பார்ப்பன பெண்ணுக்கும், சூத்திர ஆணுக்கு பிறந்தவன் சண்டாளன், அவன் கீழ்ச்சாதியிலும் கீழ்ச்சாதியாவான், சண்டாளர்கள் அழுக்குடை உடுத்தி, நாய்களும், கழுதைகளும் வாழுமிடத்தில் வாழ வேண்டும், சாதியால் தாழ்ந்த சாதிக்கார ஆண் தொட்ட பெண்ணை வாழ்நாள் முழுக்க தனிமைப்படுத்தி வைக்க வேண்டும். பார்ப்பன பெண்ணை ஒரு சூத்திர ஆண் அணுகினால் அவனுக்கு அரசன் மரண தண்டனை விதிக்க வேண்டும். அந்த பெண்ணுடன் சரிக்கு சமமாக பழகினால், அவன் காதுகளிலும், வாயிலும் சுடச்சுட எண்ணெய் ஊற்ற வேண்டும்.
இவையெல்லாம் மனுஸ்மிருதி இந்திய சாதிய மனதிற்கு இட்ட கட்டளை, விபரம் வேண்டுவோர் மனுதர்மத்தை படிக்கவும்.
இந்த கட்டளைகளை நிறைவேற்றுவதை கடமையாக கொண்டுதான் இளவரசன் தண்டவாளத்தில் வைத்து படுகொலை செய்யப்பட்டான், கோகுல்ராஜ் கொடூரமாக கொலை செய்யப்பட்டது, அப்படித்தான் கவினுடைய கொலையும் நிகழ்ந்திருக்கிறது.
இந்து/சாதிய மனசாட்சியின் குரலாக இயக்கி கொண்டிருப்பது மனுஸ்மிருதிதான், ஆகையால்தான் அம்பேத்கர் சட்டத்திற்கு கட்டுப்படாத கூட்டம் என்று கடுமையாக சாடினார்.
பொருளாதார தன்னிறைவடைந்த, பொறியாளர் கவின், பட்டியல்சாதியை சார்ந்தவன் என்பதால் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டிருக்கிறான். அவன் செய்த ஒரே குற்றம், சாதி அடுக்கில் மேலுள்ள பெண்ணை காதலித்தான் என்பதுதான். ஆம், மனுதர்மம் அதை குற்றமென்றுதான் வரையறுக்கிறது.
இந்த சூழலில், கவின் அந்த பெண்ணை காதலித்தானா, இல்லையா என்ற விவாதம் சமூக வலைதளங்களில் நிகழ்ந்து கொண்டிருப்பது வேதனையை அளிக்கிறது.
கவின் அந்த பெண்ணை காதலிக்கவேயில்லை என்றாலும், அந்த பெண் கவினை காதலித்திருக்கவே இல்லையாயினும்…எதுவாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த கொலை நியாயமானதா?
இவ்வாறான விவாதங்கள், கொடூரமான சாதிவெறி கொலையின் தீவிரத்தை குறைத்துவிடவே வாய்ப்புகள் அதிகம்.
இந்திய அளவில் மனித வள மேம்பாட்டில், தனிமனித வருமானம், பரவலான கல்வி, சுகாதாரம் என பல்வேறு அம்சங்களில் முன்னேறி இருக்கும் மாநிலம் தமிழ்நாடு, இதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.
ஆனால், மனிதவளத்தை மேம்படுத்திய அதே அளவுக்கு மனித மனத்தை மேம்படுத்தியிருக்கிறோமா என்ற கேள்வி இது போன்ற வன்கொடுமைகளின் வழி எழுந்திருக்கிறது.
சுயவிமர்சனம் செய்ய வேண்டிய பொறுப்பு தமிழ்நாட்டு மக்களுக்கும், அரசுக்கும் இருக்கிறது என்பதை நாம் புறந்தள்ளிவிட முடியாது.
அதற்கான முன்னெடுப்புகள், சாதிவெறி ஆணவக்கொலைகளுக்கெதிரான தனிச்சிறப்பு சட்டம், சமத்துவ கண்ணோட்ட த்தை பரப்புவதற்கென, வேலைதிட்டத்தை வகுத்து, பரப்புரை செய்வதற்கு தன்னார்வலர்களை நியமித்து, அதன் செயற்பாட்டு திறனை கூர்ந்து கவனித்து முறைப்படுத்துவது காலத்தின் கட்டாயம்.
திராவிட மாடல் அரசு என்ற பெயர் அப்போதுதான் முழு அர்த்தம் பெறும்.
இணைக்கப்பட்டிருப்பது: வாழத்துடித்த கவினின் காணொளி
தலைவர் எழுச்சித்தமிழர் திருமாவளவன் @thirumaofficial ன் குழந்தை பருவத்தை செதுக்கி, இன்றைக்கு பெரும் தலைவராக பெரும் பட்டாளத்தையே வழிநடத்தும் ஆளுமையாக உருவாக்கிய சிற்றன்னை மறைவுற்ற செய்தி சிறுத்தைகள் எல்லோருக்கும் வருத்தத்திற்குரிய செய்தி.
தலைவரின் பிறந்தநாளையொட்டி ஏழை, எளிய மக்களுக்கு உதவி பொருட்களை வழங்க திட்டமிடப்பட்டிருந்த காரணத்தினால், நிகழ்ச்சியை தள்ளி வைக்காமல் நடத்தினோம்.
நிகழ்ச்சியில், சிறுத்தைகள் எல்லோரும் தலைவரின் சிற்றன்னைக்கு வீரவணக்கம் செலுத்தினோம்.
எனது சிற்றன்னை செல்லம்மாள் (78)அவர்கள் சற்றுமுன் இயற்கை எய்தினார்.
கடந்த ஆக 07 அன்று மூளையில் இரத்தக் கசிவு ஏற்பட்டு சுயநினைவு இழந்தநிலையில் பெரம்பலூரில் உள்ள தனலட்சுமிசீனிவாசன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டார். மிகுந்த கவனத்தோடு மருத்துவர்கள் தீவிர கண்காணிப்புடன் சிகிச்சை அளித்தனர். எனினும், பலனின்றி தற்போது காலமானார்என்பது
பெருந்துயரமளிக்கிறது.
பள்ளிப் பருவத்தில் எனக்கு ஆடை உடுத்தி, தலையில் எண்ணெய்த் தடவி இரட்டை சடைபின்னிவிட்டுப் பள்ளிக்கு அழைத்துச் சென்ற தாய்! தந்தை என்னைக் கண்டிக்கும் போதெல்லாம் எனக்காக வாதாடிய தாய்! வீட்டில் மூத்த மகன் என்பதால் 'பெரியதம்பி, பெரியதம்பி' என்று என்னைச் செல்லமாக அழைத்த தாய்! நான் பட்டவகுப்பை முடித்த காலத்திலிருந்து, 'படித்தது போதும் கல்யாணம் பண்ணு பா' என அறிவுறுத்திய தாய்! பத்தாண்டுகளுக்கு முன்னரே பக்கவாதத்தால் உடல் நலிவுற்று நினைவு தடுமாறி வீட்டிலேயே முடங்கிய நிலையிலும் எப்போதாவது நான் ஊருக்குச் செல்லும்போது, என் குரல் கேட்டதும் 'தம்பீ தம்பீ' என்று ஓடிவந்து என் கைகளை இறுகப் பற்றிக்கொண்டு அன்பைப் பொழிந்த தாய்! இன்று எம்மோடு இல்லை என்பது வாழ்வே வெறுமையாய் உள்ளது. துக்கத்தால் மனம் கனக்கிறது.
அப்பா(2010), அக்கா,(2020), சின்னம்மா (2025)என அடுத்தடுத்து இழப்புகளை எதிர்கொள்ளும் அவலம். துயரங்களைத் தாங்கும் நிலை.
அம்மாவுக்கு எனது வீரவணக்கம்!
தமிழ்நாட்டில் 2024 தேர்தலில் 8 தொகுதிகளில் பாஜக 2வது இடம் பிடித்து எப்படி? - அம்பலமான மோசடி
2024 தேர்தலில் தமிழ்நாடு & புதுவையில் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி வென்றுவிட்டதை மட்டுமே நாம் அனைவரும் கவனித்தோம்.
ஆனால் நோட்டாவுடன் போட்டிபோடும் கட்சி 8 நாடாளுமன்ற தொகுதிகளில் 2வது இடத்தையும், 12 தொகுதிகளில் 3வது இடத்தையும் பிடித்துள்ளது குறித்து நமக்கு எந்த கேள்வியும் எழவில்லை.
2019 தேர்தலில் 3.62% வாக்குகளை பெற்ற பாஜக, 2024 தேர்தலில் 11.24% வாக்குகளை பெற்றது எப்படி?
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நாளன்று மாலை 5 மணி நிலவரத்திற்கும், மறுநாள் காலையில் வெளியிடப்படும் நிலவரத்திற்கும் வாக்குப்பதிவு வித்தியாசம் 7.53% .
(குறிப்பு: இதுவரை நடந்த தேர்தல்களில், வழக்கமாக 0.50% அல்லது 1 % மட்டுமே கூடுதலாகவோ அல்லது குறைவாகவோ வித்தியாசம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது)
தமிழ்நாட்டிலும் 5 மணிக்குமேல் தேர்தல் ஆணையம் தனது சித்துவிளையாட்டை அரங்கேறியிருக்கிறது, அந்த எண்ணிக்கைதான் 7.53% .
ஓய்வுபெற்ற IAS அதிகாரி தேவசகாயம் அவர்களின் Vote For Democracy என்ற அமைப்பு நடத்திய ஆய்வில், 48 லட்சம் வாக்குகளை பாஜக பெற்றுள்ளது. அதில் 27 லட்சம் வாக்குகள் கள்ள ஓட்டுகள்( காரணம் அந்த 7.53%). பாஜக உண்மையில் பெற்ற வாக்குகள் 21 லட்சம் மட்டுமே!
எனவே மற்ற மாநிலங்களில் மட்டுமே தேர்தல் மோசடி நடக்கிறது, தமிழ்நாட்டில் அது சாத்தியமில்லை என்று எண்ணினால், 2026லோ அல்லது அடுத்த தேர்தலில் பாஜக தமிழ்நாட்டில் ஆட்சியை பிடிப்பது உறுதி!
Link: https://t.co/PsDvf9SzBv
இராணிப்பேட்டையில் மதச்சார்பின்மை காப்போம் தீர்மான விளக்கப் பொதுக்கூட்டத்தில் தலைவர் எழுச்சித்தமிழர் @thirumaofficial அவர்கள் ’மதவெறி அமைப்பான ஆர்.எஸ்.எஸ் சங் பரிவார அமைப்புகள் செய்யும் சாதி அடிப்படையிலான Social Engineering-ன் பின்னிருக்கும் சதி’ஐ அம்பலப்படுத்தி மதச்சார்பின்மையை உயர்த்தி பிடிக்க வேண்டிய தேவையை வலியுறுத்தி பேசினார். தாய் சிறுத்தையின் முழக்கம் வேலூர் சிறுத்தைகளுக்கு ஒரு கொள்கை எனர்ஜி பூஸ்டாக இருந்தது.
நிகழ்ச்சியில், மதிப்பிற்குரிய கைத்தறி மற்றும் துணி நூல் துறை அமைச்சர் காந்தி @R_Gandhi_MLA மிகுந்த ஆர்வத்தோடும், அக்கறையோடும் பங்கேற்று வாழ்த்தினார். அவருக்கு எங்களது மனமார்ந்த நன்றிகள்.
நிகழ்ச்சி சிறக்க கடுமையாக உழைத்த சிறுத்தைகள் அனைவருக்கும் உளமார்ந்த நன்றிகள்.
இணைந்து களம் காண்போம், மதவாத சக்திகளை வீழ்த்துவோம்.
நாட்டில் ஜனநாயகத்திற்கு ஆபத்து, அரசியல் சாசனத்திற்கு நெருக்கடி என்று ராகுல்காந்தி பேசி வருகிறார். ஆனால், அதைவிட ராமதாஸுக்கு அவருடைய குடும்பம் கொடுக்கிற நெருக்கடிதான் நாட்டிற்கு முக்கியமான பிரச்சினை என்று கருதுகிறாரா செல்வபெருந்தகை?
பாமக, விசிக ஒரே கூட்டணியில் இருந்தவர்கள்தானே மீண்டும் ஒரே கூட்டணியில் இருந்தால் என்ன? என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்
@SPK_TNCC கூறியிருக்கிறார்.
ஒரு காலத்தில், தலித்துக்கு பதவி, அமைதி வழியில் புரட்சி, நானும் நக்சலைட், பாஜக எதிர்ப்பாளன் என்று முற்போக்கு அரிதாரம் பூசி வலம் வந்த ராமதாஸ், ஒரு கட்டத்தில் பட்டியல்சாதி மக்களுக்கு எதிராக, சாதி சங்கங்களை அணி திரட்டி ‘தலித்தல்லாதோர் கூட்டமைப்பு’ஐ உருவாக்கி தமிழ்நாட்டில் பாஜக வேரூன்றுவதற்கான Social Engineeringஐ முன்னின்று செய்த ராமதாஸ், திடீரென்று குடும்ப சண்டையால் புனிதராகிவிடுவாரா?
பாஜகவின் பாசிச செயல்திட்டங்களுக்கு உறுதுணையாக நின்றுவிட்டு, தந்தையும்-மகனும் மாறி, மாறி குற்றஞ்சுமத்தி சண்டையிட்டுக் கொள்வதால், பிற்படுத்தப்பட்ட, பட்டியல்சாதி மக்களுக்கெதிரான பாஜகவோடு கூட்டணி வைத்த பாவத்திற்கு மன்னிப்பு கிடைத்துவிடுமா? அது சரியா?
பாசிச பாஜகவின் காலாட்படையாக வேலை பார்த்ததற்கு, குறைந்தபட்சம் தவறை உணர்ந்து மன்னிப்பாவது கேட்டிருக்காரா ராமதாஸ்?
வெவ்வேறு காலக்கட்டத்தில் காங்கிரஸிலிருந்து விலகிய ஆர்.எஸ்.எஸ்காரர்களின் வரலாற்றை வைத்துக் கொண்டு, பாஜகவுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்கலாமே என்று ஆலோசனை கூறினால் அது பொருத்தமானதாக இருக்குமா? அறிவு நாணயமுடைய கோரிக்கையாக இருக்குமா?
பாசிசத்தின் முற்றுகையில் தமிழ்நாடு இருக்கும் சூழலில், காலத்தின் தேவையை உணர்ந்து, திரு.செல்வபெருந்தகை பொறுப்போடு அரசியல் பேச வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.
@draramadoss@drramadoss
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டம், வேலூர் ஒன்றியம், செம்பேடு கிராமத்தில் உள்ள தாழ்த்தப்பட்ட ஆதிதிராவிட மக்கள் பல போராட்டங்கள் நடத்தியும். உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியும், அரசாங்கத்தால் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனைகளை பயனாளிகளுக்கு வழங்காமலும் ஆதிதிராவிட மக்களை 25 ஆண்டுகளாக அலைக்கழித்து அசிங்கபடுத்தி கொண்டிருக்கும் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மற்றும் ஆதிதிராவிடர் நல வேலூர் வட்டாட்சியர் இவர்களின் மெத்தனபோக்கை கண்டித்து ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட போது
ரத்த கலப்பு சாஸ்திர விரோதம் என்று போதித்த அறிவியல் விரோத சனாதனத்திற்கு எதிராக...ரத்த தானம் உயிரை காக்கும் என்ற அறிவியலை அடிப்படையாக கொண்டு, தோழர்கள் நடத்திய ரத்ததான முகாம்
உறவுகளின் அன்புக்கு நன்றி 😍
என்னுடைய பிறந்த நாளுக்காக உள்ளன்போடு வாழ்த்துகளை தெரிவித்த எண்ணற்ற தோழர்கள், உறவுகளின் அன்பையும், நம்பிக்கையையும் இறுக பற்றிக் கொள்கிறேன்.
எழுச்சித்தமிழர் தலைவர் @thirumaofficial ன் வாழ்த்து கூடுதல் ஊக்கமளிப்பதாக இருந்தது.
அனைவருக்கும் நன்றி
பொருளாதாரத்திற்கும், விழுமியங்களுக்குமான முரண்பாட்டில், பொருளாதாரத்திற்கே எப்போதும் வெற்றி கிட்டியிருக்கிறது என்று வரலாறு உணர்த்துகிறது. போதுமான புற அழுத்தம் இல்லாமல், (பொருளாதார) பலன்களை அனுபவிக்கும் கூட்டம் தாமாக முன்வந்த இந்த அனுகூலங்களை விட்டு தராது. – புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர்
திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய முன்னாள் மாநிலங்களவை உறுப்பினர் ஐயா தி. அ.முகமது சகி அவர்களுடைய தம்பி, வேலூர் மாநகர முன்னாள் துணை மேயர் சாதிக்கின் மகன் திருமண விழாவில் பங்கெடுத்து மணமக்களை வாழ்த்திய போது..