இது மாற��றமும் இல்லை, எளியவர் கையில் ஆட்சி செல்லவும் இல்லை - நேற்று வரை நாட்டின் எந்த விவகாரத்தையும் செய்தியில் கூட படிக்காத ஒரு முழு சினிமா கும்பலிடம் நாட்டை கொடுத்துள்ளனர். அவர் வசிக்கும் லட்சணத்தில் சொல்கிறேன் இந்த ஆளு இதுக்கு முன்ன நிதி துறை சார்ந்த எந்த செய்தியை கூட படித்து வளர்ந்திருக்க மாட்டார்.
இன்னொரு முக்கிய விஷயம் மாநிலத்தி��் கடன் வாங்கப்பட்டுள்ளது என அனைவரும் அறிவோம் - வெள்ளை அறிக்கையில் எதிர்பார்த்தது எதற்காக வாங்கப்பட்ட கடன் , அதன் வழி என்ன என்ன பயன் குறைத்தது என்ன தவறாக செலவிடப்பட்டது என்பது தான்.
வெள்ளை அறிக்கை என்றால் என்ன என்பது கூட அறியாது- அதிகாரிகள் சொல்வதை அப்படியே கேட்டு உருட்டினால் நிச்சயம் பாதாளம் தான்.
முதலில் நிதி துறை என்றால் என்ன என்பதற்கு பயிற்சி கொடுங்க விஜய் சார். அதற்கு ம���ன் முதல்வராக கொஞ்சம் உளவுத்துறை தகவல்களையாது நீங்கள் கையாளுங்கள். அனைத்தையும் லாட்டரி மாபியா கையில் கொடுத்தால் ஆட்சி சந்தி சிரிப்பது தடுக்க முடியாது.
மீண்டும் சொல்கிறேன் எளியவர்கள் நாட்டின் மீது தீவிரமான தேடலும் அதில் அறிவும் உள்ளவர் கைக்கு தன் நிர்வாகம் செல்வது மாற்றம். இது எல்லாம் எளிய பிள்ளைகள் தான் ஆனா தியார்ட்டர் பக்கம் திரிந்த பிள்ளைகள்.
🇮🇳 Pragg just won Norway Chess 2026 after winning 4 classical games in a row, what a performance! 🥵🥳
After finishing 3rd in 2024, he won Norway Chess in his second appearance! 🔥
#NorwayChess
ஜோஸ் குட்டி இவர் பெயர். வயலின் கலைஞர். அமிர்தா தொலைக்காட்சியின் ‘சூப்பர் ஸ்டார் சீனியர்’ இந்த சீசன் ஷோவில் இவரது குழுதான் வாசிக்கிறது. இளையராஜாவோடு பணியாற்றிய அனுபவத்தைச் சொல்கிறார். “எங்கள் ஆர்கெஸ்ட்ரா குழு சார்பாக ராஜா சாருக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள். நான் 1992-96 காலக்கட்டத்தில்தான் அவர்கூட வேலை செஞ்சேன். சுமார் நான்கு வருடங்கள். பிஸியாக அவர் இருந்த காலக்கட்டம்தான் அது. சமீபத்திலதான் கூகுள்ல பாத்துத் தெரிஞ்சுட்டேன். 1993ல் 42 படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். அத்தனை பிஸியான காலக்கட்டம்தான் அது. (அய்யோ! என்று சிலர் கத்துவது கேட்டது. அப்படின்னா 1984/85/86 கணக்குல்லாம் கேட்டா என்ன சொல்வாங்க என்று நினைத்துக்கொண்டேன்) எஜமான், வள்ளி, மலையாளத்தில் ஜாக்பாட், தெலுங்குனு பல படங்கள். ஒரே மாசத்துல பல படங்களோட பூஜை, பாடல், ரீரெகார்டிங்னு போய்ட்டே இருக்கும். ஒரு படத்துல அஞ்சாறு பாட்டெல்லாம் இருக்குமல்லவா.. அப்ப எல்லா நாளும் காலைல ஒரு பாட்டு. மாலைல ஒரு பாட்டுனு முடியும். அவர் காலைல ஏழு மணிக்கெல்லாம் வந்துருவாரு. ரூமுக்குள்ள போய்டுவார். இசைக்கலைஞர்களெல்லாம் ஒவ்வொருத்தரா வந்து ரெடியாவோம். உள்ள ஸ்கோர் எழுதிட்டு, அசிஸ்டெண்ட் கைல குடுத்துவிடுவார். ஜூடி சார்தான் அப்ப அசிஸ்டெண்ட். 10-15 காபி மியூசிக் ஸ்கோர் வரும்.
இசைக்கலைஞர்கள்ட்ட அது வரும். வயலின் மூணு வரிசை இருக்கும். 9-9-8. மொத்தம் 26 வயலின். அதுல நான் செகண்ட வயலின் ரோ-ல வாசிச்சுட்டிருந்தேன். எங்க போர்ஷன் எழுதி எடுத்துப்போம். டச் பண்ணிப் பாத்துக்கலாம்; அவ்ளோதான். அங்க ஒக்காந்து சவுண்ட்லாம் குடுத்துப் பாக்க முடியாது. டச் பண்ணி கரெக்டா இருக்கானு பாத்துப்போம். பத்து மணி ஆகறப்ப ராஜா சார் வருவார். டிராக் சிங்கர் இருப்பாங்க. ரெண்டு வாட்டி ப்ராக்டீஸ் நடக்கும். ராஜா சார் கரெக்ஷன்ஸ் இருந்தா சொல்லிடுவார். அப்பறம் உள்ள போய்டுவார். புருஷோத்தமன் கண்டக்ட் பண்ணுவார். அஞ்சு மணி நேரத்துல ரெகார்டிங் முடிஞ்சிரும். நீங்க கேக்கற எல்லா பாட்டும் இப்படி ரெடி ஆகறதுதான். ஒண்ணு ரெண்டு நாள் இல்ல. 365 நாள் அவர் இ��்படித்தான். ரீ ரெகார்டிங் பத்தி சொல்லணும். ரூம்ல இருந்து ஹால்ல உக்காந்து முழுப்படமும் பார்ப்பாரு. ஹார்மோனியம் இருக்கும்; ஆனா மூடியிருக்கும். ஒரு 40 பக்க மீயூசிக் நோட்ஸ் எழுதற நோட் இருக்கும். படம் பார்க்கறப்ப டைம் ட்யூரேஷன் அப்பப்ப அதுல நோட் பண்ணுவார். படம் பாத்துட்டே அந்தக் குறிப்ப எடுப்பார். படம் முடிஞ்சதும், குனிஞ்சு அந்த நோட்டுல மியூசிக் நோட்ஸ் எழுத ஆரம்பிப்பாரு. ஒவ்வொரு சிச்சுவேஷனுக்கும் உண்டான மீயூசிக்கை எழுதுவாரு. அப்ப நாங்கள் வயலின்ஸ்ட்லாம் பின்னால போய் நின்னுட்டு, தலைய நுழைச்சு எங்களுக்குண்டான நோட்ஸை குறிச்சுக்குவோம். தில்ரூபா மாதிரி பாக்கி உள்ள இசைக்கருவில்லாம் அவர் எழுதினதப் பாத்துட்டு ஜுடி சார் போய் நொட்டேஷன்ஸ் சொல்லிக்குடுப்பாரு.
எல்லாம் எழுதி எடுத்துட்டப்பறம், ராஜா சார் எந்திரிச்சு வருவார். படம் போடச் சொல்லி, ராஜா சார் கண்டக்���் பண்ணுவாரு. நாங்க அவர் குறிச்சுக்குடுத்த நோட்ஸ்ல, டைமிங்ல வாசிப்போம். படம் ஓடிட்டிருக்கும். ஒரு மியூசிக் கூட நீட்டவோ, குறைக்கவோ தேவையே இருக்காது. சீனுக்கு கரெக்டா இருக்கும். ந���ப்பது பார் மியூஸிக்கும் கரெக்டான டெம்போல இருக்கும். வந்து அவர் கண்டக்ட் பண்றப்ப அந்த நாப்பது பார் முடியறப்ப சீன் முடிஞ்சிருக்கும்.
ஒரு ரீல்-ல பல சேஞ்ச் ஓவர் இருந்தாலும் சரி. அதெல்லாம் ராஜா சாருக்கு ஒண்ணுமே இல்லை. கரெக்டா ஒக்காரும். ரொம்ப சிலதுக்கு வேணா அந்த ரீலை திரும்ப ஓட்ட வேண்டிருக்கும். நாப்பது பார் ஒரு மியூசிக், சீனை மனசுல வெச்சு எழுதி அத சிங்க் பண்றதெல்லாம்…
அந்த சமயத்துலதான் ராஜா சார் கர்நாடக சங்கீத கச்சேரி நடத்தினாரு. பஞ்சமுகினு ராகம்கூட அதுலதான் அறிமுகப்படுத்தினாரு. அதுக்கு மூணு சண்டே அவர் வீட்ல ரிஹர்சல் நடந்துச்சு. அதுல கலந்துட்டு ஸ்டேஜ்லயும் நான் வாசிச்சேன். அது என் வாழ்க்கைல பெரிய பாக்கியம்!”
எஜமானின் ‘ஆலப்போல் வேலப்போல்’, வள்ளியின் ‘என்னுள்ளே என்னுள்ளே’ ஆகியவற்றை தான் வாசித்ததில் நினைவிலிருக்கும் பாடல்கள் என்றார் ஜோஸ் குட்டி.
#Ilayaraja
Novak Djokovic: "Federer and Nadal come from two Western powers. I came from Serbia and said out loud that I was going to be number 1. The entire system did not like that: media, sponsors, tournaments. I felt like an unwanted guest crashing their party. It really hurt me back then. They wanted me to play to their tune — be politically correct, fit into their script. It hurt me so much that I even changed my behavior, hoping they would accept me. In the end, I understood that I needed to stay true to myself and to accept that some people will never like me. And that's fine. I am who I am and I sleep peacefully."