தற்போதைய சூழலில் தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா வரவேண்டாம் என தெரிவித்த டி.கே.சிவகுமார் குறித்த கேள்விக்கு, செளமியா அன்புமணி கொடுத்த பதில்
#Salem | #CMVijay | #Sowmiya| #DKShivakumar | #PolimerNews
தமிழக அரசு ஏன் வாய் திறக்க மாட்டேங்குது? அப்படி என்ன கர்நாடகாவுக்கும், தமிழ்நாட்டுக்கும் ஃபிரண்ட்ஷிப்? பின்வாசல் வழியே என்ன பேசுறீங்க? சூழ்ச்சியில் விழுந்துடாதீங்க - முதலமைச்சர் விஜய்யை எச்சரிக்கும் அன்புமணி
#Chennai | #PMK | #Anbumani | #PolimerNews
"மேகதாது அணை பிரச்சனையால் தமிழ்நாடு பாலைவனமாகும் என முதன்முதலில் எச்சரித்தவர் அன்புமணி" என சௌமியா அன்புமணி பேட்டி
AnbumaniRamadoss | SoumiyaAnbumani | 01 Aug 2026
#Mekedatu#NewsTamil24x7
"நீர் நிலைகளுக்கு சாக்கடை தண்ணீர் தான் போயிட்டு இருக்கு.. இது சட்டப்படி குற்றம்.. இந்த குற்றத்தை எல்லாரும் பண்ணிட்டு இருக்காங்க.." - கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தினை ஆய்வு செய்த சௌமியா அன்புமணி பேட்டி
#Dharmapuri | #Water | #PMK | #PolimerNews
🚨 காவிரி உரிமையை மீட்க உச்சநீதிமன்றமே சரியான பாதை! 💧⚖️
பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரைப் பெற உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்திருப்பது தாமதமாக எடுக்கப்பட்டாலும் சரியான நடவடிக்கை என்று வரவேற்றுள்ளார்.
தமிழக மக்களின் உணர்வுகளை மதிக்காமல், பேச்சுவார்த்தைக்கான வாயிலையே கர்நாடக அரசு மூடியுள்ள நிலையில், சட்டப்பூர்வமான போராட்டம் மட்டுமே தீர்வாகும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
அறிக்கையின் முக்கிய அம்சங்கள்:
✅ காவிரியில் தமிழகத்திற்கு உரிய நீரைப் பெற உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும் தமிழக அரசின் முடிவு வரவேற்கத்தக்கது.
✅ கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி காவிரி நீரைப் பெற முடியும் என்ற அணுகுமுறை பலமுறை தோல்வியடைந்துள்ளது.
✅ 1995-ஆம் ஆண்டு, உச்சநீதிமன்ற உத்தரவுக்குப் பிறகும் கர்நாடகம் தண்ணீர் திறக்க மறுத்தது; பின்னர் பிரதமர் நரசிம்மராவ் தலையீட்டின் மூலம், நடுவர் மன்றம் ஆணையிட்ட **11 டி.எம்.சி.**க்கு பதிலாக 6 டி.எம்.சி. மட்டுமே திறக்கப்பட்டது.
✅ 2002-ஆம் ஆண்டு, கடுமையான வறட்சியின்போது, உச்சநீதிமன்றம் தினமும் 0.8 டி.எம்.சி. தண்ணீர் திறக்க உத்தரவிட்டபோதும், அப்போதைய கர்நாடக முதலமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா மறுத்தார்.
✅ அதன் பின்னர் தொடரப்பட்ட நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், 26.10.2002 அன்று உச்சநீதிமன்றம் கடுமையான எச்சரிக்கை விடுத்த பிறகே கர்நாடகம் தமிழகத்திற்கு தண்ணீர் திறந்தது.
✅ எந்தக் கட்சி கர்நாடகத்தில் ஆட்சியில் இருந்தாலும், தமிழகத்திற்கு தன்னார்வமாக தண்ணீர் திறந்த வரலாறு இல்லை என்பதை தமிழக அரசு உணர வேண்டும்.
✅ காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை அமல்படுத்த, உச்சநீதிமன்றத்தில் விரைந்து நடவடிக்கை எடுத்து தமிழகத்திற்கு உரிய நீரைப் பெற வேண்டும்.
✅ மேகதாது அணை தொடர்பாக மத்திய மற்றும் கர்நாடக அரசுகள் மேற்கொள்ளும் முயற்சிகளை உரிய ஆதாரங்களுடன் உச்சநீதிமன்றத்தில் எதிர்த்து, விரிவான திட்ட அறிக்கை (DPR) தயாரிப்பிற்கே தடை விதிக்க தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.
🌾 தமிழகத்தின் உயிர்நாடியான காவிரியை பாதுகாப்பது அரசியல் அல்ல; அது தமிழர்களின் உரிமையையும் விவசாயத்தின் எதிர்காலத்தையும் காக்கும் கடமை. சட்டத்தின் வழியே உரிமையை மீட்டெடுக்க தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை தொடர வேண்டும்.
#காவிரி #காவிரி_உரிமை #தமிழக_உரிமை #தமிழக_விவசாயம் #உச்சநீதிமன்றம் #மேகதாது #மேகதாது_அணை #காவிரி_மேலாண்மை_ஆணையம் #PMK #பாமக #டாக்டர்_அன்புமணி_இராமதாஸ் #AnbumaniRamadoss #Cauvery #SaveCauvery #StopMekedatu #JusticeForTamilNadu #WaterRights #TamilNadu #FarmersRights #CauveryWater #StandWithTamilNadu
தருமபுரி மதிக்கோன்பாளையத்தில் உள்ள பாதாள சாக்கடை சுத்திகரிப்பு நிலையத்தை ஆய்வு மேற்கொண்டார் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் முனைவர் செளமியா அன்புமணி அவர்கள்
சேலம் மாவட்டம், ஏற்காடு மலையில் கொம்புதூக்கி பகுதியில் அமைந்துள்ள, மான்போர்ட் மலைவாழ் மக்கள் சமுதாய (TRIBAL) நல மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற 25-வது ஆண்டு வெள்ளி விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று உரையாற்றிய போது. உடன் பள்ளியின் நிறுவனர், Brother George KJ மற்றும் சிறப்பு விருந்தினர்கள்.!
இசையரசி எஸ். ஜானகி அம்மாள் மறைவுக்கு இரங்கல்
தென்னிந்தியாவின் நைட்டிங்கேல் என்று போற்றப்பட்ட பாடகி எஸ். ஜானகி அம்மையார் அவர்கள் முதுமை மற்றும் உடல்நலக் குறைவால் காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
தென்னிந்தியாவின் அனைத்து மொழிகளிலும் ஐந்து தலைமுறை இசைக் கலைஞர்களுடன் இணைந்து பாடல்களை பாடிய அவர், இசை ரசிகர்களின் செவிகள் வழியாக இதயங்களில் நுழைந்தவர். கே.வி. மகாதேவன், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா ஆகியோரின் இசை அமைப்புகளிலும் கே.ஜே.ஜேசுதாஸ், எஸ்.பி. பாலசுப்பிரமணியன் ஆகியோருடன் இணைந்தும், தனித்தும் அவர் பாடிய பாடல்கள் அனைத்தும் எரிமலைகளையும் இளக வைக்கக் கூடியவை. காந்தக் குரலுக்கு எடுத்துக்காட்டு என்றால் எஸ். ஜானகி அமமையார் அவர்கள் தான்.
4 தேசிய விருதுகள், 6 தமிழக அரசு விருதுகள் உள்ளிட்ட 30-க்கும் மேற்பட்ட விருதுகளை வென்றவர் அவர். இவை அனைத்துக்கும் மேலாக இசை ரசிகர்களின் அன்பையும், ஆரவாரத்தையும் தான் பெரிய விருதாக மதித்தவர். அவரது மறைவு இசை ரசிகர்கள் அனைவருக்கும் பேரிழப்பு.
இசையரசி எஸ்.ஜானகி அம்மையார் அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், இசையுலகினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அவர்களின் வழிகாட்டுதல் படி, சென்னை மாவட்ட ஒருங்கிணைப்பாளர், பசுமை தாயகம் இணைச் செயலாளர் வி இராதகிருஷ்ணன் அவர்கள் தலமையில்,பாட்டாளி மக்கள் கட்சியின் 38 ஆம் ஆண்டு தொடக்க விழா மாபெரும் பொதுக்கூட்டம் 16-7-2026 அன்று மாலை 6 மணி அளவில் சென்னை மின்ட் (தங்கசாலை தெரு மணி கூண்டு அருகில் )நடை பெற உள்ளது. இந்த மாபெரும் பொதுக்கூட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் மருத்துவர் #அன்புமணிராமதாஸ் அவர்கள் எழுச்சி உரை ஆற்றுகிறார். பசுமை தாயகம் தலைவர், தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர், சட்டமன்ற பாட்டாளி மக்கள் கட்சி தலைவர், முனைவர் #சௌமியாஅன்புமணி அவர்கள் சிறப்பரை ஆற்றுகிறார்கள். மற்றும் பாமக சட்டமன்ற உறுப்பினர்கள், பாமக மாநில, மாவட்ட, பகுதி, வட்ட, நிர்வாகிகள் பங்கேற்க உள்ளனர். அலைகடலென திரண்டு வாரீர்!!வாரீர்!வாரீர்!