செம்மஞ்சள் பிழம்பு
எண்ணெய்க் கிடங்குகள் வெடித்து ஆரஞ்சு அக்னி மேகமாய்க் கொப்பளிக்கும் Youtube வீடியோ பார்த்து "அடேங்கப்பா! போட்டாம் பாரு" என்று, யாரோ கிரிக்கெட்டி��் சிக்ஸர் அடித்தது போல் ஆர்ப்பரிப்பவரிடம், நீங்கள் எந்தக் கட்சி அமெரிக்காவா, ஈரானா? என்ற கேள்விக்கு, "நான் இந்தியன், நான் பார்வையாளன்” என விம்முகிறார்.
இந்தியா தீவல்ல ஆசியத் துணைக்கண்டம் என்று புரியவைக்கும் என் வாக்கியம் முடியும் முன், "நான் ஹிந்து. இது ஹிந்துஸ்தான். இந்தப் பெயரை ஒத்துக்கொண்டு சூட்டியது இஸ்லாமிய முகலாய மன்னர்" என்று அவர் நண்பர் இடைமறிக்கிறார்.
முகலாய முஸ்��ீமை, மன்னர்களை, 500 ஆண்டுகள் ஏற்றுக்கொண்ட பெரும்பான்மையைச் சேர்ந்த இவர்கள் நிச்சயமாக சத்ரபதி சிவாஜியின் நேரடி வாரிசுகளல்லர்; நாளை இந்திய எண்ணெய்க் கிடங்கிற்கு வரப்போகும் ஆபத்து புரியாதவர்கள். அவர் தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் மதம், என்னை வியப்பில் ஆழ்த்தவில்லை. அவர் அறியாமையை வியப்பதோடு, அது என்னைப் பதற்றத்திற்கும் உள்ளாக்குகிறது.
நடந்துகொண்டிருக்கும் இந்தப் போர், நாளை வலுத்துவிட்டால் இவர்கள் தன் மிடில் கிளாஸ் பங்கரில் ஒளிந்துகொண்டு (WI-FI வேலை செய்யும் வரை), 'ஆட்சியாளர் என்ன செய்கிறார்? என் ராணுவம் என்ன செய்கிறது?' என ட்வீட்டிவிட்டு, ஏதாவது லாரி டயர் வெடித்தால்கூட பயந்து பதுங்கப் போய்விடுவார்கள்.
நம் ராணுவ வீரர்கள் பலர் வீண் போரில் மடிந்த பின் 'சாரே ஜஹான்ஸே' பாட, மலர் வளையத்துடன் மனித நேயர்கள் என்ற விலாசத்துடன் தலைகாட்டுவார்க��்.
பாமரர்களும் பாதசாரிகளும் உழைப்பவர் வர்க்கமும், பெரும் கார்ப்பரேட் வியாபாரிகள் போல் எவன் எக்கேடு கெட்டால் என்ன என்று லாப நாமாவளி பாடிவிடக் கூடாது.
ஊரான் வீடு பற்றி எரியும் போது தீயணைக்க உதவுவது தியாகம் அல்ல, மனித நேயம். அதையும் தாண்டி, வாழும் வீதியோ ஊரோ பற்றியெரியக் கூடாது என்ற அடிப்படைத் தற்காப்பு.
அரபு எண்ணெய்க் கிடங்குகளின் வாயு நம் அடுப்புக்கும் வாகனங்களுக்கும் உதவுகிறது.
கிலாஃபத் இயக்கம் என்று பேசிய போது காந்தியாரைக் கிண்டலடித்தவர்களின் பேரப் பிள்ளைகள் இன்னமும் உயிரோடுதான் இருக்கிறார்கள். அவர்கள் நீடூழி வாழட்டும். கூடவே ஈரானும் ஊரானும் வாழட்டும்.
அடுத்த முறை ஆரஞ்சுப் பிழம்பு பார்க்கத் துடிப்பவர்களுக்கு தீபாவளியே போதுமானது.
அதையும் தாண்டி அடுத்த மாத நெல் விதைப்புக்கான உரம் பற்றியும், அதற்கு அடுத்த வருடம் பற்றியும் சிந்திக்க வேண்டும். உலகுக்குத் தேவையான 70 விழுக்காடு உரம், ஃபாஸ்ஃபேட் எல்லாம் சீனாவிலும் சில வளைகுடா நாடுகளிலும் முடங்கிக் கிடக்கின்றன. பெட்ரோலியம், உரமோ பாசனமோ செய்ய பெரிதாக உதவாது. நம் உழவருக்கு மட்டுமல்ல அமெரிக்க உழவனுக்கும்தான்.
ஊடகத்தில் கிண்டல் மட்டும் அடிக்கும் அறியாமை, போருக்கோ நாட்டிற்கோ உதவாது.
'போர் செல்லும் வீரன் ஒரு தாய் மகன்தான்.
நம்மில் யார் இறந்தாலும் ஒரு தாய் அழுவாள்.'
(விஸ்வரூபம் படத��தில் நான் எழுதிய பாடல்)
அது இந்தியத் தாயாக இருக்கவே கூடாது..
நான் ஆசியாவின் பக்கம்.
வாழ்க இந்தியா.
பசித்த வயிறுகளுக்கு உணவளித்து, எளியோரின் கண்ணீரைத் துடைக்கும் கருணைதான் உண்மையான தொண்டு என்பதை உணர்த்தும் ஈகைத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு என் இனிய ரம்ஜான் வாழ்த்துகள்.
ஊடக நண்பர்களுக்கு ஒரு குறிப்பு. பல வருட விவாதங்களுக்குப் பின் censor என்ற சொல்லை நீக்கச் சொல்லி இந்தியாவின் மத்திய திரைப்ப��ச் சான்றிதழ் வாரியமாக மாற்றி இருக்கிறோம். Central board of film certification.
சினிமாவில் தணிக்கை என்பது தவறு என்று வழக்காடி வழக்கொழிந்த சொல் தணிக்கை. தமிழ் ஊடகங்களும் தணிக்கை என்ற சொல்லை தவிர்க்க வேண்டும். திரை உலகு வாதாடி மத்திய அரசை நீக்க வைத்தபின் அச்சொல்லை பயன்படுத்த வேண்டாம். கலையை தணிக்கை செய்ய ஒரு ஜனநாயக அரசுக்கு உரிமை இருக்கக் கூடாது என்பதே உலக சினிமா ஒப்புக்கொண்ட நியாயம். தமிழ் சினிமாவும்தான்.
கமல் ஹாசன்.
'வெயிலோடு போய்' சிறுகதை தொகுப்பின் மூலம் என் வாசிப்புக்கு அறிமுகமான பெயர் ச. தமிழ்ச்செல்வன். தொடர்ந்து புனைவிலும் அல்புனைவிலும் தன் பங்களிப்புகளைச் செய்து வருபவர். தமிழ் இலக்கியப் பாரம்பரியத்தில் சிறுகதைகளின் பங்கு எந்த விதத்தில் இருக்கிறது என்பதை விளக்கும் வகையிலான 'தமிழ்ச் சிறுகதையின் தடங்கள்' என்னும் நூலுக்கு அவர் சாகித்திய அகாடமி விருது வென்���ிருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி. தமிழ்ச்செல்வன் அவர்களை மனமார வாழ்த்துகிறேன். தொடர்ந்து இயங்குக.
Wishing Comrade Pinarayi Vijayan, Vijayam.
I wish the Chief Minister of Kerala, Shri Pinarayi Vijayan, all the very best for the upcoming election. Above all, I feel that the state, Keralam, is also ende Keralam. Even if some, in their exclusive mindset, attribute an outsider status to me, I remain emotionally attached to Keralam.
Hence, I would urge the beneficiaries of that state (which includes me) to reflect on the past decade and wish him well. Let us make the right decision.
Comrade Vijayan vijayikkatte. Keralamum Vijayikkum.
Ithu ende Abhipraayam.
-Kamal Haasan
Another year ahead . Another chance to become better kinder and wiser than the year before . Excellence is a work in progress. Have an excellent new year . Every tomorrow is a day to be seized . Let all your pursuits make you happy .
“உம்மைப் பற்றிப் பேசாத நாளில்லை” எனும் பல முறை கேட்ட தேய்வழக்கு, என் வாழ்வில் திரு. பாலச்சந்தர் அவர்களுக்கும் அவரது தோழர் திரு. நாகேஷ் அவர்களுக்கும் பொருந்தும். இன்று கே��ி சாரின் நினைவு தினம். இந்நாளும் விதிவிலக்கல்ல.
“இந்த இயக்குனர் உனக்கு எனக்குப்பின் நீ படிக்க நல்ல இடம்” என்று எனக்கு ஒரு சிகரத்தை அடையாளம் காட்டிய அவ்வை சண்முகம் ஆசானையும் இன்று நன்றியோடு நினைத்து வணங்குகிறேன்.
- கமல்ஹாசன்