேசமயம் தமிழ்நாட்டின் உரிமைகளுக்காகவும் மக்கள் நலனுக்காகவும் தொடர்ந்து தி.மு.க.வுடன் கைகோத்துப் போராடுவோம் என்று கம்யூனிஸ்ட் தலைவர்கள் தோழர் சண்முகம், தோழர் வீரபாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் அவர்களும் அறிவித்துத் தோழமை உணர்வை வெளிப்படுத்தியுள்ளது, கொள்கையில் வலுவாக உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.
இந்நேரத்தில் மிக முக்கியமான சோதனைக் காலத்தில் உறுதியுடன் உடன் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள் பேராசிரியர் அய்யா காதர் மொகிதீன், அண்ணன் வைகோ, சகோதரி பிரேமலதா விஜயகாந்த், பேராசிரியர் ஜவாஹிருல்லா, சகோதரர்கள் ஈஸ்வரன், தமிமுன் அன்சாரி உள்ளிட்ட அனைவருக்கும் என் நெ���்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களின் உறுதிக்கு எத்தகைய நன்றியும் பாராட்டும் பொருந்தும்.
கடந்த ஐந்தாண்டு காலத்தில் தமிழ்நாட்டை அனைத்துத் துறைகளிலும் வளர்த்தெடுத்து, தமிழ்நாட்டை வளப்படுத்தியிருக்கிறோம். ஏராளமான திட்டங்களின் மூலமாக ஒவ்வொரு தனிமனிதரும் நன்மை அடைய வழிவகை செய்துள்ளோம்.
தொலைநோக்குச் சிந்தனையும், வளமான திட்டமிடலும் கொண்ட அந்தத் திட்டங்களை அமைய இருக்கும் புதிய அரசு தொடர வேண்டும் என்பதே எனது தனிப்பட்ட விருப்பமாகும்.
மகளிர், இளைஞர்கள், மாணவர்கள், குழந்தைகள், விளிம்பு��ிலை மக்கள், அரசு ஊழியர்கள் ஆகியோரை உள்ளடக்கிய அனைத்துத் திட்டங்களையும் தொடர்ந்து செயல்படுத்தினால் மக்களுக்கு நன்மைகள் தொடரும்; மாநிலமும் வளரும். இதனைக் கவனத்தில் கொண்டு புதிய அரசு செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அமைய இருக்கும் புதிய அரசுக்கு மீண்டும் எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
தனிப்பெரும் கட்சியாக தவெக வந்த பிறகும், ஆட்சி அமைக்க இடையூறு செய்கிறார் ஆளுநர். இதைக் கண்டிக்க அஞ்சுகிறது தவெக. இதுவே 108 எண்ணிக்கை திமுகவிடம் இருந்து, ஆளுநர் இப்படி இழுத்தடித்தால் என்ன நடந்திருக்கும்? சட்டமன்றத்தில் ஆளுநர் உரையின் போது RN ரவிக்கு நடந்தது போல் நடந்திருக்கும். ஆளுநரை எதிர்ப்பது என்பது பாஜகவை எதிர்ப்பதாகும். அதற்கு கொள்கை உறுதியும் துணிவும் வேண்டும். அது உள்ளதா விஜயிடம்?
மக்கள் தீர்ப்பைத் தலைவணங்கி ஏற்கிறோம். வெற்றி பெற்றவர்களுக்கு வாழ்த்துகள்!
கடந்த ஐந்தாண்டு காலத்தில் ஏராளமான திட்டங்களை உரு���ாக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு நல்லாட்சியை வழங்கினோம். தமிழ்நாட்டை அனைத்து வகையிலும் உயர்த்தினோம். தேர்தல் களத்தில் எங்களது சாதனைகளைச் சொல்லியே வாக்குகளைக் கேட்டோம்.
மக்களுக்குச் செய்து கொடுத்த நலத்திட்டங்கள் தொடருவதற்கு வாக்கு கேட்டு நாங்கள் பரப்புரை செய்தோம்.
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை ஆதரித்து வாக்களித்த தமிழ்நா���்டு மக்கள் அனைவருக்கும் நான் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்ல, வாக்களிக்க மறந்தவர்களுக்கும் சேர்த்தே ஆட்சி நடத்தினேன்.
அனைத்து மக்களுக்கும் உண்மையாக இருந்தேன். நான் எனது மனச்சாட்சிப்படியே செயல்பட்டேன்.
நான் எனது சக்தியை மீறி உழைத்தேன். என்னைப் போன்றே களத்தில் உழைத்த என் உயிரோடு கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன��பிறப்புகள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றி!
எங்களோடு தோளோடு தோள் நின்ற தோழமை இயக்கத் தலைவர்கள், நிர்வாகிகள், ��ொண்டர்கள்
அனைவருக்கும் நன்றி !
எனது அரசியல் பொதுவாழ்வில் அதிகப்படியான வெற்றியையும் பார்த்துள்ளேன்; தோல்விகளையும் சந்தித்துள்ளேன்.
எனவே இலட்சியமும் கொள்கையும்தான் முக்கியமே தவிர, வெற்றி தோல்விகள் மட்டுமல்ல என்று செயல்படக் கூடியவன் நான்.
அதனால் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசியல் பயணம் தொய்வில்லாமல் தொடரும்.
இதுவரை மக்களுக்காகச் சிறப்பான ஆளும்கட்சியாகச் செயல்பட்�� தி.மு.க. - இனி சிறப்பான எதிர்க்கட்சியாகச் செயல்படும்.
ஒருவரோடு ஒருவரை ஒப்பிடாமல்,ஒவ்வொருவரின் தனித்தன்மையையும் உயர்வாய் பாராட்டி உளம் மகிழச் செய்வ��ு என் வழக்கம்!அப்படி நேற்று முன்தினம் Mr Ajith பற்றி நான் பதிவிட்டதற்கு அவரது அன்புமிகு ஒழுக்கமிகு ரசிகர்கள் நன்றி தெரிவிக்க நான் அதை(யும்) ரசித்தேன். ஆனால் நான் சற்றும் எதிர்பாராமல் அவரிடமிருந்தே அந்தக் குறுஞ்செய்தி வந்தது.
எந்த எதிர்பார்ப்புமில்லாமல் ஒருவர் நம்மை பாராட்டி வாழ்த்துவதற்கு,சுடச்சுட நன்றி தெரிவிப்பதை அவர் தலையாய கடமையாக நினைக்கிறார் என்பதனை எண்ணி மனதிற்குள் பாராட்ட நினைத்தேன் அது இப்படி வெளியே வந்து விட்டது!
மணிப்பூர் கலவரம், குஜராத் மோர்பி பால விபத்து, உத்தர பிரதேசத்தில் கும்பமேளா பலிகளுக்கெல்லாம் உடனடியாக விசாரணைக் குழுவை அனுப்பாத பா.ஜ.க., கரூரில் காட்டும் வேகத்தின் காரணம் என்ன?
நிச்சயமாக அக்கறை இல்லை! முழுக்க முழுக்க 2026 தேர்தலில் அரசியல் ஆதாயம் தேடும் அற்பச் செயல்!
அடுத்தவர் முதுகில் சவாரி செய்தே பழக்கப்பட்ட பா.ஜ.க., பிறர் இரத்தத்தை உறிஞ்சி உயிர்வாழும் ஒட்டுண்ணி பா.ஜ.க., கரூர் நெரிசலைப் பயன்படுத்தி யாரைத் த��் 'control'-இல் வைக்கலாம் என்று வலம் வருகிறார்கள்.
எந்த முகமூடி அணிந்து வந்தாலும், எத்தனை அடிமைகளைச் சேர்த்து வந்தாலும், புதிதாக யாரைச் சேர்க்க நினைத்தாலும், நான் முன்பே சொன்னதுபோது தமிழ்நாடு உங்களுக்கு OUT OF CONTROL-தான்!
Difference is One raised their voice on behalf of their people who are being oppressed for years against the government over the BILL and another one is just shouting at a movie theatre after learning half baked history through a movie. You cannot compare both.